ஜெய்பீம் மணிகண்டன்

ஒரு கதை சொல்லட்டா சார்… ஜெய் பீம் மணிகண்டன் செம சினிமா ஜர்னி!

ஜெய் பீம் மணிகண்டன்-ஐப் பார்க்கும்போதுலாம் செம டேலண்டா இருக்காருல? நல்லா நடிக்கிறாரு.. மிமிக்ரி பண்றாரு.. ஸ்கிரிப்ட் எழுதுறாரு.. டயலாக்ஸ்லாம் வெறித்தனமா வருது.. சென்ஸிபிளா இருக்காருனு தோணும். அவரோட சினிமா ஜர்னிய எடுத்துப் பார்த்தா காலேஜ் படிக்கும்போதே டப்பிங் பேச தொடங்குனது, ஆர்.ஜே வேலைக்கு போனது, அஸிஸ்டெண்ட் டைரக்ட்ரா வொர்க் பண்ணது, ரியாலிட்டி ஷோல மிமிக்ரி ஆர்டிஸ்டா இருந்ததும் விக்ரம் வேதா படத்துக்கு டயலாக் எழுதுனது, ஜெய் பீம்ல பெர்ஃபாமரா கலக்குனதுனு செமயா இருந்துச்சு.

ஜெய் பீம் மணிகண்டன்
ஜெய் பீம் மணிகண்டன்

பொதுவா நடிகர்களை பார்த்து மிமிக்ரி பண்ண தொடங்குவாங்க. ஆனால், மணிகண்டன் அவங்க அம்மாவை பார்த்து மிமிக்ரி பண்ண தொடங்கியிருக்காரு. எதாவது ஃபங்ஷன் அவங்க வீட்டுல நடந்துச்சுனா, அவங்க அம்மாவை சுத்தி கூட்டமா உட்கார்ந்து, அவங்களை மாதிரி பேசுங்க, இவங்களை மாதிரி பேசுங்கனு சொந்த, பந்தங்கள் பெயரை சொல்லி கேப்பாங்களாம். அதை பேசுனதும் அப்படி அப்ளாஸ் விழுமாம். இதை பார்த்த மணிகண்டன், நம்மளும் சொந்தக்காரங்க மாதிரிலாம் பேசுனா கைதட்டுவாங்க போலயேனு மிமிக்ரி பக்கம் வராரு. அதுக்கப்புறம் நடிகர்களை மாதிரி மிமிக்ரிலாம் பண்றாரு. காலேஜ் படிக்கும்போது, மணிகண்டனோட ஃப்ரெண்டோட ஃபேமில உள்ளவங்க தெலுங்கு சினிமால டப்பிங் ஆர்டிஸ்ட்டா இருந்துருக்காங்க. அவங்ககூட இவர் ஸ்டுடியோக்குலாம் போய்ருக்காரு. அவங்கக்கிட்ட இவருக்கு தெரிஞ்ச குரல்லலாம் பேசி காமிச்சதும், அவங்க ஆச்சரியப்பட்டு, “நீ தெலுங்கு கத்துக்க, இங்க டப்பிங் ஆர்டிஸ்ட் அவ்வளவா இல்லை”னு பயங்கரமா என்கரேஜ் பண்ணியிருக்காங்க. அப்புறம் டப்பிங் ஆர்டிஸ்ட்டா பயணிக்க ஆரம்பிக்கிறாரு. எனக்கு தெரிஞ்சு கிஷோர் வாய்ஸ், டெல்லி கணேஷ் வாய்ஸ்லாம் அவ்வளவு பெர்ஃபெக்ட்டா பேசுற ஆள் மணிகண்டன்தான். ஹலிதா, சமுத்திரகனிகூட அந்த வாய்ஸ்லாம் பேச சொல்லி கேட்டுட்டே இருப்பாங்க. ரஜினி வாய்ஸ்கூட அப்படி பேசுவாரு. இப்போ, பேசுனா தலைவர் கேஸ் போட்ருவாரு. ரைட்டு அதை விடுங்க. இன்னொரு முக்கியமான விஷயம் மணிகண்டன் வெறித்தனமான லோகேஷ் கனகராஜ்க்கு டஃப் கொடுக்குற கமல் ஃபேன். எந்த அளவுக்குனா, அவரோட வாழ்க்கையவே, கமல் வாழ்க்கையைப் பார்த்துதான் டிசைன் பண்ணதா சொல்லுவாரு.

ஜெய் பீம் மணிகண்டன்
ஜெய் பீம் மணிகண்டன்

அர்ஜுன் ரெட்டி படத்தோட மியூசிக் டைரக்டரும் மணிகண்டனும் நண்பர்கள். ரெண்டு பேரும் எஃப்.எம்ல ஒண்ணா வேலை பார்த்துருக்காங்க. ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்குற அன்னைக்கு உட்கார்ந்து லைஃப் பத்தி பேசிட்டு இருந்துருக்காங்க. அப்போ, மணிகண்டன் அவரைப் பார்த்து நீங்களும் இதுமாதிரிலாம் வாங்குயானு சொல்ல, நீ என்ன பண்ணப்போறனு கேட்ருக்காரு. அதுக்கு மணிகண்டன், “நான் மிமிக்ரி ஆர்டிஸ்ட். என்னால என்னயா பண்ண முடியும்”னு சலிப்பா சொல்ல, இதோட நிறுத்தப்போறியானு அவரு கேள்வி கேட்ருக்காரு. உனக்கு நல்லா ஹியூமர் வருது சினிமாக்கு போய் எழுது, நல்லாவும் நடிக்கிறனு அவருக்குள்ள இருந்த கன்ஃபியூஷனை தெளிவுபடுத்தியிருக்காரு. அதுக்கப்புறம் வாய்ப்புகள் தேட ஆரம்பிக்கிறாரு. வாய்ப்புகள் கிடைக்கிறது கஷ்டம்ல? அப்படியே போகும்போது நாளைய இயக்குநர் வருது. நடிக்க நிறைய பேர் தேவைப்படுறாங்கனு தெரிஞ்சதும் போறாரு. அங்க இருந்து அஸிஸ்டெண்ட் டைரக்டரா வொர்க் பண்றாரு, சான்ஸ் கிடைக்குது, இன்னைக்கு முக்கியமான நடிகரா இருக்காரு. பிதாமகன் படம் பார்த்தது, அவருக்கு ரொம்ப தாக்கத்தை ஏற்படுத்திச்சுனு குறிப்பிடுவாரு. விக்ரம் அதுல இருக்குற மாதிரிதான் ரொம்பநாள் பிகேவ் பண்ணாறாம். அதேமாதிரி மிரர்க்கு முன்னாடி நின்னு நடிச்சு பயங்கரமா பிராக்டிஸ் பண்ணுவாராம். மிரர்தான் பெஸ்ட் கிரிட்டிக்னு சொல்லுவாரு. மணிகண்டன் எவ்வளவு சிறப்பான நடிகர்னு சொல்றதுக்கான எக்ஸாம்பிள், ஜெய் பீம் படம்தான். அவரோட கரியர் பெஸ்ட்னு இந்தப் படத்தை சொல்லுவாங்க. அவர்கிட்ட கேட்டா, எனக்கு பெர்சனலா முக்கியமான படம்தான் ஜெய் பீம்னு சொல்லுவாரு.

Also Read – சத்ரியனில் நடித்த விஷ்ணுவர்தன் எனும் நடிகன் இயக்குநரான கதை!

வாழ்க்கையைப் பத்தி மணிகண்டனுக்கு நிறைய புகார்கள் இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுனு கேட்ககூடிய ஆள். அப்படி இருக்கும்போது ஜெய் பீம் படத்துக்காக பழங்குடியின மக்கள்கூட பழகுறதுக்கான வாய்ப்பு அவருக்கு கிடைச்சுது. அவங்க வாழ்க்கையைப் பத்தின வியூவை மணிகண்டனுக்கு கொடுத்தாங்க அப்டினு சொல்லுவாரு. பெரிய வசதிகள் இல்லை, வாய்ப்புகள் கிடைக்கிறது கஷ்டம். ஆனால், கிடைச்சதை வைச்சு எப்படி சந்தோஷமா இருக்குறதுன்றதையும் வாழ்க்கையை எப்படி கொண்டாடுறாங்கன்றதையும் அங்கதான் கத்துக்கிட்டேன்னு சொல்லுவாரு. ராஜாக்கண்ணு கேரக்டராவேதான் செட்ல வாழ்ந்துருக்காரு. டே ஒண்ணுல இருந்து பழங்குடி மக்கள் எல்லாருமே, இவரை ராஜாக்கண்ணு வாங்க, போங்கனுதான் சொல்லி கூப்பிடுவாங்களாம். அதேமாதிரி, அங்க இருக்குற மக்கள் இவர்கிட்ட எங்கள மாதிரி நடிக்க உங்களுக்கு அசிங்கமா இருக்கானும்லாம் கேட்ருக்காங்க. எங்களை ஊருக்குள்ள விடமாட்டாங்க, வாடி, போடினுதான் சொல்லுவாங்க, கரெண்ட்கூட இன்னும் இல்லை. அதான் கேக்குறோம்னு சொல்லிருக்காங்க. ஆனால், இவரு நான் உங்கள்ல ஒருத்தனா நடிக்க ரொம்ப பெருமையா ஃபீல் பண்றேன். உங்க கஷ்டத்தை உலகமே பார்த்து தெரிஞ்சுக்கப்போகுதுனு சொல்லிருக்காரு. மணிகண்டன் கைய புடிச்சு அழுதுருக்காங்க. அதை அவரு சொல்லும்போதே ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. படம் பார்த்த எல்லாரும் அழுதுட்டாங்க. அதுக்கு முக்கியமான காரணம் அந்த மனிதர்களையும் பிரச்னையையும் புரிஞ்சு நடிச்சதுதான். ஸ்கிரிப் புரிதல், நடிகருக்கு எவ்வளவு முக்கியமானதுனு மணிகண்டன் நடிப்பைப் பார்த்தா புரியும். காலா படத்துலயும் செமயா நடிச்சிருப்பாரு. புரட்சிகரமான இளைஞர்கள் பரபரப்பா இருப்பாங்க. எல்லாத்துக்கும் கருத்து, போராட்டம்னு பேசுவாங்க. அதை அப்படியே தன்னோட நடிப்புல கொண்டு வந்துருப்பாரு. அப்புறம், சில்லு கருப்பட்டி. அந்தப் படத்துல இவரைப் பார்த்தாலே ஃபீல் குட்டான ஃபீல் ஒண்ணு வரும்.

ஜெய் பீம் மணிகண்டன்
ஜெய் பீம் மணிகண்டன்

மணிகண்டனை நடிகனா இன்னைக்கு நிறைய பேருக்கு புடிக்கும். ஆனால், அதுக்கு முன்னாடியே டயலாக் ரைட்டரா நிறைய பேருக்கு புடிக்க ஆரம்பிச்சிடுச்சு. அருண்ராஜா காமராஜா படங்கள்ல, ஆரம்ப காலத்துல டயலாக்ஸ் எழுதி விருதுலாம் வாங்கியிருக்காரு. அதைப் பார்த்து நிறைய பேருக்கு இவரோட டயலாக்லாம் புடிச்சுப்போய் படங்கள்ல வொர்க் பண்ண கூப்பிட்ருக்காங்க. முதல்ல பீட்சா 2 படத்துக்குதான் வசனங்கள் எழுதுனாரு. காதலும் கடந்து போகும் படம் தான் நடிகரா இவருக்கு முதல் படம், அதுல நடிக்கும் போது விஜய் சேதுபதிகூட செம க்ளோஸ் ஆயிட்டாரு. அவரு என்னலாம் பண்றீங்கனு விசாரிக்கும்போது, டயலாலாம் எழுதிட்டு இருந்தேன்னு சொல்லியிருக்காரு. அப்போ அவருக்கு புடிச்சுப்போய், விக்ரம் வேதா டீம்கிட்ட விஜய் இண்ட்ரோ பண்ணி வைச்சிருக்காரு. புஷ்கர் – காயத்ரி இவரு ஸ்கிரிப் அனலைஸ் பண்றதுலாம் பார்த்துட்டு டயலாக்ஸ் எழுத சொல்லியிருக்காங்க. இண்டர்வெல் வரைக்கும் எழுதிட்டு வந்து மாதவன், விஜய் சேதுபதி வாய்ஸ்லயே பேசி காமிச்சுருக்காரு. ரொம்ப புடிச்சதும் நீங்களே ஃபுல்லா எழுதுங்கன்றுக்காங்க. வால் இருக்குதுன்றதுக்காக எலியும் பூனையும் ஒண்ணாய்டுமா வசனம்லா இவர் எழுதுனதுதான். ஆனால், ஒரு கதை சொல்லட்டா வசனம் ஸ்கிரிப்ட்ல ஆல்ரெடி இருந்தது. பஞ்ச தந்திரம்ல காத்தாடிக்குகூடதான் வால் இருக்கு. அதுக்காக குரங்கு பறக்குமானு டயலாக் ஒண்ணு இருக்கும். அதைதான்  இன்ஸ்பிரேஷனா வைச்சு, இந்த டயலாக்லாம் எழுதியிருக்காரு. விஸ்வாசம் படத்துலயும் நிறைய டயலாக்லா இவர் எழுதுனதுதான். தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் படங்கள்லயும் இவர் டயலாக்ஸ் வேறமாறி எழுதியிருப்பாரு.

நான் பார்த்து மிரண்ட வசனகர்த்தா மணிகண்டன்னு சமுத்திரகனி சொல்லுவாரு. வார்த்தைக்காக மட்டும் இல்லை. உண்மையிலேயே மணிகண்டனோட பேட்டிலாம் ரொம்ப சென்ஸிபிளா இருக்கு. அவரோட ஆசை என்னனு கேட்டாம் அனிமேஷன் ஃபிலிம் மேக்கர் ஆகணும்னு சொல்லுவாரு. எல்லா துறைலயும் கலக்குற மணிகண்டனுக்கு அந்த ஆசையும் விரைவில் நிறைவேறும்னு நம்புவோம். மணிகண்டன் வசனம் இல்லைனா படங்கள்ல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top