* கொஞ்சமே கொஞ்சம்தான் சாப்பிடுவார் தனுஷ். ஆனால் அதை அடிக்கடி சாப்பிடுவார். இதுதான் தனுஷின் ஒல்லிக்குச்சி உடம்புக்கு காரணம்.
* தனுஷுக்கு உலகிலேயே மிகப் பிடித்த இடம் அவரது ‘வொண்டர்பார்’ நிறுவன ஆபிஸ்தான். ரிலாக்ஸுக்காக எந்த இடத்துக்கு போய்வந்தாலும் இங்கு இருப்பதுபோல் ரிலாக்ஸாக இருக்கமுடிவதில்லை என்பாராம் தனுஷ்.
* பார்ட்டிகளுக்கு சென்றிருக்கும்போது யாராவது தனுஷிடம் ஃபோட்டோ கேட்டால் ஸ்டிரிக்ட்டாக நோ சொல்லிவிடுவார்.
* தனுஷின் ஃபேவரிட் உணவு தயிர் சாதம்

* தனுஷூக்கு ஆரம்பகாலத்தில் ஆங்கிலத்தில் பேச வராது. ஆனால் இப்போது அவருக்கு ஆங்கிலத்தில் கவிதையே எழுதும் அளவுக்கு புலமை வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இருவரும் திருமணம் செய்துகொண்ட சமயத்தில் தனுஷுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. ஐஸ்வர்யாவுக்கோ தமிழில் அவ்வளவு புலமை கிடையாது. அப்போது இருவரும் ஒரு டீல் போட்டுக்கொண்டனர். தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு தமிழ் கற்றுத் தருவது எனவும் ஐஸ்வர்யா, தனுஷூக்கு ஆங்கிலம் கற்றுத் தருவது என்பதும் அந்த டீல்
* கவுண்டமணியின் தீவிர ரசிகன் தனுஷ். சற்று மனம் சோர்வாக இருந்தாலும் உடனே கவுண்டமணியின் காமெடி காட்சிகளை யூ-டியூபில் பார்த்து உற்சாகமாகிக்கொள்வார் தனுஷ்.
* தீவிர கடவுள் பக்தி உண்டு தனுஷுக்கு. எந்த நல்ல விஷயமாக இருந்தாலும் அதை நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் செய்வார்.
* தனது மாமனார் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் கனவு.

* நெருக்கமானவர்களை பங்கமாக கலாய்ப்பார் தனுஷ். அதில் அவரிடம் அடிக்கடி சிக்குவது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தான்.
* தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. அவரது வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய உறவினர்களும் இப்போதும் அவரை ‘பிரபு’ என்றுதான் அழைத்துவருகின்றனர்.
* தனது மாமனார் ரஜினி பற்றி பேட்டிகளில் பேசும்போது ‘சார்’ என்றே குறிப்பிடும் தனுஷ், வீட்டில் அவரை எப்படி கூப்பிடுவார் என்பதை இன்றுவரை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார்.
* தனுஷ் ஒரு இயக்குநரின் மகன் என்பதால், எல்லோரும் நினைப்பதுபோல அவரது இளமைக்காலம் அவ்வளவு சொகுசாக அமையவில்லை. அவரது முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ ரிலீஸ் ஆகி ஹிட்டாகும் வரை, சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றனர் தனுஷின் குடும்பத்தினர்.

* பன்னிரண்டாம் வகுப்பு லீவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த தனுஷை அவரது அப்பா கஸ்தூரி ராஜா கூப்பிட்டு ‘அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோ’ என்றிருக்கிறார். இப்படித்தான் ஹீரோவானார் தனுஷ்.
* ரஜினியுடன் தனுஷ் இணைந்து நடித்ததில்லை. ஆனால் ரஜினியின் ‘குசேலன்’ படத்தில் ஒரேயொரு காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
* மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா மீது பெரும் மதிப்பு கொண்டவர் தனுஷ். அவரது இயக்கத்தில் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் நடிக்க தனுஷை அழைத்தபோது கதை, சம்பளம் என எதைப்பற்றியும் ஒருவார்த்தைகூட பேசாமல் உடனே ஒப்புக்கொண்டார்.
0 Comments