கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

அமெரிக்காவை 50 வருஷமா அலறவிடுற கூபர்.. தளபதி – வெங்கட் பிரபு படமா?

  • தளபதியோட The Greatest of All Time உண்மையான கதையா?
  • அமெரிக்காவையே அலற விட்ட டி.பி.கூபர்தான் விஜய் கேரக்டரா?
  • யார் இந்த டி.பி.கூபர்? 50 வருஷமா போலீஸ் இன்னும் தேடுறாங்க?
  • இப்போ டி.பி.கூபர் உயிரோட இருக்காரா? இல்லையா?
  • போலீஸ் தேடுற திருடனுக்கு எவ்வளவு ஃபேன் பேஸ் இருக்காங்க தெரியுமா?

The Greatest of All Time அமெரிக்க ஆஃபிஸர்ஸ் இன்னும் தேடிட்டு இருக்குற டி.பி.கூபர் கதையாதான் இருக்கும்னு சோஷியல் மீடியால முடிவே பண்ணிட்டாங்க. அந்த டி.பி.கூபர் கதைதான் என்ன?

டேன் கூபர்ன்றவரு 1971-ல போர்ட்லாண்டுல இருந்து சியாட்டிலுக்கு ஃப்ளைட் டிக்கெட் எடுக்குறாரு. ரொம்பவே சின்ன பயணம்தான். இன்னைக்கு வரைக்கும் அவரோட ஃபோட்டோகூட கிடைக்கலைன்றதால, விக்டிம்ஸ் சொன்ன.. 180 செமீ உயரம், 80 கிலோ, 40 வயசு, பிளாக் கோட், வொயிட் ஷர்ட் தான் அவரோட அடையாளமா இன்னைக்கு வரைக்கும் இருந்துட்டுருக்கு. அந்த விமானத்துல இவரைத் தவிர 36 பயணிகள் இருந்தாங்க. அதுபோக விமானப்பணிப்பெண்கள், பைலட்ஸ், ஃபளைட் இஞ்சினீயர்லாம் இருந்தாங்க. ஃப்ளைட் கிளம்புனதும் சிகரெட் பத்த வைச்சுட்டு, சாப்பிடலாம் ஆர்டர் பண்ணியிருக்காரு. அப்படியே அவங்க கையில பேப்பர் ஒண்ணு கொடுத்துருக்காரு. விமானப் பணிப்பெண் அதுல நம்பர்லாம் இருந்ததால ஃப்ளர்ட் பண்றாருனு நினைச்சுட்டு ஓப்பன் பண்ணாமல் இருந்துருக்காங்க.

Also Read – சூப்பர் ஸ்டாருக்கு ‘நோ’.. மக்களுக்காக இலவச மருத்துவமனை! நடிகர் கஞ்சா கருப்பு சறுக்கிய கதை!

கூபர் அவங்களைக் கூப்பிட்டு இதை நீங்க சீக்கிரம் திறந்து பார்க்குறது நல்லது, எங்கிட்ட பாம் இருக்குனு அமைதியா இன்ஃபார்ம் பண்னி அவங்கள பக்கத்துல உட்கார வைச்சு சூட்கேஸ்ல இருந்தத காமிச்சிருக்காரு. எனக்கு ரெண்டு லட்சம் டாலர் பணம், ரெண்டு பேராஷுட் வேணும், இதை பைலட்கிட்ட போய் சொல்லுனு அமிச்சிருக்காரு. அதெல்லாம் கிடைச்ச பிறகுதான் சியாட்டில்ல தரையிறங்க விடுவேன். இல்லைனா, பாம் வெடிக்கும்ன்றுக்காரு. போர்ட்லாண்டுல இருந்து சியாட்டிலுக்கு அரை மணி நேரம் ஆகும். போலீஸ், எஃப்.பி.ஐ எல்லாரும் வந்து டிமாண்டை கேட்டு பணம் கலெக்ட் பண்ணி அரேஜ் பண்றதுக்குள்ள ரெண்டு மணி நேரம் ஃப்ளைட் மேலயே பறந்துருக்கு. ஃப்ளைட் லேண்ட் ஆனப்பிறகு லைட்லாம் ஆஃப் பண்னனும்.. அப்போதா உள்ள என்ன நடக்குதுனு தெரியாதுன்றதும் கூபரோட ஆர்டர்.

சியாட்டில்ல அவர் கேட்ட மாதிரி பணமும் பாராசூட்டும் கிடைக்குது. உடனே 36 பயணிகள், விமானப்பணி பெண்கள் ரெண்டு பேரை விடுவிக்கிறாரு. அதுக்கப்புறம் புதிய கோரிக்கைகளை சொல்றாரு. மெக்சிகோ நோக்கி விமானம் போனும். 185 கி.மீ ஸ்பீடுல 3000 மீட்டருக்கு கம்மியா பறக்கணும்ன்றாரு. ரொம்ப தூரம் பறக்குறதால எரிபொருள் தீர்ந்த்போகும்னு விமானிகள் சொன்னதும் ரெனோல எரிபொருளை ஃபில் பண்ன அனுமதி கொடுக்குறாரு. எல்லாரையும் காக்பிட்ல போய் லாக் பண்ண சொல்றாரு. திடீர்னு எமர்ஜன்சியான சத்தம்லாம் கேக்குது. எதாவது உதவி வேணுமானு பைலட்ஸ் கூபர்கிட்ட கேக்குறாங்க. இல்லைனு கடுமையா தெரிவிக்கிறாரு. ஃப்ளைட் நிதானமா பறக்குது. ரெனோல தரையிறங்குது. அந்த நேரம் போலீஸ், எஃப்.பி.ஐ எல்லாரும் சுத்தி வளைக்கிறாங்க. உள்ள போய் தேடுனா யாரையும் காணோம். விமானத்துல இருந்து அவர் குதிச்சிருக்கதான் அதிகமான வாய்ப்புகள் இருந்துச்சு.

அமெரிக்கால தேங்க்ஸ் கிவிங் டேனு கொண்டாடுவாங்க. அதுக்கு முந்தின நாள் அவர் கொள்ளையடிக்க பிளான் பண்ணது மாஸ்டர் திங்கிங்க்னு அப்ப்போ சொல்லுவாங்க. ஏன்னா, நிறைய ஆஃபீஸர்ஸ் லீவ்ல போய்ருப்பாங்க. அவர் கொலம்புயா நதிக்கரை பக்கத்துல பாராசூட்ல இருந்து லேண்ட் ஆகியிருக்கலாம்னு சொல்லுவாங்க. பணம், பாராசூட்கூட ஃபில் பண்ணாத 20 டாலர் பில்ஸ் கேட்ருக்காரு. அதை அந்த பக்கத்துல இருந்து கண்டுபிடிச்சிருக்காங்க. அவருக்கு கொடுக்கப்பட்ட பணத்தோட சீரியல் நம்பர்ஸ்லாம் எங்கயும் இதுவரை கிடைக்கல. அவர் குதிக்கும்போது பாதுகாப்பா இல்லாத சூழல் இருந்துச்சு. அதுனால அவர் இறந்து போய்ருக்கலாம்னும் தியரி இருக்கு. அதுவும் கன்ஃபார்ம் கிடையாது. ஃப்ளைட்ல இருந்து ஏகப்பட்ட ரேகைகள் அவங்களுக்கு கிடைச்சுது. அதுனால எந்த பிரயோஜனமும் ஆஃபீஸர்ஸுக்கு இல்லை.

விஜய்யோட மிடில் ஏஜ் லுக், பாராசூட் ஃபஸ்ட் லுக், எஸ்கேப் ஆகுற மாதிரியான செகண்ட் லுக்லாம் பார்த்துட்டு கண்டிப்பா கூபர் ஸ்டோரிதான். வெங்கட்பிரபு இந்த வேலைலாம் பக்காவா படமா பண்ணுவாரு. அவர் அதை எடுத்தா செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு சொல்லலாம். இத்தனை வருஷமா ஆஃபீஸர்ஸுக்கு ஆட்டம் காட்டுற டி.பி கூபருக்கு பயங்கரமான ஃபேன் பேஸும் இருக்கு. அவர் ஃபோட்டோ போட்ட டிஷர்ட், காபி மக்லாம் எவர்கிரீன் சேல்ஸ்ல இருக்கும். ஏகப்பட்ட படங்கள் அவரோட கதையை, கேரக்டரை பார்ட்டா வைச்சு வந்துருக்கு. ரீசண்டா வந்த லோகி படத்துலகூட அவரோட ரெஃபரன்ஸ்தான் வரும். டாகுமெண்டரிஸும் நெட்ஃபிளிக்ஸ்ல இருக்கு. விஜய்யோட இந்த படம் கூபர் கதையா இருந்தால் எப்படி இருக்கும்னு மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க.

2 thoughts on “அமெரிக்காவை 50 வருஷமா அலறவிடுற கூபர்.. தளபதி – வெங்கட் பிரபு படமா?”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top