சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழ் இயக்குநர்… காதல் கோட்டை மூலம் தேசிய கவனம் ஈர்த்த இயக்குநர் அகத்தியன் நமது `Tamilnadu Now’ சேனலுக்கு எக்ஸ்குளூசிவ்வாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
அவரின் பேட்டியில் இருந்து சில துணுக்குகள்..
- `1996-ல் வான்மதி, கோகுலத்தில் சீதை, காதல் கோட்டைனு மூணு படங்கள் வந்துச்சு. ஆனா கோகுலத்தில் சீதை படத்துடைய கதை நான் எழுதுனது 1990-ல். காதல் கோட்டை படத்தோட கதையை 1993-லயே எழுதிட்டேன். அதே மாதிரி 1990-ல பண்ண மதுமதி படத்தைதான் நான் வான்மதினு பண்ணேன். இப்பவும் என்னை நீங்க கதை சொல்ல சொன்னா டேப் ரெக்கார்டரை ஆன் பண்ண மாதிரி மூன்று கதைகள் சொல்வேன். அதுக்குத் தகுந்த மாதிரி என்னை நான் தயார்படுத்திக்கிட்டேன். நான் யார்கிட்டயும் அசிஸ்டென்டா வேலை பார்க்கலை. என்னை நான்தான் முன்னேற்றி கொண்டு வரணும்; யாரும் எனக்காக எதுவும் பண்ண மாட்டாங்க. ஒர்க் பண்றதுக்கு எளிமையா இருந்தாலும் அந்த ப்ராசெஸ் கடினமாதான் இருந்தது’.
- `சினிமாவும் சுயமரியாதையும் ஒண்ணு சேரும்போது தோல்விதான் நிகழும். நிறைய இடத்துல நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. அதே மாதிரி நல்லா இல்லைனு மனசுல பட்டதை வெளிப்படையா சொன்னா நிறைய பிரச்னைகள் வரும். அதே மாதிரி நல்லா இருக்குன்னா.. யார் என்னனு எல்லாம் பார்க்காம நேரடியா அவங்ககிட்டே உங்களோட ஒர்க் நல்லா இருக்குனு சொல்லிடுவேன். அம்மா கிரியேஷன்ஸ்ல இருந்து ஒரு பெரிய இயக்குநர்கிட்ட வேலை பார்க்க அனுப்பி வெச்சாங்க. அப்ப மார்கெட்ல பெரிய இயக்குநர். உள்ள இருந்தப்ப அவரோட கதையை சொல்லிட்டு யாருக்காவது பிடிக்கலையானு கேட்டார். நான் மொதோ ஆளா கை தூக்கினேன். வெளில போனு சொல்லிட்டார். வந்துட்டேன். எனக்கு பிடிக்கலைன்னா அந்த இடத்துல நான் வேலை பார்க்க மாட்டேன். சினிமாவுல சுயமரியாதை முக்கியமான விஷயம்’’.
- என்னுடைய பட வசனங்கள் எல்லாம் நான் வாழ்ந்த வாழ்க்கையின் வலி. அப்படி வாழ்க்கை எனக்கு நிறைய கத்துக் கொடுத்துச்சு. BA முதல் வருடத்துல எனக்கு காந்தினு ஒரு ரூம் மேட் இருந்தான். அந்த ஒரு வருடம் மட்டும்தான் நான் அங்க படிச்சேன். ஒரு நாள் என் ஃப்ரெண்ட்கிட்ட பேசும்போது, `உன்னோட சுதந்திரம்ங்கிறது என்னோட மூக்கு நுனி வரைக்கும்தான் மூக்கை தொடுறது இல்லை’னு சொன்னான். இதை அவன் என்கிட்ட சொன்னது 1973-ல. அது என்னோட மனசுல ரொம்ப ஆழமாப் பதிஞ்சு அதைத்தான் நான் காதல் கோட்டை படத்துல வெச்சிருந்தேன். இப்படி என்னோட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து என்னுடைய சினிமாவை நான் கட்டமைத்தேன்.
இதேபோல் பல நாஸ்டால்ஜியா விஷயங்களையும் சினிமா குறித்த தன்னோட பார்வை என பல விஷயங்கள் குறித்தும் இயக்குநர் அகத்தியன் நம்மோடு பகிர்ந்து கொண்டார். முழு நேர்காணலையும் பார்க்க…
Also Read – `அஜித் சார் நடிச்சு இளையராஜா இசையமைத்த ஒரே படம் என்னோட படம்தான்!’ – ரமேஷ் கண்ணா ஷேரிங்ஸ்
0 Comments