அசால்ட் சேது

ஜிகர்தண்டா `அசால்ட் சேது’ தமிழ் சினிமாவுக்கு ஏன் முக்கியம்… 3 ரீசன்கள்!

`சேது தோத்துட்டா, இந்தப் படத்துல இருக்க எல்லாருமே தோத்துடுவாங்க. இந்தப் படம் தோத்துச்சுன்னா, என் லைஃப் கண்டிப்பா போச்சு… ஆனா, எதிர்காலத்துல நடிகரா நீ பொழச்சுக்குவ…’ – ஜிகர்தண்டா கதை சொல்லிட்டு நடிகர் பாபி சிம்ஹாகிட்ட டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன வார்த்தைகள் இவை.. ஆனா, ஜிகர்தண்டா ரிலீஸாகி படைச்ச சாதனைகளும் அசால்ட் சேது பண்ண மேஜிக்கையும் தமிழ் சினிமா என்னிக்கும் மறக்காது. அசால்ட் சேது ஏன் தமிழ் சினிமாவுல முக்கியமான கேரக்டர்ங்குறதுக்கான 3 ரீசன்களைப் பார்க்கலாமா?

கேரக்டர் ஆர்க்

தமிழ் சினிமாவில் பெஸ்ட் கேரக்டர் ஆர்க் கொண்ட வில்லன்கள் வரிசைல நம்ம அசால்ட் சேதுக்கு முக்கியமான இடம் உண்டு. சின்ன வயசுல இருந்தே பெரிய ரவுடியாகணும்னு கனவு, ஆசை, லட்சியத்தோட திரிஞ்ச பையன். அவருக்கும் நடிப்புக்குமான கனெக்‌ஷனுக்கும் சின்ன வயசு ரெஃபரென்ஸும் இருக்கும். ஒரு நாடகத்தில் மற்றவர்கள் தன்னை பார்த்து சிரிக்கத் தொடங்கவும் அவர்களை சின்ன வயசு சேது அடிக்க ஆரம்பிப்பாரு. அங்க இவரோட நடிப்பு ஆசை முடிஞ்சு, வயலன்ஸ் சேப்டர் தொடங்கும்.

பின்னாட்கள்ல மிகப்பெரிய கேங்ஸ்ட்ரா உருவெடுத்த பிறகும் அந்த ஈகோதான் அவரை வழிநடத்தும். ஒரு கட்டத்துல சேதுவை ஏமாத்தி கார்த்திக் சுப்ரமணியம், `அ.குமார்’ படத்தை எடுத்து ரிலீஸும் பண்ணிடுவார். ஆரம்பத்துல தன்னைப் பார்த்து இப்படி எல்லாரும் சிரிக்குறாங்களேனு பயங்கர கோபமாகும் சேது, தன்னால் கொல்லப்பட்ட ரவுடியின் மகளும் அவரின் மனைவியும் படம் குறித்து பேசிய பிறகு கள எதார்த்தத்தைப் புரிந்துகொள்வார். நீண்ட நாட்களாகப் பேசாத அம்மா, பேசியதும் அவருக்குள் இருந்த இன்னசென்ஸை மீண்டும் எட்டிப் பார்க்க வைக்கும். கிளைமேக்ஸில் சேது அண்ட் கோவுக்குப் பயந்து ஓடி ஒளிந்திருக்கும் கார்த்திக் சுப்ரமணியம், எதிர்பாராதவிதமாக நேரில் சிக்கவும், தன்னுடைய யூஷூவல் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார் சேது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கிளைமேக்ஸில் குழந்தைக்கு சேது எனப் பெயர் வைப்பதில் இந்த கேரக்டர் ஆர்க் கச்சிதமான ப்ரீக்குவலை எட்டும்.

`நாளைய இயக்குநர்’ டைம்ல தன்னோட படங்கள்ல ஹீரோவா நடிச்சிருந்த விஜய் சேதுபதி பாபி சிம்ஹா ரெண்டு பேரையுமே அசால்ட் சேது கேரக்டர்ல நடிக்க வைச்சிருப்பாரு கார்த்திக் சுப்புராஜ்.

கேரக்டர் டிரான்சிஸன்

ஜிகர்தண்டால இன்ட்ரோ சீன்ல இருந்து இன்டர்வெல் பிளாக் வரைக்கும் இருக்க அசால்ட் சேதுவோட கேரக்டர், இன்டர்வெல்லுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாறத் தொடங்கிரும். ஒரு மாதிரியான சைக்கோனு ஃபர்ஸ்ட் ஹாஃப்ல சொல்லப்படுற அவர், செகண்ட் ஹாஃப்ல மொத்தமா வேற ஒரு உலகத்துல டிராவல் பண்ணிட்டு இருப்பாரு. `எதுக்கெடுத்தாலும் அடி; எவனைப் பார்த்தாலும் அடி’னு சொல்லிட்டு கெத்து காட்டுற அசால்ட் சேதுவும், மணிரத்னம் நம்பர் இருக்கானு சொல்ற சேதுவும் ஒரே ஆள்தான்னு நம்ப வைக்குற மாதிரி அந்த கேரக்டரோட பரிமாணம் மாறியிருக்கும். அதுக்கு கார்த்திக்கோட ஸ்கிரீன்பிளேவும் பாபி சிம்ஹாவோட நடிப்பும் ரொம்ப ரொம்ப முக்கியமா இருந்திருக்கும். கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்களேன் நாயகன் ஃபர்ஸ்ட் ஹாப்ல மாஸ் பண்ணிருந்த வேலு நாயக்கர் செகண்ட் ஹாஃப்ல காமெடி பண்ணிட்டு இருந்தா என்ன ஆகியிருக்கும். ஆனா, இந்த டிரான்சிஸன்தான் அசால்ட் சேது கேரக்டரோட வெற்றி.

`அசால்ட்’ சேது

ஒரு படத்துக்கு எந்த அளவுக்கு பேர் முக்கியமோ அதே அளவுக்கு கேரக்டர்களோட பேரும் ரொம்பவே முக்கியம். அந்த வகைல பார்த்தா அசால்ட்’ சேதுங்குற பேரே அந்த கேரக்டரோட ஒரு மாஸ் விசிட்டிங் கார்டுதான். அதுக்கேத்த மாதிரியே போலீஸ் ஆபிஸர் கொடுக்குற பீடிகை, மதுரைல போய் கார்த்திக் இறங்குன உடனே நடக்குற சம்பவங்கள்னு கேரக்டருக்கு அவ்ளோ வெயிட் ஏத்திருப்பாங்க. ஃபவர்புல் வில்லன்கள்ங்குற யுனீக் வரிசைல ஜிகர்தண்டா இடம்பிடிக்க இது முக்கியமான காரணம்.அசால்ட் சேது மாதிரியான கேரக்டர்லாம் ஒருத்தரைத் தேடி வராது. அது எங்கேயோ இந்த யுனீவர்ஸ்ல இருக்கும். அது பாபி மாதிரியான ஆட்களுக்கு லைஃப்டைம் ரோல்’னு கோ ஆக்டர் சித்தார்த் சொல்லிருப்பார். அதேமாதிரி, கதையைக் கேட்ட உடனே டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்கிட்ட தன்னோட ரோலுக்கு ஓக்கே சொன்ன சித்தார்த், மறக்காம சொன்ன இன்னொரு விஷயம், `சேது கேரக்டரை மட்டும் வெயிட்டா புடி. அது கொண்டுபோய்டும் இந்தப் படத்தை..’ங்குறதைத்தானாம்.

ஜிகர்தண்டா படத்தோட ஃபர்ஸ்ட் சீனே ஒரு தியேட்டர்ல மலர்ந்தும் மலராத பாட்டு பின்னணில ஓடிட்டு இருக்க மாதிரிதான் தொடங்கும். அசால்ட் சேதுவை சுத்தி வளைச்சு சுடுவாங்க. அதுக்கான காரணம் கிளைமேக்ஸ்ல ரிவீல் பண்ணுவாங்க. அந்த சீன்ல சிவாஜியோட முகத்துல கேமரா சில நொடிகள் எக்ஸ்ட்ரா நிக்கும். அந்தப் பின்னணில… `மதுரை நகர் கண்டு..’ன்ற வரிக்குப் பிறகுதான் கதை விரியத் தொடங்கும். அதேமாதிரி அந்தப் பாடல் கார்த்திக்கின் குடும்பத்தில் இருக்கும் பலருக்கும் ஃபேவரைட்டான பாடல் என்பதால் சென்டிமென்டாகவும் அதை வைத்திருக்கிறார்.

அசால்ட் சேது கேரக்டர் முக்கியம்னு நீங்க ஏன் நினைக்குறீங்க… அதுக்கான காரணத்தை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top