கடவுள் வந்தா சாகலையானுதான் கேப்பேன்… மிஷ்கின் லைஃப் ஸ்டோரி!

மிஷ்கின் ‘பொறுக்கிப் பைய’னு திட்டுன கோவக்கார மிஷ்கினை நமக்கு தெரியும். ‘துள்ளி எழுந்தது பாட்டு’னு பாடியே நம்மள உருக வைக்கிற மிஷ்கினை தெரியும். கடவுள் வந்தா அதைக்குடு இதைக்குடுனு கேக்கலாம்னு நினைக்கிறவங்க மத்தியில, “பலகோடி ஆண்டுகளா வாழ்றியே நீ இன்னும் தற்கொலை பண்ணிக்கலையா?”னு கேக்க்குற மிஷ்கினை தெரியும். ‘கம்பி மத்தாப்பை கொழுத்தி அதன் ஒளிச்சிரிப்பைப் பார்ப்பதைவிட நாம் என்ன சாதிக்கப்போகிறோம்!’னு குழந்தையா மாறுற மிஷ்கினை தெரியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்னு மாஸ்டர் பீஸ் கொடுத்த மிஷ்கினை தெரியும், ‘மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு’னு நடிக்கிற மிஷ்கினை நமக்கு தெரியும். ஆனால், அந்த மனுஷனோட வாழ்க்கை பயணம், மவனே, இப்படி ஒருத்தரால வாழ முடியான்ற ரேஞ்ச்லதான் இருக்கு.

Director Mysskin
Director Mysskin

நான் அஸிஸ்டன்ட் டைரக்டரா இருக்கும்போது பயித்தியம் மாதிரி வேலை பார்ப்பேன்னு மிஷ்கின் எப்பவும் சொல்லுவாரு. விஜய் நடிச்ச யூத் படத்துல டைரக்டர் வின்சென்ட் செல்வாக்கு அஸிஸ்டென்டா மிஷ்கின் வேலை பார்த்தாரு. அப்போ, ஒரு பாட்டுக்கு சிச்சுவேஷன் சொல்லி பாடல் வரிகள்லாம் எழுதி முடிச்சிருக்காங்க. ஆனால், அந்தப் பாட்டு மிஷ்கினுக்கு புடிக்கலை. டைரக்டர்கிட்ட சொல்லிருக்காரு. “டேய், உனக்கு இதுதான் முதல் படம். வாயை மூடுனு” சொல்லியிருக்காரு. புரொடியூஸரும் பாட்டை மாத்த ஒத்துக்கலை. அப்போதான், அவர் நண்பனை கூட்டிட்டு வந்து பாட்டு எழுத சொல்லிருக்காரு. அந்த பாட்டு டைரக்டருக்கு புடிச்சிருக்கு. ஆனால், மாத்த முடியாதுனு சொல்லியிருக்காங்க. மணி ஷர்மா அந்தப் படத்துக்கு மியூசிக். அவருக்கு அப்போ தமிழ் தெரியாது. ஷங்கர் மகாதேவன் அந்தப் பாட்டை பாடப்போறாரு. மிஷ்கினை சொல்லிக்கொடுக்க சொல்லிருக்காங்க. எல்லாரும் வெளிய போனதும். சோகமா உள்ள போய்ருக்காரு.

ஷங்கர் மகாதேவன் பாடும்போது அந்தப் பாட்டை எடுத்துட்டு மிஷ்கின் நண்பன் எழுதுன பாட்டுப் பேப்பரை உள்ள வைச்சிட்டாராம். பாட்டை ரெக்கார்ட் பண்ணியும் முடிச்சிட்டாங்க. மணி ஷர்மாக்கு தமிழ் தெரியாது, அவரும் அதை கவனிக்கலை. கடைசில எல்லாரும் பாட்டு கேட்டுட்டு செம ஷாக் ஆகியிருக்காங்க. படத்தின் புரொடியூஸர் கத்த ஆரம்பிச்சதும், டைரக்டர் மிஷ்கினை கூட்டிட்டு வெளிய போய்ட்டாராம். என்னடா இப்படி பண்ணிட்ட, ஆனால், பாட்டு நல்லாருக்குனு சொல்லிருக்காரு. முதல்ல அந்தப் பாட்டை எழுதுனது, கவிஞர் வாலி. ரெண்டாவது எழுதுனது கபிலன். அந்தப் பாட்டு பேரு ஆல் தோட்ட பூபதி. இன்னைக்கு வரைக்கும் விஜய்யோட ஃபேன்ஸ்க்கு புடிச்சப் பாட்டு அதுதான். அந்தப் பாட்டு செம ஹிட் ஆனதுக்கு பிறகு, மணி ஷர்மா அவரைக் கூப்பிட்டு ரூ.5000 செக் கொடுத்தாராம். இப்படி கிரேஸியான நிறைய கதைகள் மவனே இந்த மிஷ்கின் கதைகள்ல நிரம்பி இருக்கு. அவர் வாழ்க்கையே இப்படித்தான் இருந்துருக்கு. அவர் கேக்குற கேள்விகள், வாழ்க்கையை பத்தி பேசுறதுல இருந்தே அதை நாம புரிஞ்சுக்கலாம்.

Director Mysskin
Director Mysskin

வாழ்க்கையைப் பத்தி மிஷ்கின் சொன்ன சின்ன சின்ன கிரேஸியனா விஷயங்களை சொல்லிட்டு அவரோட ஜர்னிக்குள்ள உங்களை கூட்டிட்டுப் போகலாம்னு நினைக்கிறேன். எல்லாருக்குமே வீடு, பணம், புகழ்னு இருக்க ஆசைதான். ஆனால், மிஷ்கின் சொல்றதைக் கேட்டா, இப்படியும் வாழ்ந்துட்டு போகலாம்ல அப்டினு தோணும். “70,000 ரூபாய் வீட்டுல தான் வாழணுமா? 25,000 ரூபாய் வீட்டுல வாழக்கூடாதா? ஆப்பிரிக்கால ’ஒரு மனிதன் படுக்கும்போது மட்டும்தான் வீட்டுக்குப் போறானா, மற்ற நேரம்லாம் இயற்கையோடு இருக்கணுமா’. சிங்கமும் பாம்பும் கொன்றுனும்னுதான் வீட்டுக்கே போவான். வீடுனாவே அடைதல்தான். கான்க்ட்ரீட் சுவர்களை தவிர்த்துட்டு, மண் வீட்டுல உட்கார்ந்து, கைல விசிறியோட கைல புத்தகங்களோட வாழணும்னு நினைக்கிறேன்”னு சொல்லுவாரு. நரகத்துலயோ, சொர்க்கத்துலயோ கக்கூஸ் போகும்போது எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை. எனக்கு அதுல நம்பிக்கையும் இல்லை. இந்த 46 வயசுலயே எனக்கு போர் அடிக்குது. கடவுள் வந்தா பலகோடி வருஷம் இருக்கியே தற்கொலை பண்ணிக்கலையானு கேப்பேன் அப்டினு சொல்லுவாரு.

“காலைல வேலைக்கு போறீங்க, சாயங்காலம் வறீங்க. வீடு கட்றீங்க. கார் வாங்குறீங்க. ஷோபாவை மாத்துறீங்க. டி.வியை பெருசாக்குறீங்க. என்னங்கடா பண்றீங்க? போர் அடிக்கலையா? குருவியை பார்க்க முடியலை. மரத்துல கூடு கட்டிருக்கானு விசாரிக்க முடியலை.”னு நம்ம ரொட்டீன் வாழ்க்கையை கொஞ்சம் நிறுத்தி இயற்கையை பாருங்கனு சொல்லுவாரு. “ரோடு டக்டக்னு வளையுற மாதிரிதான் வாழ்க்கையும். போற வழில, ஒருத்தன் சாராயம் குடிச்சிட்டு கிடப்பான், திருநங்கை நிப்பாங்க, விலை மாது நிப்பாங்க, ஒருத்தன் பிச்சை எடுத்துட்டு இருப்பான், ஆக்ஸிடன்ட் ஆன வண்டி அந்த கார்னர்ல தான் போட்ருப்பாங்க, ஒவ்வொரு நாளும் துக்கம்தான் இருக்கு”னு விரக்தில பேசுவாரு. எல்லாத்தையும் ரொமான்டிசைஸ் பண்றாரு, உணர்ச்சிகளை அருவி மாதிரி கொட்றாருனு அடிக்கடி தோணும். அதேநேரத்துல, காட்றதுக்குதான ரொமாண்டிஸைஸ், கொட்றதுக்குதான் உணர்ச்சினு தோணும். இப்படிலாம் மனுஷன் பேசுறதுக்கு முக்கியமான காரணம், அவர் படிச்ச புத்தகங்களும் பார்த்த படங்களும்தான்.

Director Mysskin
Director Mysskin

சண்முகராஜாதான் மிஷ்கினோட உண்மையான பெயர். 12வது வரைக்கும் நார்மலான மாணவர். ஆனால், வாழ்க்கையைப் பத்தின கேள்விகள், உலகத்தைப் பத்தின கேள்விகள் எல்லாம் அவருக்கு அதிகம். அதுக்காக புத்தங்கள் நிறைய படிக்கத் தொடங்குனாரு. அப்படி, அவர் படிச்ச இடியட் நாவல்ல வந்த மிஷ்கின் பெயரை தன்னோட பெயராவே மாத்திக்கிட்டாரு. சுத்தி இருக்குற விஷயங்களை ரொம்ப உன்னிப்பா கவனிப்பாரு. சினிமாவை அவருக்கு அறிமுகப்படுத்துனது, அவர் அப்பாதான். சினிமாக்குதான் வரணும்ன்றதுலாம் அவர் ஆசை இல்லை. அவர் அதை நினைக்கவும் இல்லை. படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட 70 வேலைகள் பார்த்தாராம். எப்போலாம் டைம் கிடைக்குதோ, அப்போலாம் வாசிக்கிறதுதான் அவர் ஒரே வேலை. எல்லா வேலையும் போர் அடிக்கும்போது, ஒருநாள் உட்கார்ந்து என்ன பண்ணலாம்னு யோசிக்கிறாரு. அப்போ, கதை சொல்லலாம்னு முடிவு பண்றாரு. அதுதான் அவரோட வாழ்க்கையின் திருப்புமுனைனு சொல்லுவாரு.

லேண்ட்மார்க்ல புத்தகக்கடைல மிஷ்கின் வேலை பார்த்துட்டு இருந்தாரு. அப்போ, இயக்குநர் கதிர் ஒருநாள் அங்க புத்தகம் வாங்க வந்துருக்காரு. “இன்டிபென்டன்ஸ் பத்தி படம் எடுக்குறேன். புத்தகம் வேணும்”னு கேட்ருக்காரு. மிஷ்கின் கிட்டத்தட்ட 40 புத்தகங்களை எடுத்து கொடுத்துருக்காரு. அவர் ஆச்சரியப்பட்டு, இவரை புடிச்சுப்போய், அஸிஸ்டண்டா வந்து சேர்ந்துக்கனு சொல்லிருக்காரு. ஆனால், அவர்கூட சண்டைப் போட்டுட்டு வந்துட்டாரு. திரும்பவும் லேன்ட்மார்க்ல வேலை பார்க்கும்போது வின்சென்ட் செல்வா கடைக்கு வந்துருக்காரு. அவர் இவருக்கு நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்துருக்காரு. அப்போதான், முன்னாடி நான் சொன்ன சம்பவங்கள் எல்லாம் பண்ணியிருக்காரு. அவங்ககூடலாம் வேலை பார்த்துட்டே சித்திரம் பேசுதடி கதை எழுத ஆரம்பிச்சிருக்காரு. மிஷ்கினோட ஃப்ரெண்ட் ஸ்ரீகாந்துக்கு இந்தக் கதை தெரியும். அவர் இன்னொருத்தர்கிட்ட அறிமுகம் பண்ணி வைச்சிருக்காரு. அங்க மூணு பேரும் சரக்கடிச்சிட்டு இருந்துட்டு, மிஷ்கின் அழுதுட்டே கதை சொல்லிருக்காரு. அவங்களும் அழுதுருக்காங்க. கதை புடிச்சுப் போய் அவரும் புரொடியூஸ் பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் எல்லாமே வரலாறுதான்.

Director Mysskin
Director Mysskin

சித்திரம் பேசுதடில தொடங்கி சைக்கோ வரைக்கும் தன்னுடைய எல்லா படங்கள்லயும் அறத்தையும் அன்பையும் மனிதத்தையும் மனுஷன் சொல்லிக்கிட்டே இருப்பாரு. குறிப்பா, அவர் அறிமுகமான நந்தலாலா. நிறைய பேருக்கு இந்தப் படம் புடிக்காது. ஆனால், நல்ல நடிகனை தமிழ் சினிமாவுக்கு இந்தப் படம் அறிமுகப்படுத்திச்சுனே சொல்லலாம். மனநலம் பாதிப்படைந்த ஒருத்தரா மிஷ்கின் பின்னியிருப்பாரு. அதே மாதிரி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும். மிஷ்கினோட மாஸ்டர் பீஸ். அந்த ஆளே நினைச்சாலும் இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியாதுனு தோணும். குறிப்பா, சுடுகாட்டுல உட்கார்ந்து கதை சொல்ற சீன் ஒண்ணு வரும். மிஷ்கின் நீ வேறயானு சொல்ல தோணும். அப்புறம், பிசாசு. ஒரு பேயை ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் காதலிக்க வைச்ச மனுஷன். மிஷ்கினோட எல்லா படங்கள்லயும் கால் ஷாட் வைப்பாரு. பயங்கரமா கலாய்ப்பாங்க. அதுக்கு செமயான ரீஸன் சொல்லுவாரு. “மூஞ்சி ரொம்ப போர் அடிக்குது. நல்லா ஆக்ட் பண்றாங்க. அதுனால, கால்ல ஷாட் வைச்சிருவேன். கால்ல ஷாட் வைச்சா, ஒரே ஷாட்தான். மூஞ்சிக்கு ஷாட் வைச்சா 10, 15 டேக் போகும்”னு சொல்லுவாரு.

எல்லா படங்கள்லயும் பாட்டு முக்கியமானதா இருக்கும். இப்போ, மியூசிக் கூட பண்ணப் போறாரு. அந்தப் பாட்டு வழியாதான் மிஷ்கின் மஞ்சள் சாரியை அறிமுகப்படுத்துனாரு. அவர் அடையாளமா சொல்லுவாங்க, செமயா கலாய்ப்பாங்க. மனுஷன் அதுக்கும் செமயான ரீஸன் ஒண்ணு வைச்சிருக்காரு. “மஞ்சல் கலருக்கே பெரிய பிரைட்னஸ் இருக்கு”னு சொல்லுவாரு. மிஷ்கின் கலர் தியரிலாம் படிச்சதுனால அது தெரியும்னு சொல்லுவாரு. அந்தப் பாட்டு ஹிட் ஆனப்பிறகு, அவர் டைரக்ட் பண்ணப்போற எல்லாப் படத்துக்கும் ஒரு மஞ்சள் சாரி பாட்டு கேப்பாங்களாம். மஞ்சள் சாரி பாட்டுலாம் தவிர்த்துட்டு பார்த்தா கண்ணதாசன் காரைக்குடி, பார் ஆந்தம் பாட்டுலாம் செம வைப் பாட்டு. தாலாட்டு கேட்க நானும், போகும் பாதை, உன்னை நினைச்சு பாட்டுலாம் அப்படியே அழ வைச்சிரும். இன்னும் பல தரமான சம்பவங்களை மிஷ்கின் தன்னோட சினிமா கரியர்ல பண்ணதான் போராரு. பாலா இன்டர்வியூ ஒண்ணுல சொல்லுவாரு, “தமிழ் சினிமாவுக்கு மிஷ்கின் கிடைச்சது வரம்”னு. எவ்வளவு உண்மைல?

Also Read – தற்கொலை முயற்சி டூ கே.ஜி.எப் மியூசிக் டைரக்டர் – ரவி பஸ்ரூரின் இசைப் பயணம்!

நிறைய இளம் இயக்குநர்களுக்கு அவர்கூட சேர்ந்து சினிமா கத்துக்கணும்னு ஆசை. அவரை ரோல் மாடலா நிறைய பேர் வைச்சிருக்காங்க. ஆனால், மனுஷன் அவங்களுக்குலாம் சொல்றது, “என்னுடைய வாழ்க்கை உடைந்து போன வாழ்க்கை. போற்றத்தகுந்த வாழ்க்கைலாம் இல்லை. என்னுடைய வாழ்க்கையை காஸிப் மாதிரி நினைச்சு விட்ருங்க. என்னுடைய படங்கள்தான் இன்ட்ரஸ்டிங்கானது”னு சொல்லுவாரு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top