`அனுராதா ஶ்ரீராமின் நான்கு பரிணாமங்கள்’ – இதில் எந்த ஜானரில் குயின்?

நீங்க கார்ல போறீங்கனு வச்சிக்கோங்க. ஃபேமிலியோட போறப்போ ஒரு சில பாடல்கள் கேட்போம். லவ்வரோட போனா அதுக்கு ஒரு லவ் சாங் ப்ளே லிஸ்ட் இருக்கும். நண்பர்களோட போனா வேற லெவல்ல எனர்ஜி கொடுக்குற பாட்டு ஓடும். தனியா ஹெட்போன்ல கேக்குற சில பாடல்களை ரகசியமா கேட்டு ரசிப்போம். இது எல்லாத்துக்குமே ஒரு ப்ளே லிஸ்ட் கொடுக்க முடியும்னா அது அனுராதா ஶ்ரீராமால மட்டும்தான் முடியும். இவங்க பாடுன மொத்தப் பாடல்களை நாலு வகையா பிரிச்சு அதுல எந்த ஜானர்ல தலைவி கெத்துங்குறதைத்தான் பார்க்கப் போறோம்.

பக்தி

அன்பென்ற மழையிலேனு அனுராதா பாட ஆரம்பிச்சா பரமபிதாவே பக்தில மூழ்கிருவாரு. சூலம் சீரியல் டைட்டில் சாங்ல ‘என் வாசல் வாடியம்மா’னு இவங்க கட்டளையிடுறதைக் கேட்டு அம்மனே ‘இந்தா வந்துட்டேன்ம்மா’னு இறங்கி வர்ற அளவுக்கு தெய்வகடாட்சம் நிரம்பி வழியும். மாரியம்மால இருந்து மேரியம்மா வரைக்கும் எல்லாக் கடவுளுக்கும் இணக்கமான குரலா இருந்தது அனுராதா ஶ்ரீராமின் குரல். சினிமா பாடல்கள் மட்டுமில்லாம நிறைய பக்தி பாடல்கள் தனியாவும் பாடியிருக்காங்க. இவங்க பாடல்கள் ஒலிக்காத திருவிழாவே இருக்க முடியாதுனு சொல்லலாம்.

Anuradha Sriram
Anuradha Sriram

காதல்

‘கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ல ஆரம்பிச்சு ‘கண்ணன் வரும் வேளையில்’ வரைக்கும் காதல் பாடல்களிலும் கலக்கியிருக்காங்க அனுராதா. வரப்போற காதலனை பற்றிய ஆசைகளை தோழிகிட்ட குறும்பா கேட்குறப்போ ‘மல்லிகையே மல்லிகையே’. தனக்கு காதல் வந்ததை ஒத்துக்கும்போது ‘லேசா லேசா’. காதலனைப் பார்க்காத ஏக்கத்துல இருக்கும்போது ‘நலம் நலமறிய ஆவல்’. காதலனோடு சேர்ந்து டூயட் பாடுறப்போ ‘ மீனம்மா’. காதல்ல இருந்து அடுத்த கட்டத்துக்கு ரெடியாகுறப்போ ‘ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி’. காதல்ல தோத்துட்டு ஒப்பாரி வைக்க
‘ஏண்டி சூடாமணி’. இப்படி ஒரு பெண்ணோட காதலின் எல்லா நிலைகளையும் தன் குரல்ல நிகழ்த்திக் காட்டியிருப்பாங்க.

Anuradha Sriram
Anuradha Sriram

துள்ளல்

துள்ளல் வகைப் பாடல்கள் ஆண் பாடகர்களுக்கு கிடைக்கிறது ரொம்ப ஈசி. ஆனா பெண் பாடகிகளுக்கு ரொம்பவே சவாலா இருக்கும். அதையும் உடைச்சு பல சம்பவங்களைப் பண்ணியிருக்காங்க அனுராதா. ‘அப்படி போடு போடு’னு இறங்கி குத்துனா அந்தக் குரல்ல இருக்குற எனர்ஜி அப்படியே நம்ம ஒவ்வொரு செல்லுலயும் பரவி நம்மளை வேற ஜோனுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க. தன்னோட உற்சாகமான குரல்ல ‘இனி அச்சம் அச்சம் இல்லை’னு விடுதலை உணர்ச்சியையும் கொண்டு வருவாங்க. ‘மொழ மொழனு யம்மா யம்மா’னு அதே குரல்ல டான்ஸ் ஆடவும் வச்சிருப்பாங்க. ‘கை கை கை வைக்கிறா’, ‘கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்கப் போலாமா’, ‘ஒரு பொண்ணு ஒண்ணுதான் பார்த்தேன்’,’எலந்தப் பழம் எலந்தப் பழம் எனக்குதான்’,’அப்பன் பண்ண தப்புல’,’ஐயாரெட்டு நாட்டுகட்டு’ இப்படி ஒரு ப்ளே லிஸ்ட் கார்ல போகும்போது கிடைச்சா கன்ஃபார்ம் பார்ட்டி மோடுதான்.

Anuradha Sriram
Anuradha Sriram

கில்மா

இன்னும் ஒரு படிமேல போய் மொரட்டு கில்மாவான பாடல்களும் பாடியிருக்காங்க அனுராதா. ‘நிலவைக் கொண்டுவா’, ‘டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா’ ‘ஓ போடு’ இப்படி இதுக்கும் பல உதாரணங்களைத் தரமுடியும். சில பாடல்களையெல்லாம் கேட்குறப்போ ‘அன்பென்ற மழையிலே’ பாடுனவங்களா இதையும் பாடுனாங்கனு ஆச்சர்யமா இருக்கும். அந்த மேஜிக்கையும் செஞ்சு காட்டியிருப்பாங்க அனுராதா.

சில சிங்கர் மட்டும்தான் என்ன ஜானர் கொடுத்தாலும் பிரிச்சு எடுப்பாங்க. அப்படி ஒரு வெரைட்டி பெர்ஃபார்மர்தான் அனுராதா ஶ்ரீராம். மேலே சொன்ன நாலு ஜானர்ல எது அனுராதா ஶ்ரீராமுக்கு கை வந்த கலை, எதுல அவங்க குயின்னு உங்களுக்குத் தோணுது.. கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – `காதல்னாலே எவர்கிரீன்தானே பாஸ்; வயசெல்லாம் இருக்கா’ – தமிழ் சினிமாவின் `மூத்த’ காதலர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top