படிச்சவனுக்கு எதுக்கு சினிமா… கற்றது தமிழ் ராம் சினிமா பயணம்!

சினிமாவுக்கு ஏன் படிச்சவங்கள்லாம் வர்றீங்கன்ற கேள்வியோட நிராகரிக்கப்பட்ட ஒருத்தர்தான், ராம். ஆனால், ராம் என்கிற கலைஞன் இன்னைக்கு தன்னுடைய படைப்புகள் வழியா அன்பை மட்டுமே சொல்றாரு. ஆண் – பெண் உறவு சிக்கலை குறிப்பிடுறாரு. உலகமயமாக்கலை பதிவு பண்றாரு. சமூகத்தின் மீது பலவிதமான கேள்விகளை முன் வைக்கிறாரு. தமிழ் சினிமாவை இன்னைக்கு ராமை தவிர்த்திட்டு பேச முடியாது. அந்த மனுஷனோட சினிமா பயணம் என்ன?

கற்றது தமிழ்
கற்றது தமிழ்

இயக்குநர் ராம் வழக்கம்போல அக்டோபர் 5, 2013 அன்னைக்கு லேட்டாவேதான் தூக்கத்துல இருந்து எழுந்துருந்தாரு. ஃபோன் எடுத்து பார்க்கும்போது நிறைய பேர் அவருக்கு அந்த நாள்ல ‘ஹேப்பி பெர்த் டே’னு மெசேஜ் பண்ணியிருக்காங்க. இன்னைக்கு என்னோட பிறந்தநாள் இல்லையே, அப்புறம் ஏன் எல்லாரும் இப்படி மெசேஜ் பண்ணிருக்காங்கனு குழம்பியிருக்காரு. அப்புறம் ஒருத்தர், ‘ஹேப்பி பெர்த்டே டு கற்றது தமிழ்’னு ஃபோன் பண்ணி வாழ்த்து சொல்லியிருக்காரு. கற்றது தமிழ் ரிலீஸ் ஆன நாள்னு ராம் மறந்து போய்ருக்காரு. அவர் மறந்துபோன கற்றது தமிழை எல்லாரும் கொண்டாடுறதைப் பார்த்து ரொம்பவே மகிழ்ச்சிடையஞ்சுருக்காரு. அதுக்கப்புறம் தங்கமீன்கள் எடுக்குறதுக்கான முயற்சில 6 வருஷம் ராம் & டீம் இருந்துருக்காங்க.  தங்க மீன்கள் படம் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர் ஓனர்கள் எல்லாரும், “தங்க மீன்கள் மஷ்ரூம் மூவி’னு சொல்லியிருக்காங்க். யாரு நடிச்சாங்கனு தெரியாது, எதைப் பத்தி தெரியாது, ஒரு ஷோ வேணும்னா கொடுக்கலாம்னு கொடுக்குறாங்க. அதுவும் காலைலதான்னு சொல்றாங்க.

ஈவ்னிங் ஷோ கொடுங்க. ஏன்னா, குழந்தைகள் எல்லாரும் இதை பார்க்கணும்னு ராம் சொல்லியிருக்காரு. பார்ப்போம்னு சொல்லியிருக்காங்க. படத்துக்கு டிக்கெட் புக்கிங் ஓப்பன் ஆனதும் அரை மணி நேரத்துல இந்தியா முழுக்க ஃபுல் புக் ஆகியிருக்கு. அப்புறம் கமலா தியேட்டர் ஓனர் ராம்க்கு ஃபோன் பண்ணி, “எப்படிங்க உங்க படம் இப்படி ஃபுல் ஆச்சி. ஏன்னா, நீங்க ஒரு படம்தான் பண்ணியிருக்கீங்க. அதுவும் ஓடாத படம்னு நினைக்கிறோம். சனிக்கிழமைல இருந்து உங்கப் படத்தை மூணு காட்சிகளா மாத்திடுறோம்”னு ராம்கிட்ட சொல்லியிருக்காரு. அப்புறம் எல்லா ஷோவும் ஃபுல். அதை சொல்லும்போது ராம், “அப்போதுதான் எனக்கு தெரிஞ்சுது. தோல்வியடைந்ததாக சொல்லப்பட்ட கற்றது தமிழ் வெற்றி பெற்றது” அப்டினு. படம் ரிலீஸ் ஆகி எத்தனை வருஷங்கள் ஆனாலும் அந்தப் படம் நின்னு பேசணும். அப்படியான படங்களைதான் எடுக்கணும்னு நினைக்கிற வெகுசில இயக்குநர்கள்ல ராம் முக்கியமானவர்.

Ram
Ram

தமிழ் ஈழப்போராட்டம், ராஜீவ் காந்தி படுகொலை, சமூக விழிப்புணர்வு இதெல்லாம் நிறைந்து இருந்த அரசியல் சூழல்லதான் ராம் வளர்ந்துருக்காரு. அவர் வளர்ந்த காலகட்டம் அப்படினு சொல்லலாம். ராம் ஸ்கூல்ல தமிழ் மீடியம்தான் படிச்சாரு. நினைவுகள் தெரிஞ்சு வளர்ந்து வர்ற அந்த காலத்துல சமூகத்துல எல்லாவிதமான கிளாஸ் பசங்ககூடவும் பழகுற வாய்ப்புகள் கிடைக்குது. பணம், பிரிவினை பத்தின புரிதல் எல்லாமே அவருக்கு புரிய ஆரம்பிக்குது. 10வது வரைக்கும் அம்மாப்பாவுக்குப் புடிச்ச நல்ல பையன். டாக்டர், இஞ்சினீயர் ஆகணும்னு ஃபஸ்ட் குரூப்ல சேர்த்து விட்ருக்காங்க. அந்த சமயத்துல காசை திருடிட்டு வீட்டை விட்டு ஓடி போய்ருக்காரு. இந்தியா முழுவதும் பயணம் பண்றாரு. இந்தியாவை அவருக்கு ரொம்பவே புடிக்குது. அவர் அங்கப் பார்த்து பழகுன மனிதர்களை நேசிக்க ஆரம்பிக்கிறாரு. காசே இல்லாமல் இங்க வாழலாம்ணும் நினைக்கிறாரு. அப்புறம் திரும்பி வந்து படிச்சு மதுரை அமெரிக்கன் காலேஜ்ல தமிழ் படிக்க ஜாயின் பண்ணியிருக்காரு. அங்க அவர் அரசியல், இலக்கியம், உளவியல்னு நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்குறாரு. அந்த கேம்பஸ் அவர் வாழ்க்கைல முக்கியமான பங்கு வகிச்சிருக்கு.

Also Read – திருவிழா நிகழ்ச்சிகள் டூ அமெரிக்கா – `சுட்டி’ அரவிந்த் பயணம்

மெட்ராஸ் யூனிவர்ஸிட்டில பி.ஹெச்.டி பண்ணனும்னு ஜாயின் பண்ணியிருக்காரு. ஆனால், அதுவும் அவருக்கு போர் அடிக்க ஆரம்பிச்சிருக்கு. அப்புறம் எழுத்தாளர் ஆகலாம்னு நினைச்சிருக்காரு. தமிழ்நாட்டுல சுத்தமா மதிப்பில்லாத வேலையா அதை நினைச்சிருக்காரு. ஊர் சுத்தணும், நிறைய டிராவல் பண்ணனும், வாழ்க்கைல சேலஞ்ச் இருக்கணும், சூதாட்டம் மாதிரி வாழ்க்கை இருக்கணும்னு நினைச்சு சினிமாவுக்குப் போகலாம்னு முடிவு பண்ணியிருக்காரு. எம்.ஏ படிக்கும்போது இவரோட தீஸிஸ் படிச்சிட்டு ராமை சந்திக்கணும்னு சொல்லி சந்திச்சு, நீ சினிமாவுக்கு சரியான ஆள்னு நிறைய பேரை சினிமால அறிமுகப்படுத்தியிருக்காரு. ஆனால், அவங்க யாருக்கும் இவரை புடிக்கலை. அந்த நேரத்துல பாலிவுட்ல இருந்த ராஜ்குமார் சந்தோஷியை எதார்த்தமா மீட் பண்ணியிருக்காரு. அவரோட லஜ்ஜோ படத்துல வொர்க பண்ணவும் ராம்க்கு வாய்ப்பு கிடைக்குது. சின்ன வயசுல இருந்து ஃபோட்டோகிராஃபியும் அவருக்கு புடிச்ச விஷயம். அங்க வொர்க் பண்ணிட்டு திரும்ப இங்க வந்துருக்காரு. காலேஜ் படிக்கும்போது ராமும் நா.முத்துக்குமாரும் நண்பர்கள். நா.முத்துக்குமார் பாலுமகேந்திராக்கிட்ட வொர்க் பண்ணும்போது ராம் இங்கிலீஷ்ல படம் ஒண்ணு பண்ண முயற்சி பண்ணியிருக்காரு. அதுக்கு பாலுமகேந்திரா கேமரா பண்ணுவாரானு கேட்க சொல்லியிருக்காரு. “யார் அவன் அவ்வளவு திமிரா?”னு கேட்டுட்டு மீட் பண்ண சொல்லியிருக்காரு. அப்படியே அவர்கிட்ட அஸிஸ்டெண்டா சேர வாய்ப்பு கிடைச்சிருக்கு.

Ram
Ram

பாலுமகேந்திராகிட்ட இருந்த சினிமாவை கொஞ்சம் நுணுக்கமா ராம் கத்துக்கிறாரு. அப்புறம், கற்றது தமிழ் படத்தை எடுக்குறாரு. முதல்ல மராத்தில இந்தப் படத்தை எடுக்க நினைச்சிருக்காரு. ஒருவேளை இதை எடுத்துருந்தா ஆர்.எஸ்.எஸ் படமாகூட அதை சொல்லியிருப்பாங்கனு சொல்லியிருப்பாரு. காதல், உலகமயமாதல், தமிழ்படிச்ச ஒருத்தனை இந்த சமூகம் எப்படி பார்க்குதுனு ஏகப்பட்ட விஷயங்களை கற்றது தமிழ் படத்துல சொல்லியிருப்பாரு. கற்றது தமிழ் படத்துல கல்வியைப் பத்தி, பொருளாதாரா அழுத்தம் பத்தி பேசியிருப்பாரு, அப்புறம் தரமணி படம். நகர வாழ்க்கைல ஆண் – பெண் சிக்கலைப் பேசுன படம்தான் தரமணி. உலகத்துல ஒருத்தரை மாதிரி இன்னொருத்தர் இருக்க மாட்டாங்க. அப்டின்றதை மையமா வைச்சு பேரன்பு படத்தை எடுத்துருப்பாரு. இயற்கையோட முரண்களை பேரன்பு படத்துல அவ்வளவு எளிமையாக புரியும்படி சொல்லியிருப்பாரு. ராமின் ஒவ்வொரு படமும் ஒரு பாடமாகதான் சமூகத்துல இருக்கு. மனித உணர்வுகள் படம் முழுக்க நிறைஞ்சு இருக்கும். தமிழ் இருக்கு. கவிதை இருக்கும். எளிமை இருக்கும். இதுவரை 4 படங்கள்தான் எடுத்துருக்காரு. எல்லாமே தரமான படங்கள். இப்போ, ஏழு கடல் ஏழு மலை படத்தை ராம் எடுத்துட்டு இருக்காரு. அதுக்காகவும் வெயிட்டிங். ராம் – யுவன் – நா.முத்துக்குமார் இந்த கூட்டணியும் 3  படங்கள்ல தரமான சம்பவங்களை பண்ணியிருக்காங்க.

தங்க மீன்கள் பட விழால பாலுமகேந்திரா, “என்னுடைய தோட்டத்துச் செடி ராம். என்னுடைய ராம். ராமின் சினிமா எனக்கு மிக மிக பிடிக்கும். காரணம், ராம் தமிழ் படித்தவர். ராமுடைய சினிமாவில் தமிழ் இருக்கும். ராமுடைய சினிமாவில் கவிதைத்தன்மை இருக்கும். எனவே, ராமுடைய சினிமா எனக்கு பிடிக்கும். என்னுடைய சினிமாவும் உணர்வுரீதியிலான அணுகுமுறை என்றே நினைக்கிறேன். ராமின் சினிமாவும் உணர்வுபூர்வமாகதான் இருக்கும். உணர்வு என்பது உலகளாவியது”னு சொல்லியிருப்பார். ராமின் சினிமா அனைத்து மனிதர்களுக்கானது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top