இவங்களாம் எப்படி டைரக்டர் ஆனாங்க தெரியுமா… இளம் இயக்குநர்களின் பின்னணி (பகுதி-1)

இவங்களை எல்லாம் இப்போ டைரக்டராதானப் பார்க்குறீங்க.. இதுக்கு முன்னாடி இவங்கள்லாம் என்ன பண்ணிக்கிட்டிருந்தாங்க.. எப்போ, எப்படி தொழில் கத்துக்கிட்டு டைரக்டர் ஆனாங்கன்னு ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்.

தியாகராஜன் குமாரராஜா

தியாகராஜன் குமாரராஜா
தியாகராஜன் குமாரராஜா

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு புகைப்படக் கலைஞராகவும் விளம்பரப் பட இயக்குநராகவும் சில காலம் பணியாற்றினார். அப்போதுதான் 2007-ஆம் ஆண்டில் புஷ்கர் – காயத்ரி முதன்முதலாக இயக்கிய ‘ஓரம்போ’ படத்தில் வசனகர்த்தாவாக திரையுலகில் நுழைந்தார். தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அவர்கள் இயக்கிய ‘வ-குவார்ட்டர் கட்டிங்’ படத்தில் ‘தேடியே.. தேடியே..’ உள்ளிட்ட முக்கால்வாசி பாடல்கள் எழுதிய தியாகராஜன் குமாரராஜா, அதே ஆண்டு தனது முதல் படமான ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கினார்.

அட்லி

அட்லி
அட்லி

மதுரையில் பிறந்து வளர்ந்த அட்லி, சென்னையில் கல்லூரி படித்தார். அப்போதே குறும்படமொன்றை இயக்கி, அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். 2007 ஆண்டு முதல் 2010 வரை ‘எந்திரன்’ படத்திலும் 2012 இல் ‘நண்பன்’ படத்திலும் பணியாற்றிய அட்லி 2013-ஆம் ஆண்டு தனது முதல் படமான ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார்.

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

திருநெல்வேலி அருகே பிறந்து வளர்ந்த மாரி செல்வராஜ், 2006-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து நடிகராக முயற்சித்தார். அதன்பிறகு இயக்குநர் ராமுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடைய முதல் படமான ‘கற்றது தமிழ்’ (2007) தொடங்கி ‘தங்க மீன்கள் (2013), ‘தரமணி (2017)’ வரை உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செலராஜ் 2018-ஆம் ஆண்டில் தனது முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கினார்.

ஹெச்.வினோத்

ஹெச்.வினோத்
ஹெச்.வினோத்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிறந்து வளர்ந்த ஹெச்.வினோத் சென்னைக்கு வந்து ஏராளமான பணிகளைப் பார்த்திருக்கிறார். அதன்பிறகு 2006-ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கிய ‘பச்சக்குதிர’ படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய இவர் அடுத்த சில வருடங்கள் வீட்டிலிருந்து திரைப்படங்களைப் பார்த்தே சினிமா கற்றிருக்கிறார். பிறகு 2014-ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா’ படத்திலும் ராஜூ முருகன் இயக்கிய ‘குக்கூ’ படத்திலும் பணியாற்றியவர், அதே ஆண்டு தனது முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கினார்.

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்

மதுரையில் பிறந்து வளர்ந்த கார்த்திக் சுப்புராஜ் அங்குள்ள தியாகராஜா கல்லூரியில் மெக்கட்ரானிக்ஸ் படித்தவர். அதன்பிறகு சில நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டே சொந்தமாக குறும்படங்களை எடுத்து பழகத் தொடங்கினார். அந்த நம்பிக்கையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னை நிரூபித்தார். அந்த அங்கீகாரத்தின் மூலம் அவருக்கு 2012-ஆம் ஆண்டு முதல் படமான ‘பீட்சா’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Also Read: `ஆனந்தம்’ படம் 21 ஆண்டுகளுக்குப் பின்னும் ஏன் கொண்டாடப்படுது… 6 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top