சுனில்

`ஜெயிலர்’ முத்துவேல் பாண்டியனுக்கு வில்லன்… யார் இந்த சுனில்?!

ஜெயிலர் வில்லன் சுனில் சினிமா பயணம் எங்க தொடங்குச்சு தெரியுமா… சினிமா ரெண்டுவிதமான மாற்றங்களைக் கொடுக்கும். ஒன்று ஏற்றம், இரண்டாவது இறக்கம். இறக்கத்தின் கோரமுகம் கொஞ்சம் கொடூரமானதாகவே இருக்கும். அதுக்கு இன்னைக்கு சரியான உதாரணமா சொல்லணும்னா, நடிகர் ஜெகபதி பாபுவைச் சொல்லலாம். ப்ரோ அவர் வில்லன் நடிகர்தானே எல்லோரும் நினைக்கலாம். ஆனா, ஒருகாலத்துல ஆந்திர பாக்ஸ் ஆபீஸை அலறவிட்ட முக்கியமான ஹீரோ ஜெகபதிபாபு. சினிமா கரியரோட உச்சத்துல இருந்தப்போ அவர் பண்ண சில தவறான முடிவுகளால இன்னைக்கு அப்பா, வில்லன்னு ரோல்கள் பண்ணிட்டிருக்கார். இது மாதிரி உதாரணம் தமிழ்லயும் சொல்ல முடியும். ஆனா அதுல இருந்து மீண்டு வர்ற ஆட்கள் கொஞ்சம் பேர்தான். அவங்கள்ல ஒருத்தர்தான் தெலுங்கு நடிகர் சுனில். புஷ்பாவில் வில்லனா மிரட்டின சுனிலுக்கு, ஹீரோ, டான்சர், காமெடியன்னு பல பக்கங்கள் இருக்கு. அதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.  

சுனில்
சுனில்

சுனில் – ஆரம்பமே அதகளம்!

சுனில் நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர். அவர் நடனத்தைப் பார்த்து நடன கலைஞராக ஆகணும் ஆசைப்பட்டார். அந்தந்த வட்டார போட்டிகள்ல கலந்துக்கிட்டவர் நடனத்துக்காக பரிசுகளையும் வாங்குறார். அப்போ இவரோட திறமையைப் பார்த்த இவரோட டீச்சர் கலைத்துறையிலயே டிகிரி படிச்சிடுனு அறிவுரை சொல்ல, அதுல பட்டமும் வாங்குறார். அடுத்ததா மேடை நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிக்கிறார். ஆனா இவரோட உடல்பருமனான தோற்றம் இவருக்கு பெரிய தடையா நிற்க பலரும் ரிஜக்ட் பண்ண ஆரம்பிக்கிறாங்க. ஓகே நாம சினிமாக்கு போலாம்னு வர்றார். ஐதராபாத்ல இருந்த டான்ஸ் ஸ்கூல்ல ஜாய்ன் பண்றார். அங்க இருந்துக்கிட்டே சினிமாக்கு டிரை பண்றார். இவரை பலபேர் நடிக்க கூப்பிடுறாங்க. அங்கதான் ஒரு ட்விஸ்ட், இவர் ஆசைப்பட்டது வில்லன் ரோல், ஆனா அழைப்பு வந்தது காமெடி ரோலுக்கு. சரித்தான் போவமேனு ஒருகட்டத்துல முடிவு பண்ணி இறங்குறார். முதல் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. என்னடா டான்ஸ் மாஸ்டர் ஆகணும்னு வந்தா நடிக்க கூப்டாங்க. வில்லன் ரோல் வேணும்னா காமெடி ரோல் கூப்டாங்க. அதுவும் பாதியில நிற்குதுனு ரொம்பவே இக்கட்டான சூழல்ல தவிச்சார், சுனில். அடுத்ததா சிறுநவ்வுட்டோ, நுவ்வே காவாலி படங்கள்ல கமிட்டானார். அதில் நுவ்வே காவாலி படம் முதலில் வெளியானாது. 20 வயசுல அறிமுகமான படத்துல கவனம் ஈர்த்தது, அந்த காதாபாத்திரம். 2000 வருஷத்துல ரெண்டு படத்துல நடிச்சவர், அடுத்த வருஷம் 5 படங்கள்ல நடிச்சார். ஆனா 2002-ம் வருஷம் காத்திருந்தது அந்த ஆச்சரியம், மொத்தமா 19 படங்கள் ரிலீஸ். காமெடி நடிகராவும், குணச்சித்திர நடிகராகவும் அப்போவே உச்சம் தொட்டிருந்தார், சுனில். ஆனா அந்த உச்சம் 2009 வரைக்கும் தொடர்ந்துகிட்டுத்தான் இருந்தது. கமிட்டான படங்கள் எல்லாம் 10-க்கும் மேலதான் இருந்தது. 10 வருஷத்துல அவர் நடிச்சு முடிச்சிருந்தது 158 படங்கள். அப்போதான் அந்த சம்பவம் நடந்தது.

ஹீரோ ஆசை!

 2006-ல் ‘ஆண்டாலா ராமுடு’ங்குற படம் மூலம் முதல்முறையாக ஹீரோவாக களமிறங்கினார். தமிழில் லிவிங்ஸ்டன் வெளியான சுந்தர புருஷன் படத்தின் ரீமேக் அது. படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுத்து 12 கோடி வசூல் செய்தது. ஹீரோவா நடிச்ச முதல்படமே தெலுங்கு திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார், சுனில். அடுத்ததா ஹீரோவாத்தான் நடிப்பேன்னு சொல்லாம, காமெடியனாவே மறுபடியும் வலம்வந்தார். அடுத்ததாக அவருக்கு ஹீரோவா  கைகொடுத்தது ‘பாகுபலி’ புகழ் ராஜமவுலி. மகதீரா முடிச்ச கையோட அடுத்ததா சுனிலை வச்சு, `மரியாதை ராமண்ணா’னு பெயர் வச்சு கதையை நகைச்சுவை பின்னணியில எடுத்திருப்பார். 2010-ல் வெளியான இந்தப் படம் சுனிலின் முதல் படத்தைவிட பிரம்மாண்ட வெற்றி பெற்றது. குறிப்பா டான்ஸ்ல பட்டையைக் கிளப்பியிருந்தார். இந்த படம் கொடுத்த தெம்புலதான் அடுத்தடுத்து படங்கள் நடிக்க ஆரம்பிச்சார். ஆனா பெரிசா எதும் கைகொடுக்கலை.

சுனில்
சுனில்

சறுக்கலும், புஷ்பா தி ரைஸும்!

 அடுத்ததா ராம் கோபால்வர்மாகூட கதா ஸ்கிரீன்ப்ளே தர்ஷக்தவம் அப்பலராஜு படம் சுமார் ரகம், அடுத்ததா வெளியான ‘மிஸ்டர் பள்ளிகொடுக்கு’ படம் மிகப்பெரிய ப்ளாப்பைக் கொடுக்க முக்கிய கதாநாயகர்களும் இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் போக ஒரு கட்டத்தில் 2015-ம் ஆண்டு ஒரு படத்தில்கூட நடிக்காமல் போனார் சுனில். கிட்டத்தட்ட காணாமல் போனார்னே எல்லா பத்திரிக்கைகளும் எழுதின. ஹீரோவாக மட்டும் நடிக்கும் எண்ணத்தை கைவிட்டு மற்ற நடிகர்கள் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கினார். மறுபடியும் வாழ்க்கையை வருடத்துக்கு 3 படங்கள் என ஆரம்பித்தார். அடுத்து 5, 3, 4 என தடுமாறி எழுந்தவரை, புஷ்பா தி ரைஸ் எனர்ஜி பூஸ்ட் கொடுத்து மீண்டும் சிம்மாசனத்தில் அமர வைத்தது. புஷ்பாவில் சுனில் காட்டிய உடல்மொழி  அதுவரை ஆந்திர சினிமா ரசிகர்கள் பார்க்காத உடல்மொழி. புஷ்பாவிற்கு பின் அடுத்த வருஷம் 13 படங்கள் ரிலீஸ். சிரஞ்சீவி, பவன் கல்யாண் படங்களில் கேமியோரோல் பண்ற அளவுக்கு பிசியான நடிகரா நடிச்சுக்கிட்டிருக்கார். புஷ்பாவில் காட்டிய உடல்மொழி, தமிழில் ஜெயிலர், ஜப்பான் படங்கள் வரை தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என எல்லோரும் நினைத்த சுனிலோட கெரியர் திடமான குணச்சித்திர, வில்லன் ரோல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவின் ஆரம்பத்தில் தான் ஆசைப்பட்ட வில்லன் ரோல்கள் இன்று 20 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது.

சறுக்கினது இங்கதான்!

 சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சுனில் ஹீரோவா தோல்வியடைஞ்சதுக்குக் காரணம் அவர்கிட்ட திறமை இல்லைங்குறதால இல்ல. குறிப்பா சொல்லப்போனா, தெலுங்குல மற்ற ஹீரோக்களைவிட நல்ல டான்சர் சுனில். அதோட நகைச்சுவை திறனும் இவருக்கு இருந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து இவர் படங்களைப் பார்த்தாங்க, பார்க்க தயாராவும் இருந்தாங்க. ஆனா மரியாத ராமண்ணாவுக்குப் பின்னால இவர் எடுத்துக்கிட்ட கதைகள் சரியா இல்ல. பல நேரங்கள்ல சரியான இயக்குநர்கள்கூட சேராம இவர் கைவிட்டதும்தான் சறுக்கலுக்கு முக்கியமான காரணம்.

Also Read -தமிழ் சினிமாவில் வசீகரித்த லவ் புரபோசல் சீன்கள்!

தைரியமான முடிவு!

தற்போது மீண்டும் துணிந்து ஹீரோ அவதாரத்தை எடுத்திருக்கிறார். ‘புஜ்ஜி… இல ரா’ படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் வணிகரீதியான நல்ல வெற்றி. இதையடுத்து தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸை அடித்து ஆடும் சூழலில் ஹீரோ கதைக்களத்தை நம்பாமல், கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ஹீரோ, குணச்சித்திர வாய்ப்பை மட்டும் ஏற்கும் முடிவில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

சுனிலின் பலம்!

 சுனிலுக்கு நகைச்சுவை, நடனம், ஆக்‌ஷன் என எல்லா ஏரியாவிலும் கில்லி. கதை மட்டும் சரியாக அமைந்துவிட்டால் சக்சஸ்தான் சுனிலுக்கு. கூடவே வில்லன் ஏரியாவிலும் ரவுண்ட் வர ஆரம்பிச்சிருக்கார். இந்த டிரான்ஸ்பர்மேஷனும் சுனிலுக்கு பலம். இவர் நடிக்கிறப்போ கண் அசைவோட சேர்த்து பாடிலாங்வேஜூம் மூவ் ஆகும். இது மிரட்டுற தோரணையிலும் சரி, காமெடி தோரணையிலும் சரி இந்த மேஜிக் ஒண்ணாவே இருக்கும். இதுதான் இவரோட ஆஸ்தான பலம்.

எனக்கு இவரோட நடிப்புல ரொம்ப பிடிச்சது, புஷ்பா மங்கலம் சீனு கேரெக்டர்தான். உங்களுக்கு என்ன கேரெக்டர் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top