H Vinoth

சினிமா போதைக்குப் பதில் அந்த போதை பழகுங்கள் – ஹெச்.வினோத் தத்துவங்கள்!

துணிவு படத்தோட ப்ரோமோசனுக்காக ஹெச்.வினோத் சமீபத்துல நிறைய பேட்டிகள் கொடுத்திட்டு இருக்காரு. அது எல்லாத்துலயும் அங்கங்க சில தத்துவார்த்தமான பதில்களை அள்ளித் தெளிச்சுட்டே போறாரு. அப்படி ஹெச். வினோத் சொன்ன 10 ஃபிலாசபிகளைத்தான் இந்த வீடியோல தொகுத்து கொடுக்கிறோம்.

ஹெச்.வினோத் தத்துவங்கள்!

* கடவுள் எனக்கு ‘X’

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. என் பிரச்னைகளுக்கான தீர்வா நான் கடவுள்கிட்டதான் போய் நிக்குறேன். ஆனா அது என் பெர்சனலா இருக்குறவரை எந்த பிரச்னையும் இல்ல. கடவுளை வைத்து வியாபாரம் செய்யுறப்பவோ, கடவுளை வைத்து அதிகாரத்தை அடையலாம்னு நினைக்குறப்போவோதான் பிரச்னை வருது. கணக்குல விடை தெரியாத விஷயங்களை X னு வச்சிக்கிட்டு பிராப்ளம் சால்வ் பண்ணுவோம்ல. அப்படி கடவுள் எனக்கு ஒரு X மாதிரி – ஹெச்.வினோத்

H Vinoth
H Vinoth

* சினிமாவுக்கு இவ்வளவு நேரம் தேவையா?

சினிமாவுக்கு ஒரு தனிநபர் இவ்வளவு நேரம் ஒதுக்கணுமா என்று யோசிக்கணும். ஒரு படம் வருதுனா அது சம்பந்தமான எல்லா செய்திகளையும் பார்த்து, எல்லா விஷயங்களையும் தெரிந்து வச்சிருந்தா படம் நிச்சயமா உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது. படம் பார்க்கும்போதே Predictable-ஆ தான் இருக்கும். நாம ரொம்ப சினிமா செய்திகளுக்கு அடிக்ட் ஆகுறோம். இதனாலதான் ராமதாஸ், திருமா, சீமான் எல்லாம் சினிமாவை விரும்ப மாட்டேங்குறாங்க. உங்களுக்கு பிடித்த நடிகர் படம் வருதா போய் பாருங்க. காசு இருந்தா ரெண்டு படம் பாருங்க. அவ்வளவுதான். பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனையெல்லாம் பாத்துட்டு இருக்காதீங்க. அது உண்மையும் கிடையாது. | ஹெச்.வினோத்

* வியாபார போதை வேணும்

இன்றைக்கு இருக்குற இளைஞர்கள் ஸ்மார்ட்போனுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையா இருக்காங்க. அடுத்த தலைமுறை வளரணும், நாட்டை காப்பாத்தணும்னா நமக்கு வியாபார போதை இருக்கணும். அதை வளர்க்கலைனா கண்டிப்பா மாட்டிப்பீங்க.

* அறிவியலா? மதமா?

மதம் சில விஷயங்களை நம்புது. அறிவியல் சில விஷயங்களை நம்புது. ஆனா ரெண்டுக்கும் இருக்குற வித்தியாசம் என்ன்னா, மதம் சொல்ற விஷயங்களை பொய்னு யாராச்சும் நிரூபிச்சா அவங்களை கட்டி வச்சி அடிக்குறதுல ஆரம்பிச்சு கொலை பண்ண வரைக்கும் வரலாறு இருக்கு. ஆனா அறிவியல் நம்புற விஷயங்களை பொய்னு நிரூபிச்சா அவங்களை அறிவியல் தலைமேல தூக்கி வச்சி கொண்டாடும்.

H Vinoth
H Vinoth

* தீரனுக்கு வருத்தம்

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு வந்த ஒரு விமர்சனத்தால் எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்தது. அந்த படம் பார்த்து தமிழ்நாட்டில் வேலை செய்யும் எல்லா வட இந்தியர்களையும் சந்தேகத்தோட பார்க்க ஆரம்பிச்சாங்க. எங்கேயாவது ஒரு வட இந்தியரை யாராவது அடிச்சிட்டா நீ பொறுப்பேத்துக்குவியானு ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசர் கேட்டாரு. அந்தக் கேள்வியிலிருந்து வெளிவர எனக்கு ரொம்ப நாள் தேவைப்பட்டது. அடுத்த படத்துல இந்த மாதிரி தப்புகள் பண்ணக்கூடாதுனு தெளிவா இருந்தேன். அந்த படத்தில் போலீஸ் என்கவுண்டர் செய்தது தப்புனு நிறைய பேர் சொன்னாங்க. அதனாலதான் வலிமைல என்கவுண்டர் தப்புனு எடுத்தேன்.

* கதையைவிட தகவல் முக்கியம்

எனக்கு கதை சொல்வதைவிட எனக்குத் தெரிந்த ஒரு தகவலைச் சொல்லி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டுவருவதுதான் பிடிக்கும். அந்தத் தகவலைச் சுற்றிதான் கதை ரெடி பண்ணுவேன். கதை சொல்பவர்கள் பெரிய அளவில் முன்னேறியதாக இருக்காது. யாரெல்லாம் டேட்டாவ வச்சி செயல்படுறாங்களோ அவங்கள்லாம் பெரிய பெரிய ஆட்களா வந்திருக்காங்க.

* பேட்டிகளை தவிர்ப்பது ஏன்?

எனக்கு கேமராவை சந்திக்குறதுல தயக்கம் இருக்கு. எனக்கு கோர்வையா பேச வராது. சமயங்கள்ல நாம பேசுறதை வேற விதமா கட் பண்ணி போட்டு ட்ரோல் பண்ணுவாங்க. அது மட்டுமில்லா  நாம வாழ்க்கைல கன்சிஸ்டண்சி மெயிண்டெய்ன் பண்ற ஆள் கிடையாது. இன்னைக்கு ஒண்ணு சொன்னா நாளைக்கு நமக்கு வேற புரிதல் வந்திருக்கும். ஆனா ரெண்டையும் எடுத்து போட்டு அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு மாத்தி பேசுறனு கேப்பாங்க. அதனாலதான் வீடியோ பேட்டிகளை விரும்புறதில்ல. அதுவே பிரிண்ட் மீடியால பேட்டி கொடுத்தா நான் சொன்னதை வேற மாதிரி எழுதிட்டாங்கனு சொல்லி தப்பிச்சுக்கலாம்.

Also Read – வாயைத் திறந்தாலே பஞ்சாயத்துதான்.. வாரிசு `கில்’ ராஜு சேட்டைகள்!

* நான் கலைஞனா? வியாபாரியா?

எனக்கு கலை மீதெல்லாம் பெருசா ஆர்வமில்லை. நான் என்னை ஒரு பிசினஸ்மேன் போலத்தான் பார்க்கிறேன். இரண்டுக்குமான வித்தியாசம் என்னன்னா.. ஒரு ஆர்டிஸ்ட் ஒரு சீன் எடுத்தால் அது நல்லா வர்றவரைக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும், எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவழித்து திரும்பத்திரும்ப எடுப்பார். எனக்கு அப்படியில்ல. நான் இன்னைக்கு இந்த சீன் எடுக்கணும்னு சொல்லிருந்தா அதை எப்படியாவது முடிச்சிடணும்னு என்று மட்டும்தான் யோசிப்பேன். துணிவு படத்தில் ஒரு வசனம் வரும் ‘ஜனங்க என்ன நம்புறாங்களோ அதை உற்பத்தி பண்ண பிசினஸ்மேன் தயங்குறதில்ல’ அது நல்லதோ கெட்டதோ. மக்கள் கடவுளை நம்பினா கடவுளை விக்குறான். தண்ணி பாட்டில்ல குடிச்சா நல்லதுனு நம்புனா அதை விப்பான். நானும் அந்த மாதிரி ஜனங்களுக்கு என்ன கண்டண்ட் பிடிக்குதோ அதை விற்கிறேன். ஆனா அதுல கொஞ்சம் அறத்தோட பண்றேன்.

H Vinoth
H Vinoth

* ரொமான்ஸ் வராதுங்க..

எனக்கு ரொமான்ஸ் காட்சிகள் எழுத வரமாட்டேங்குது. ஏன்னா அம்மா, தங்கச்சி தவிர நிறைய பெண்களோட நான் பேசினதில்ல. படித்தபோதும் வேலை பார்த்தப்போவும் பெண் நட்பே இல்லாம போயிடுச்சு. தேடிப்படித்த நாவல்களும் குற்றமும் தண்டனையும் மாதிரிதான். அதனால அந்த ஜோனுக்குள்ள போனதே கிடையாது.  

* ஸ்டார்கூட படம் பண்றதுல சிக்கல்

எல்லாரலயும் ஸ்டார் ஆகிடமுடியாது. ஏதோ ஒரு வகைல இவர் நம்மாளுனு ஜனங்க நினைத்தால்தான் அவங்க ஸ்டார் ஆக முடியும். அப்படியான ஸ்டார் நடிகர்களை வைத்து படம் பண்ணும்போது முதல் நாள் முதல் காட்சியை கத்தி, விசில் அடித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கென சில விஷயங்கள் பண்ணனும். குறைந்தபட்சம் ஒரு ஸ்லோமோசன் ஷாட்டாவது வைக்கவேண்டும். இதுல உடன்பாடு இல்லைனா ஸ்டாரை வைத்து படம் பண்ணனும்னு நினைக்கக்கூடாது. அதே சமயம் ஓவரா பண்ணி ஃபேன் பாய் படமா மாத்துறதுலயும் எனக்கு விருப்பமில்ல. ஹெச்.வினோத்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top