PS 2

சோழாஸ் ஆர் பேக்… என்ன எதிர்பார்க்கலாம்?!

சோழாஸ் | 2022 மிகப்பெரிய ஹிட் பொன்னியின் செல்வன் படத்தோட இரண்டாவது பாகத்தோட அறிவிப்பு வெளியாகியிருக்கு… 2023 ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸாகும் என்று டீசரோடு அறிவிச்சிருக்காங்க… கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல்ல இருந்த ஒரு ட்விஸ்டுக்கே ட்விஸ்ட் கொடுத்து முதல் பாகத்தை மணிரத்னம் முடிச்சிருந்தார். சரி PS 2-ல என்ன எதிர்பார்க்கலாம்… நாவல்ல இருந்த PS 1-ல இடம்பெறாத பகுதிகள் என்னென்னு பார்க்கலாம் வாங்க.

PS 2
PS 2

பொன்னியின் செல்வன் நாவலோட முக்கியமான கேரக்டர்கள் பலவும் முதல் பாகத்திலேயே அறிமுகமாயிட்டாங்க. முக்கியமா கடல்ல விழற பொன்னியின் செல்வனையும் வந்தியத் தேவனையும் மந்தாகினி தேவி காப்பாத்துற மாதிரி படம் முடிஞ்சிருக்கு. கதைப்படி அப்போ பொன்னியின் செல்வரான அருண்மொழி வர்மருக்கு விஷ ஜூரம் வந்து, அவரை பூங்குழலியும் வந்தியத்தேவனும் நாகப்பட்டினம் புத்த விஹாரத்துல சேர்ப்பாங்க. அதுக்கப்புறம் நாட்டுல வதந்தி பரவவே, திடீர்னு யானை மேல் மக்கள் முன்னாடி தோன்றி அதை பொய்யாக்குவார் பொன்னியன் செல்வன். அதன்பிறகு மக்கள் வெள்ளம் புடைசூழ தஞ்சையை நோக்கி பயணிப்பார். கிளைமேக்ஸ் ட்விஸ்டாக உத்தமச் சோழருக்கு முடிசூட்டி விட்டு வடதிசையில் படையெடுத்துச் செல்வார்.

புத்த பிஷூக்கள் மத்தியில் அருண்மொழி வர்மர் நடந்து வருவது போன்ற ஒரு காட்சி புதிய வீடியோவில் இடம்பிடித்திருக்கிறது. இதனால், கடலில் இருந்து மீட்கப்பட்டு விஷ ஜூரத்துக்காக புத்த விஹாரத்தில் சிகிச்சை முடிந்து பிஷூக்கள் மத்தியில் அவர் நடந்து வருவது போன்ற சீனாக அது இருக்கலாம். நாவல்ல இல்லாதபடி PS 1-ல ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. PS 2 வெளியீடு பற்றிய அறிவிப்பு வீடியோவிலும் ஆதித்த கரிகாலன் இடம் பிடித்திருக்கிறார். அவர் தவிர அருண்மொழி வர்மர், வந்தியத் தேவன், நந்தினி என நான்கே நான்கு கேரக்டர்களை மட்டுமே காட்டியிருக்கிறார்கள். சோ இரண்டாவது பாகம் இவங்களைச் சுற்றியே அதிகம் நகரும்னு சொல்லலாம்.

PS 2
PS 2

சோழாஸ் | கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலன் கொலை நாவலில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் சம்பவம். நந்தினி தனது சபதத்தை நிறைவேற்றிவிட்டு அதன்பிறகு வெளியேறிவிடுவார். முதல் பாகத்தின் கிளைமேக்ஸே இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி முடிக்கவில்லை. இதனால், இரண்டாவது பாகத்தில் அந்த சம்பவம் இடம்பெறலாம். அதற்கு முன்னோட்டமாக பாண்டிய மீன் சின்னம் பொறித்த வாளுடன் நந்தினி கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது போன்ற ஒரு காட்சி இப்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய வீடியோவில் இடம்பிடித்திருக்கிறது.

Also Read – ரஜினி, கலாநிதி மாறன் முன்னாடி அந்தோணி தாசன் பண்ண தரமான சம்பவம்!

நாவலைப் பொறுத்தவரை வந்தியத்தேவனின் பயணம் வழியேதான் கதை தொடங்கி, முக்கியமான கட்டத்தை அடையும். அப்படி ஒரு காட்டுக்குள் வந்தியத்தேவன் உடலில் காயங்களோடு அமர்ந்திருப்பது போன்ற காட்சியையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஐந்து பாகங்கள் கொண்ட நாவலில் பல்வேறு முக்கியமான கேரக்டர்களைக் கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை கல்கி கொண்டுவந்திருப்பார். படத்தைப் பொறுத்தவரை இரண்டு பாகங்களாக மட்டுமே எடுத்து முடிக்க இருக்கிறார்கள். அதனால், நந்தினியின் முடிவு, சிற்றரசர்கள் சதி, குந்தவை – வந்தியத்தேவன் காதல், அருண்மொழி வர்மர் – வானதி திருமணம், பழுவேட்டரையர் சகோதரர்கள் என்ன ஆனார்கள், மதுராந்தகத் தேவருக்கு என்ன ஆனது, மந்தாகினி – சுந்தரச் சோழர் கதை என நாவலில் இருந்து சொல்லப்படாத விஷயங்கள் எத்தனையோ மிச்சம் இருக்கிறது. இவற்றையெல்லாம் எந்தெந்த விகிதத்தில் சேர்த்து எப்படி திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க உங்களைப் போலவே நாங்களும் ரொம்ப ஆர்வமா இருக்கோம்… வி ஆர் வெயிட்டிங் பாஸ்!

PS 2-வோட முடிவா நாவல்ல இருக்க எந்த ட்விஸ்டை மணிரத்னம் பயன்படுத்துவார்னு உங்களுக்குத் தோணுது. உங்க கருத்துகளை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top