`விக்ரம்’ சந்தானம் கேங்கின் பெரிய கை – ஜாஃபர் சாதிக் சாதித்த கதை!

சாதிப்பதற்கு உயரம் தடை இல்லைனு நிரூபிச்சு இன்னிக்குப் பலரோட இன்ஸ்பிரேஷனா இருக்கவர் விக்ரம் ஜாஃபர் சாதிக். டான்ஸ்தான் நம்ம வாழ்க்கைனு இவர் எந்த வயசுல முடிவு பண்ணார் தெரியுமா… வில்லன் ரோலே வருதே அண்ணானு கேட்ட இவருக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கியமான அட்வைஸ் என்ன தெரியுமா… `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ கண்டஸ்டண்ட் எப்படி ஆக்சிடண்டலா சினிமாவுக்குள்ள வந்தார்னு தெரியுமா.. இப்படி ஜாஃபர் சாதிக்கோட பயணத்தைப் பத்திதான் நாம இந்த வீடியோவில் பார்க்கப்போறோம்.

Jaffer Sadiq
Jaffer Sadiq

ஈரோட்டைச் சேர்ந்த ஜாஃபர் ஸ்கூல் முடிச்ச உடனே நமக்கு காலேஜ்லாம் செட் ஆகாதுனு முடிவு பண்ணிட்டு ஃப்ரண்டோட சேர்ந்து சென்னை வந்துருக்கார். பள்ளி அளவிலான பல நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அவருக்கு, அதுதான் இனிமேல் நமது வாழ்க்கை என்ற முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது. சென்னைல இருந்த இன்னும் இரண்டு நண்பர்கள் கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஸ்டூடியோ தொடங்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது. சென்னையில் வந்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தபிறகுதான், டான்ஸ் ஸ்டூடியோ ஆரம்பிக்க என்னவென்னலாம் வேண்டும் என்கிற தகவல்களே தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்ட இவருக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா டான்ஸ் ஷோ மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. அந்த சீசனில் டைட்டில் அடிப்பார் என்ற அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இவரோட ஒவ்வொரு பெர்ஃபாமன்ஸும். இறுதியில் இரண்டாம் இடம் பிடித்தாலும், அது இவருக்கான அடையாளமாய் மாறியது.

`lift Others’ என்கிற பெயரில் நண்பர்களோடு இணைந்து டான்ஸ் ஸ்டூடியோவைத் தொடங்கி அதன்மூலம், பல நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராஃபி பண்ணிக் கொண்டிருந்தார் ஜாஃபர். 500-க்கும் மேற்பட்ட மேடைகளில் நடன நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி விழாக்களில் மாணவர்களுக்கு கொரியோகிராஃபி என பிஸியாக இருந்த இவருக்கு நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் விக்னேஷ் சிவன் வழங்கியது இவரோட வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜியில் விக்னேஷ் சிவன் இயக்கியலவ் பண்ணா உட்றணும்’ ஸ்டோரியில் நரிக்குட்டி கேரக்டரில் வெளுத்து வாங்கியிருப்பார் மனுஷன். நரிக்குட்டி கேரக்டர்தான் இவருக்கு விக்ரம் பட வாய்ப்புக் கிடைக்க முக்கியமான காரணம். அந்த கேரக்டருக்கான ஆடிஷனில் இவர் சொதப்பியிருந்தாலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இவர் மேல் நம்பிக்கை வைத்து கேரக்டரைப் பண்ண வைத்தாராம்.

Jaffer Sadiq
Jaffer Sadiq

பாவக்கதைகள் நரிக்கூட்டம் கேரக்டரும் விக்ரம், வெந்து தணிந்தது காடு படங்களில் இவர் நடித்த கேரக்டர்கள் இவருக்கு அடையாளம் கொடுத்தது. இதேபோல், டாக்டர் படத்தின் முக்கியமான கேரக்டர் ஒன்றுக்கும் இவர் ஆடிஷன் போயிருந்தாராம். பட ரிலீஸுக்குப் பிறகு பிரபலமான மீம் டெம்ப்ளேட்டான அந்த கேரக்டர் என்னாவா இருக்கும்னு கெஸ் பண்ணிட்டே இருங்க… விடையை வீடியோவோட கடைசில நானே சொல்றேன்.

Jaffer Sadiq - Sherin
Jaffer Sadiq – Sherin

லவ் என்கிற வார்த்தையைக் கேட்டாலே கொலை செய்துவிடும் ரீல் லைஃப் நரிக்குட்டி, ரியல் லைஃபில் கமிட்டட்ங்க… இவரோட டான்ஸ் ஸ்டூடியோவில் இணைந்து பயணிக்குற ஷெரின் இவரோட கேர்ள் ஃப்ரண்ட். இரண்டு பேரும் சேர்ந்து இன்ஸ்டால நிறையவே டான்ஸ் வீடியோஸ் போஸ்ட் பண்ணிருக்காங்க. நரிக்குட்டி கேரக்டருக்காக சிறந்த அறிமுக நடிகராக விருது வாங்கிய மேடையிலேயே இவர் சொன்ன வார்த்தை, `நான் ஆக்டர் இல்லீங்க; டான்ஸர்’ என்பதுதான். அந்த அளவுக்கு டான்ஸ் மீது இவருக்குக் காதல். இவரைப் போலவே கொரியாகிராஃபர் ஆக வேண்டும் என்பதுதான் ஷெரீனின் கனவும் என்று பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார்.

Also Read – `நடிகன்யா நீ; நடிகன்…’ ஜீவா நடித்த பெஸ்ட் கேரக்டர்கள்!

ஜாஃபர் பிறந்த உடனே, உயரம் குறைவாக இருக்கும் அந்தக் குழந்தையைப் பார்த்து, இந்தக் குழந்தை உனக்கு வேணுமா என்று இவரது தாய் மாமா, இவரது அம்மாவைப் பார்த்து கேட்டிருக்கிறார். நிச்சயம் எனக்கு இவன் வேணும். இவனை நான் வளர்த்துக்கிறேன் என்று இவரது தாய் சொல்லியிருக்கிறார். அந்த நம்பிக்கைதான் தன்னை இந்த இடம் வரை அழைத்து வந்திருக்கிறது என்று ஒரு பேட்டியில் நெகிழ்வாய் பகிர்ந்திருந்தார். அதேபோல், சிறுவயது முதலே நண்பர்கள்தான் தன்னுடைய எல்லா சூழ்நிலைகளிலும் உடனிருந்ததாகச் சொல்லும் இவர், பல இடங்களில் உருவ கேலிக்கு ஆளாகியிருக்கிறார். அதனால், எந்த இடத்திலும் சோர்ந்து போகவில்லை என்றாலும், உருவ கேலியால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் பல இடங்களில் இவர் பதிவு செய்திருக்கிறார். விக்ரம், வெந்து தணிந்தது காடு படங்கள் ரீலீஸுக்குப் பிறகு யூடியூபின் பிரபலமான சினிமா ரிவீவ்யூவர் இவரை உருவகேலி செய்தது பெரிய சர்ச்சையானது. உருவ கேலிகளைத் தவிர்க்கும்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டிருந்தது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.

Narikutty
Narikutty

என்னன்னா வில்லன் கேரக்டராவே வருது. இதை எப்படி Treat பண்றதுன்னே தெரியலன்னா’ என்று விக்ரம் செட்டில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் அப்பாவியாய் கேட்டிருக்கிறார் ஜாஃபர் சாதிக்.இடையில ஒரு காமெடி கேரக்டர் பண்ணிடு. மறுபடியும் வில்லத்தனம் பண்ணு’ என்று அட்வைஸ் பண்ணியிருக்கார் லோகேஷ். இயக்குநர்கள் விக்னேஷ் சிவனையும் லோகேஷ் கனகராஜையும் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதாகச் சொல்லும் ஜாஃபர் சாதிக், அவர்கள் தனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும், உடனே ஓகே சொல்லிட்டு நடிக்கப் போய்டுவேன் என்றிருக்கிறார். டாக்டர் படத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட `கிளி’ கேரக்டர் ஆடிஷனுக்கு இவர் போயிருக்கிறார். அதேபோல், அயலான் கேரக்டருக்கும் இவர் ஆடிஷன் போனநிலையில், அந்த வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லையாம்.

ஜாஃபரோட நடனம் or ஆக்டிங் எது உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top