Andrea Jeremiah

தமிழ் சமூகத்துக்கு ஆண்ட்ரியா கொடுத்த 11 சர்ப்ரைஸஸ்! #HBDAndrea

ஆண்ட்ரியாவுக்கு இன்று பிறந்தநாள். ஆண்ட்ரியா எவ்வளவு சூப்பரான சிங்கர்… எவ்வளவு அசத்தலான ஆக்டர் என்பதெல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே. அதையெல்லாம் தாண்டி அவ்வப்போது சில அதிரடிகளை காட்டுவது ஆண்ட்ரியா ஸ்டைல். அப்படி நமக்கு ஆண்ட்ரியா கொடுத்த 11 ஆச்சர்யங்கள்தான் இவை.

  • முதல் பாடலே ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’. தமிழை இவ்ளோ ஸ்டைலா பாடமுடியுமானு ஆச்சர்யப்படுத்துனாங்க.. அதுவும் அந்த ‘கொலையாளி…’ ஹார்ட்டு ஹார்ட்டு ஹார்ட்டு!
  • முதல் படமே சரத்குமாருக்கு ஹீரோயினா அதுவும் 5 வயசு குழந்தைக்கு அம்மாவா நடிச்சாங்க. வேற லெவல்ங்க நீங்க!
Andrea Jeremiah
Andrea Jeremiah
  • அடுத்த படமே டக்குனு யூ-டர்ன் அடிச்சு ஹாட்டா டெரரா ஆயிரத்தில் ஒருவன் பண்ணாங்க. எம்புட்டு கெட்ட வார்த்தை!
  • ஒரே வருசத்துல ஜனவரில ‘இதுவரை இல்லாத’னு மயிலிறகுல வருடிவிடுவாங்க டிசம்பர்ல ‘ஹூ இஸ் தி ஹீரோ’னு தௌசண்ட் வாலாவ தெறிக்க விடுவாங்க. ஆண்ட்ரியா வாய்ஸ் கொடுத்த புஷ்பா `ஊ சொல்றியா மாமா…’ பாட்டுதான் இப்போ அதிரிபுதிரி டிரெண்ட்.
  • தரமணி ஆண்ட்ரியாவைவிட Swag-ஆன ஹீரோயினை தமிழ் சினிமால வரலாற்றுல காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்டுடா!
  • ஈ லோகத்தில் பெண்களுக்கு ஒரு ஃபெர்பக்ட்டான பிரேக்கப் சாங் உண்டெங்கில் ஆயிரத்தில் ஒருவன் ‘மாலை நேரம்’ பாட்டுதான்.
Andrea Jeremiah
Andrea Jeremiah
  • ‘ஆடுகளம்’ டாப்ஸி, ‘தங்கமகன்’ ஏமி, ‘நண்பன்’ இலியானா… யார் தமிழுக்கு வந்தாலும் ஆண்ட்ரியாதான் டப்பிங். இது என்ன பிரமாதம் Avengers End Game ல Scarlett Johansson-யே தமிழ் பேச வச்சது தலைவிதான்.
  • ஒரு பக்கம் ‘என்னடி மாயாவி’னு காதல்… இன்னொரு பக்கம் ‘என்னை என்ன ** னு நினைச்சியா’ வில்லத்தனம்னு கலந்து கட்டி விருந்து வச்ச வடசென்னை சந்திராவுக்கு ஆஸ்கார் அவார்டு குட்றா ட்ரம்ப்பு…!
  • தமிழ் சினிமால கம்மியான சம்பளம் வாங்குற ஹீரோயின் பிசாசு 2-ல கிளாமரா நடிக்க கேட்ட சம்பளம் ஒரு கோடியாம்ப்பே…!
Andrea Jeremiah
Andrea Jeremiah
  • திடீர்னு கடல் கன்னியா மாறி டாப்லெஸ்ஸா போஸ் கொடுத்து ஷாக் கொடுப்பாங்க.
  • ’36 வயதினிலே’ க்ளப்ல சேர்ந்தப்பறம்கூட ஆளும் குரலும் அப்படியே இருக்குறதும் சர்ப்ரைஸ். அது எப்படிங்குறது கூகுளுக்கே புரியாத சீக்ரெட்!

Also Read – #20YearsofSneha: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில் சினேகாவுக்கு ஸ்பெஷல் இடம்… ஏன் – 5 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top