தமிழ், மலையாளம், தெலுங்கு என கலக்கி வந்தவர் நடிகை தேவயானி. 90-களில் சைலன்ட்டாக உச்ச நடிகையாகத் திகழ்ந்தவர். முக்கால்வாசி நடிகைகள் ஏதோ ஒரு கட்டத்தில் கிளாமர் காட்டி நடிக்கத் தொடங்கினார்கள். ஆனால், தனக்கென்று ஒரு ஸ்டைலையும், ஹோம்லி லுக்கையும் கொண்டு வந்து பல குடும்பப் படங்களில் நடித்து, பார்ப்பவர்களின் வீட்டு மருமகளாக வலம் வந்தார். அவர் வாயிலாக ஃபேமஸ் ஆன சில மீம் டெம்ப்ளேட்களையும் டிரெண்ட்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!
Also Read – நயன்தாரா பிரைவேட் ஜெட் செலவு எவ்வளவு தெரியுமா?
-
1 இட்லி உப்புமா
இட்லி உப்புமா என்கிற டிஷ்ஷை உலகம் முழுக்க அறிமுகம் செய்து வைத்தவர் தேவயானி. மீதமிருக்கும் இட்லியை வேஸ்ட் செய்யாமல் ஒவ்வொரு இட்லியையும் நான்காக கட் செய்து, இரும்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு போட்டு கூடவே கொஞ்சம் கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு சேர்த்து சுட சுட அவரது அப்பாவுக்கு இட்லி உப்புமா செய்து கொடுப்பார். அதை சீனியிலோ, தேங்காய் சட்னியிலோ தொட்டு சாப்பிட்டால்... அடடா! ஒரு படத்தில் ஹீரோ அல்லது ஹீரோ அணிந்திருக்கும் காஸ்டியூம்தான் ஃபேமஸ் ஆகும். உதாரணத்திற்கு குஷி பட ஜோதிகா ஹேர் க்ளிப், சந்திரமுகி புடவை. ஜவுளி கடைகள் அதைப் பயன்படுத்தி கல்லா கட்டினார்கள். ஆனால், ஒரு டிஷ் ஊர் முழுக்க ஃபேமஸ் ஆனது `சூர்யவம்சம்' படத்திற்கு பிறகுதான்.
-
2 காலம் எவ்ளோ வேகமா சுத்துது பார்த்தீங்களா?
அதே `சூர்யவம்சம்' படத்தில்தான் இந்த டெம்ப்ளேட்டும் ஃபேமஸ் ஆனது. நம் வாழ்வில் இருந்து கௌரி போய்விட்டால் என்ன... உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து நமக்காக நந்தினி வருவார் என்கிற ஆழமான கருத்தைக் கொடுத்த படம். சரியான படிப்பும் இல்லை, வேலையும் இல்லை என சின்ராசை விட்டு வசதியான ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்வார் கௌரி. ஆனால், நந்தினி சின்ராசை காதலித்து திருமணம் செய்து அவரது வளர்ச்சிக்கு துணை நிற்பார். நீண்ட நாட்கள் கழித்து சின்ராசு முதலாளியாக இருக்கும் கம்பெனியில் கௌரி அவரது கணவருக்கு வேலை கேட்டு வந்து நிற்பார். அப்போது கையில் காபியை கலக்கிக்கொண்டே, `காலம் எவ்ளோ வேகமா சுத்துது பார்த்தீங்களா' என கௌரியை சாஃப்ட் ஹர்ட் செய்வார் நந்தினி. மீம்கள்தான் தற்போதைய டிரெண்ட். வடிவேலு, விவேக், கவுண்டமணி டெம்ப்ளேட்களைத் தாண்டி தேவயானியின் இந்த டெம்ப்ளேட் செம வைரல் ஆனது.
-
3 `சூர்யவம்சம்' ஆசீர்வாதம் :
`சூர்யவம்சம்' படம் மொத்தமுமே மீம் டெம்ப்ளேட் கன்டென்ட்தான். அதில் இடம்பெற்ற `பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்' டயலாக் இன்று வரை ஃபேமஸ். `சாவு டா' என்று ஆக்ரோஷமாக சொல்வதற்கு பதில் `பாயாசம் சாப்பிடுங்க ப்ரெண்ட்' என்றால் முடிந்துவிட்டது. அது சாஃப்ட்டான சர்காஸம். படத்தில் சின்ராசு ஒரு பக்கம் வளர்ந்து வர, இன்னொரு பக்கம் தேவயானி ஜில்லா கலெக்டர் ஆகிவிடுவார். அப்போது ஊர் பிரச்னைக்காக வந்து நிற்கும் சின்ராசுவின் அப்பா சக்திவேல் கவுண்டரிடம் சூசகமாக ஆசீர்வாதம் வாங்குவார் தேவயானி. இது போன்ற ரசிக்கும்படியான பல காட்சிகள் இடம்பெற்ற ஒரு பக்கா ஃபேமிலி மெட்டீரியல் படம்தான் `சூர்யவம்சம்'. `இவரு பெரிய சூர்யவம்சம் தேவயானி. தெரியாம ஆசீர்வாதம் வாங்குறாரு!'
-
4 பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
இந்த டெம்ப்ளேட்டுக்கு சொந்தமான படம் `நீ வருவாய் என'. இதுவும் 90ஸ் கிட்ஸ் போற்றும் திரைக்காவியம். கையில் கிளியுடன் இவர் பாடும் `பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு' என இவர் நடிக்கும் போது இந்தளவிற்கு டேமேஜ் ஆகும் என்று நினைத்திருக்க மாட்டார். இன்றும் இந்தப் பாடல் டிவியில் ஒலித்தால் வீட்டில் நாம் மட்டும் சிரிப்போம். `ஏன் டா லூசு மாதிரி சிரிக்கிற' என அம்மா கேட்டாலும், `உனக்கு சொன்னா புரியாது மா' என்று கடந்துவிட மட்டுமே முடியும். அந்தளவிற்கு இந்த மீம் டெம்ப்ளேட்டின் காரணத்தை வெளியே சொல்லவே முடியாது. மீம் கிரியேட்டர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு உதாரணம் இந்தப் பாடல். எப்படி நேசமணியை டிரெண்ட் செய்தார்களோ, அதேபோலத்தான் இதையும் டிரெண்ட் செய்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு அப்லோட் ஆன இந்தப் பாடலை டாப் 5 யூடியூப் டிரெண்டிங் கொண்டு வந்து மில்லியன் கணக்கில் வியூஸ்களை ஏற்றிவிட்டார்கள்.
-
5 எவ்ளோ பெரிய மாத்ரே?
`பஞ்சதந்திரம்' படத்தின் சில காட்சிகளே வந்தாலும் பட்டாசு போல் வெடித்து சென்றிருப்பார் தேவயானி. தேவயானியை இது போல எந்தப் படத்திலும் நாம் பார்த்திருக்கவே மாட்டோம். கமல் - தேவயானிக்கு இடையே நடக்கும் உரையாடல், சிம்ரன் வந்த பிறகு இவர்கள் மூவருக்கும் நடக்கும் உரையாடல். இந்த மொத்த காட்சியும் காமெடி ரோலர் கோஸ்டர்தான். அப்போது இவர் சொல்லும் `எவ்ளோ பெரிய மாத்ரேய்ய்ய்ய்...' என சொல்லும் டயலாக் கியூட் அண்ட் ஸ்வீட்!
0 Comments