சிந்து பைரவி

கே.பாலசந்தரின் `சிந்து பைரவி’ ஏன் கொண்டாடப்பட்டது – 4 காரணங்கள்!

கே.பாலசந்தரின் `சிந்து பைரவி’ திரைப்படம் 1985-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி ரிலீஸானது. திரையரங்களில் குடும்பங்கள் கொண்டாடிய சிந்துபைரவி படம் வெள்ளி விழா கண்டது. சிந்து பைரவி கொண்டாடப்பட 4 காரணங்கள்..!

கே.பாலசந்தர்

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளியானது சிந்து பைரவி படம். 1980-களின் இறுதியில் தனது மேஜிக்கால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்ட கே.பாலசந்தரின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மிகைப்படுத்தல் இல்லாமல் நாம் அன்றாட வாழ்க்கையில் கடந்துபோகும் கேரக்டர்களால் வெகுஜனங்களைக் கவர்ந்தார். ஜே.கே.பி கேரக்டராகவே நடிகர் சிவக்குமார் வாழ்ந்திருந்தார். அதேபோல், அவரின் மனைவியாக சுலக்‌ஷனாவும் தீவிர ரசிகையான சிந்து கேரக்டரில் சுகாசினியும் நடித்திருந்தனர். 1985 நவம்பரில் சிந்து பைரவி படத்தோடு 12-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானபோதும், இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கதை

சிந்து பைரவி
சிந்து பைரவி

புகழின் உச்சியில் இருக்கும் ஜே.கே.பி (சிவக்குமார்) என்ற பாடகன், தனது தீவிர ரசிகையான சிந்துவைப் பார்த்ததும் காதலில் வீழ்கிறார். ஒழுக்கத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருக்கும் அவர், திருமணத்தை மீறி ரசிகையுடன் காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாகி, அவமானங்களை சந்திக்கிறார். தனது தீவிர ரசிகை சிந்துவின் உதவியோடு குடிப்பழக்கத்தில் இருந்து மீளும் ஜே.கே.பி, மீண்டும் சபைகளில் பாடத் தொடங்கி, இழந்த பெயரை மீண்டும் ஈட்டுகிறார். சிக்கலான குடும்ப உறவுகள், குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்னைகள், சமூகப் பார்வை என இந்தப் படம் பேசிய அடர்த்தியான விஷயங்கள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன.

இசை – பாடல்கள்

கே.பாலசந்தர் – இளையராஜா கூட்டணி முதல்முறையாகக் கைகோர்த்த படம் சிந்துபைரவி. கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் அக்காலத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. நானொரு சிந்து..’,பாடறியேன்… படிப்பறியேன்’ பாடல்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்ரா, இந்தப் படத்துக்காகத் தேசிய விருதும் பெற்றார். அதேபொல், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜாவுக்குக் கிடைத்தது. `தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி’ பாடல் இன்றளவும் பிரபலம்.

சிந்து பைரவி
சிந்து பைரவி

நடிகர்கள் தேர்வு

சிந்து பைரவி படத்தில் பாடகர் ஜேகேபி கேரக்டராகவே வாழ்ந்திருப்பார் நடிகர் சிவக்குமார். மனைவியிடம் மருகும் இடத்திலும், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கையைப் பிசைந்து நிற்கும் இடம், கச்சேரி தொடங்கும் முன்னர் குடித்தே ஆக வேண்டும் என துடிப்பது என பல இடங்களில் நம்மைப் பிரமிக்க வைத்திருப்பார். அதேபோல், சிந்துவாக நடித்திருந்த சுகாசினி, தான் ஏற்றுக்கொண்ட ரோலை மிகச்சிறப்பாகக் கொடுத்திருப்பார். சிந்து கேரக்டருக்காக சுகாசினிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. சிவக்குமாரின் மனைவியாக நடித்திருந்த சுலக்‌ஷனா, ஜேகேபியின் குழுவில் இடம்பெற்றிருக்கும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட இசைக்கலைஞர்களும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருப்பர். இந்தக் காரணங்களால் சிந்து பைரவி 80ஸ் கிட்ஸ் மட்டுமல்லாம், 70ஸ் கிட்ஸ்களாலும் கொண்டாடப்பட்டது.

Also Read – `ரஜினி, கமல், விஜய்; களைகட்டிய 2005 தமிழ்ப் புத்தாண்டு’ – ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்!

7 thoughts on “கே.பாலசந்தரின் `சிந்து பைரவி’ ஏன் கொண்டாடப்பட்டது – 4 காரணங்கள்!”

  1. Thanks for sharing your info. I truly appreciate your efforts and I am waiting for your further post thank you once again.

    My website :: Nordvpn Coupons Inspiresensation (In.Mt)

  2. nordvpn special coupon code 2025
    350fairfax
    Today, I went to the beachfront with my kids.

    I found a sea shell and gave it to my 4 year
    old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell
    to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear.

    She never wants to go back! LoL I know this is completely off topic but I had to tell someone!

  3. It’s truly a great and useful piece of information. I’m happy that you shared this helpful
    info with us. Please stay us informed like this.
    Thank you for sharing.

    Here is my web blog – vpn

  4. Please let me know if you’re looking for a article writer for your blog.
    You have some really great posts and I feel I would be a good asset.
    If you ever want to take some of the load off, I’d
    really like to write some material for your blog in exchange
    for a link back to mine. Please send me an e-mail if interested.
    Regards! https://tinyurl.com/2y95dtjr what does vpn do

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top