விக்னேஷ் சிவன் – அஜித் படம்.. அதாங்க, ஏகே 62 படம் அனௌன்ஸ்மென்ட் வந்து 1 வருஷம் ஆச்சு. மனுஷன் அதை பட்டாசுலாம் வெடிச்சு கொண்டாடுனாரு. ஆனால், கடைசில புகை மட்டும்தான் வந்துச்சு. முதல் படம் எடுத்துட்டு அடுத்த படம் எடுக்கவே பல வருஷம் ஆச்சு.. அந்தக் கதை நல்லா இல்லைனு பல நடிகர்கள் அவரை வேணாம்னு சொல்லியிருக்காங்க. இப்போ, தல அஜித் அவரோட கதையை வேணாம்னு சொல்லியிருக்காரு. இப்போதான், விக்னேஷ் சிவன் நல்ல டைரக்டரா இல்லையான்ற கேள்வி வருது. சோ, இந்த வீடியோல அவர் நல்ல டைரக்டரா.. இல்லை, சொதப்புற டைரக்டரானு அலசி பார்த்துருவோம்.

காமெடி சென்ஸ்
எனக்கு தெரிஞ்சு ஃபீல்குட்டான, டபுள் மீனிங் இல்லாமல் காமெடி பண்ற டைரக்டர்ஸ்ல விக்னேஷ் சிவன் முக்கியமான டைரக்டர்னு தோணும். அவரோட மிகப்பெரிய பிளஸ் காமெடி சென்ஸ்தான். போடா போடிலயே குட்டி குட்டியா அவ்வளவு காமெடிகள் வரும். சிம்புவும் வருவும் ஒரு சீன்ல கிஸ் பண்ணிட்டு இருப்பாங்க. இவங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு டக்னு வி.டி.வி என்ட்ரி கொடுத்து, மங்களகரமா இருந்த என் லண்டன் வீட்டை மகாபலிபுரத்துல இருக்குற லாட்ஜ் மாதிரி பண்ணிட்டியேடானு டயலாக் போடுவாரு. வி.டி.வியை சிம்பு கலாய்க்கிற மொமண்ட்லாம் சிரிச்சிட்டேஇருக்கலாம். உனக்கு வாய்ஸ் பிளஸ்ஸு. ஆனால், வாய் மைனஸுன்றதுலாம் அவருக்குனே அளவெடுத்து விக்னேஷ் எழுதியிருப்பாரு. இங்கதான் ஒரு விஷயம் சொல்லணும்.. போடா போடி படம் ரிலீஸ்க்கு முன்னாடி அந்தப் படம் பார்த்த எல்லாருமே படம் நல்லால்ல. என்னடா எடுத்து வைச்சுருக்கன்ற மாதிரிதான் விக்னேஷ் ஷிவன்கிட்ட சொல்லியிருக்காங்க. அந்தப் படத்தைப் பார்த்து நல்லா இருக்குனு சொன்ன ஒரே ஆள், விஜய் சேதுபதிதான். அப்போதான், ஃபோன் நம்பர்லாம் ஷேர் பண்ணி நல்லா பழக ஆரம்பிச்சிருக்காங்க. ஒருநாள் உங்கக்கிட்ட கதை ஒண்ணு சொல்லணும்னு விக்னேஷ் போய்ருக்காரு. விக்னேஷ் ஷிவன் அந்தக் கதையை சொல்லிட்டே இருக்கும்போது விஜய் சேதுபதி என்னடா கதை இதுனு கண்ணலாம் சொருகி கேட்ருக்காரு.

நிவின் பாலி, ஜெய், மிர்ச்சி சிவா, நஸ்ரியானு அன்னைக்கு முன்னணில இருந்த ஏகப்பட்ட பேர்கிட்ட கதைய சொல்லியிருக்காரு. யாருமே அக்சப்ட் பண்ணல. கடைசில, சார் எவ்வளவோ கதை பண்றீங்க. கதை கேட்டா பண்றீங்க. எனக்கும் ஹெல்ப்பா பண்ணி கொடுங்கனு விஜய் சேதுபதிகிட்ட சொல்லியிருக்காரு. அந்தக் கதைதான் நானும் ரௌடிதான். அந்தப் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடிகூட டேய், படம் கேவலமா இருக்கு இதெல்லாம் கதைனு எடுத்து வைச்சிருக்கியேனுதான் சொல்லியிருக்காங்க. ஆனால், படம் ரிலீஸாகி வந்த கிளாப்ஸ் இருக்கே.. போடா போடிக்கு அப்புறம் இவர் ஃபோன் நம்பரை பார்த்து ஃபோன் எடுக்காத பலரயும் நானும் ரௌடிதான் படத்துக்கு அப்புறம் ஃபோன் எடுக்க வைச்சுதுனு சொல்லலாம். அவ்வளவு ஹிட்டு. அதாவது இவரோட காமெடி எல்லாமே ரொம்ப சிம்பிளா இருக்கும். அதனாலயே, இதெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா.. ஆகாதானு யாராலயும் யூகிக்க முடியாது. நானும் ரௌடிதான்ல விக்னேஷோட காமெடி சென்ஸ் அப்படி வொர்க் அவுட் ஆகியிருக்கும். விக்னேஷோட அம்மா போலீஸ் இன்ஸ்பெக்டர், அவங்க பெயர் மீனாக்குமாரி. அதையே ராதிகாக்கு பெயரா வைச்சிருப்பாரு. நானும் ரௌடிதான்லyஏ ஒவ்வொரு சீனையும் அப்படி ரசிச்சு கைதட்டி சிரிக்கலாம்.
நயன்தாரா மார்க்கெட்டுக்கு கூட்டிட்டுப்போய் ஒருத்தனை காமிச்சு அடிக்க சொல்லுவாங்க. உடனே, நம்ம ஆர்.ஜே.பாலாஜி.. ஆடியோ லாஞ்சுக்கு வந்த அர்னால்டு மாதிரி இருக்கான் டியூட்ன்னுவாரு. விஜய் சேதுபதி கொஞ்சம் திரும்பி, அந்தக் கண்ணை ஒரு நிமிஷம் பாரு.. என்னா ஸ்வீட்ல.. அப்டின்னுவாரு. என்ன வேணா பண்ணலாம். வொர்த் டியூட்னு சொல்லிட்டு, நான் அடிவாங்குறதை அந்தப் பொண்ணு பார்க்காமல் கவர் பண்ணனும்னு சொல்லுவாரு. மாஸ்ல இவ்வளவு ஃபன்ன சேர்க்க முடியுமானு அப்போதான் தோணுச்சு. அப்ப கரெக்டா வந்து ஆர்.ஜே.பாலாஜி, வாய்ஸ் மாத்தி.. பாகுபலி பார்ட் – 2, குரலை வைச்சே கொலை பண்ணுவேன்டா, தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்டா நான்னு பண்ணுவாரு பாருங்க, இதுபரவால்ல, ராகுல் தாத்தா வருவாரு.. எல்லாம் சேர்ந்து அந்த சீனை அப்படி தூக்கி நிப்பாட்டி வைச்சிருப்பாங்க. ஆர்.ஜே.பாலாஜி, ராகுல் தாத்தா, விஜய் சேதுபதினு எல்லாரும் ஒருபக்கம் கலக்க எடுக்க, இன்னொரு பக்கம் நயன்தாரா.. இவன் ஆளுலாம் இல்லை, இவனைதான் கொலை பண்ணனும்னு டயலாக்ல சொல்லி முப்பது வருஷா மூச்சாவா ஒரேயடியா பெய்ய வைப்பாங்க. கொலை மாஸ் சீன் அதுலாம்.

காதுகேட்காமல் காதம்பரி பண்ற அட்ராசிட்டீஸவிடவும் ஆனந்த் ராஜ் பண்ற சம்பவங்கள் இருக்கே.. பொட்டல் காடுல பார்த்திபனை கொலை பண்ண பிளான் பண்ணிட்டு ப்ளூடூத் வைச்சு கனெக்ட்டடா இருப்பாங்க. ஆனந்த் ராஜ் மட்டும் வாக்கி டாக்கி எடுத்துட்டு போய்ட்டு, கையோட நாங்க எல்லாம் கொண்டு வருவோம்னுவாரு.. உடனே, பாலாஜி.. உனக்கு இருக்கு, எங்களுக்குலா, நான் பேசுவேல்ல.. யார்கூட பேசுவ.. நான் கேட்டத தம்பிக்கு சொல்லுவேன்லனு அல்டிமேட் பண்ணுவாரு. இவனைலாம் பார்த்து எப்படி பயந்தாங்கன்ற டயலாக் சொல்லும்போதுலாம் தியேட்டர்ல பல நிமிஷம் கைதட்டலும் சிரிப்பு சவுண்டும்தான். கேக்காத காதுக்கு ஹெட்செட்டு, பாயாசம் சாப்பிட பல்செட்டு.. பொம்பளையை தூக்கி வண்டில ஏத்து.. ஆம்பள மேல வண்டிய ஏத்துடா, குடும்பமே பயித்தியமாடா, ஆர் யூ ஓகே பேபி டயலாக்லாம் இன்னைக்கும் பலரோட ஃபேவரைட்தான். எனக்கு தெரிஞ்சு.. நெல்சனுக்குலாம் முன்னாடி ஃபஸ்ட் டார்க் காமெடி எடுத்தது விக்னேஷ் ஷிவன்தான். நானும் ரௌடிதான்ல மட்டும் வந்த காமெடிஸ் வச்சே அவ்வளவு விஷயங்களை பேசலாம். இந்த காமெடியெல்லாம் விக்னேஷ் ஷிவன் படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியும். வொர்க் அவுட்டும் ஆகும். அந்த மேஜிக் காத்து வாக்குல ரெண்டு காதல்ல வொர்க் அவுட் ஆகலை. ஆனாலும், பிகில் விஜய் சீனை கலாய்க்கிற மாதிரி.. வனஜா.. உன் லவ்வரு எல்லா சவாலையும் சமாளிச்சுட்டு உனக்காகவே காத்துட்டு இருக்கான். 46 வயசாச்சுனு பார்க்குறியா.. கல்யாணம் பண்ண வயசு முக்கியம் இல்லாமா.. வெளிய வாம்மானு சொல்றது, டேய் பெர்மனட் பயித்தியம்னு சொல்றதுலாம் சான்ஸ்லஸ்.
ரொமான்டிக் சென்ஸ்
காதல்னு சொன்னாலே மனுஷன் எழுதுற டயலாக்ஸ், சீன்ஸ் எல்லாம் உருக வைக்கிற மாதிரிதான் இருக்கு. விக்னேஷ் ஷிவனோட ரெண்டாவது மிகப்பெரிய பிளஸ் ரொமான்ஸ்தான். நானும் ரௌடிதான்லயே, உனக்கு தெரிஞ்சவன்.. உன் ஃப்ரெண்டு.. ஒரு பொண்ணை லவ் பண்ணான்னு வைச்சுக்கயே.. அந்தப் பொண்ணை அப்படியே அங்கயே விட்டுட்டு விலகி போய்டணும்.. லவ்வுனா ஆயிரம் பிரச்னை இருக்கதான் செய்யும். கேப்பு விழதான் செய்யும். அந்த கேப்லதான் நான் அவளை மிஸ் பண்ணுவேன்.. அவ என்னை மிஸ் பண்ணுவா.. லவ் டெவலப் ஆகும்.. ஸ்ட்ராங்க் ஆகும். அந்த கேப்ல நீங்க புகுந்தா.. அதுக்கு பேரு எச்சனு சொல்வாரு. காதலிக்கிற எல்லாரும் ஈஸியா கனெக்ட் பண்ணிக்கிற டயலாக் அதெல்லாம். கிளைமாக்ஸ்ல லவ் பண்ணதுக்காகவே அடி வாங்குறது, காதலுன்ற விஷயத்துக்காக கொலைகூட பண்ணப்போறது எல்லாமே அவ்வளவு அழகா இருக்கும். போடா போடியும் பெஸ்ட்டா இருக்கும். ஆனால், நிறைய டாக்ஸிக்கா தோணும். ஆரம்பத்துல வர்ற காதல் பண்ணா எவ்வளவு கண்றாவியான விஷயமும் அழகா தெரியும்னு டெம்ப்ளேட் டயலாக் பேசுனாலும் அதுல கொஞ்சம் ஃபன் சேர்த்து அழகா ரசிக்க வைச்சிடுவாரு. காதல்னு விக்னேஷ் ஷிவன் எழுதுனாலே அது அழகாதான் இருக்கும்னு நமக்கே தோணும்.

காத்து வாக்குல ரெண்டு காதல்ல புரொபோஸ் பண்ற சீன்ஸ்லாம் அப்படி இருக்கும். ரெண்டு பேரையும் புடிக்கும்னு காமிக்க.. காபி – டீ ரெண்டையும் கலந்து குடிக்கிற சீன், நான் உங்க ரெண்டு பேரையும் லவ் பண்ணி ஏமாத்தல.. நீங்க ரெண்டு பேரும் என்னை லவ் பண்ணீங்க.. நான் அதை தடுக்கல.. அவ்வளவுதான்னு சொல்ற சீன், சமந்தாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஐ லவ் யூ பத்தி கான்வர்சேஷன் ஒண்ணு போகும். ஐ லவ் யூனு சும்மா அன்பா சொல்லிடலாம். அது ஈஸி. ஆனால், அதை நெஜமா ஃபீல் பண்ணி சொல்றது கஷ்டம்னு விஜய் சேதுபதி சொல்ல.. சமந்தா அதை எடுத்து.. அதை பொண்ணா சொல்றது ரொம்ப ரொம்ப கஷ்டம்.. ஏன்னா, அதுல டன் கணக்குல நம்பிக்கை, கிலோ கணக்குல ஆசை, கிராம் கணக்குல பயம் கலந்துருக்கும்.. இதுக்கப்புறம் இந்த வார்த்தையை யாருக்கும் சொல்ல தேவைப்படாதுனு தோணும்போது.. கடைசி வரைக்கும் கூடவே இருப்பான்னு தோணும்போது தான் சொல்ல வரும்னு சொல்வாங்க. பியூட்டிஃபுல்லான சீன் அதுலாம். நயன்தாராகிட்ட வந்து பையன் டிரைவரா இருந்தா பரவால்லயா, சிக்ஸ் பேக்லாம் கிடையாது, பூசுன மாதிரி இருந்தா பரவால்லயா, மாநிறம் டு கறுப்பா இருந்தா பரவால்லயானு கேட்கும்போதுலாம் செம சீனா இருக்கும். இப்படி ஏகப்பட்ட லவ் சீன்ஸ் படம் முழுக்க சொல்லிட்டே போகலாம்.
ஃபீல்குட் சென்ஸ்
எனக்கு எப்பவும் ஜாலியா இருக்கதான் புடிக்கும். உலகத்துலயே கஷ்டமான விஷயம் அதுதான். என்னோட படம் பார்க்க வர்றவங்க சந்தோஷமா இருந்துட்டு போகணும். அதுக்காகதான் அப்படி படம் எடுக்குறேன்னு சொல்லுவாரு. காமெடி, காதல்லாம் எவ்வளவு அழகா இருக்குமோ.. அந்த அளவுக்கு நம்மள ஃபீல் பண்ண வைக்கிற ஃபீல்குட்டான சீன்ஸும் அவர் படங்கள்ல இருக்கும். நானும் ரௌடிதான் படத்துல அப்பாவுக்கும் நயன்தாராவுக்கும் இடைல இருக்குற பாண்டிங் அவ்வளவு அழகா இருக்கும். அதுக்கப்புறம் படம் ஃபுல்லாவே காமெடி, காதல், சண்டைனு போகும். காத்துவாக்குல ரெண்டு காதல்ல நிறைய ஃபீல்குட்டான சீன்ஸ்லாம் இருக்கும். கதிஜாவும் கண்மணியும் சேர்ந்து இனிமேல் நாங்க உன்னோட வாழ்க்கைல இருக்கமாட்டோம்னு சொல்லிட்டு பிரிவாங்க. அப்போ, இந்த ஒரு விஷயத்தால நாம எனிமிலாம் இல்லை. நீங்க எப்போ வேணும்னாலும் எனக்கு ஃபோன் பண்ணலாம்னு சொல்றது, ஆரம்பத்துல நயந்தாராவோட தம்பியா பார்கவ் வருவாரு. அவரை லூசு, பயித்தியம்னு திட்டுவாரு ஒரு கேரக்டர். அந்த இடத்துல சாரி சொல்லுங்க, இல்லனா அவன் அதையே நினைச்சு வருத்தப்படுவான்னு சொல்லுவாங்க. சாரிலாம் சொல்ல முடியாதுனு அந்த ஆள் சொன்னதும், பார்கவ்.. அங்கிள் சாரினு சொல்லுவான். அப்படியே கண்ணு நமக்கு கலங்கிடும். அப்புறம் கிளைமாக்ஸ்ல.. எனக்கு உங்க ரெண்டு பேர்கூடவும் அப்படி, இப்படி இருக்கணும்னு ஆசைலாம் இல்லை. இப்படி ஒரு பெஞ்ச்ல உட்கார்ந்து பேசிட்டு இருந்தாலே போதும்னு சொல்லுவாரு. வாழ்க்கைல எல்லாமே காத்து மாதிரிதான்.. அதுவா வந்து மேல படும்.. ஆசையா தொடும்.. அப்போ அனுபவிச்சுக்கணும். தக்க வைச்சுக்கணும்னு நினைச்சா போய்டும்னு சொல்ற சீன்னு எல்லாமே ஃபீல் குட்தான். தமிழ்ல இவ்வளவு ஃபீல் குட்டான சீன்ஸ எடுக்குற கமர்ஷியல் டைரக்டர்ஸ்ல முக்கியமான டைரக்டர் விக்னேஷ் ஷிவன்தான்.
Also Read – பல்கேரியா விவேகம்… காஷ்மீர் லியோ… டேய் எப்புடிறா?!
மூணு படம் எடுத்துருந்தாலும், நம்மள வயிறு வலிக்க சிரிக்க வைச்ச.. காதல் பண்ணனும்னு ஏங்க வைச்ச.. வாழ்க்கையை எஞ்சாய் பண்ணனும்னு ஃபீல் குட்டா உணர வைச்ச.. விக்னேஷ் சிவன் நல்ல டைரக்டர் இல்ல அப்டினு எப்படி சொல்ல முடியும்?
இன்னைக்கு விக்னேஷ் சிவனுக்கு கதை எழுத தெரியல.. டைரக்ட் பண்ன தெரியலனு ஆயிரம் பேர் ஆயிரம் குறைகள் சொல்லலாம்.. ஆனால், ஏகே 62 டிராப் ஆனதுக்கு முக்கியமான காரணமா சோஷியல் மீடியால நிறைய பேர் சொன்னது.. விக்னேஷ் சிவன்னாலே காமெடி, ரொமான்ஸ் தான்.. நம்ம ஆளுக்கு அதெல்லாம் வராது.. அதுனால அந்த புராஜெக்ட் வேணாம்னு சொல்லியிருப்பாருனு தான் சொல்றாங்க. அவர் ரூட்டு தனி.. இவர் ரூட்டு தனி.. மத்தபடி ரெண்டு பேரும் அவங்கவங்க ரூட்ல மாஸ்தான்.. அவ்வளவுதான்!
Subscribe Tamilnadu Now Youtube channel for more entertaining videos
0 Comments