Decoding ‘பொன்னியின் செல்வன்’ டீசர்!

கல்கியோட மாஸ்டர் பீஸான பொன்னியின் செல்வன் நாவலை அதேபேர்ல மணிரத்னம் படமாக்கப்போறார்ங்குற தகவல் வெளியானப்பவே, அதோட எதிர்பார்ப்பு எகிறுச்சு. கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கு மேல பெஸ்ட் செல்லிங் தமிழ் நாவல் லிஸ்ட்ல தவறாம இடம்பெறுகிற ஒரு நாவல் அது. அப்படியான ஒரு எபிக்கான கதையை எக்கச்சக்க கேரக்டர்களோட எந்தவொரு குழப்பமும் இல்லாம நீட்டா கொண்டுபோகப்பட்ட கதையை, மணிரத்னம் மாதிரியான ஒரு இயக்குநர் எடுக்கையில் ஃபேன்ஸோட Expectation அதிகமாகத்தானே இருக்கும். படத்தோட ஒவ்வொரு கேரக்டரா அறிமுகப்படுத்துனபோது கிடைச்ச வரவேற்பும், மாற்றுக்கருத்துகளும் நமக்கு அதை உணர்த்தும்.

80ஸ்,90ஸ், கிட்ஸ் மட்டுமல்ல அதுக்கு முன்னாடி ரெண்டு ஜெனரேஷன் கிட்ஸ், ஏன் இன்னிக்கு இருக்க 2கே கிட்ஸ்ல பல பேருக்கு பரிச்சயமான கதை பொன்னியின் செல்வன். அதோட டீசர் இப்போ வெளியாகியிருக்கு. சரி டீசர் எப்படியிருக்கு… டீசர்ல சொல்லப்படுற விஷயங்கள் என்னென்ன… வாங்க பார்க்கலாம்.

டீசரோட தொடக்கமே தஞ்சை, பழையாறைனு சோழர்கள் காலத் தலைநகரங்களைச் சுற்றியிருக்க முக்கியமான, அதாவது கதைல இடம்பெறுகிற ஊர்களை உள்ளடக்கிய மேப்போட பேக்ரவுண்ட்லதான் தொடங்குது. அதுக்கு பி.எஸ். டீம் போட்டுருக்க உழைப்பு நம்மை கவர்கிறது. அதுக்கு அடுத்து வர்ற ரெண்டு அரண்மனைகளோட ஃபிரேமிங், கப்பல்கள்னு மிரட்டுது. அருள்மொழிவர்மர் அதாவது ஜெயம் ரவியோட பட்டாபிஷேகத்துல கூடியிருக்க மக்கள் கூட்டத்தைப் பிரமாண்டமா காட்டியிருக்காங்க.. புத்திசாலித்தனமா, மேடையில் இருக்க பெருமக்கள் கூட்டத்தைத் தவிர்த்திருக்காங்க. சோழர்களின் அரியணையை மாஸா டிசைன் பண்ணிருக்காங்க.

மந்தாகினி தேவி – நந்தினிங்குற இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய். குந்தவையா திரிஷாவைக் காட்டுற இடங்கள் சிறப்பா இருக்கு. நந்தினியைப் பல இடங்கள்ல காட்டுனாலும், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே யானை மேல் போகிற மாதிரியான ஒரே ஒரு காட்சியில் மட்டுமே மந்தாகினியைக் காட்டுகிறார்கள். சுந்தர சோழர் பிரகாஷ் ராஜ் ஒரு பிரேமில் வந்து போகிறார். டீசரில் அதிகம் நிறைந்திருப்பது ஆதித்த கரிகாலன் விக்ரம்தான். டீசர்ல வர்ற ஒரே ஒரு டயலாக் ஆதித்த கரிகாலன் பேசுற, ’இந்த கள்ளும் பாட்டும் ரத்தமும் போர்க்களமும் எல்லாமே அதை மறக்கத்தான். அவளை மறக்கத்தான்.என்னை மறக்காத்தான்’ டயலாக்தான். அருள்மொழி வர்மர் ஜெயம்ரவி, வந்தியத் தேவன் கார்த்தி, பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன், பாண்டிய ஆபத்துதவி ரவிதாஸனான கிஷோர், பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, சம்புவரையர் பிரபு என முக்கியமான கேரக்டர்கள் டீசரில் வந்து போகின்றன. பொன்னியின் செல்வன் பெயருக்குக் காரணமான அருள்மொழிவர்மர் காவிரியில் விழுந்தபோது அவரைக் காப்பாற்றுகிற காட்சியை வரைகலையாகக் காட்டிவிட்டு, மந்தாகினி தேவி இன்ட்ரோ கொடுத்திருப்பது ஆஸம். ஒரே ஒரு பிரேமில் வந்துபோனாலும் ஆழ்வார்க்கடியான் ஜெயராம் கவனம் ஈர்க்கிறார்.

அத்தனை கேரக்டர்கள் வந்து போனாலும் டீசரோட ஆகப்பெரும் அட்ராக்‌ஷனே குந்தவை திரிஷா – நந்தினி ஐஸ்வர்யா ராய் சந்திக்கும் அந்த காட்சிதான். சரி, நீங்க சொல்லுங்க டீசர்ல உங்களுக்குப் பிடிச்ச பார்ட் எதுனு.. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.. 

Also Read – தமிழ் சினிமாவின் மேஜிக்கல் டைரக்டர் – மியூசிக் டைரக்டர் காம்போக்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top