அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சிவா, தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் யாருமே பண்ணாத ஒரு விஷயத்தை பண்ணியிருக்கிறார்; அது என்னனு தெரியுமா? சிவாவோட கரியர் சக்ஸஸ் ஆனதுக்கு 3 பேர்தான் முக்கிய காரணம்; அவங்க யாருனு தெரியுமா? படங்களில் பார்ட்டி பாயா இருக்கிற சிவா ரியல் லைஃப்ல எப்படி இருப்பார்? இதையெல்லாம் தெரிஞ்சுக்க இந்த வீடியோவை ஃபுல்லா பாருங்க.
சினிமா சம்பவங்கள்
டிவியில் இருந்து ஒருத்தர் சினிமாவில் ஹீரோவாகவோ அல்லது நடிகராகவோ பல படங்களில் நடிப்பது என்பதே அரிதான காலத்தில் தலைவன் ரேடியோவில் இருந்து சினிமாவில் நடிகராகவும் பின்பு ஹீரோவாகவும் நடித்தது அரிதினும் அரிது என்றாலும் அதனை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டே இருப்பதும் சாதாரண விஷயம் இல்லை. இதனை பயங்கர சாமர்த்தியாக செய்துவருகிறார் சிவா.
அதேபோல் மூன்று சீக்குவல் படங்களில் நடித்த ஒரே ஹீரோவும் சிவாதான். சென்னை 28 1,2; தமிழ்ப்படம் 1,2; கலகலப்பு 1,2 என இந்த ஆறு படங்களில் இரண்டு படங்களில் மெயின் ஹீரோவாகவும் ஒரு படத்தில் இரண்டாவது ஹீரோவாகவும் மற்ற மூன்று படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அஜித், தனுஷ் என பெரிய ஹீரோக்கள் ரஜினி படத்தை ரீமேக் செய்து நடித்திருந்த நிலையில், சிவாயும் ரஜினியின் எவர்க்ரீன் ஹிட் படமான தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்திருக்கிறார். காமெடிதான் சிவாவின் ட்ரேட்மார்க் என்ற விமர்சனங்களை உடைப்பது போன்று பதினாறு, வணக்கம் சென்னை என வழக்கமான காமெடி கதாபாத்திரத்தில் இருந்து விலகியும் நடித்திருக்கிறார். ஆர்.ஜேவாக இருந்த சமயத்தில் இருந்தே ஸ்கிரிப்ட் எழுதும் பழக்கமுள்ள சிவா சமீபத்தில் நடித்திருக்கும் சுமோ படத்தில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார். இதெல்லாம் சிவாவின் கரியரில் நடந்த மிக முக்கியமான மொமெண்ட்ஸ்.
Also Read – இப்படி பாட்டு போட்டா லைஃப் டைம் செட்டில்மென்ட்… ஷான் ரோல்டன் இசைப் பயணம்!
வாழ்க்கையை மாற்றியவர்கள்
சிவாவின் கரியரில் மிக முக்கியமான ஆள்களாக சிலர் இருக்கிறார்கள். அதில் முதன்மையானவர் யுவன். சிவா ஆர்.ஜே.வாக இருந்த சமயத்திலேயே யுவனின் நட்பு அவருக்கு கிடைத்தது. அதன் மூலமாகத்தான் சென்னை 28 படத்தில் நடித்தார். சென்னை 28 படம் மூலம் வெங்கட் பிரபுவின் நட்பு கிடைத்தது. அதன் மூலம் சென்னை 28 படத்திற்கு பிறகு சரோஜா, சென்னை 28 2, பார்ட்டி என இவர்களின் நட்பு இன்றுவரைக்கும் தொடர்கிறது. இவர்கள் தவிர தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதனும் மிக முக்கியமானவர். சிவாவை வைத்து சோலோ ஹீரோ, புதுவகையான ஜானர் என சோதனை முயற்சியாக இவர் செய்த விஷயங்கள் ஹிட்டடிக்க, இவரால்தான் இன்று வரை சிவாவை நாம் அகில உலக சூப்பர் ஸ்டார் என சொல்கிறோம். இவர்களால்தான் சிவாவின் கரியர் இப்படி ஒரு க்ராஃபில் இருக்கிறது.
தக் லைஃப்ல கிங்
தலைவன் சினிமாவில் பண்ற காமெடிகளைத் தாண்டி விஜேவான பல விருது மேடைகளில் பல தக் லைஃப் சம்பவங்கள் செய்திருக்கிறார். இவர் ஒரு விருது விழாவை தொகுத்து வழங்கினால், அந்த விழாவுக்கு வரும் பிரபலங்கள் மேடையில் பேசவே பயப்படுவார்கள். அந்த வீடியோ க்ளிப்ஸை நாம யூடியூப்பில் பார்த்திருப்போம். குறிப்பாக சொல்லணும்னா சிம்பு, விக்னேஷ் சிவன், நயன்தாரா என இவரால் மேடையில் வைத்து கலாக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், யார் மனதையும் புண்படுத்தாமல் அவரை கலாய்க்கிறதுதான் சிவாவின் இயல்பு.
வியக்க வைக்கும் நிஜ முகம்
சிவா என்றால் காமெடி; கலாய் என்பதற்கு மாறாக இருக்கும் சிவாவின் நிஜ முகம். ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ள சிவா பல பேட்டிகளில் அதைப்பற்றி பேசியிருக்கிறார். ஆன்மிகம் தாண்டி வாழ்க்கையை அவர் அணுகுகிற விதம், பேசுகிற தத்துவங்கள் என நம்மை வியக்க வைக்கிறார்கள். சமீபமாகத்தான் இப்படி பேசிகிறார் என நினைத்தால், பத்து வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியிலும் மனுஷன் அதே மோடில்தான் பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவரது அலுவலகத்தில் எப்போதுமே பக்தி பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். படங்களில் பார்ட்டி; நிஜத்தில் பக்தி என்று வாழும் சிவா உண்மையிலே நமக்கொரு ஆச்சரியம்தான். சிவாவின் ஃபேமிலியிலும் இவர்தான் கடைக்குட்டி. இவருக்கு மொத்தம் 5 அக்காக்கள்; ஒரு அண்ணன். இவர் குடும்பத்தில் மொத்தம் 30 நபர்கள். இவர் முதன்முதலில் சினிமாவில் நடிப்பதை தனது குடும்பத்தில் யாரிடமும் சொல்லவேயில்லையாம். படம் ரிலீஸாகப்போற சமயத்தில் போஸ்டர்கள், பேப்பரில் வந்த விளம்பரங்களைப் பார்த்துதான் இவர் சினிமாவில் நடிக்கிறார் என அவரின் குடும்பத்திற்கே தெரியுமாம்.
ஆர்.ஜே, வீ.ஜே, அகில உலக சூப்பர் ஸ்டார்னு பன்முகம் கொண்ட சிவாவோட எந்த முகம் உங்களுக்கு பிடிக்கும்னு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.





I’m extremely inspired along with your writing abilities and also with the structure to your
blog. Is this a paid subject or did you modify it your self?
Anyway keep up the nice quality writing, it’s rare to look
a great blog like this one nowadays. Beacons AI!
We are a group of volunteers and opening a new scheme in our community.
Your website offered us with valuable information to work on. You have done an impressive job and our whole community will be grateful to you.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
Với giao diện mượt mà và ưu đãi hấp dẫn, MM88 là lựa chọn lý tưởng cho các tín đồ giải trí trực tuyến.