Vijay - TTF Vasan

விஜய்க்கு டி.டி.எஃப் வாசன் போட்டியா.. சம்பவங்கள் என்ன சொல்லுது?

வாரிசு படத்தோட ஆடியோ லாஞ்சும், டி.டி.எஃப் வாசன் இண்டர்வியூவும்தான் இன்னைக்கு சோஷியல் மீடியால செம டிரெண்ட். மாஸ்டர் ஷூட்டிங்க் அப்போ விஜய் செல்ஃபி எடுத்த மாதிரி, டி.டி.எஃப் தன்னோட பிறந்தநாள்க்கு செல்ஃபி எடுத்தாரு. விஜய் குட்டி ஸ்டோரி சொல்ற மாதிரி, மோட்டார் விளாக்லாம் பண்ணும் போது வாசனும் குட்டிக்கதை சொல்றாரு. அப்போ, விஜய்க்கு போட்டியா நீங்கனு கேள்வி கேட்டா, இந்த செருப்பும் இந்த செருப்பும் ஏன் ஒண்ணா இருக்கக்கூடாதுனு பதில் சொல்றாரு. இதைப் பார்த்த விஜய் ஃபேன்ஸ் பொங்கி எழுந்து வாசனை வைச்சு செய்றாங்க. இந்த வீடியோல டி.டி.எஃப் பண்ற அட்டகாசங்கள் பத்திதான் பார்க்கப்போறோம்.  

விஜய்க்கு நண்பா, வாசனுக்கு சாமி!

விஜய் தன்னோட ரசிகர்களை எப்பவுமே நண்பா, நண்பினுதான் சொல்லுவாரு. மெர்சல் ஆடியோ லாஞ்ச்ல இருந்துதான் அந்த வார்த்தை டிரெண்ட் ஆக ஆரம்பிச்சுதுனு நினைக்கிறேன். அதுக்கப்புறம் அவரோட் ஃபேன்ஸ் இந்த வார்த்தையை பிராண்ட் மாதிரி யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்ன நண்பா ரெடியானு தான் ஆடியோ லாஞ்ச் அறிவிப்புகூட வரும். அதேமாதிரி, வாசன் 2 வார்த்தையை யூஸ் பண்ணுவாரு. ஒண்ணு, சாமி. அவரோட ஃபேன்ஸ் யாராவது எதாவது பண்ண வந்தா, சாமி சாமி அப்படி பண்ணாத சாமி, ஹெல்மெட் போடு சாமி, உங்களை பார்த்ததுல சந்தோஷம் சாமினு சாமியா பொழிவாரு. அப்புறம், டி.டிஎஃபே. அன்பே, மானே, தேனே, பொன்மானே மாதிரி டி.டி.எஃபே. கூட்டமா எங்கயாது ஃபேன்ஸ பார்த்தாருனு வைங்க. ரொம்ப சந்தோஷம் டி.டி.எஃபேனுதான் ஆரம்பிப்பார். பைக்ல போகும்போது யாராவது ஹாய் டி.டி.எஃப்னு கை காமிப்பாங்க. அப்போ, இவரும் நம்ம டி.டி.எஃப் தானுங்க. நன்றி டி.டி.எஃபேனு சொல்லுவாரு. இப்படி விஜய்க்கு நண்பான்றது அடையாளம்னா, டி.டி.எஃப்க்கு சாமின்றது அடையாளம். நண்பான்றதை பிராண்டா எப்படி விஜய் ஃபேன்ஸ் எப்படி செலிபிரேட் பண்றாங்களோ, தங்களோட பைக் ஆட்டோலலாம் ஸ்டிக்கரா ஒட்டியிருக்காங்களோ, அதேமாதிரி டி.டி.எஃப் ஃபேன்ஸ் சாமி, டி.டி.எஃபேன்றதை செலிபிரேட் பண்ணாங்க. அதை அவங்களோட பைக்லலாம் ஸ்டிக்கரா ஒட்டி இருக்காங்க. காஞ்சிபுரத்துல சில நாள்கள் முன்னாடி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை கைது பண்ணாங்க. அவரோட பைக்ல டி.டி.எஃப்னு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாச்சு.

கிரவுட் செல்ஃபி ஆல்வேஸ் ஃபேமஸ்!

TTF Vasan
TTF Vasan

மாஸ்டர் படத்தோட ஷூட்டிங் அப்போ, விஜய்க்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் வந்துச்சு. அவருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்குற விதமா, மாஸா அவர் முன்னாடி நெய்வேலில கூடுனாங்க. அப்போ, விஜய் தன்னோட மொபைல் எடுத்து செல்ஃபி ஒண்ணு போடுவாரு. செமயான தருணம் அது. இன்னைக்கும் அப்படியொரு செல்ஃபி வேற எந்த ரசிகருக்கும் அமையுறது கஷ்டமான விஷயம். அதேமாதிரி TTF வாசன் தன்னோட பிறந்தநாள் அப்போ, ஃபேன்ஸ் மீட் ஒண்ணு வைச்சாரு. போற வழியெல்லாம் சிறுசுல இருந்து பெருசு வரை தன்னோட அன்பை வாசனுக்கு காமிச்சாங்க. ஆரத்திலாம் எடுத்தாங்கனு நினைக்கிறேன். கடைசில அந்த கிரவுண்டுக்கு போய் அங்க தன்னோட ரசிகர்கள்கூட செல்ஃபி எடுப்பாரு. அதுவும் அவ்வளவு மாஸான ஒரு மொமண்டாதான் இருக்கும். ரெண்டையும் கம்பேர் பண்ணி கேட்கும்போதுதான், இந்த செருப்பும் அந்த செருப்பும் ஒண்ணா இருக்கக்கூடாதா?, நான்லாம் அடிபட்டு, மிதிபட்டு கீழ இருந்து வந்து இன்னைக்கு இவ்ளோ பெரிய சாதனையை பண்ணியிருக்கேன். அதையெல்லாம் ஏன் யாரும் பேச மாட்றீங்கனு அப்படி கொந்தளிச்சு பேசுவாரு. செல்ஃபிலலாம் தப்பு இல்லை. அது அவரோட ரசிகர்கள் அவருக்கு கொடுக்குற அன்போட வெளிப்பாடு. சரி, அப்படி என்ன சாதனை பண்ணிட்டாருனு கேட்டா, நான் பைக்ல கோவைல இருந்து காஷ்மீர் வரைக்கும் நிக்காமல் போனேன், முதுகுல என்னோட ஃபேன்ஸை டாட்டூவா குத்திருக்கேன் இப்படிலாம் சாதனையா சொல்றாரு. இதுலாம் என்னைக்கு சாதனை லிஸ்ட்ல சேர்த்தாங்கனு தெரியலை. ஒருவேளை நாம பூமரா யோசிக்கிறோமானுலாம் செல்ஃப் டவுட்டுகள் வருது. விஜய் அவரோட இயக்கம் மூலமா அவ்வளவு உதவிகள் பண்றாரு, அட்வைஸ் பண்றாரு, படங்கள்ல மெசேஜ் சொல்றாரு, அதுமட்டுமில்ல அவரோட வளர்ச்சிலாம் அவ்வளவு அவமானங்கள் இருக்கு. அதைப் பார்த்தாலே அவ்வளவு இன்ஸ்பிரேஷனா இருக்கும். எல்லா ரூல்ஸையும் மீறி வெறும் பைக் ஓட்டுற நீங்க, எங்க தளபதியகூட உங்களை கம்பேர் பண்றீங்களானு விஜய் ஃபேன்ஸ்லாம் செம கடுப்புல போஸ்ட் போட்டுட்டு இருக்காங்க.

விஜய் – டி.டி.எஃப் வாசன் ஃபேன்ஸ் கூடுனாலே தடியடிதான்!

சர்கார் ஆடியோ லாஞ்ச்ல விஜய் ஃபேன்ஸ போலீஸ்காரங்க பயங்கரமா அடிச்சுட்டாங்க. அந்த பிரச்னை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டுச்சு. அதைக் குறிப்பிட்டு விஜய் பிகில் ஆடியோ லாஞ்ச்ல, “என்னோட ரசிகர்கள் சின்ன சின்ன செலிபிரேஷன்ஸ் தியேட்டர்லலாம் பண்றாங்க. நான் வேணாம்னு எவ்வளவோ சொல்லிட்டேன். அவங்க கேக்குற மாதிரி இல்லை. என்னோட ஃபோட்டோஸ் கிழிங்க, பேனர்ஸ உடைங்க. ஆனால், என்னோட ரசிகர்கள் மேல மட்டும் கை வைக்காதீங்க”னு மாஸா சொல்லுவாரு. இதேமாதிரிதான் டி.டி.எஃப் வாசன் எங்கலாம் ஃபேன்ஸ் மீட் வைச்சு கூடுறாரோ, அங்கலாம் பயங்கரமா போலீஸ்கிட்ட அடி வாங்குவாங்க. ரீசண்டாகூட மிகப்பெரிய அளவில் சர்ச்சையாச்சு. கடலூர்ல அந்த சம்பவம் தொடர்பா காவல் துறை அதிகாரிகள் வழக்குலாம் பதிவு பண்ணியிருக்காங்க. அந்த சம்பவத்துல போலீஸ் அவ்வளவு கடுப்பாக காரணம், அவரோட ரசிகர்கள் பண்ண வேலைதான். பயங்கரமா ஹார்ன் அடிச்சுட்டு, பைக்ல சவுண்டை கூட்டி உறுமிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்ற வகைல போய்ருக்காங்க. இதைதொடர்ந்து, டி.டி.எஃப் வாசன் வெளியிட்ட வீடியோல, “கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்கிற மாதிரி ஆயிடுச்சு. பசங்க மேல கை வைச்சுட்டாங்க. செம வெறி ஆயிட்டேன். யாரு கை வைச்சாங்களோ, அவங்க நம்மள மரியாதையா கூட்டிட்டுப் போய் உள்ள உட்கார வைப்பாங்க”னுலாம் பேசுனாரு. இப்படி பசங்க பண்றதை ஏத்தி விடுறதுலாம் ரொம்ப தவறுங்க, டி.டி.எஃப் வாசன். முறையா அனுமதி வாங்கி எவ்வளவு நேரம் பார்க்கணுமோ, யாரையும் தொந்தரவு பண்ணாமல் வந்துட்டுப் போனால், எதுக்கு இப்படிலாம் சர்ச்சைல மாட்டப்போறீங்க. அதை விட்டுட்டு, வளர விட மாட்றாங்க, நெகட்டிவிட்டி ஸ்ப்ரெட் ஆகியிருக்கு, என் இடத்துல வேற யாராவது இருந்த உயிரையே விட்ருப்பான்னு என்னலாமோ சொல்லிட்டு திரியுறதுல என்ன நியாயம் இருக்கு.

TTF Vasan
TTF Vasan

டி.டி.எஃப்.வாசன் குட்டிக்கதை

விஜய்யோட குட்டி ஸ்டோரிக்கு இன்னைக்கு பலரும் அடிமைனே சொல்லலாம். கடைசியா டி.டி.எஃப் வாசன் வெளியிட்ட வீடியோல, குட்டிக்கதை ஒண்ணு சொல்லியிருக்காரு. அதாவது அவரை எதுக்கெடுத்தாலும் குற்றம் சொல்றாங்கன்றதை கன்வே பண்றதுக்காக அதை சொன்னாரு. என்னனா, கழுதைய கூட்டிட்டு கணவன், மனைவி ஒரு இடத்துக்கு போனாங்களாம். மனைவி கழுதை மேல உட்கார்ந்தா, என்ன புருஷனை நடக்க வைச்சுட்டு அவ போறானு சொன்னாங்க. புருஷன் உட்கார்ந்தா, மனைவியே நடந்து போறா இவன் உட்கார்ந்து போறான்னு சொன்னாங்க. ரெண்டு பேரும் நடந்து போனால், கழுதை இருக்கும்போது ரெண்டு பேரும் நடந்து போறாங்கனு சொல்ற மாதிரிதான் என் கதையும் இருக்கு டி.டி.எஃபேனு சொல்லுவாரு. சரி, ஏற்கெனவே விஜய் கோவப்பட்டதையும் வாசன் கோவப்பட்டதையும் போட்டு ஓட்டிட்டு இருந்தாங்க. இப்போ, வாசனே செருப்புனு சொல்லி கண்டண்ட் எடுத்து கொடுத்துருக்காரு. முன்னாடி ஒரு மீம் போட்டாங்க. அதுக்குதான் நான் பதில் சொன்னேன். நான் தளபதி அண்ணாவை தப்பாலாம் பேசலைனு விளக்கம்லாம் கொடுத்துருக்காரு. அதேமாதிரி, இண்டர்வியூல எழுந்து போனதைதான் பார்த்தோம். அப்புறம் இண்டர்வியூ எடுத்த ஐயப்பன் இருக்காருல, அவருக்கு அவ்ளோ அட்வைஸ் பண்ணிட்டு போய்ருக்காரு. நான் அவங்க கேள்விக்கு நல்ல பதில் சொல்றேன். ஆனால், அவங்க அதை மழுப்புறாங்க. எல்லாத்தையும் சர்ச்சைகளா மாத்த முயற்சி பண்றாங்க மீடியானு என்னலாமோ சொல்லிருப்பாரு. மாமா வீட்டு கதையெல்லாம் இழுத்து விட்ருப்பாரு. மனசுக்குள்ள எவ்வளவு வேதனைகள் இருந்தாலும் என்னோட சிரிப்பு கம்மியாகாதுனு பாஸிட்டிவ் விஷயம் வேற. அவர் பேசுற எல்லா விஷயங்களும், மெச்சூரிட்டியே இல்லாமல்தான் இருக்கு. இதுனால, எதாவது சொல்லலாமா, வேணாமானுகூட தெரியலை.

Also Read – நம்ம பாலிவுட்-டுக்கு என்னதான் ஆச்சு?

கடைசியா என்னடா சொல்ல வர்றனு தான கேக்குறீங்க. இப்போ, நான் சொன்ன பாயிண்ட்லாம் வைச்சு பார்க்கும்போது, அவர் தளபதியை ஃபாலோ பண்றாருனு தோணலாம். அது உண்மையா இல்லையானு அவருக்குதான் தெரியும். ஆனால், பைக் விஷயங்கள், ஃபேன்ஸ் மீட் விஷயங்கள்லாம் அவர் பண்றது எல்லாமே நெகட்டிவாதான் இருக்கு. போற போக்க பார்த்தா அஜித் போட்டில இருந்து விலகி தளபதி Vs TTFனு வரும்போல. பைக் மேட்டர்கூட கனெக்ட் ஆகுது. இதெல்லாம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top