தெக்குச் சீமையிலே முதல் அடிச்சு தூக்கு வரை.. அஜித் கலக்கிய டான்ஸ்!

கடைசி பி.ஜி.எம்மான ‘டுருக்கு டகிட’வுக்கு, சுற்றிலும் டான்ஸர்கள் கூடி நிற்க, வேட்டியை மடித்துகொண்டு அஜித் போட்ட வெறியாட்டம் ‘கொல மாஸ்’ 1 min


Ajith
Ajith

‘ஆசை’ படத்தின் ‘கொஞ்சநாள் பொறுதலைவா’ பாடலில் அஜித்தைவிட கூட இருந்த டான்ஸர்கள்தான் அதிகம் ஆடியிருப்பார்கள். அந்த அளவுக்குத்தான் அப்போது அவரது டான்ஸ் திறமை இருந்தது. பின்னாட்களில் அஜித் பல்வேறு வழிகளில் மாஸ் காட்டி தன் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருந்தாலும் விடாமுயற்சியாக தன்னால் முடிந்த அளவுக்கு டான்ஸைக் கற்றுக்கொண்டு அதில் கலக்கவும் தவறியதில் இல்லை. 

அட்டகாசம் –‘தெக்குச் சீமையிலே’

YouTube player

சிம்பிளான ஸ்டெப்ஸ்தான் அஜித் போடுவார். பெரிய குத்தாட்டமெல்லாம் அவருக்கு வராது என தமிழ்நாடு தப்பு கணக்கு போட்டிருந்த நேரத்தில். ‘அட்டகாசம்’ படத்தில் வேட்டியை மடித்துக்கொண்டு நாக்கை துறுத்திக்கொண்டு ‘தீபாவளி.. தல தீபாவளி..’ என அவர் போட்ட வெறியாட்டத்துக்கு தமிழ்நாடே ஆடியது. அஜித்துக்கு இப்படியெல்லாம் ஆட வருமா என போட்டி நடிகர்களின் ரசிகர்களே ஒரு கணம் ஜெர்க் அடித்துதான் போனார்கள்.

வரலாறு – ‘இன்னிசை அளபெடையே’

YouTube player

2006-ஆம் ஆண்டுக்கு முன்பு, ‘உங்காளு பரதநாட்டியம் ஆடப்போறாருப்பா’ என சொல்லியிருந்தால் அஜித் ரசிகர்களே நம்பாமல் நமுட்டு சிரிப்பு சிரித்திருப்பார்கள். ஆனால், ‘வரலாறு’ படத்தில் பெரும் சிரத்தையெடுத்து குறுகிய காலத்தில் பரதநாட்டியம் கற்று அசத்தியிருப்பார் அஜித். கண் அசைவில் தொடங்கி விரல்களில் அபிநயம் பிடிப்பதுவரை ஃபர்ஃபெக்சன் நோக்கி நகர்ந்து அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருப்பார் அஜித். ஃப்ரஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ படம் பார்த்துவிட்டு வந்த அவரது ரசிகர்கள், ‘தல பரதநாட்டியத்துக்கே டிக்கெட் காசு சரியாப்போச்சுப்பா’ என செம்ம ஹேப்பியானதை மறக்கமுடியுமா..?

ஏகன் – ‘ஹே சாலா’

YouTube player

டான்ஸ் மாஸ்டரான ராஜூ சுந்தரம் டைரக்ட் செய்த படம் ‘ஏகன்’. சும்மா விடுவாரா..? ‘ஹே சாலா’ பாடல் தொடக்கமே அஜித் முட்டி போட்டு கையை ஊன்றாமல் எழுந்திருக்கும் ஸ்டெப்புடன் தொடங்க, தியேட்டரில் விசில் பறந்தது. அவர் போட்ட அந்த ஸ்டெப்கள் எல்லாமே பர்ஃபெக்டா என்ற லாஜிக்கைவிடவும்,  இது தன் ஏரியா இல்லை என்றபோதும் அதை நிராகரிக்காமல் தன் ரசிகர்களுக்காக செய்த அவரது பேரன்புதான் கவனிக்கத்தக்கது. 

மங்காத்தா -‘ஆடாம ஜெயிச்சோமடா..’ 

YouTube player

இந்த பாட்டில் போட்ட அஜித்தின் குத்து டான்ஸ் செம்மதான் என விஜய் ரசிகர்களே ஒத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அஜித் இந்த பாட்டில், போதை கண்களுடன், வியர்த்து நனைந்த சட்டையுடனும் செம்ம குத்து குத்தியிருப்பார். அதிலும் பாட்டின் கடைசியில் முடிவது போல் முடியப்போய் இன்னொரு பீட் குத்து மியூசிக் தொடங்க, அதற்கேற்ப ரியாக்சன்களுடன் பட்டையைக் கிளப்பியிருப்பார் அஜித்.

ஆரம்பம் – ‘அடடா ஆரம்பமே’

YouTube player

ஒரு நார்த் இந்தியன் ஸ்டைல் காஸ்டியூமில் பெரிய அலட்டல் இல்லாமல், சிம்பிளான அதேசமயம் எனர்ஜி குறையாமல் டான்ஸ் ஆடி மாஸ் காட்டியிருப்பார் அஜித். பாட்டின் செகண்ட் பி.ஜி.எம்மில் சிரித்தபடி அசால்டாக அஜித் போடும் குத்து, அவரது ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கும்.  

விஸ்வாசம் ‘அடிச்சு தூக்கு’

YouTube player

இந்தப் பாட்டை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அஜித்தின் சின்ன சின்ன அசைவையும் பாடலுக்கேற்ப பயன்படுத்தி மாஸ் காட்டியிருப்பார்கள். அதிலும் பாடலின் கடைசி பி.ஜி.எம்மான ‘டுருக்கு டகிட’வுக்கு, சுற்றிலும் டான்ஸர்கள் கூடி நிற்க, வேட்டியை மடித்துகொண்டு அஜித் போட்ட வெறியாட்டம் ‘கொல மாஸ்’

Also Read : OPPO Reno 6 முதல் Redmi 10 வரை… ஜூலை மாதம் வெளியாகும் கேட்ஜெட்கள்!


Like it? Share with your friends!

350

What's Your Reaction?

lol lol
3
lol
love love
31
love
omg omg
24
omg
hate hate
30
hate

0 Comments

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
`காந்தி, அம்பேத்கர், பெரியார் படங்கள் தெரியும்… இந்த தலைவர்கள் படங்களை தெரியுமா?’ – இந்தியாவின் டாப் 10 பயோபிக் படங்கள் `குரலைக் கேட்டாலே பக்தி பொங்கும்!’ – எல்.ஆர்.ஈஸ்வரியின் டாப் 10 அம்மன் பாடல்கள் `இதெல்லாம் இல்லாம எங்க படமே இல்லை!’ – தமிழ் சினிமா டைரக்டர்களின் டிரேட் மார்க் அடையாளங்கள்! Money Heist-க்கு எண்டே கிடையாது டா! – மணி ஹெய்ஸ்ட் மீம் ரிவ்யூ RainCoat: `அட, இப்படியெல்லாமா ரெய்ன் கோட் இருக்கு..!?’ – விநோத டிசைன்கள்