`ஜாலியோ ஜிம்கானா, ராவம்மா, ராசம்மா’ – `பீஸ்ட்’ கான்ஃபிடன்ட் ஆந்தமின் அர்த்தம் என்னனு தெரியுமா?

தமிழ்நாட்டுல அடிக்கிற வெயில்ல உடம்பு, மண்டை எல்லாம் காயுது. முடியை பிச்சுக்கலாம்னு தோணுது. ஆனால், அதுக்கு பதிலா ஜூஸ், ஐஸ்கிரீம், இளநீர்னு எல்லாத்தையும் ஒண்ணாக் குடிச்சு உடம்ப முடிஞ்ச அளவு குளிர்ச்சியா மக்கள் வைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனால், அதனால மனசு கூல் ஆகுமானு கேட்டா, கொஞ்சம் கஷ்டம்தான். இப்படியான சூழ்நிலைலதான் விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளாக `ஜாலியோ ஜிம்கானா’ பாட்டு வெளியாகி இருக்கு. `புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றதே’ மாதிரி சில்லான லிரிக் வீடியோ, விஜய்யின் கூலான குரல், வெளியானதும் மில்லியன் வியூஸ்களைப் பெற்று சாதனைகள்னு பாட்டுல ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் ரசிகர்கள் மனசை குளிர்விச்சுட்டு இருக்கு. அந்தப் பாடலைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.

ஜாலியோ ஜிம்கானா
ஜாலியோ ஜிம்கானா

`பீஸ்ட்’ மோட் ஆன்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ’கோலமாவு கோகிலா’,’டாக்டர்’ வெற்றிப் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’தளபதி’ விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் படம்தான் ‘பீஸ்ட்’. மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இளம் இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பதால் இந்தப் படத்தின் எதிர்ப்பார்ப்பு கூரையை பிய்த்து மேலே சென்ற வண்ணம் உள்ளது. ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் வரிசையாக வெளிவருகின்றன. அப்டேட்டுகளே `பீஸ்ட்’ மோடில் சாதனைகளையும் படைத்து வருகின்றன.

விஜய் - பூஜா ஹெக்டே
விஜய் – பூஜா ஹெக்டே

பங்குனி பரிசு

பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் வரிகளில் ஜோனிடா காந்தி மற்றும் அனிருத் குரலில் வெளியான ’அரபிக்குத்து’ என்ற முதல் சிங்கிள் பாடல் யூ டியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெற்றி நடைப்போட்டு வருகிறது. சின்னக் குழந்தையின் அழுகையை நிறுத்துவது முதல் ரொமான்டிக் காதலர்களின் ஸ்டேட்டஸ் வரை இந்தப் பாட்டுதான் இன்றும் டிரென்டிங். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டாவது பாடல் `ஜாலியோ ஜிம்கானா’ தொடர்பான அறிவிப்பு வெளியானது. விஜய் இந்தப் பாடலை பாடியதாலும் கலர்ஃபுல்லான, ஃபன்னான வீடியோனாலும் இந்தப் பாட்டு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினார். இமாலய அளவிலான எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் 19-ம் தேதி வெளியான இந்தப் பாடல் பலருக்கும் `பங்குனி’ பரிசாக அமைந்தது.

`பீஸ்ட்’ விஜய்

ஹகுனா மடாடா

அரபிக் குத்து பாடலில் இடம்பெற்றிருந்த வார்த்தைகளைப் போலவே இந்தப் பாட்டிலும் பல புரியாத வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. பாடலாசிரியர் கு.கார்த்திக் வரிகளில் வெளியான இந்தப் பாடலில் ஜாலியோ ஜிம்கானா, ராசம்மா, ராவம்மா போன்ற பல வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ’ஹகுனா மடாடா’ போலதான் ஜாலியோ ஜிம்கானா’. எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியோ இருக்கலாம் வாங்க அப்டின்றதுதான் இதுக்கு அர்த்தம். ‘ராவம்மா’னா எல்லாரும் வாங்க’னு அர்த்தம். `ராசம்மா’னா `ஜாலியா இருக்கலாம்’னு அர்த்தம். நெல்சன் ஜாலியா ஒரு பாட்டு வேணும்னு சொல்லியிருக்காரு. விஜய் இந்தப் பாட்ட பாடப்போறாருனும் சொல்லியிருக்காங்க. இதெல்லாம் மனசுல வைச்சுக்கிட்டுதான் கு.கார்த்திக் இந்தப் பாட்டை எழுதியிருக்காரு.

அனிருத் - விஜய் - நெல்சன்
அனிருத் – விஜய் – நெல்சன்

கான்ஃபிடண்ட் ஆந்தம்

விஜய் படத்துலயும் சரி ஸ்டேஜ்லயும் சரி தன்னோட ரசிகர்களுக்கு அட்வைஸ் கண்டிப்பா பண்ணுவாரு. இதுக்கு முன்னாடி வந்த மாஸ்டர் படத்துலயும் குட்டி ஸ்டோரி’ மூலமா தன்னோட ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணாரு. பீஸ்ட் படத்துல ‘ஜாலியோ ஜிம்கானா’ மூலமா அட்வைஸ் பண்ணியிருக்காரு. இந்த மாதிரி ஒரு பாட்டுப் பாடணும்னு விஜய் ரொம்ப நாளா ஆசைப்பட்டதாகவும் அந்தக் கனவு இப்போ நிறைவேறி இருப்பதாகவும்கூட சொல்லியிருக்காரு. ’அத்தனையும் போனாலும், எம்ப்டியா தான் நின்னாலும், பதறாம இருந்தா, அட பீஸ்டு நீதான்டா’ அப்டினு விஜய் பாடும்போதுலாம் சிலிர்த்துபோய் சில்லறையெல்லாம் விட்டு எறியலாம். அப்படியே அடுத்து ‘ராமம்மா ஹே ராமம்மா, ஜாலி ஓ ஜிம்கானா, ராசம்மா ஹே ராசம்மா, கேக்குதா என் கானா’னு விஜய் பாடும்போது அப்படியே ஒரு கூலான ஒரு மூட் வந்துரும்.

விஜய்
விஜய்

`ஜாலியோ ஜிம்கானா’ பாட்டு உங்களுக்கு எவ்வளவு புடிச்சிருக்குனு மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: `ஹலமதி ஹபீபோ… ஹலமதி ஹபி வந்தாளே…’ – அப்டினா என்னங்கய்யா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top