ரஹ்மானின் நம்பிக்கைக்குத் தேசிய விருதைப் பரிசளித்த நரேஷ் ஐயர்!

ஹாய் மாலினி…ஐ எம் கிருஷ்ணன்…
நான் இத சொல்லியே ஆகனும்…
நீ அவ்வளவு அழகு…
இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு…
இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க…
அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ… – வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா பேசும் இந்த வசனத்தை யாரும் மறந்திருக்க மாட்டாங்க. இந்த வசனம் முடிந்ததும் முன்தினம் பார்த்தேனே என நரேஷ் ஐயரின் குரலில் பாடல் வரும் போது அந்த அனுபவமே வேற லெவலில் இருக்கும். அந்த மயக்கும் மாயக்குரலுக்கு சொந்தக்காரரான நரேஷ் ஐயரைப் பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.

Naresh Iyer
Naresh Iyer

ரஹ்மானின் நம்பிக்கை

ஒரு பாட்டுப்போட்டிக்கு ரஹ்மான் நடுவராக சென்றிருந்தப்போது அந்தப் போட்டியில் நரேஷ் ஐயரைப் பார்த்திருக்கிறார். 23 வயதான அந்த இளைஞனின் குரல் ரஹ்மானை ஈர்க்க, அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார். ஒரே சமயத்தில் மூன்று பாடலுக்கான வாய்ப்பைக் கொடுக்கிறார். ஏனென்றால், நரேஷ் ஐயர் மேல் ரஹ்மான் அப்படி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார். முதலில் கொடுத்த வாய்ப்புத்தான், அன்பே ஆருயிரே படத்தின் மயிலிறகே பாடல். இப்போது நீங்க அந்தப் பாடலைக் கேட்டாலும், ஒரு அனுபவம் இல்லாத 23 வயது பையனா இந்தப் பாடலைப் பாடியது என பிரமிக்க வாய்ப்புண்டு. அடுத்த வாய்ப்புத்தான் அமீர்கான் நடித்த ரங் தே பசந்தி படத்தின் ராபாரோ பாடல் வாய்ப்பு. அடுத்ததாக சில்லுனு ஒரு காதல் படத்தின் முன்பே வா பாடல். இதில் ரங் தே பசந்தி பாடலுக்காக நரேஷ் ஐயருக்கு தேசிய விருது கிடைத்தது. தன் மீது நம்பிக்கை வைத்த ரஹ்மானுக்கு தேசிய விருதை நன்றியாக பரிசளித்தார் நரேஷ் ஐயர்.

விமர்சனத்திற்கு பதிலடி

மயிலிறகே, முன்பே வா, முன்தினம் பார்த்தேனே, கண் இரண்டில் மோதி, நான் சொன்னதும் மழை வந்துச்சா என தொடரந்து நரேஷின் பாடல்கள் ஹிட் என்றாலும், இவரால் கர்நாட்டிக் அல்லது கர்நாட்டிக் கலந்த மெலடி பாடல்கள் மட்டும்தான் வரும் என்கிற விமர்சனமும் இருந்தது. அதை உடைக்க வேண்டும் என கையப்புடி, ஏ சாலே என சில பாடல்களை தனது கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியில் வந்து பாடியிருப்பார். ஆனால், தன்மீது வைத்த விமர்சனத்திற்கு பதிலடியாக வேணாம் மச்சான் வேணாம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ப்ரேயர் சாங் என இந்த இரண்டு பாடல்களிலும் வேற ஒரு நரேஷ் ஐயராக பாடியிருப்பார். இதற்குப் பிறகு எந்த ஸ்டைல் பாடலாக இருந்தாலும் நரேஷ் பாடுவார் என்கிற பேச்சு எழுந்தது.

Naresh Iyer
Naresh Iyer

வெற்றிக்கூட்டணி

நரேஷ் ஐயரை ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தி இருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜோடுதான் நரேஷ் அதிகமாக வேலை செய்திருக்கிறார். காதல் கொஞ்சம், முன் தினம் பார்த்தேனே, தீ இல்லை, வேணாம் மச்சான் வேணாம் என பல பாடல்கள் ஹாரிஸின் இசையில் நரேஷ் பாடியிருந்தாலும், ரஹ்மானுக்கு பாடிய பாடல்களில் ஹிட் லிஸ்ட் அதிகம் என்றே சொல்லலாம். மயிலிறகே, இன்னிசை, முன்பே வா, வலையப்படி தவிலே, கண்ணுக்குள் கண்ணை, அம்பிகாபதி, மெர்சல் அரசன் என சொல்லிக்கொண்டே போகலாம். அதேப்போல், ஸ்ரேயா கோஷலோடு நரேஷ் இணைந்து பாடிய முன்பே வா, ஒரு வெட்கம் வருதே, உன் பேரை சொல்லும்போதே போன்ற பாடல்கள் எல்லாம் எவர்க்ரீன் ஹிட்ஸ். 

நரேஷ் ஐயர் பாடிய எந்தப் பாடல்கள் உங்களுடைய ப்ளேலிஸ்டில் இருக்கின்றன என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.

Also Read – மனசை லேசாக்கும் ஃபீல் குட் விளம்பரங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top