வானத்தைப் போல

விக்ரமனே நினைச்சாலும் முடியாது.. வானத்தைப்போல வெற்றிக்கான 4 காரணங்கள்!

இன்னைக்கும் குடும்பபாச படங்கள் லிஸ்ட் எடுத்துக்கிட்டா இந்தப்படத்துக்குத்தான் முதலிடமா இருக்கும். எத்தனை வருஷங்கள் கழிச்சு பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அந்த அளவுக்கு ரொம்பவே பொதுவான கதை. ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோல அண்ணன் தம்பிகள் இருந்ததாலோ என்னவோ படத்தை கொண்டாடித் தீர்த்தார்கள் மக்கள். படம் தியேட்டரை விட்டு எடுக்கிற வரைக்கும் ஹவுஸ்ஃபுல்லா ஓடின பெருமை கொண்ட அப்டம். இன்னைக்கும் வாரம் ஒருமுறை டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் படமும் கூட. அந்த அளவுக்கு மக்கள் இந்த படங்களை கொண்டாட காரணங்கள் இருக்கு. அதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கபோறோம்

விஜயகாந்த்

இந்தப்படம் மக்கள்கிட்ட போய்ச்சேர முக்கியமான காரணம் விஜயகாந்த். 21ம் நூற்றாண்டின் முதல் வெள்ளிவிழா படமும் இதுதான். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் முதல் தயாரிப்பும் இது தான். கொஞ்சகாலமாக சிட்டி சைட் கேரக்டர்ஸ் பண்ணிட்டிருந்த விஜயகாந்த், மஞ்சள் பையும் குடையுமாக நடிச்சிருந்தார். இன்னும் சொல்லப்போனால் ஒரு நடிகனுக்கு மஞ்சள் பையும், குடையும் வைச்சு வயசான கட்டவுட் வைச்சது இந்தப்படத்துக்காகத்தான் இருக்கும். வெள்ளைச்சாமி, முத்துனு ரெண்டு கதாபாத்திரங்கள்ல நடிச்சிருந்தார் விஜயகாந்த். குடும்பம் பிரிஞ்சிடக் கூடாதுனு நினைச்சு தன் மூணு தம்பிகளுக்காக தன்னோட வாழ்க்கையை தியாகம் பண்ற கேரக்டர். அண்ணனா வர்றப்போவும் சரி, தம்பியா வர்றப்போவும் சரி சரியான அளவுல தன்னோட நடிப்பை கொடுத்திருந்தார். இந்தப்படத்தோட மெயின் பில்லர் விஜயகாந்த். தம்பிகளுக்காக கல்யாணமே வேண்டாம்னு முடிவெடுத்து சவால் விடுற இடமும் சரி, நண்பன் அவமானப்படுத்தின பின்னால சோர்ந்துபோய் இருக்கிறப்போவும், க்ளமாக்ஸ்ல வெறித்தனமா சண்டை போடுறப்போவும் விஜய்காந்த் வெறித்தனம் காட்டியிருப்பார். நடிப்புக்கு உதாரணமா ஒரு இடம் சொல்லணும்னா, தம்பி பிரபுதேவாவுக்காக பொண்ணு கேட்டுட்டு வந்து சிரிச்சுக்கிட்டே கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்னு சொல்லிட்டு, ஓரமா போய் கண்ல வர்ற தண்ணீரை துடைச்சுட்டு போற இடம் வெள்ளைச்சாமியாவே வாழ்ந்திருந்தார் விஜயகாந்த். அந்த ஒரு ஷாட்டேபோதும் விஜயகாந்த் யார்னு காட்டுறதுக்கு. அதுபோல தம்பி விஜயகாந்த் அண்ணனை பார்த்து உங்களுக்கு பிடிக்கலைனா எனக்கும் வேணாம்னு அண்ணனுக்கு சப்போர்ட்டா பேசுற இடமும், தன் பழைய காதலி மீனாகிட்ட யார்னு தெரியாம அன்பை பாட்டுற எல்லா இடங்களும் இயல்பா இருக்கும். அதேபோல குடும்ப நபர்கள் எல்லோரும் அண்ணனை பத்தி பேசுறப்போலாம் எங்க அண்ணன் அப்படினு பேசுற மாதிரி டயலாக் வைச்சிருப்பார். இதுவும் இயல்பா இருக்கும்.

விக்ரமன்

இந்தப்படத்துக்கு இன்னொரு காரணம் விக்ரமன். சூர்யவம்சம்னு ஒரு ப்ளாக்பஸ்டர் கொடுத்து தமிழ் சினிமாவை கதறவிட்டவர். அடுத்ததா கேப்டனோட கைகோர்க்கிறார்ங்குறப்போவே எதிர்பார்ப்பு எகிறிப்போச்சு. அதுவும் விஜயகாந்த் வேட்டி கட்டி நடிச்சாலே படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்னு ஒரு வரலாறு இருந்த காலக்கட்டம் வேற, எல்லாமுமா சேர்ந்து கதையை உருவாக்கினார் விக்ரமன். முக்கியமா தான் முன்னால யோசிச்சிருந்த கதையை மாத்திட்டு விஜயகாந்த்க்காக கதையோட தன்மையே மாத்திட்டார். ஜனகராஜை வைச்சு யோசிச்ச கதையை விஜயகாந்த்க்காக மாத்தினார். குறிப்பா சொல்லணும்னா விஜயகாந்த்தையே மாத்தினார். விஜயகாந்த்னாலே எதிரிகளை சுட்டுத்தள்ளிக்கிட்டே இருக்கார்னு மக்கள் பேசின காலம். அதனால ரெண்டு கெட்டப் விஜயகாந்த்க்குமே வேஷ்டி சட்டைதான். அண்ணனுக்கு மஞ்சப்பையும், குடையும், தம்பிக்கு சிவப்பு துண்டும் கொடுத்து பிரிச்சு விளையாட விட்டிருந்தார். படம் முழுக்கவே அங்கங்க சில ஹீரோவுக்கு தடங்கல் வர்ற மாதிரியான மொமெண்ட் இருந்தாலும், அதுக்கு அடுத்த சீனே வெறித்தனமா மக்களை கலங்க வைச்சிருப்பார். விஜயகாந்த்க்காக கைதட்டாமல் கண்களில் வழிஞ்ச நீரை ரசிகர்கள் துடைக்கிற அளவுக்கான பாசிட்டீவ் கதை அது. கடைசி க்ளைமாக்ஸ்ல விஜயகாந்த் சண்டையே வேண்டாம்னு சொல்ல, இல்ல கேப்டன் உங்க ரசிகர்களை ரொம்ப அழவச்சிட்டேன், அதனால அவங்களுக்காக சண்டை ஒன்னாவது இருக்கணும்னுதான் க்ளைமாக்ஸ் அடம்பிடிச்சு வைச்சார். அதையும் தன்னோட பாணியிலயே வைச்சதுதான் ஹைலைட். சின்ன விஜயகாந்த்தை அடிக்க வர்றப்போ அண்ணன் விஜயகாந்தோட எண்ட்ரிக்குத்தான் ரசிகர்கள் வெறித்தனமா கைதட்டியிருப்பாங்க. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாட்டை சூரியவம்சத்துல மூணு தடவை வைச்சிருப்பார். அதேபோல காதல் வெண்ணிலா பாட்டை மூணு முறை வர்ற மாதிரி வைச்சிருப்பார். அதேபோல ஆனந்தராஜே வந்தாலும் இந்தப்படத்துல ஆக்‌ஷன் வைக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்ச மாதிரி இந்த படம் பண்ணியிருப்பார். முழுக்க முழுக் ஒரு ப்ளசண்ட்டான படம் கொடுத்து வெற்றிபெற வைத்தார், இயக்குநர் விக்ரமன். இனி ஒருபடம் விக்ரமனே நினைச்சாலும் எடுக்க முடியாது.

எஸ்.ஏ.ராஜ்குமார்

இந்த படத்தோட அடுத்த பில்லர் எஸ்.ஏ ராஜ்குமார். படத்துக்கு எந்த இடத்துல எந்த மியூசிக் வரணும்னு ப்ளான் பண்ணி பக்காவா வைச்சிருந்தார். அதுவும் சோகமான இடத்துக்கெல்லாம் ‘தானானானா’ சோகமான ராகமும், உணர்ச்சிகரமா மெல்ட் ஆகுற சீன்ஸ்க்கெல்லாம் ஹம்மிங்ல ஒரு மியூசிக்னு பிரிச்சு விட்டிருப்பார். இந்த மியூசிக்காகவே மனசு கலங்கி, கண்கள்ல தனக்கு தெரியாமலே கண்ணீர்விட்டாங்க, மக்கள். காதல் வெண்ணிலா பாட்டுக்கு அடுத்த 5-வது நிமிஷத்துலயே தாவணியே பாட்டு வரும். ஆனா அது எதுவுமே போரடிக்காம கொண்டுபோனதுதான் எஸ்.ஏ ராஜ்குமாரோட டிராட்மார்க் முத்திரைன்னே சொல்லலாம். அதேபோல படம் முழுக்க வரும் மியூசிக்லாம் கேட்குறதுக்கு அவ்ளோ இதமா இருக்கும். காதலுக்கு பாடல்கள், ரொமான்ஸ் பாடல்கள், குடும்ப பாடல்கள்னு மொத்தமா 8 பாட்டுக்கள் எல்லாமே தரமா இருக்கும். இந்தப்படம் இன்னும் க்ளாசிக்கா இருக்கிறதுக்கு ஒரு வகையில எஸ்.ஏ ராஜ்குமாரும் ஒரு காரணம்னே சொல்லலாம். சிச்சுவேஷன்களுக்கு ஏத்த மாதிரி மியூசிக் டிராக் மாறிட்டே இருக்கும். உதாரணமா இவரு எங்க அண்ணன்னு பிரபுதேவா பேசிட்டிருக்கப்போ படத்தோட மொத்த மியூசிக் டிராக்கையும் ஒவ்வொரு டயலாக்குக்கு ஏத்த மாதிரி டியூன் பண்ணியிருப்பர்.

Also Read – எடுத்துப்பாரு ரெக்கார்டு எனக்கே ரெட் கார்டா – பாலாவுக்கு வணங்கான் ஏன் முக்கியம்?!

காஸ்டிங்

விஜயகாந்த், லிவிங்ஸ்டன், பிரபுதேவா, மீனா, கெளசல்யானு எல்லோரும் ஒவ்வொரு இடத்துல எமோட் ஆகி அழ வைக்கிற மாதிரி இருக்கும். அதுலயும் ஆசைப்பட்டுதான் நான் போலீஸ் வேலைக்கு வந்தேன்னு லிவிங்ஸ்டன் அழுற இடமும், பிரபுதேவா இவர்தான் எங்க அண்ணன்னு ஸ்டேஜ்ல பேசுற இடமும், பண்றதெல்லாம் வேறலெவல்ல இருக்கும். அதேபோல சீர்வரிசையா வர்ற பாத்திரத்துலகூட பெயர் இருக்க கூடாதுனு நினைக்கிற மீனா கதாபாத்திரமும் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ். முதல் பாதியை காப்பாத்துறதும் விஜயகாந்த்-மீனா கூட்டணிதான். ஆரம்பத்துல சிடுசிடுனு வர்ற மீனா ஒரு கட்டத்துல கொழுந்தனுக்காக பீடி பிடிக்க ஹெல்ப் பண்றதெல்லாம் அக்மார்க் அண்ணியாகவே வாழ்ந்திருப்பார். அதேபோல லிவிங்ஸ்டன் மீனாகிட்ட பேச கூச்சப்படுற சீன்ஸ் காமெடியா இருந்தாலும், அன்னினு நினைச்சாதாங்க அந்நியமா இருக்கும், அண்ணன்கள்ல பாதினு நினைச்சுப் பாருங்க எந்த வித்தியாசமும் தெரியாதுனு அட்வைச் பண்றப்போலாம் குடும்ப பிணைப்பை கச்சிதமா சொல்வாங்க மீனா. அந்த டயலாக்குக்கு உயிர் கொடுத்திருந்தது மீனாவோட கண்கள். செந்தில்-ரமேஷ் கண்ணா காமெடிலாம் அவ்ளோ அல்டிமேட்டா இருந்தது. அதுலயும் ரமேஷ் கண்ணா மைசூர்பாக்கை முட்டுக் கொடுக்கிறதும், வேஷ்டியை கிழிக்கிறதும் வேறலெவல்ல வொர்க்அவுட் ஆகியிருக்கும். இதுஎல்லாமே அங்கங்க ரிலாக்ஸ் பண்ண ஹெல்ப்பா இருந்தது. பிரபுதேவாவோட நடிப்பு மத்தப் படங்களைவிட உயிர்ப்போட இருந்தது இந்தப்படத்துலதான். கெளசல்யாவோட க்ளைமாக்ஸ் டிரான்ஸ்பர்மேஷனும் வெறித்தனமா இருக்கும். எல்லாத்தும் மேல ஆனந்தராஜூம் கேமியோ பண்ணாலும் படத்துக்கு உதவியா இருப்பார். இந்தப்படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டருமே பார்த்து பார்த்து அமைக்கப்பட்டிருக்கும்.

அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையா வச்சு பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்த படம் எதுல இருந்து வேறயாகுதுன்னா படம் முழுக்க அண்ணன் தம்பிகளுக்குள்ள சண்டயே வராது. மத்த படங்கள்ல அண்ணன் தம்பிகளுக்குள்ள சண்டை வந்து அப்புறமா சேர்ற மாதிரி இருக்கும். அதை படத்தோட ஆரம்பத்துலயே இப்படி பண்ணனும்னு முடிவெடுத்து கதை எழுதியிருப்பார், விக்ரமன். படம் முழுக்க இன்னைக்கு பார்த்தாலும் ஒரு பிரேம்ல கூட கண்ணீர்விடாம இருக்க முடியாது. அந்த அளவுக்கு எல்லோருடைய மனசுக்கும் ரொம்ப நெருக்கமான படம்தான் இந்த வானத்தைப்போல…

வானத்தைப்போல படத்தைப் பத்தின கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top