இன்னைக்கு நாம ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம். எல்லா ஒளிப்பதிவுக்கும் பின்னாலதான் ஒருபடம் உருவாகுது. என்னடா ஒளிப்பதிவாளரைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்குனு நினைக்கலாம். ஆனா, ஒருபடத்துக்கு அவங்க போடுற அந்த மெனெக்கெடல் ரொம்பவே முக்கியமானது. அதுல வெரைட்டி காட்டும் நம்ம இவர் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏன்னா, இவரால அகில உலக சூப்பர் ஸ்டார் நடிச்ச தமிழ் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்ய முடியும், கிறிஸ்டோபர் நோலன் இயக்கின டெனட் படத்துக்கும் இசையமைக்க முடியும். என்ன ஷாக்கா இருக்கா… ஆனா, இதெல்லாம் விட இன்னும் ஏராளமான சம்பவங்களை பண்ணினவர்தான் நம்ம நீரவ் ஷா.

ஆரம்பம்!
ஒளிப்பதிவாளர் பி.சி ஶ்ரீராம்கிட்ட அசிஸ்டெண்ட்டா வேலை பார்த்து விளம்பரப்படங்கள் அதிகமா இயக்கி ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தார். அப்போதான் இந்தியில பைசா வசூல்னு ஒருபடம் கிடைக்குது. மணிரத்னம் ரெகமெண்ட் பண்ண, ஒளிப்பதிவா கமிட் ஆனார், நீரவ். அதுல பெரிசா கவனம் ஈர்க்கலை. ஆனா அதுக்கப்புறம் வந்த தூம் படம் மூலமா தான் யார்னு திரையுலகத்துக்கு நிரூபிச்சார், நீரவ். படம் முழுக்க கொள்ளையை பேஸ் பண்ணின படம். முழுக்க முழுக்க ஆக்ஷன் சேசிங். இந்தியாவுல இருந்து ஆங்கிலப்பட தரத்துல வந்த முதல் படம் தூம்னு சொல்ற அளவுக்கு தன் உழைப்பைக் கொடுத்தார். அடுத்ததா இண்டேகாம்னு ஒரு படத்தோட இந்தி சினிமாவுக்கு பை சொல்லிட்டு தமிழ் பக்கம் வந்துட்டார். அவரைக் கூப்பிட்டு வந்தவர் இயக்குநர் லிங்குசாமி. சண்டைக்கோழியில நீரவ்ஷா ஒளிப்பதிவு முக்கியமான பலம்னு சொல்லலாம். அதுக்கப்புறம் தன்னோட நண்பர் விஷ்ணுவர்தன் அறிந்தும் அறியாமலும் கூப்பிட்டப்போ சின்ன பட்ஜெட் படம்தானேனு நினைக்காம, தயங்காம பண்ணிக் கொடுத்தார். மறுபடியும் அவர் கூடவே பட்டியல் படமும் பண்ணார். ரெண்டு படங்கள்லேயும் கேமரா வொர்க் நல்லா இருக்கும். மறுபடியும் தூம் 2 ஆரம்பிக்க இந்தியிலிருந்து அழைப்பு வர தூம் 2 படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அது முடித்த கையோடு போக்கிரி, கிரீடம், ஓரம்போ, பில்லா, சர்வம், மதராசப்பட்டினம், வானம், தெய்வத் திருமகள், தலைவா, 2.0, சூப்பர் டீலக்ஸ், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, காட்ஃபாதர் தெலுங்கு ரீமேக்னு பல படங்கள் பண்ணியிருக்கார்.
தனித்துவம்!
தான் ஒளிப்பதிவு செய்ற படங்கள்ல தனக்குனு ஒரு தனித்துவம் இருக்கிற படங்கள்ல மட்டும்தான் இவர் ஒளிப்பதிவு செய்வார். இதுல இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், ஏ.எல் விஜய் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். ஏ.எல். விஜய்கிட்ட ஆரம்ப படமான கிரீடத்துல இருந்து இது என்ன மாயம் வரைக்கும் நிறைய படங்கள்ல வொர்க் பண்ணார். அதேபோல விஷ்ணுவர்தன் அறிமுகப்படமான அறிந்தும் அறியாமலும் முதல் சர்வம் வரைக்கும் வொர்க் பண்ணார். நீரவ் ஷாவோட ஸ்டைல் என்னன்னா ஒரு படத்தைப் பார்த்து அதே மாதிரி பண்ண கூப்பிட்டா போக மாட்டார். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு வித்தியாசம் இருக்கணும். அப்போதான் தன்னால இன்னும் அதிகமா பண்ண முடியும்னு நம்புறார். தூம், தூம் 2 பொறுத்த வரைக்கும் ஹிந்தி சினிமா அதுவரைக்கும் கண்டிராத திரை அனுபவம் அதை தன்னோட தொழில்நுட்ப திறமையால கொடுத்தவர். அதேபோல தமிழ் சினிமாவின் பில்லா ரீமேக் அதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிராத திரை அனுபவம். இந்த ரெண்டையும் நல்லா கம்பேர் பண்ணிப் பார்த்தாவே தெரியும் நீரவ் ஷா யார்னு. கிரே ஷேஃபியா டோன் மெயிண்டெயின் பண்றதுல நீரவ் ஷா எப்பவுமே கில்லாடி. பில்லாவுக்கு முன்னாடி பல படங்கள்ல நீரவ் ஷா பண்ணியிருந்தாலும், பில்லாவுல படம் முழுக்கவே அந்த டோன்லதான் இருந்தது. இவரைப் பொறுத்தவரைக்கும் சரியான நேரத்துல சரியான இடத்துல இருந்தாதான் நாம நினைச்சதை சாதிக்க முடியும்னு இன்னைக்கு வரை நம்பி பண்ணிட்டு வர்றார்.
Also Read – செம்ம தரமான சம்பவங்கள்.. டைரக்ஷனில் மிரட்டிய நடிகர்கள்!
நீரவ் ஷா மாடல்!
சினிமா ரசிகர்கள் மறந்த, நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு கலைஞன்னு நீரவ் ஷா சொல்லலாம். சின்ன படம்னாலும் பண்ணுவேன். பெரிய படம்னாலும் பண்ணுவேன்னு சொல்ற ஒரு மனுஷன். ரன்னிங், சேசிங், ஜம்பிங், ஃபயரிங்னு எந்த சேசிங் காட்சிகள் வந்தாலும் அசாரத உழைப்பு நீரவ் ஷா உடையது. உதராணமா ஓரம்போ படத்துல ஆட்டோ ரேஸ் சீன் இருக்கும். அதுக்காக சென்னை அண்ணா சாலையில ஷூட்டிங் எடுக்க வேண்டிய கட்டாயம். இதுக்கு என்ன பண்ணலாம்னு வழி தெரியாம நின்னப்போ, நீரவ் ஷாவும் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறாங்க. அதன்படி காலை 6 மணிக்கு வெறும் ஆம்னி கார்ல ஒரு கேமராவை தூக்கிட்டு ஆட்டோ ஷேசிங் சீனை எடுக்கணும்னு. அதை பக்காவா பண்ணிக்காட்டினார், நீரவ் ஷா.
அதுக்கு முன்னாலதான் தூம் 2 முடிச்சிருந்தார். நினைச்சிருந்தா ஹிந்தி பக்கமே ஒதுங்கியிருக்கலாம். ஆனா அதெல்லாம் அவர் விரும்பவே இல்லை. அதே மாதிரி டெனட் எடுக்க கிரிஸ்டோபர் நோலன் இந்தியா வந்தப்போ இங்க முதல்ல அணுகினது, நீரவ் ஷாவைத்தான். அவரும் இந்திய போர்ஷன் முழுக்க நோலனுக்கு எடுத்துக் கொடுத்தார். அதேபோல வலிமை படம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானாலும், பெரிய சேசிங் காட்சிகளுக்கு நீரவ் ஷா கொடுத்த உழைப்பை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதேபோலத்தான் இந்த முறை துணிவில் ஸ்டெடிகேம் அதிகமா எங்கேயுமே பயன்படுத்தியிருக்க மாட்டார். கேமரா மூவ்மெண்ட்லயேதான் இருக்கும். அதுலயும் க்ளைமேக்ஸ் போஃட் சேஸ் காட்சிகள் ஒளிப்பதிவுல படத்துக்கு இன்னும் பெரிய பலமா இருந்தார் நீரவ் ஷா.
வொர்க்கிங் ஸ்டைல்!
இயக்குநர் என்ன கேட்கிறாரோ அதுக்கேத்த மாதிரி வித்தியாசமா சிந்திக்கணும். ஆனா கேமரா பண்றதுக்கு முன்னால ஸ்கிரிப்ட்ல ஒளிப்பதிவுக்கான அவசியமான இடமும் இருக்கணும். இதுதான் நீரவ் ஷாவோடா வொர்க்கிங் ஸ்டைல். எந்த நேரமும் உழைக்க தயார். அதேபோல சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு ரெண்டு ஒளிப்பதிவாளர்கள். இதுல ஒருத்தர் நீரவ் ஷா. ஆனா இன்னொரு ஒளிப்பதிவாளர், அதுல வொர்க் பண்ணினார்னே தெரியாம வொர்க் பேலன்ஸ் இருக்கும். அதேபோல மனித முகங்களுக்கு flesh tone-தான் இன்னை வரைக்கும் மெயிண்டெய்ன் பண்றார்.
எனக்கு இவர் பண்ண படங்கள்லயே பில்லா, துணிவுதான் ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.