ஜார்ஜ் மரியன்

இவங்க சிரிப்பு போலீஸ் இல்லை.. சின்சியரான எமோஷனல் போலீஸ்!

போலீஸ் கேரக்டர்ஸ படத்துல காமிக்கணும்னாலே பயங்கரமான ஹீரோயிஸமாதான் காமிப்பாங்க. அதைப் பார்த்துதான் நிறைய பேர் போலீஸ்லயே சேர்ந்துட்டு இருக்காங்க. எவ்வளவோ போலீஸ் கேரக்டர்கள் இங்க வந்தாலும், சில கேரக்டர்கள் நமக்கு புடிக்கிற மாதிரி இருக்கும். அந்த கேரக்டர் ஹீரோவாவோ, வில்லனாவோ இருக்காது. இருந்தாலும் நமக்கு புடிச்ச கேரக்டரா இருக்கும், ரொம்பவே எமோஷனலான கேரக்டரா இருக்கும். அப்படியான போலீஸ் கேரக்டர்களை தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

8 தோட்டாக்கள் – எம்.எஸ்.பாஸ்கர்

எம்.எஸ்.பாஸ்கர்

எம்.எஸ்.பாஸ்கர் கரியர்லயே ரொம்ப முக்கியமான கேரக்டர், 8 தோட்டாக்கள், கிருஷ்ணமூர்த்தி. புதுசா சேர்ந்த போலீஸ் எட்டு தோட்டாக்கள் இருக்குற துப்பாக்கியை தொலைச்சிடுவாரு. அந்த துப்பாக்கி கை மாறி, கை மாறி பேங்க்கை கொள்ளையடிக்க போற எம்.எஸ்.பாஸ்கர் கைல கிடைக்கும். இவரும் பணி இடை நீக்கத்துல இருக்குற போலீஸ்தான். பேங்க்கை கொள்ளையடிக்கிறப்போ குழந்தையை சுடுறது, அந்த கில்ட்டிலயே இருக்குறது, வாழ்க்கைல பணம் பண்ற ரோலை நினைச்சு அந்த கேவலமான வாழ்க்கையை ஒவ்வொரு சீன்லயும் வெளிப்படுத்துறது, நான் தான் பாஸ்னு கோவமா கூட இருக்குற ஆள்கள்கிட்ட பேசுறது, விசாரணைக்கு போறதுக்கு முன்னாடி இன்ஸ்பெக்டரை மீட் பண்ணி பேங்க் மேட்டரை போட்டு வாங்குறது, மயக்கம் போட்டு விழுறது, கூட்டாளிகள்கூட போடுற சண்டைனு அட்டகாசம் பண்ணிருப்பாரு. குறிப்பா, டீ கடைல உட்கார்ந்து வாழ்க்கையே முடிஞ்சு போன விரக்தில பேசுற ஒவ்வொரு டயலாக்கும் நம்ம மனசுல பதிய முக்கியமான காரணம் அவரோட நடிப்புதான். நல்லதே செய், நல்லதே நடக்கும்னு முதல் முதல்ல சொன்னவன் மட்டும் கையில் கிடைச்சான். அவனை செருப்பாலையே அடிப்பான்னு சொல்லும்போது நம்ம உடம்புலாம் புல்லரிக்கும். போலீஸ் வேலை போன ஸ்டோரி, எவ்வளவு நேர்மையானவன்னு சொல்றது, மனைவியை பத்தி பேசுறதுனு எல்லாத்துலயும் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி மட்டும்தான் தெரிவாரு. பணத்தை ரோட்ல வீசுறது, சூசைட் பண்றதுனு கிளைமாக்ஸ்ல சாகும்போதுகூட கிளாப்ஸ் வாங்கிட்டுதான் போவாரு.

கைதி – ஜார்ஜ் மரியன்

ஜார்ஜ் மரியன்

ஜார்ஜ் மரியான் எண்ட்ரி ஆகும்போதே, இவருக்கு பெருசா எதோ ஒரு ரோல் இருக்குனு தோனிட்டே இருக்கும். அதுக்கு ஏத்த மாதிரி தரமான பல சீன்கள் இருக்கும். எல்லா போலீஸ்காரங்களும் கிளம்பிடுவாங்க. ஜார்ஜ் மரியன் மட்டும் உள்ள மாட்டிப்பாரு. நெப்போலியன் நீங்க டியூட்டில ஜாயின் பண்ணியாச்சு. எல்லா டோரும் க்ளோஸ் பண்ணுங்கனு பிஜாய் ஆர்டர் போட்டதும், யூனிஃபார்ம் மாட்டிட்டு, இன்னசண்டான போலீஸா இருக்குறவரு, மாஸா டிரான்ஸ்ஃபார்ம் ஆவாரு. உள்ள சண்டை நடக்கும்போது பசங்களை காப்பாத்துறது, சாவியை கொடுத்துட்டு, தீயணைக்கிற கேஸ் எடுத்து அடிக்கிறதுனு எல்லா சீனும் மாஸா இருக்கும். குறிப்பா, கிளைமாக்ஸ்ல மிஷின் கன் எடுத்து சுடும்போது, இப்போ அழுத்துயானு சொல்ற சீன்லாம் மாஸ். ஜார்ஜ்கிட்ட செமயான இன்னசெண்ட் இருக்கும், அது அந்த போலீஸ் கேரக்டருக்கு செமயா செட்டாயிருக்கும்.    

டாணாக்காரன் – எம்.எஸ்.பாஸ்கர்

எம்.எஸ்.பாஸ்கர்

போலீஸ் டிரெயினிங்குன்றது மனசையும் உடம்பையும் உறுதிபடுத்துறதுக்கானது, போட்டி போடுறதுக்கு இல்லைனு எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, நேர்மையான போலீஸ் அதிகாரியா நம்ம முன்னாடி நிப்பாரு. நைட்டுலாம் சரக்கு போட்டுட்டு விக்ரம் பிரபுகிட்ட, அந்த டீம்கிட்டலாம் வந்து எமோஷனலா பேசும்போது நம்மள அறியாமலேயே அழுதுடுவோம். ஒவ்வொரு சீனும் சிறப்பான தரமான சீனா டைரக்டர் தமிழ் எடுத்து வைச்சிருப்பாரு. மரத்துக்கு கீழ ஒருத்தன் நிக்கிறானே, எதுக்கு நிக்கிறான் தெரியுமானு கேட்டுட்டு கதை ஒண்ணு சொல்லுவாரு. அதை இன்னைக்கும் சம காலத்துல நிறைய பொருத்தி பார்க்க முடியும். நேர்மையா ஒருத்தன் போலீஸ்ல சேர்ந்து எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறான்றதை கண்ணுலயே கடத்திருப்பாரு. அதேமாதிரி போஸ் வெங்கட் கேரக்டரும் அவ்வளவு எமோஷனலா இருக்கும். இந்த சிஸ்டம் இருக்கே, முரட்டு வெள்ளக்காரனுக்கும் முட்டாள் தனமான அரசியல்வாதிக்கும் பொறந்த குழந்தைனு டயலாக் பேசும்போதுலாம் இந்த சிஸ்டத்தை எதிர்த்து அதுல பார்ட்டா இருக்குற ஒருத்தனாலயே எதுவும் பண்ண முடியாதுனு தோணும். புரட்சிகரமான வாழ்த்துகள்னு சொல்றது, யாருக்கு மெடல் கொடுக்கணும்னு டிஸ்கஷன் பண்ணும்போது பசங்களுக்கு சப்போர்ட் பண்றது, அதிகாரிகிட்ட போய் நம்பிக்கையோட வந்த பசங்களை ஏமாத்தாதீங்கனு பேசுறதுனு அந்தக் கேரக்டரை அவ்வளவு பெர்ஃபெக்ட்டா பண்ணிருப்பாரு.

மைனா – தம்பி ராமையா

தம்பி ராமையா

தம்பி ராமைய்யாவும் சரி, மூத்த அதிகாரியா வரக்கூடிய சேதுவும் சரி அந்த கேரக்டர்களை சும்மா பிண்ணி எடுத்துருப்பாங்க. பஸ் ஆக்சிடண்ட் முன்னாடி வரைக்கும் உதவி பண்ற மாதிரி நடிச்சு, இவனை ஜெயிலுக்கு கூட்டிட்டு போய் கும்மியெடுக்கணும்ன்ற மூடுலதான் சுத்துவாங்க. ஆனால், இவங்களோட உயிரை காப்பாத்துன பிறகு அவங்க கேரக்டரும், சுருளி மேல இருக்குற வெறுப்பும் மாறிடும். ராமைய்யாவோட மனைவியை சுருளி அம்மானு கூப்பிட்டதும் ராமையா ரியாக்‌ஷன் ஒண்ணு கொடுப்பாருல, அப்படி இருக்கும். போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வந்ததும் எல்லாரும் சுருளியை அடிப்பாங்க. அவங்கக்கிட்ட சுருளியை காப்பாத்துறது, மைனாவை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுனு ஒவ்வொரு சீனையும் அட்டகாசமா பண்ணியிருப்பாரு. மைனாவை கொன்னுட்டாங்கனு தெரிஞ்சதும், பாஸ்கர் அருவா எடுத்துட்டு வந்து மனைவி உட்பட எல்லாரையும் போட்டு தள்ளும்போதும், நம்ம மனசுல மைனா – சுருளி நல்லா வாழ்ந்து இருக்கணும், இப்படி ஆயிடுச்சேன்ற எண்ணம் சுத்திட்டே இருக்கும். அதேநேரத்துல, அதுக்கு நியாயம் சேர்க்குற மாதிரி அந்த பாஸ்கர் கேரக்டர் எல்லாரையும் போட்டு தள்ளி ஜெயிலுக்கும் போய்டுவாரு. உதயநிதி அந்தப் படம் பார்த்துட்டு ரெண்டு நாள் தூங்கலைனு சொன்னாராம். அதுக்கு முக்கியமான ஒரு ரீசன் இந்த போலீஸ்காரங்களோட நடிப்பும், கிளைமாக்ஸ் சம்பவமும்தான்.

விசாரணை – சமுத்திரகனி

சமுத்திரகனி

வெற்றிமாறன் படங்கள்ல வர்ற போலீஸ் கேரக்டர்கள்தான் நிஜம்னு எப்பவும் தோணும். எதார்த்தமான போலீஸா இருக்குறதுனாலயே அந்த கேரக்டர் எல்லாமே பேசப்படும். சமுத்திரகனி கேரக்டரும் அப்படிதான். இவங்க மத்தில நேர்மையா இருக்க முடியாதுனு தெரியும். இருந்தாலும், சகிச்சுட்டு மேல் அதிகாரிகள் சொல்றதை கேட்டுட்டு போற கேரக்டர். அந்த பசங்களை கொன்றலாம்னு முடிவு பண்ணும்போது, பாவம்யா, என்ன நம்பி வந்தாங்க. இதெல்லாம் தப்புங்கய்யானு சொல்லும்போது நம்ம உடம்பு நடுங்க ஆரம்பிக்கும். எல்லாத்துக்கும் ஒருநாள் பதில் சொல்லுவோம்னு ஒவ்வொருத்தரையா சுடும்போதும் சரி, கடைசில அவரையே போட்டுத்தள்ளும்போதும் சரி ரொம்பவே ஒருமாதிரி இருக்கும். அந்த கேரக்டரை சமுத்திரகனிய தவிர வேற யார் பண்ணியிருந்தாலும் இவ்வளவு எமோஷனலா இருக்குமானு கேட்டா, டவுட்டு தான்.  

எமோஷனலான போலீஸ் கேரக்டர்ல நடிச்ச சிலரை இங்க மென்ஷன் பண்ணியிருக்கேன். உங்களோட ஃபேவரைட் எமோஷனல் போலீஸ் கேரக்டர்ஸை கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top