டைரக்டர்ஸ்

ஆமால்ல.. ஹேட்டர்ஸ் இல்லாத டைரக்டர்ஸ் இவங்கதான்!

ஹேட்டர்ஸ் இல்லா டைரக்டர்ஸ் | திருவள்ளுவர், கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், புத்தர், டார்வினை எல்லாம்தான் முன்னாடி ஃபிலாசபர்ஸா கொண்டாடிட்டு இருந்தாங்க. ஆனால், இன்னைக்கு ஹெச்.வினோத், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ், தியாகராஜ குமாரராஜா, ராம், வெற்றி மாறன், சுதா கொங்கரா, வெங்கட் பிரபுனு சினிமா டைரக்டரஸைதான் நம்ம ஆள்கள் ஃபிலாசபர்ஸா கொண்டாடிட்டு இருக்காங்க. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.  யோசிச்சுப் பார்த்தா இவங்களுக்கு அதிகளவில் ஹேட்டர்ஸும் இல்லை. இவங்க சொல்ற தத்துவங்கள், ஏன் இவங்களுக்கு ஹேட்டர்ஸ் இல்லை? இதெல்லாம் இந்த வீடியோல பார்க்கலாம்.

இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கின்

ஹேட்டர்ஸ் இல்லா டைரக்டர்ஸ்

* ஸ்கிரிப்ட் எழுதணும், படம் பண்ணனும்னு நினைச்சா கிளம்பி வந்துடணும். அதுக்கப்புறம் நடக்குறதெல்லாம் ரெண்டாவது பார்த்துக்கலாம். என்னைக்கு அட்வைஸ் கேட்க ஆரம்பிக்கிறீங்களோ, அன்னைக்கு எதுவும் பண்ண முடியாது. நம்ம பண்றது நம்ம கையில தான் இருக்கு. யாரும் நம்மள தடுக்கப்போறதும் இல்லை, தள்ளிவிடப் போறதும் இல்லை.

* படிக்கும்போது எல்லாமே ட்ரீமா இருக்கும். வேலைக்கு போய் சம்பாதிக்கும்போதுதான் ரியாலிட்டு அடிக்கும். அப்போதான் ட்ரீமுக்கும் ரியாலிட்டிக்குமான டிஸ்டன்ஸ் நம்ம வேலை செய்யும்போதுதான் தெரியும்.

* நரகத்துலயோ, சொர்க்கத்துலயோ கக்கூஸ் போகும்போது எப்படி இருக்கும்னு எனக்கு தெரியல. அதுக்குள்ள நான் போக விரும்பல. எனக்கு அதுல நம்பிக்கை இல்லை. இதுவே போர் அடிக்குது. அதுக்கப்புறம் போய் வாழ்ந்து..லாஜிக்கே கிடையாது. போர் அடிக்குது. கடவுளே வந்தாலும், “40 வயசுல எனக்கு போர் அடிக்குது. பல கோடி ஆண்டுகளா வாழ்றியே உனக்கு போர் அடிக்கலயானுதான் கேப்பேன்”.

* எனக்கு என்ன இருக்கோ அதை வைச்சு நான் ஹேப்பியாதான் இருக்கேன். எதுவுமே இல்லைனாலும் பரவால்ல. கல் மாதிரி ஒரு இடத்துல சும்மா உட்கார வைச்சாலும் அங்கயே இருப்பேன். பர்டிகுலரா எந்தவித எய்மும் இல்லை. அப்படியே போற போக்குல போவேன். வேலை செய்யும்போது இண்ட்ரஸ்டிங்கா செய்வேன்.

* மரத்துக்கும் நமக்கும், குருவிக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குறதா நினைக்கிறோம். அவங்க எல்லாம் நாம சொல்றதை கேப்பாங்கனு நினைக்கிறோம். ஆனால், அப்படிலாம் இல்லை. புல்லுக்கும் மரத்துக்கும் குருவிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. எதைப் பத்தியும் அக்கறை படாத ஒண்ணுதான் இயற்கை. அதோட ஒரு துளிதான் நாம.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

* எல்லாருமே நல்லவங்கதான். எல்லாரும் கெட்டவங்கதான். சூழ்நிலைதான் நம்மள அங்க நிக்க வைக்குது.  

ச்சே.. எவ்வளவு அழகான விஷயங்கள் இல்லை? இதெல்லாம் நான் முன்னாடி சொன்ன டைரக்டர்ஸ் நிறைய இண்டர்வியூக்கள்ல சொன்னதுதான். இவங்களைப் பத்திலாம் நிறைய கலாய்க்கிற மாதிரியான மீம்ஸ் வரும். ஆனால், இவங்க சொல்ற விஷங்களை யாரும் எதிர்த்துலாம் பேச மாட்டாங்க. இவங்களோட தீவிர ஃபேன்ஸா இருக்குறவங்கதான் அந்த மீம்ஸையும் போடுவாங்க. காரணம் என்னனா, இவங்க சொல்ற விஷயம் எல்லாம் நம்ம லைஃப் ரியாலிட்டியோட இசைந்து போற மாதிரி இருக்கும். இல்லையா, நம்ம கனவு உலகம்னு ஒண்ணு இருக்கும்ல, அந்த உலகத்துல நாம வாழ்ற கேரக்டரோட ஒத்துப்போறதா இருக்கும். சரி, இவங்களுக்கு ஏன் பெருசா ஹேட்டர்ஸே இல்லை?

ரோல்.. கேமரா.. ஆக்‌ஷன்.. கட்!

லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத், மிஷ்கின்,  தியாகராஜ குமாரராஜா, ராம், வெற்றி மாறன், சுதா கொங்கரா, வெங்கட் பிரபு – இவங்கலாம் எப்பவும் மோஸ்ட் வான்டட் தமிழ் டைரக்டர்ஸ்தான். தங்களுக்குப் பிடிச்ச நடிகர் இவங்ககூட ஒரு படம் பண்ணிடணும்னுதான் ஒவ்வொரு தடவையும் அந்த பெரிய நடிகர்களின் படங்களோட அனௌன்ஸ்மென்ட் வரும்போது நினைப்பாங்க. அதுக்கு காரணம் அவங்க எடுத்த படங்கள். இவங்களை நிறைய பேருக்கு புடிக்கிறதுக்கு முதல் காரணமுமொ இவங்க டைரக்ட் பண்ண படங்கள்தான். ஒவ்வொருத்தருக்கும் கதை எழுதுறதுல இருந்து ஃப்ரேம் வைக்கிறது வரைக்கும் யூனிக்கான ஸ்டைல் இருக்கு. அந்த ஸ்டைல் எப்பவும் ரசிகர்களை ஏமாத்துனது இல்லை. அதுனாலதான், இவங்களுக்கு பெருசா ஹேட்டர்ஸ் யாரும் இல்லை.

இயக்குநர் ஹெச்.வினோத்
இயக்குநர் ஹெச்.வினோத்

– லோகேஷ் படங்கள்ல எதோ ஒரு வகையில் மக்களோட மனசை சென்டிமெண்ட் சீன் வைச்சு டச் பண்ணி, ஆக்‌ஷன் தெறிக்க தெறிக்க எழுதி, மாஸ் கூட்டி அவரோட படங்களை புடிக்க வைச்சிடுறாரு.

– ஹெ.வினோத், மக்கள் எப்படிலாம் ஏமாத்தப்படுறாங்கன்றதை டேட்டாவோட எடுத்து கதையை ஷார்ப்பா செதுக்கு மக்களுக்கு கொடுக்குறாரு.

– உலகத்துல எல்லாருக்கும் பிரச்னைகள் இருக்கு, வன்முறைகள் நடக்குது. பேரன்பை பாருங்க, பேய்கிட்டகூட அன்பு கிடைக்கும்னு அன்பை பேசி மிஷ்கின் படம் எடுக்குறாரு.

– தியாகராஜா குமாரராஜா, ஃபேன்டஸிக்குள்ள கூட்டிட்டுப் போய் நிறைய கதைகளை மட்டும் நம்ம கண் முன்னாடி காமிச்சு. ஒரு ப்ளஷரை ஃபீல் பண்ண வைச்சுடுறாரு.

– உலகமயமாக்கல்ன்ற பிரச்னையை சினிமால எல்லாருக்கும் புரியும்படி பேசுறது ராம்தான். கல்வில இருந்து கலவி வரைக்கும் எல்லாத்தையும் பேசி ராம் விவாதத்தை கிளப்ப வைச்சிடுறாரு.

இயக்குநர் சுதா கொங்கரா
இயக்குநர் சுதா கொங்கரா

– அதிகாரம் நம்மளை அடக்கிச்சுனா, திருப்பி அடிக்கணும்னு சொன்னது வெற்றிமாறன். பாதிக்கப்பட்டவங்க சார்பா நின்னு படம் எடுத்து ஒடுக்குறவங்களை கலங்க வைக்கிறது இவர் ஸ்டைல்.

– வாழ்க்கைல இதுதான் பண்ணப்போறேன்னு முடிவு பண்ணிட்டேன்னா, அடிச்சு நாக் அவுட் பண்ண சொல்றது சுதா கொங்கரா ஸ்டைல்.

– வாழ்க்கைனாலே ஜாலியா இருக்குறதுதான், எஞ்சாய் பண்ணுங்கடானு வெங்கட் பிரபுவோட ஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது தோணும்.

இப்படி எதாவது புதுசா பண்ணி அவங்களோட படங்களை புடிக்க வைச்சு. பெருசா ஃப்ளாப்பும் கொடுக்காம என்கேஜ் பண்ணிடுறாங்க. பொலிட்டிகலியும் நிறைய மிஸ்டேக்ஸ்களை இவங்க படங்கள்ல பண்றதில்லை. அதுனாலயே, இவங்க ஃபேனா நாம மாறிடுறோம்.

Also Read – பாலைவனத்துல மழை பார்த்துருக்கீங்களா… மலையாள படங்களின் ஃபீல்குட் சீன்கள்!

இன்டர்வியூ ஃபேன் பேஸ்

இன்னைக்கு படங்கள்ல மட்டும் ஸ்ட்ராங்கான கருத்துகளை பேசுனா போதாது. இன்டர்வியூலயெல்லாம் அந்த கருத்துக்கு நேர்மாறா பேசுனாலோ, இல்லை எதாவது உளறுனாலோ அவ்வளவுதான். சோஷியல் மீடியால சைட் டிஷ் ஆக்கிடுவாங்க. அந்த வகையில், நான் மேல சொன்ன டைரக்டர்ஸ் எல்லாரும் தங்கள் இண்டர்வியூக்கள்ல ரொம்பவே தெளிவா, ஸ்ட்ராங்க பேசுவாங்க. ஒவ்வொருத்தரோட இண்டர்வியூக்கும் தனியான ஃபேன் பேஸ் இருக்கு.

– லோகேஷ் படம் எடுக்குறதுக்கும், பேசுறதுக்கும் சம்பந்தமே இருக்காது. மனுஷன் சைலண்டா பேசுவாரு. ஆனால், நிறைய இடங்கள்ல ஃபன்னா இருக்கும். தக் லைஃப் மொமண்ட்லா நிறைய கொடுப்பாரு. சென்ஸிட்டிவா பேசுவாரு.

– கடவுள்ல இருந்து சயின்ஸ் வரைக்கும் நிறைய விஷயங்களை ஈஸியா ஹெச்.வினோத் பேசுவாரு. எல்லாமே யோசிச்சுப் பார்த்தா, இப்படிலாம் பேசுறாரு. நிறைய விஷயங்கள் அக்சப்ட் பண்ணிக்கிற மாதிரி இருக்கும். எப்படி இப்படிலாம் பேசுறாருனு ஆச்சரியமும் வரும்.

– எனக்கு தெரிஞ்சு இந்த லிஸ்ட்ல அதிகமா உணர்ச்சிவசப்பட்டு பேசுற ஆள், மிஷ்கின்தான். ஆனால், எதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிப்பாரு. மனசுல இருக்குற விஷயங்களை அப்படியே பேசுவாரு. சில விஷயங்கள் அவர் பேசுறது கொஞ்சம் ஓவரா இருந்தாலும், அதுக்கும் நம்மள ஃபேனா மாத்திடுவாரு.

– அதுல ஒண்ணும் இல்லை, கீழ போட்ருன்ற டயலாக் ஒருத்தருக்கு செட் ஆகும்னா தியாஜராஜா குமாரராஜாவுக்குதான். ஆனால், முழு இன்டர்வியூலயும் அவர் பேசுற சில ஜஸ்ட் லைக் தேட் விஷங்கள் ரொம்ப அழகா இருக்கும். வாழ்க்கையை மனுஷன் ரசிக்கிறதுலாம் செம.

– பாலு மகேந்திரா பட்டறைல இருந்து வந்ததாலயோ என்னவோ, ஜீனியஸ்தனம் அவரோட பேச்சுல இருக்கும். இயற்கையை பத்தி தன்னோட இண்டர்வியூக்கள்ல அதிகமா பேசுவாரு. நிறைய கேள்விகளை முன் வைச்சு பேசுவாரு. எல்லாமே நியாயமானதா மட்டுமே இருக்கும்.

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்

– வெற்றிமாறன் பேசுறது ரொம்பவே சென்ஸிட்டிவான விஷயங்களா தோணும். ஸ்டூடன்ஸ்கிட்ட அக்கறையா, ஃபிலிம் மேக்கர்ஸ் மத்தில பெர்ஃபெக்‌ஷனா பேசுவாரு. இண்டர்வியூக்கள் எல்லாத்துலயும் சமூகம் மேல இருக்குற அக்கறையாவும், பொலிட்டிகலி ரொம்ப கரெக்ட்னஸோடவும் பேச நினைக்கிற ஆள். ஜட்ஜ் பண்ணாத கேரக்டர். எல்லா மனுஷங்களை அக்சப்ட் பண்ணி பேசுவாரு.

– ஒரு டிராவலை அப்படியே சுதா கொஞ்கராவோட இன்டர்வியூல பார்க்கலாம். ஏனோ தானோனுலாம் எதுவும் இண்டர்வியூல இருக்காது. நிறைய இன்சிடண்ட்ஸ் ஷேர் பண்ணுவாங்க. இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

– படங்கள்ல எவ்வளவு ஜாலி இருக்கோ, அதுல இருந்து 100 மடங்கு அதிகமாகவே இண்டர்வியூக்கள்ல ஜாலி இருக்கும். சீரியஸாவே இருக்க மாட்டாரோனு நமக்கு அவர பார்க்கும்போதுலாம் தோணும்.

இப்படி இண்டர்வியூக்கள்லயும் சென்ஸிபிளா பேசி நம்மள இந்த டைரக்டர்ஸ், அவங்களோட ஃபேனா மாத்தி வைச்சிருக்காங்க. எல்லாராலயும் 100 % வெற்றிப் படங்களை கொடுக்க முடியாது. அதேமாதிரி, இவங்க ஃபிலிமோகிராபிலயும் சில சறுக்கல் படங்கள் இருக்கலாம். அதுக்காகலாம் இவங்களை மொத்தமா ஃபேன்ஸ் புறக்கணிக்க மாட்டாங்க. காரணம் எத்தனை தடவை பார்த்தாலும் கொஞ்சமும் அலுக்காத இந்த டைரக்டர்ஸ் படங்களும், கேட்டுட்டே இருக்கணும்னு தோண வைக்கிற, யோசிக்க வைக்கிற, சிரிக்க வைக்கிற இண்டர்வியுக்களும் தான்.

படங்கள், இண்டர்வியூ இந்த ரெண்டு விஷயங்களும்தான் இந்த டைரக்டர்ஸ் நிறைய பேருக்கு புடிக்கிறதுக்கு காரணமே. உங்களுக்கு இந்த லிஸ்ட்ல ஃபேவரைட் டைரக்டர் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க. 

1 thought on “ஆமால்ல.. ஹேட்டர்ஸ் இல்லாத டைரக்டர்ஸ் இவங்கதான்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top