அஜித்

அஜித் 2.0… வலிமையில் நீண்டநாள் பழக்கத்துக்கு குட்பை சொன்ன `தல’

அஜித்தின் `ஜி’ பட ஷூட்டிங் அது. படத்தின் இயக்குநர் லிங்குசாமி ஷூட்டிங் ஸ்பாட்டான மொட்டை மாடியில் நின்று காட்சிகளை நடிகர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்திருக்கிறார். வேலை மும்முரத்தில் லிங்குசாமி பேசிக்கொண்டே மாடியின் நுனிக்கு போய் எதேச்சையாக சுதாரித்து திரும்பியிருக்கிறார். இதை தள்ளி நின்று கவனித்த அஜித், ஒரு உதவி இயக்குநரை அழைத்து, ‘டைரக்டர் எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்கிறாரு.. அவர்கிட்ட சொல்லுங்க என் ஜாதகப்படி ‘2007’ வரைக்கும் படம் எதுவும் ஓடாது, ரிலாக்ஸா பண்ண சொல்லுங்க’ என சொல்ல, அந்த உதவி இயக்குநர் செம்ம ஷாக் ஆகியிருக்கிறார். 

ஆரம்பத்திலிருந்தே அஜித்துக்கு ஜாதகத்திலும் நியூமராலஜியிலும் அதிக நம்பிக்கை உண்டு. நாளடைவில் இதில் தீவிரமாகத் தொடங்கினார். கதை சொல்ல நினைக்கும் இயக்குநர்களின் ஜாதகத்தை முன்கூட்டியே வாங்கி ஆராய்ந்து அதன் பலன்கள் சாதகமாக இருந்தால்தான் அந்த இயக்குநரிடம் கதையேக் கேட்க நினைப்பார். அவர் நினைக்கும் நல்ல நாளில், நல்ல நேரத்தில்தான் முதல் சந்திப்பே நிகழும். கதை கேட்கும்போதும் இப்படித்தான். 

அஜித்

சாய்பாபாவின் தீவிர பக்தரான அஜித், தன்னுடைய படத்தின் பூஜை தொடங்கி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர் ரிலீஸ், பாடல் ரிலீஸ் என எல்லாமே வியாழக்கிழமைகளில் நடக்குமாறு அறிவுறுத்துவார். இதற்கே இப்படியென்றால் படத்தின் ரிலீஸ் பற்றி கேட்கவேண்டுமா அதுவும் சர்வ நிச்சயமாக வியாழக்கிழமைகளில்தான். ‘வீரம்’ தொடங்கி ‘வலிமை’ வரை அவரது படங்களின் டைட்டில் ஆங்கில ‘வி’ எழுத்தில் தொடங்கும் என்பது குட்டிக் குழந்தைகளுக்குக் கூட தெரியும்.

அஜித் எப்போதும் தன் வலது கை ஆட்காட்டி விரலில் சாமி மோதிரம் ஒன்றை அணிந்திருப்பார். அதை எந்த சூழ்நிலையிலும் படத்தின் எப்பேர்பட்ட காட்சியாக இருந்தாலும் கழட்டமாட்டார். நன்கு உற்றுப் பார்த்தீர்களேயேனால் அவரது எல்லா படங்களிலும் அந்த மோதிரத்தைக் கவனிக்க முடியும். அதைப்போலவே அஜித்தின் படங்களில் அவர் பயன்படுத்தும் வாகனங்களின் எண்கள் அவர் சொல்லும் எண்களாகத்தான் இருக்கவேண்டும். அப்போதைய காலகட்டத்திற்கேற்ப நியூமராலஜிபடி அவர் சொல்லும் எண்களைத்தான் படத்தில் அவர் பயன்படுத்தும் வாகனங்களில் வைப்பார்கள்.

அஜித்

இப்படியாக ஜாதகம், நியூமராலஜி, நல்ல நாள், நல்ல நேரம், லக்கி நம்பர், பெயர் ராசி என எல்லாவிதமான மூடநம்பிக்கைகளையும் பின்பற்றிவந்த அஜித், அதிரடியாக தற்போது அவை எல்லாவற்றையும் விட்டொழிந்திருக்கிறார். ‘வலிமை’ படத்தின் தொடக்கம்வரை இந்த நம்பிக்கைகளை நம்பி வந்த அஜித், சமீபமாகத்தான் அதிலிருந்து வெளிவரத்தொடங்கினார். இடைபட்ட காலத்தில் அஜித்தின் மனதில் ஏற்பட்ட ஏதோ சில மாற்றங்கள்தான் இந்த முடிவுகளுக்கு காரணம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். முதற்கட்டமாக தனது மோதிரத்தை கழட்டியிருக்கிறார் அஜித். அதைத்தொடர்ந்து ‘வலிமை’ படத்தில் வரும் தனது வாகன எண் விஷயத்தில் படக்குழுவு விரும்பும்படி வைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார். அதைப்போலவே ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியிடும் நாள் பற்றி படக்குழு அவரிடம் கேட்க, ‘எனக்கு இப்போ எந்த செண்டிமெண்டும் இல்ல.. உங்க விருப்பப்படி வெளியிட்டுக்கோங்க’ என சொல்லி படக்குழுவை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் அஜித்.

அதைப்போலவே வலிமை ரிலீஸையும் வணிகரீதியாக எந்த நாள் சரியாக இருக்குமோ, அந்த நாளில் வைத்துக்கொள்ளும்படியும் சொல்லிவிட்டாராம். மேலும் அவரது அடுத்தடுத்த படங்களின் தலைப்புகளையும் இயக்குநர்களின் சாய்ஸூக்கே விடுவதென்று முடிவெடுத்துவிட்டாராம்.  இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயங்களிலும் இனி கதையை மட்டும்தான் நம்பப்போவதாகவும் முடிவெடுத்திருக்கிறாராம். 

Also Read : தூய்மைப் பணியாளர் டு துணை கலெக்டர்… ஆஷா கந்தாராவின் இன்ஸ்பைரிங் ஸ்டோரி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top