‘கட் பண்ணுனா சாங்’ என்கிற இந்த வரியைச் சொல்லாமல் எந்த இயக்குநரும் கதை சொல்லியிருக்க மாட்டார்கள். எதார்த்தமான கதைகளிலும் எதார்த்தத்தை மீறிய ஒரு விஷயமான பாடல்கள் இருக்கும். ஆனால், அதை முடிந்தளவுக்கு எதார்த்தமாக கொடுக்க முயற்சி செய்கிறார்கள், சினிமாக்காரர்கள். அந்த முயற்சியில் ஒன்றுதான் படத்தில் நடிப்பவர்களையே பாடலையும் பாட வைப்பது. தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் தனியாக சோலோ பாடல்கள் பாடியிருக்கிறார். ஹீரோயின்களில் சிலரும் அப்படி பாடியிருக்கிறார்கள்; அல்லது பாடகிகளே ஹீரோயின்களாக நடிக்கும் போது பாடியிருக்கிறார்கள். ஆனால், டூயட் பாடல்களில் ஹீரோ, ஹீரோயின் இணைந்து பாடுவது அவ்வளவு சுலபம் இல்லை.
-
1 உள்ளத்தைக் கிள்ளாதே
நடிகர் விஜய் அவரது படங்களில் ஒரு பாடலாவது பாடுவார் என்பது வழக்கமான விஷயம்தான். ஆனால், முதல் முறையாக டி.இமான் இசையமைத்த தமிழன் படத்தில் ஹீரோயின் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து உள்ளத்தைக் கிள்ளாதே பாடலை பாடியிருப்பார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து வுட்களிலும் அறியப்படும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தமிழன்தான் முதல் படம்.
-
2 கண்ணழகா
தனுஷும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் இருந்து அவரது படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். ஸ்ருதி ஹாசனும் பாடகியாக சினிமாவில் அறிமுகமாகி ஹீரோயினாகவும் நடிக்க வந்தவர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 3 படத்தில் ஆன் ஸ்கிரீனில் நன்றாகவே வொர்க் அவுட்டாகி இருந்த கெமிஸ்ட்ரி, கண்ணழகா பாடலில் கொஞ்சம் கூடுதலாகவே வொர்க் அவுட்டாகி இருந்ததற்கான காரணம், இவர்கள் இணைந்து பாடியதாகவும் இருக்கலாம்.
-
3 ஏண்டி ஏண்டி
புலி படத்தில் ஏண்டி ஏண்டி பாடலை விஜய்யும் ஸ்ருதி ஹாசனும் இணைந்து பாடியிருப்பார்கள். விஜய்க்கு உள்ளத்தைக் கிள்ளாதே பாடலுக்கு பிறகும், ஸ்ருதி ஹாசனுக்கு கண்ணழகா பாடலுக்கு பிறகும், ஹீரோ - ஹீரோயினாக இணைந்து பாடிய இரண்டாவது பாடலாக இது இருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சச்சின் படத்தில் விஜய் பாடியப்பிறகு சில வருடங்கள் பாடாமல் இருந்தார். அதன் பிறகு இவர்கள் இணைந்த வில்லு படத்தில் வாடா மாப்ள பாடலை பாட வைக்க முயற்சி செய்தார் டிஎஸ்பி. அது முடியாமல் போனதும், மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்த புலி படத்தில் இந்தப் பாடலை பாட வைத்தார் டிஎஸ்பி.
-
4 புது மெட்ரோ ரயில்
நடிகர் விக்ரம் அவ்வப்போது அவரது படங்களிலும் சில முறை மற்ற ஹீரோ படங்களிலும் பாடுவார். குறிப்பாக கந்தசாமி படத்தில் அனைத்து பாடல்களையும் விக்ரம் தான் பாடியிருப்பார். இப்படி பாட வைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தான், சாமி 2 படத்தில் விக்ரமையும் கீர்த்தி சுரேஷையும் புது மெட்ரோ ரயில் பாடலை பாட வைத்தார். கீர்த்தி சுரேஷ் சில முறை பாடல்கள் பாடி அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தாலும், படத்தில் பாடியது இதுவே முதல் முறை.
0 Comments