`ஒரே வீட்ல மல்டிபிள் ஹீரோஸ்’ – தென்னிந்திய சினிமாவின் அப்பா – மகன் ஹீரோக்கள்!

ஒரே வீட்டில் அப்பாவும் ஹீரோ மகனும் ஹீரோ என்பது நிச்சயம் சாதாரண விஷயமல்ல சற்றே ஸ்பெஷல்தான். இப்படியாக தென்னிந்திய சினிமாவில் கலக்கிவரும் அப்பா – மகன் ஹீரோக்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

மம்முட்டி – துல்கர் சல்மான்

மம்மூட்டி - துல்கர் சல்மான்
மம்மூட்டி – துல்கர் சல்மான்

மம்முட்டிக்கு தற்போது வயது 70. பத்து வருடங்களுக்கு முன்பு அதாவது தனது 60-வது வயதில் மகன் துல்கர் சல்மானை `செகண்ட் ஷோ’ எனும் மலையாளப் படம் மூலம் ஹீரோவாக களமிறக்கினார் மம்முட்டி. அதைத் தொடர்ந்து `உஸ்தாத் ஹோட்டல்’, ‘பெங்களூர் டேஸ்’, சார்லி’ ‘கம்மாட்டிபாடம்’ ‘குரூப்’ என தற்போதுவரை தொடர் வெற்றியில் இருக்கும் துல்கர்,  தமிழிலும் ‘ஓ காதல் கண்மணி’ , ‘வாயை மூடி பேசவும்’,‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என தனக்கென ஒரு  தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். இதில் மம்முட்டி, தன் மகனுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாகவே கடைபிடித்துவருவது ஆச்சர்யம்தான்.

விக்ரம் – துருவ் விக்ரம்

விக்ரம் - துருவ்
விக்ரம் – துருவ்

விக்ரம், 1990-ஆம் ஆண்டு தனது 24 வயதில் ‘என் காதல் கண்மணி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  தனது மகன் துருவ் விக்ரமையும் அதே 24 வயதில் 2019-ஆம் ஆண்டு ‘ஆதித்யா வர்மா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் விக்ரம். அப்பாவும் மகனும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என ரசிகர்களுக்கு அதீத ஆவல் ஏற்படும் முன்பே இருவரும் ‘மகான்’ படத்தில் இணைந்து நடித்து ஆச்சர்யப்படுத்தினார்கள். படத்திலும் அப்பா – மகன் பாத்திரங்கள் என்பதால் படத்தில் இருவருக்குமிடையே கெமிஸ்ட்ரி அள்ளியது.’மகான்’ படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் விக்ரம் – துருவ் கூட்டணி தொடர்ந்து நிச்சயம் நிறையப் படங்களில் நடிக்கும் என எதிர்பார்க்கமுடிகிறது.

நாகார்ஜூனா – நாக சைதன்யா

நாகர்ஜூனா - நாகசைதன்யா - அகில்
நாகர்ஜூனா – நாகசைதன்யா – அகில்

தனது 50-வது வயதில் மகன் நாக சைதன்யாவை ‘ஜோஷ்’ எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் நாகார்ஜூனா. 2015-ஆண்டு இரண்டாவது மகன் அகிலை ‘அகில்’ எனும் படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்னதாக ‘மனம்’ படத்தில் தனது அப்பா, மனைவி, இரண்டு மகன்கள் என அனைவருடனும் சேர்ந்து நடித்து சர்ப்பரைஸ் கொடுத்தார் நாகர்ஜூனா. அந்தப் படமும் பேய் ஹிட் அடித்தது.

சத்யராஜ் – சிபிராஜ்

சத்யராஜ் - சிபிராஜ்
சத்யராஜ் – சிபிராஜ்

இந்த லிஸ்டில் தனக்கு மிகக் குறைவான வயதிருக்கும்போதே தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது சத்யராஜ்தான். தன்னுடைய 49-வது வயதிலேயே தன் மகன் சிபிராஜை ‘ஸ்டூடண் நம்பர் ஒன்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் சத்யராஜ். அந்தப் படம் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து தன் மகனின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு ‘ஜோர்’, ‘மண்ணின் மைந்தன்’, ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘கோவை பிரதர்ஸ்’ ஆகிய படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தார் சத்யராஜ். ஆனாலும் பலனளிக்கவில்லை. அதேசமயம் சத்யராஜோ ‘பாகுபலி’ –க்குப் பிறகு, தான் ஹீரோவாக நடித்த காலகட்டங்களைக் காட்டிலும் பயங்கர பிஸியாக இயங்கிவருகிறார்.

மோகன்லால் – ப்ரணவ் மோகன்

மோகன்லால் - ப்ரணவ்
மோகன்லால் – ப்ரணவ்

61 வயதான மோகன்லான், தனது 57-வது வயதில் தனது மகன் பிரணவ் மோகனை ‘ஆதி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படமும் அடுத்து வந்த ‘இருபத்தியொண்ணாம் நூற்றாண்டு’ எனும் படமும் தோல்விப் படங்களாக அமைந்தது. அதன்பிறகு, ப்ரணவ், தனது அப்பா ஏற்றிருக்கும் ஹீரோ பாத்திரத்தின் இளவயது பாத்திரத்தில் நடித்த, `மரக்கர் – அரபிக்கடலிண்டே சிங்கம்’ படமும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், ப்ரணவ் நடிப்பில் சமீபத்தில் வெளியான `ஹிருதயம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அவரது கரியருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்திருக்கிறது.

இந்த அப்பா – மகன் ஹீரோக்களில் உங்க ஃபேவரைட் காம்போ எது?

Also Read – கார்த்திக் சுப்புராஜ் முதல் லோகேஷ் கனகராஜ் வரை… ஃபேன் பாய் மொமண்ட் இயக்குநர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top