மாஸ்டர் ஆடியோ லாஞ்ச்ல விஜய்.. மாநகரம் படம் அவ்வளவு காம்ப்ளிகேட்டடான ஸ்கிரிப்ட். கொஞ்சம் அப்படி இப்படி மிஸ் ஆனாலும் அந்த மாதிரி கதைகள் புரியாமல் போய்டும், அதை பார்த்துட்டு ஆச்சரியமா இருந்துச்சுனு சொல்லுவாரு. அந்தப் படத்துல எடிட்டரோட வொர்க் ரொம்ப முக்கியமானது. எனக்கு தெரிஞ்சு மாநகரம் ரிலீஸ் ஆனப்போ, அதுல வேலைப் பார்த்த ஒவ்வொரு டெக்னீஷியனையும் குறிப்பிட்டு பலரும் பேசியிருந்தாங்க. குறிப்பா மாநகரம் எடிட்டர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்னு லோகேஷ்கூட சேர்ந்த எல்லா படமும் மாஸ் ஹிட்டு. பொலிட்டிகலா ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்டா பேசப்பட்ட மண்டேலா, ஜெய் பீம், டாணாக்காரன், விட்னஸ் எல்லாம் இன்னொரு லெவல்ல ஹிட்டு. இப்படி தன்னோட கரியர்ல ஒவ்வொரு படத்தையும் செதுக்கி கொடுத்துட்டு இருக்குற முக்கியமான எடிட்டர்தான், ஃபிலோமின் ராஜ்.
சினிமாவுக்கு வரணும்ன்றது அவரோட ஆசைலாம் இல்லை. விஸ்காம் படிச்சு முடிச்சுட்டு மெகா டி.வில வேலை பார்த்துருக்காரு, ஏ.வி.எம்ல டிஜிட்டல் வேலைலாம் பார்த்துருக்காரு, ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்ல வேலை பார்த்துருக்காரு, ஸ்டுடியோல வேலை பார்த்துருக்காரு. அப்போதான், சினிமாவுக்கு போனும்ன்ற ஆசை அவருக்கு வருது. ஆனால், உடனே போய் எதுவும் சாதனை பண்ண போறதில்லை. மெதுவா போவோம். யார்கிட்டயாவது அஸிஸ்டென்டா வேலை பார்க்கணும்னு ட்ரை பண்ணிட்டு இருந்துருக்காரு. அழகு குட்டி செல்லம் படத்துல அஸிஸ்டெண்டா வொர்க் பண்ணியிருக்காரு. அதுக்கப்புறம் ஆரம்பத்துல நிறைய விளம்பரங்கள் எடிட் பண்ணிட்டு இருந்துருக்காரு. நாளைய இயக்குநர் மூணாவது சீசன் மூலமா சினிமால முக்கியமான ஆள்கள் நிறைய பேருக்கு ஃபிலோமின் அறிமுகமாகுறாரு. நாளைய இயக்குனர்ல சந்துருன்றவருக்கு மட்டும் நிறைய படங்கள் எடிட் பண்ணியிருக்காரு. அவரோட ஒளிப்பதிவாளர் செல்வா. மாநகரம் படத்துக்கும் அவர்தான் சினிமோட்டோகிராஃபி. செல்வா மூலமாதான் லோகேஷ் கனராஜும் இவரும் நண்பர்களாக அறிமுகமாகுறாங்க. அவியல்ன்ற டெலி ஃபிலிமுக்காக லோகேஷ் கதை சொல்ல ஃபிலோமின்கிட்ட போய்ருக்காரு. ஃபிலோமின் டயர்டா உட்கார்ந்து இவரோட கதையை கேட்க ஆரம்பிச்சிருக்காரு, ஒருகட்டத்துல லோகேஷுக்கு டவுட் வந்து, ப்ரோ.. என்னோட கதையை கேக்குறீங்களா, இல்லையானு கேட்கவும், நான் இப்படித்தான் கதை கேப்பேன். நீங்க தப்பா ஒண்ணும் எடுத்துக்காதீங்கனு சொல்லி பேச ஆரம்பிச்சு, ஒரு கட்டத்துல வாடா, போடான்ற அளவுக்கு நண்பர்களா மாறிட்டாங்க. அந்தப் படத்துக்கு அப்புறம் கார்பரேட் ஃபிலிம்ஸ் நிறைய வொர்க் பண்றாங்க. கரெக்ட்டா அந்த டைம்ல மாநகரம் புராஜெக்ட் க்ளிக் ஆகுது. கதை டிஸ்கஷன்ல இருந்தே எடிட் பண்ண என்னலாம் வேணும், எங்கெங்க ஸ்லோ மோஷன் வேணும்ன்றது உட்பட ஃபிலோமின் எல்லாமே சொல்லிடுவாராம்.
மாநகரம் படத்தோட ஃபோட்டேஜ் எடுத்து லோகேஷ் இவருக்கு அனுப்புனா, அதைப் பார்த்துட்டு மூஞ்சில அடிச்ச மாதிரி இதெல்லாம் நல்லால்லன்றுவாராம். அநியாயத்துக்கு நல்லவன்னா, ஃபிலோமின்தான்னு லோகேஷ் சொல்லுவார். ஏன்னா, ஷுட் பண்ணி முடிச்சதும் ஃபோட்டேஜ் எடிட்டிங்க்கு அனுப்பிடுவாராம். லோகோஷ் உட்பட மொத்த டீமும் இவரு என்ன சொல்லப்போறாருனு ஃபோனுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களாம். இவரு, ஃபோன் பண்ணி, சரி.. நான் விடு.. நான் அப்புறம் சொல்றேன்னு இழுப்பாராம். டேய், நீ சொல்லதாண்டா வெயிட் பண்றோம். சொல்லுனு சொன்னதும். இந்த ஷாட்லாம் நீ சொன்ன மாதிரி இல்லைன்றுவாராம். அதைக் கேட்டுட்டு, டேய்.. ஷுட்க்கு போகுறதுக்கு முன்னாடி எதாவது சொல்லுடா, இல்லைனா ஷுட் முடிஞ்சதும் எப்படி வேணும்னு சொல்லுடா.. எடுத்த உடன மூஞ்சுல அடிக்கிற மாதிரி எப்படிடா சொல்லுறனு கேப்பாராம். ஆனால், ரெண்டு பேருக்கும் பக்கா சிங்க்.
ஸ்கிரிப்ட் டிஸ்கஷன்ல உட்கார்ந்து லாலி பாப் கீழ விழுற சீன்ல ஸ்லோ மோஷன் வேணும்ன்ற வரைக்கும் டீட்டெயிலா ப்ரீ புரொடக்ஷன்ல வொர்க் பண்ணியிருக்காங்க. படத்தோட டியூரேஷன் எவ்வளவு வரும்னு எல்லாமே டீமா பிளான் பண்ணியிருக்காங்க. கைதி, மாஸ்டர், விக்ரம்லலாம் அந்த ப்ரீ புரொடக்ஷன் டைம் அவங்களுக்கு சரியா கிடைக்கலைனே சொல்லலாம். இருந்தாலும் ஃபிலோமின் எங்க ஸ்லோ மோஷன் கேப்பாருனு லோகேஷ்க்கு தெரிஞ்சு எடுத்துட்டு போய்ருக்காரு. சிங்க்தான் எல்லா படத்தோட வெற்றிக்கும் காரணம்.
ஏ.ஆர்.ரஹ்மான் வர்றதுக்கு முன்னாடி உள்ள காலத்துல, எல்லார் வாழ்க்கைல உள்ள காதல்லயும் இளையராஜாதான் நிறைஞ்சு இருப்பாரு. அதை கியூட்டா மெஹந்தி சர்க்கஸ்ல சொல்லியிருப்பாங்க. மாநகரம் மாதிரி படம் பண்ணிட்டு, அடுத்து செமயான லவ் ஸ்டோரி பண்ணியிருக்காரு. அதுவுமே செம இன்ட்ரஸ்டிங்கா போகும். லவ் படங்கள்தான என்ன ஸ்பெஷல் எடிட்டங்க்லனு கேக்கலாம். ஹீரோயின் பார்க்கும்போது, உடனே கட் பண்ணாலும் நல்லாருக்காது.. ரொம்ப நேரம் கட் பண்ணாமல் இருந்தாலும் நல்லாருக்காது. அப்போ, கரெக்ட்டா.. அந்த டைமை கேல்குலேட் பண்ணி கட் பண்ணாதான் அந்த சீன் செம இம்பாக்ட கிரியேட் பண்ணும். வாட்ஸப்ல சுத்தும். அதை மெஹந்தி சர்கஸ்ல ஃபிலோமின் ராஜ் செமயா பண்ணியிருப்பாரு.
Also Read – பொன்னியின் செல்வன் – 2 ரிலீஸ்… முதல் பாகத்துல என்ன நடந்துச்சு? #Recap
ஃபிலோமின் ராஜ்கிட்ட இன்னொரு முக்கியமான நல்ல பழக்கம் இருக்கு. எந்த ஜானர்ல படம் கமிட் ஆகுறாரோ அது சம்பந்தமா வர்ற படங்களை பெரும்பாலும் பார்த்துடுவாராம். அப்போதான், என்ன அதுல இருந்து வித்தியாசமா பண்ணலாம்னு யோசிக்க முடியும்னு சொல்லுவாரு. மெஹந்தி சர்க்கஸ்க்கு அடுத்து ராட்சசி பண்ணாரு. ஹீரோயின் சென்ட்ரிக்கான படம். கன்டண்டை உள்வாங்கி பண்ணியிருப்பாரு. எடிட்லயே பில்டப் ஷாட்லாம் வைச்சு சும்மா தூள் கிளப்பியிருப்பாரு. ஜோ ஃபேன்ஸுக்கு ரொம்பவே புடிச்ச படமாவும் அது அமைஞ்சுது. கைதி படத்துலயும் செமயா எடிட்டிங் இருக்கும். குறிப்பா டீசர் எடிட்டிங்ல சும்மா பின்னியிருப்பாரு. கடைசி வரைக்கும் டில்லி டில்லி டில்லினு தேடிகிட்டே இருப்பாங்க. அவரு பார்த்தா கூல லாஸ்ட் ஷார்ட்ல உட்கார்ந்து பிரியாணி சாப்பிடுவாரு. ஐடியாவே செம. அதேமாதிரி மாஸ்டர்லயுமே விஜய்யை பேச வேணாம்னு முடிவு பண்ணி கட் பண்ணதுலாம் செம.
அனிருத்தோட மியூசிக் வைச்சு, அந்த படத்துல விஜய்யோட வேரியேஷன் கெட்டப்ஸ எடுத்து கட் பண்ணியிருக்காங்க. விக்ரம்ல ட்ரெய்லர்ல டயலாக் இருக்கும். ஆனால், இந்த 4 படத்துத்தோட டீசர், ட்ரெய்லருக்குலாம் இருக்குற ஒற்றுமை, கதையை கெஸ் பண்ண முடியாது. இருந்தாலும் அதை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும். அந்த மேஜிக் டச்தான் எடிட்டரோடது. அதை ஃபிலோமின் லோகேஷுக்கு தரமாவே பண்ணி கொடுக்குறாரு. லோகேஷ்கூட ஆரம்பத்துல இருந்து எல்லா படங்கள்லயும் வொர்க் பண்ற முக்கியமான டெக்னீஷியம் ஃபிலோமின் மட்டும்தான். அதுமட்டுமில்ல, போஸ்ட் புரொடக்ஷன் வொர்க்லயும் கூடவே இருக்கக்கூடியவர். அதுனால அவுட் போகும்போது எந்த பிசிறும் இருக்காதாம். மாஸ்டர்ல ட்ரெயின் ஃபைட் முதல்ல சரியா வரலைனு.. இவரே ஸ்பாட்டுக்குபோய் லோகிகூட சேர்ந்து டைரக்ட பண்ணியிருக்காரு.
எதார்த்தமான கதைக்களம் அவர் கையில கிடைச்சாலும் அதையும் ரொம்பவே நல்லா பண்ணுவாரு. அது தான் அவர்கிட்ட இருக்குற மிகப்பெரிய பிளஸ். அதாவது எல்லா ஜானர்லயும் எடிட் பண்ரத் அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் ஜெய் பீம். ஞானவேல் இன்டர்வியூலாம் வைச்சுதான் இவரை செலக்ட் பண்ணியிருக்காரு. ஜெய் பீம் சமூகத்துல ஏற்படுத்துன தாக்கத்தைப் பத்தி சொல்லவே வேணாம். எல்லா கலைஞனுக்கும் தன்னுடைய படைப்பு பாதிப்பை ஏற்படுத்தனும்னுதான் ஆசை. அதை ஜெய் பீம் பண்ணிச்சு. அதுக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டும் முக்கியமான காரணம்.
டாணாக்காரன் படத்தை இன்னும் சமூகம் அதிகளவில் கொண்டாடியிருக்க வேண்டிய படம்னுதான் தோணுச்சு. ஏன்னா, போலீஸ் செலக்ஷன்ல எவ்வளவு பெரிய அரசியல்லாம் நடக்குதுனு செமயா காமிச்சிருப்பாங்க. அதையும் ஃபிலோமின் ராஜ் செமயா பக்காவா எடிட் பண்ணி கொடுத்துருப்பாரு. இன்னொரு முக்கியமான படம் மண்டேலா, லோகேஷ் கனகராஜ்.. மடோன் அஸ்வின்.. இவங்க எல்லாரும் நண்பர்கள்தான். அதுனால, ஈஸியா கனெக்ட் ஆகி வொர்க் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. மண்டேலா கதை நரேஷனே செமயா இருக்கும். அந்த ஃப்ளோவை மடோன் அவ்வளவு அழகா எழுதியிருப்பாரு. எடிட்டிங்ல அதை இன்னும் இன்ட்ரஸ்டா மனுஷன் வழக்கம்போல தன்னோட வேலையை செய்துருப்பாரு.
இன்னைக்கு சூப்பர் ஸ்டாரா இருக்குற விஜய்யோட லியோ, நாளைய சூப்பர் ஸ்டாரா இருக்குற சிவாவோட மாவீரன், என்னைக்குமே சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினியோட ஞானவேல் ராஜா புராஜெக்ட்னு எல்லாத்துலயும் இவர்தான் எடிட்டரா கமிட் ஆகி கலக்கிட்டு இருக்காரு. இன்னும் பல வருஷத்துக்கு தமிழ் சினிமாவோட முக்கியமான எடிட்டரா வலம் வருவாருன்றதுல எந்த டவுட்டும் இல்லை.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.