மேக்கிங்கில் மேஜிக் செய்யும் ஷங்கர்..!

தியேட்டரில் படம் பார்க்கும் போது பாடல்கள் வந்தாலே, அது அறிவிக்கப்படாத இடைவேளைதான். இதனை மாற்றிய சில இயக்குநர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் ஷங்கர். நாம் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத பல விஷயங்களை தனது பாடல்களுக்குள் புகுத்தி, இவரது பட பாடல்கள் என்றே ஒன்ஸ்மோர் கேட்கும் அளவிற்கு நம்மை என்கேஜ் செய்துவிடுவார். அவரது பட பாடல்களின் மேக்கிங்கில் என்னென்ன மேஜிக் செய்திருக்கிறார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேனில் இருந்தே அவரது மேக்கிங் லெவல் எப்படி இருக்கும் என்பதை காட்ட துவங்கிவிட்டார். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலில் பிரபுதேவா கெளதமிக்கு ஹார்ட் அனுப்புவது, அம்பு விடுவதை எல்லாம் பழைய கார்ட்டூன்களில் வரும் கிராபிக்ஸ் ட்ரை பண்ணியிருப்பார். காதில் இருந்து புகை வருவது போலவும் சில விஷயங்களை கிராபிக்ஸில் செய்திருப்பார்.

காதலன் படத்தின் முக்காலா பாடலில் பிரபுதேவா தலை, கை, கால் இல்லாமல் ஆடியதைப் பார்த்தால் இப்போதும் ஆச்சரியமாகவே இருக்கும். அதேப்போல் ஊர்வசி ஊர்வசி பாடலில் கண்ணாடி பஸ், காதலிக்கும் பெண்ணின் பாடலில் பெரிய சைஸ் கொக்கி என நிறைய விஷயங்களை பயன்படுத்தியிருப்பார்.

இந்தியன் படத்தில் மாயா மச்சீந்திரா பாடலில் ஹீரோயினைப் பார்ப்பதற்காக ஹீரோ, கிளி, சிங்கம், உடும்பு என பிராணிகள் மாதிரி உருமாறிப் போவதாக காட்டியிருப்பார். அதேபோல் டெலிஃபோன் மணிப்போல் பாடலில் கங்காரு, பென்குயின், கோலா, அல்பாகோ என பல வெளிநாட்டு உயிரினங்களையும் பாடல்களில் காட்டியிருப்பார்.

ஜீன்ஸ் படத்தின் எல்லா பாடல்களையுமே வித்தியாசமாக எடுத்திருப்பார் ஷங்கர். அதிலும் குறிப்பாக பூவுக்குள் பாடலில் 7 உலக அதிசயத்தையும் ஒரே பாடலில் காட்டியிருப்பார். கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் ஐஸ்வர்யா ராயை இரட்டையராக மாற்றி ஆட வைத்ததும், அதில் ஒரு கேரக்டர் தலைகீழாக, ஒல்லியாக, குண்டாக, எலும்புக்கூடாக என அத்தனையையும் டிரை பண்ணியிருப்பார்.

முதல்வன் படத்தில் முதல்வனே பாடலில் பரமபதத்தில் இருந்து பாம்புகள் வருவது போலவும் அந்தப் பாம்புகளின் முகங்கள் ரகுவரன், விஜயகுமார், வடிவேலு, மணிவண்ணன், கொச்சின் ஹனிஃபா போலவும் இருக்கும். இதில் ஒரு விஷயத்தை நன்றாக கவனிச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இந்தப் பாடலில் கடைசியாக வரும் விஜயகுமார் பாம்பு அர்ஜூனை முழுங்கிடும். அந்தப் பாம்பின் வயிற்றில் கவர்மெண்ட் ஜாப் என எழுதியிருக்கும். ஏனென்றால் அந்தப் படத்தில் விஜயகுமார் அரசாங்க வேலையில் இருக்கும் பையனுக்குத்தான் தன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பேன் என சொல்லிக்கொண்டே இருப்பார். அதேப்போல், ஒரு பாம்பை பானையால் மூடி வைத்ததும் அந்தப் பானை பாடுவது போலவும் காட்டியிருப்பார்.

பாய்ஸ் படத்தில் கேர்ள் ஃப்ரெண்ட் பாடலில் ஒரு கிராபிக்ஸ் பெண் பாடல் முழுக்கவே வருகிற மாதிரி கிராபிக்ஸ் செய்திருப்பார். அதிலும் கிளாமரான உடைகள், பாவாடை தாவணி வெரைட்டி காட்டியிருப்பார். மாரோ மாரோ பாடலில் நூற்றுக்கணக்கான டான்ஸர்களை ஆட வைத்திருப்பார். அதேப்போல் அலே அலே பாடலில் சித்தார்த்தும், ஜெனிலியாவில் pause ஆகி நிற்க, கேமராவின் ப்ரேம் மட்டும் மூவ் ஆகுற மாதிரி காட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பார்.

அந்நியன் படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலில் மலை, பஸ், ரோடு, தெருவில் இருக்கிற வீடு, பாலம், லாரி என கண்ணில் படுற எல்லாத்துக்கும் கலர் அடிச்சிருப்பார். அந்த சமயத்தில் இந்தப் பாடல் ஒரு பெரிய டாக் கிரியேட் செய்தது. அதேப்போல் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில் வாட்டர் பெட்டை காட்டியிருப்பார்.

சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடலையும் அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலின் ஸ்டைலிலேயே பல டான்ஸர்களின் வயிற்றில் வண்ணம் தீட்டி படமாக்கியிருப்பார். ஸ்டைல் பாடலில் ரஜினி வெள்ளையாக இருந்தால் எப்படி இருப்பார் என்பதை காட்டியிருப்பார். வாஜி வாஜி பாடலிலும் சஹானா பாடலிலும் செட் வொர்க் பிரமாண்டமாக இருக்கும். 

எந்திரன் படத்தின் காதல் அணுக்கள் பாடலை மிக எளிமையாக ஒரு பாலைவனத்தில் சிறிய குளம் போல அமைத்து படமாக்கியிருப்பார். கிளிமாச்சாரோ பாடலிலும் லோகேஷன், டான்ஸர்களின் காஸ்ட்யூம் என வித்தியாசமாக எடுத்திருப்பார். 

நண்பன் படத்தின் அஸ்கு லஸ்கு பாடலில் ஃபாரீன் சாங், மார்டன் சாங், ராஜா சாங், குத்து சாங் என ஒரே பாடலில் நான்கு ஸ்டைல்களில் எடுத்திருப்பார். அதிலும் குத்து சாங் போர்ஷனில் பின்னால் போகும் ட்ரைனுக்கு ஃபுல்லா ஸ்டிக்கரிங் பண்ணியிருப்பார்.

ஐ படத்தின் மெரசலாகிட்டேன் பாடலில் போன், பைக், பச்ச பயிறு, டிவி, சோப்பு நுரை, ஜிம் வெயிட், மீன் என பல விஷயங்களில் இருந்து எமி ஜாக்சன் வருவதைப் போல காட்டியிருப்பார். அந்த ஒவ்வொரு கெட்டப்பிலும் எமி ஜாக்சனுக்கு அதேப்போல் காஸ்ட்யூமும் கொடுத்திருப்பார்கள். ஐ படத்தில் விக்ரமும் எமியும் விளம்பர மாடல்கள் என்பதால் அய்லா அய்லா பாடலில் ஜில்லட், டார்க் ஃபேண்டஸி, கோல்கேட், ஃபேர் அண்ட் லவ்லி, நிப்பான் பெயிண்ட், டெர்பி போன்ற ஃபேமஸான கம்பெனிகளின் விளம்பரங்களாகவே அந்தப் பாடலை எடுத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் என்னோடு நீ இருந்தால் பாடலில் விக்ரம் ஒரு மிருகம் போல பாடல் முழுக்க வருவார். 

2.0 படத்தில் புல்லினங்கால் பாடலில் பல விதமாக பறவைகளை வைத்து வித்தியாச, வித்தியாசமான விஷுவல்களாக எடுத்திருப்பார். இப்படி ஷங்கர் அவரது முதல் படத்தில் இருந்து இன்று வரை பிரமாண்டத்திற்காகவும் பாடல்களுக்காகவும் பல மெனக்கெடல்கள் செய்து வருகிறார். இதில் உங்களுடைய ஃபேவரைட் பாடல் எதுனு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க. 

Also Read – Decoding ‘பொன்னியின் செல்வன்’ டீசர்!

9 thoughts on “மேக்கிங்கில் மேஜிக் செய்யும் ஷங்கர்..!”

  1. Have you ever thought about creating an ebook or guest authoring
    on other blogs? I have a blog based on the same information you discuss and would love to have you share some stories/information.
    I know my visitors would appreciate your work.
    If you’re even remotely interested, feel free to shoot me an email.

    Feel free to visit my web site; nordvpn coupons inspiresensation (t.co)

  2. nordvpn promotion 350fairfax
    Hello, I think your blog might be having browser compatibility
    issues. When I look at your blog in Opera, it looks fine
    but when opening in Internet Explorer, it has some overlapping.
    I just wanted to give you a quick heads up! Other then that,
    very good blog!

  3. Unquestionably consider that that you said. Your favourite justification appeared
    to be on the internet the simplest thing to understand of.
    I say to you, I certainly get annoyed while people consider concerns that they just don’t understand about.
    You managed to hit the nail upon the highest and also defined out the entire thing with no need side effect , people can take a signal.

    Will likely be back to get more. Thanks

    Also visit my homepage vpn

  4. Have you ever thought about including a little bit more than just your articles?

    I mean, what you say is important and everything.
    Nevertheless just imagine if you added some great images or videos to give your posts more, “pop”!
    Your content is excellent but with images and video clips, this site could
    definitely be one of the very best in its niche. Amazing blog!

    https://tinyurl.com/2ab5s5qz gamefly

  5. What i do not understood is if truth be told how you’re now not
    actually much more neatly-favored than you might be right now.
    You’re so intelligent. You realize thus significantly with
    regards to this matter, made me personally imagine
    it from numerous numerous angles. Its like men and women aren’t involved until
    it’s something to accomplish with Woman gaga! Your personal stuffs excellent.
    At all times handle it up! How does vpn work https://tinyurl.com/2c2rno87

  6. Write more, thats all I have to say. Literally, it seems
    as though you relied on the video to make your point. You obviously know what youre talking about, why throw
    away your intelligence on just posting videos
    to your weblog when you could be giving us
    something informative to read?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top