எந்த ஒரு ரஜினி ரசிகனைக் கேட்டாலும் பிடிச்ச படமா சொல்றது ‘பாட்ஷாவை’த்தான். ஆனா, அதற்கு ஒரு முன்னோடியா ரஜினிகாந்தோட வசூல் திறமையை முழுசா வெளிக்கொண்டு வந்த படம்னு சொன்னா அது அண்ணாமலைதான். இதோட அடுத்த அப்டேட்டட் வெர்ஷனை வச்சு மறுபடியும் சுரேஷ் கிருஷ்ணா கொடுத்த ஹிட்டுதான் பாட்ஷா. இந்த படத்தை முதல்ல இயக்க கமிட்டானது சுரேஷ் கிருஷ்ணா இல்லை, அதோட படத்துக்கு அன்னைக்கு முதல்வரா இருந்த ஜெயலலிதா கொடுத்த நெருக்கடி, புரொடியூசரா இருந்த பாலசந்தரும் அரசியல் பரபரபுக்கு வசனம் எழுதினது, காட்சி நீக்கப்பட்டதுனு ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கு. அப்படி இந்த படம் பண்ணின சம்பவங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
என்னால இயக்க முடியாது!
இயக்குநர் கே.பாலசந்தரோட ‘கவிதாலயா’ தயாரிப்புல படத்தோட பேர் அண்ணாமலைனு வச்சு, வசந்த் இயக்குநர்னு 11.03.1992-ங்குற தேதியோட சில அறிவிப்பு போஸ்டர்களும் வெளியானது. அதுக்கான வேலைகள் நடந்துகிட்டிருக்குற நேரத்துல சரியா 3 நாளைக்கு முன்னாடி திடீர்னு தன்னால படம் இயக்க முடியாதுனு சொல்லிட்டு வசந்த் விலகிட்டார். இரண்டு நாட்களில் படப்பிடிப்பு.. இதை எப்படி சமாளிக்கிறதுனு பாலசந்தர் யோசனையில் இருந்தார். யோசிச்ச பாலச்சந்தர் அடுத்த நாள் இன்னொரு சிஷ்யனான சுரேஷ் கிருஷ்ணாவுக்கு போன் பண்ணினார். மும்பையில் சல்மான்கான் படம் முடிஞ்சு சுரேஷ் கிருஷ்ணா அன்னைக்குத்தான் சென்னை வந்திருந்தார். இருந்தாலும் அழைத்தது குருவாச்சே, உடனே பாலச்சந்தரை சந்திக்கிறார். நிலையை எடுத்துச் சொல்லி எனக்காக இந்த படம் பண்ணி தருவியானு கேட்க, வார்த்தையை தட்ட முடியாத நிலையில சரி பண்றேன்னு சொன்னார், சுரேஷ் கிருஷ்ணா. அதுக்குப் பின்னாலதான் சுரேஷ் கிருஷ்ணா கதையே கேட்டார்.

ஹிந்தி படத்தின் கதை!
சின்ன வயசுல நண்பர்களா இருக்குற ஒரு ஏழை பால்காரணுக்கும், பணக்காரனுக்கும் இடையிலான நட்பு, பிரச்னையாக வந்து நிற்பதுதான் அடிப்படைக் கதை. ஜிதேந்திரா, சத்ருகன் சிம்ஹா, கோவிந்தா மற்றும் பானுப்ரியா எல்லோரும் சேர்ந்து நடிச்ச ‘குத்கர்ஸ்’ங்குற ஹிந்தி படம்தான் அண்ணாமலையின் கதைக்கரு. அதில் பணக்காரனாக நடித்திருந்த ஜிதேந்திராதான்படத்தோட ஹீரோ. ஆனால் இங்கே ஹீரோ ரஜினி ஏழை பால்காரணாக ரஜினி இருந்ததால், கதாபாத்திரத்துக்காக நிறைய மாற்ற வேண்டி இருந்தது. படத்தின் கதாசிரியரான ஷண்முகசுந்தரத்தினை சந்தித்த சுரேஷ் கிருஷ்ணா ‘கதை டெவலப் பண்ண டைம் இல்ல, என்ன பண்ணலாம்’னு கேட்க ‘போக போக பண்ணிக்கலாம்’னு பதில் சொல்லியிருக்கார், சண்முகசுந்தரம். ஒரு வழியாக 11.03.1992 அன்று ஏ வி எம் படப்பிடிப்பு தளத்தில் பூஜையுடன் ஷூட்டிங் துவங்கியது.

அங்கேயே யோசித்து அப்படியே படமாக்கி…!
ஆரம்பத்தில் அடிப்படை காதாபாத்திரங்களோட மட்டுமே படம் ஆரம்பிச்சதால ஒவ்வொரு நாளும் ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கதாசிரியர் ஷண்முகசுந்தரம் மூணுபேரும் ஷூட்டிங் ஸ்பாட்லயே உட்கார்ந்து திரைக்கதை அமைப்புல மாற்றங்களை கொண்டுவந்தாங்க. அப்படித்தான் அந்த காட்சிகள் படமாக்கப்படும். அதே நேரத்தில் மாலை வேளையில இசையமைப்பாளர் தேவாயிகூட உட்கார்ந்து இசைக் கோர்ப்பு பணிகளும் நடந்தது. படம் இப்படித்தான் அசுர கதியில் உருவானது.
ஜெயலலிதா கோபம்!
படம் ரிலீசாகுறப்போ, ‘அண்ணாமலை பட போஸ்டரை நான் எங்கயும் என் கண்ணுல பார்க்க கூடாது’னு ஜெயலலிதா தன் கட்சிக்காரர்களுக்கு வாய்மொழி உத்தரவு கொடுத்ததாகவும் தகவல்கள் பரவுச்சு. அதுக்கு ஒரு கோபமும் இருந்தது. மிகப்பெரிய ரசிகர் மன்றங்களை வைத்திருக்கும் ரஜினியின் செல்வாக்கு ஜெயலலிதாவை கோபப்படுத்தியது. அதனால் ஜெயலலிதா அரசு அண்ணாமலை ரிலீசான சமயத்தில் சென்னை மாநகராட்சி சுவர்களில் திரைப்பட போஸ்டர்களை ஒட்டக்கூடாது என தடை விதித்தது. அந்த காலகட்டத்தில் செய்தித்தாள் விளம்பரம் பயன்படுத்தி பிரபலமானது. அதையெல்லாம் சமாளித்து தமிழகமெங்கும் ‘அண்ணாமலை’ ரிலீசானது.

அரசியல் வசனங்கள்!
படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே ரஜினிக்கும், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையில பிரச்சினையான சூழல் இருந்தது. ”என்னை எதுவேண்ணா செய்யுங்க. என் மாட்டு மேல கைவச்சீங்க. என் பாணியே தனியா இருக்கும்” என்ற பஞ்ச் வசனம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே மாதிரி உனக்கு ‘பொண்ணால கண்டம் தேடி வருது’, ‘மலைடா அண்ணாமலை’, ‘அண்ணாமலை கணக்கு’னு ராதாரவிக்கே பாடம் எடுக்குற இடம்னு அரசியல் வசனங்களுக்கு பஞ்சமில்லை. அதுவும் வினு சக்கரவர்த்திக்கு எதிரா ரஜினி பேசுற வசனங்கள் எல்லாம் பாலச்சந்தர் எழுதினாருங்குறதுதான் சுவாரஸ்யமான விஷயம்.
முதன்முதலாக!
முதல்முதலா ஹீரோ இன்ட்ரோ பாட்டு அறிமுகமானது இந்த படத்துலதான். பிரபுதேவா கொரியோகிராபி பண்ணியிருந்தார். ஹீரோ இண்ட்ரோவில் ரசிகர்களைப் பார்த்து சைகை செய்ற ட்ரெண்டும் இந்த படத்தில் இருந்துதான் ஆரம்பிச்சது. அதேபோல ஒரே பாட்டுல ஹீரோ பணக்காரனாகுற காட்சிகள் இந்த படத்துல இருந்துதான் ஆரம்பிச்சது. முதல்ல இந்த காட்சிகள் எல்லாம் விரிவாத்தான் எடுக்கப்பட்டது. படத்தோட விறுவிறுப்பு குறைஞ்சதன் காரணமா எல்லா காட்சிகளையும் வச்சு பாட்டுபோட்டு மேட்ச் பண்ணிட்டாங்க. அதுக்கான பாட்டும் பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் ஆச்சு.

மாஸ் காட்சிகளுக்கு இது பாஸ்!
‘மாஸ் மாஸ் மாஸ்… ஐ டோண்ட் லைக் இட்.. ஐ அவாய்ட்… பட் மாஸ் லைக்ஸ் மீ’னு சொல்றதுக்கு ஏத்த மாதிரி இந்த படத்துல இவரோட மாஸ் சீன்கள் இருக்கும். முதல்முதலா மாஸ் சீன்கள் வச்சு, பாட்சாவுக்காக அண்ணாமலையில் டிரைல் பார்த்தார் சுரேஷ் கிருஷ்ணா. புதிய தலைவர் அண்ணாமலைனு சொல்ற இடத்துல ரஜினி நடந்து வந்து சேர்ல உட்கார்ற சீன்ல மொத்த தியேட்டரும் ஆர்ப்பரிச்சு கத்த ஆரம்பிச்சது. பாட்சாவுல ரஜினி தங்கச்சியை அடிச்ச உடனே ஒரு சண்டைக்காட்சி வரும். அப்போ எவ்ளோ வரவேற்பு இருந்ததோ, அதுக்கு முன்னாடியே அண்ணாமலைல அந்த சீனுக்கு இருந்தது. ரஜினி ‘அசோக் உன்காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ’ சவால் விடுற இடம், க்ளைமேக்ஸ்ல பைட்ல உருட்டுக்கட்டையோட எதிரிக்கூட்டத்தை நோக்கி ஓடி வர்ற சீன் உள்பட பல இடங்கள் எல்லாமே மாஸோட உச்சமாவே இருந்தது. இன்னைக்கு மாஸ் காட்சிகளை எடுக்க இன்ஸ்பையர் ஆகுறவங்க பாட்சா பார்க்குறதுக்கு முன்னால, இந்த படத்தையும் பார்க்கலாம்.
Also Read – இந்தி சினிமால விஷால் பக்கா மாஸ்…நம்ப முடியலையா?! இதோ ஆதாரம்! #VERIFIED
0 Comments