தமிழ் சினிமாவின் பெஸ்ட் ஆன் – ஸ்கிரீன் ‘Pair’ யாரு?

தமிழ் சினிமால நூற்றுக்கணக்கான ஜோடிகள் நம்ம முன்னாடி வந்து நின்னு ரொமான்ஸ் பண்ணிருக்காங்க. அதுல சில ஜோடிகள் ரியல் லைஃப் ஜோடியாவும் மாறிட்டாங்க. சரி, அதை விடுவோம். “அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே?”னு ஹீரோவும் “அறியாமல் நான் இருக்க, அழகாக நீ திறக்க, காதல் மழை ஆயுள் வரை தூருமடா”னு ஹீரோயினும் பாடும் பல டூயட்டுகள் நம்மளோட ப்ளே லிஸ்ட்ல இன்னும் முந்தியடிச்சிட்டு முன்னாடி இருக்குது. ஆனால், “சே… என்ன ஜோடி. ஜோடினா இப்படித்தான்யா இருக்கணும்” அப்டினு நம்மள நினைக்க வைச்சது சில ஜோடிகள்தான். அந்த ஜோடி மாதிரி ரியல் லைஃப்லயும் நாம வாழ்ந்துறனும் குமாருனு கல்யாணம் ஆகாத 90’ஸ் கிட்ஸ், கல்யாணம் ஆன 2’கே கிட்ஸ்லாம் நினைச்சு வாழ்ந்துட்டு இருக்காங்க. இந்த நேரத்துல தமிழ் சினிமாவின் பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேர் யாரெல்லாம் என்பதைப் பற்றிதான் நாம பார்க்கப்போறோம்.

“காதல்ங்கிறது ரொம்ப அழகான ஒரு விஷயம். ஆனால், அந்த அழகான விஷயத்துல அழகுங்குறது தேவையில்லாத ஆணி” – இப்படிலாம் ஆனந்தத்துல கண்ணு கலங்குற அளவுக்கு வசனம் பேசுனாலும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை காதலிக்கிறவங்க அழகானவங்களா பார்த்துதான் காதல்ல விழுவாங்க. இது சொல்லப்படாத சட்டம். எழுதப்படாத விதி. இருந்தாலும் அந்தக் காதலை காமிக்கலாவும் பல ஜோடிகள் வழியா காமிச்சிருப்பாங்க. அதுவே சில சமயங்கள்ல ரொம்ப எதார்த்தமான காதலா அமையும். அதாவது சிம்பிளா சொல்லணும்னா… உயிரை உருக்கி உருண்டைப் புடிச்சு, உலகத்துல எப்படி உருண்டாலும் சொல்ல முடியாத அளவுக்கு உன்னை காதலிக்கிறேன்னு சொல்றதுல இருந்து, உருட்டுக்கட்டையால ஓட ஓட அடி வாங்குறது வரைக்குமான காதலர்களை, அதாவது பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் ஜோடிகளை தமிழ் சினிமா நமக்கு தந்திருக்கு. இந்த ரெண்டு விதத்துல உங்க மனைவி அல்லெங்கில் காதலி என்ன வகைனு கமெண்டில் கமெண்டுங்க.

விஜய் – சிம்ரன்

துள்ளாத மனமும் துள்ளும்
துள்ளாத மனமும் துள்ளும்

கோலிவுட்ல பெஸ்ட் பேர் யாருனு 90’ஸ் கிட்ஸ்க்கிட்ட கேட்டா டக்னு சொல்ற பதில் ‘விஜய் – சிம்ரன்’ அப்டின்றது தான். இந்தக் கேள்வியை விஜய்க்கிட்ட கேட்டாலும் அதே பதில்தான் வரும். சிம்ரன்கிட்ட கேட்டாலும் அதே பதில்தான் வரும். ஏன், இரண்டு பேரோட ரசிகர்கள்கிட்ட கேட்டாலும் அதே பதில்தான் வரும். ஏன்னா, பேர் அப்படி. ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமுடன், உதயா போன்ற படங்கள்ல விஜய்க்கு ஜோடியா கலக்கியிருப்பாங்க. இதுல உதயாவைத் தவிர மீதி எல்லாமே ப்ளாக் பஸ்டர் ஹிட்டு. துள்ளாத மனமும் துள்ளும் படத்துல ருக்குவுக்கு குட்டிக்கும் இருந்த கெமிஸ்ட்ரி சான்ஸே இல்லேல. அதுவும் பார்வை இல்லாதப்ப ருக்கு லவ் பண்ற சீன்ஸ், பார்வை வந்து கலெக்டர் ஆனதும் ரௌடினு நினைச்சு குட்டிய விரட்டியடிக்கிற சீன், யாரு குட்டி யாரு குட்டினு கேட்டு ருக்கு அழுற சீன், இன்னிசைப் பாடி வரும் பாட்டு பாடுற சீன்லாம் அவங்க ரெண்டு பேரத்தவிர வேற யாருக்கும் செட் ஆகாது. ப்ரியமுடன் படத்துல கணவன் – மனைவியா கலக்கியிருப்பாங்க. நடிப்புல மட்டுமில்ல டான்ஸ்லயும் இந்த ஜோடி கெத்துதான். ஆல்தோட்ட பூபதி பாட்டுக்கு ரெண்டு பேரும் போட்ட ஆட்டம் இருக்கே. வேற லெவலுங்க.

சிம்பு – த்ரிஷா

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா

இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு படம் நடிச்சிருக்காங்க. ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்காங்க. ஆமா, ரெண்டு படத்துல ஒண்ணு விண்ணைத்தாண்டி வருவாயா? இன்னொன்னு என்ன?னு தான கேக்குறீங்க. அலைனு ஒரு படம். அந்தப் படம் வந்ததும் தெரியலை. போனதும் தெரியலை. ஆனால், விண்ணைத்தாண்டி வருவாயா? படம் இன்னைக்கும் நின்னு பேசுது. தமிழ் சினிமால வந்த எதார்த்தமான பெஸ்ட் காதல் படத்துல இதுவும் ஒண்ணு. கார்த்திக்கை விட ஒரு வயசு கூடுதலான ஜெஸ்ஸி கேரக்டரை த்ரிஷா அவ்வளவு அழகா ஹேண்டில் பண்ணியிருப்பாங்க. “ஊர்ல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்னு” கார்த்திக் கேக்குறதும், “உன் கண் வழியா அவங்க என்ன பார்க்கல போல இருக்கு”னு ஜெஸ்ஸி சொல்றதும் அப்படியே ஹார்ட்ட டச் பண்ணும். அப்புறம் “கார்த்திக் டயல் செய்த எண்” படத்துலயும் ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் அவ்வளவு அழகா இருக்கும்.

மாதவன் – ஷாலினி

மாதவன் - ஷாலினி
மாதவன் – ஷாலினி

“நான் உன்ன விரும்பல… உன் மேல ஆசப்படல… நீ அழகா இருக்கனு நினைக்கல… ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு” – இந்த டயலாக்கை யாராலையும் மறக்க முடியாது. அதுக்கு முக்கியமான காரணம் மாதவன் – ஷாலினிதான். எல்லாருமே காதலர்கள் சேர்றதோட படத்தைக் கட் பண்ணி கிளைமேக்ஸ் போட்ருவாங்க. ஆனால், கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என்னலாம் பிரச்னை வரும்னு தமிழ் மக்களுக்கு காட்டுன படம் ‘அலைபாயுதே’தான். துருதுருனு இருக்குற ஷாலினி, கல்யாணத்துக்கு அப்புறன் கொஞ்சம் மாறிப்போன மாதவன், ரெண்டு பேருமே செம. அதுவும் கிளைமேக்ஸ்ல “என்ன பயந்துட்டியா?”னு ஷாலினு கேக்கும்போது “உயிரே போயிடுச்சுனு” ஷாலினி சொல்ற சீன்லலாம் அல்ட்டிமேட் லவ் இருக்கும். லவ் பண்ணாலும் இவங்கள மாதிரி லவ் பண்ணனும், சண்டைப் போட்டாலும் இவங்கள மாதிரி சண்டைப் போடணும்.

வடிவேலு – கோவை சரளா

வடிவேலு - கோவை சரளா
வடிவேலு – கோவை சரளா

சரி… இவ்வளவு நேரம் ரொம்ப சீரியஸான் பேர் பார்த்தோம். இப்போ நாம பார்க்கப்போறது கொஞ்சம் காமிக்கலான பேர். நிஜத்தோட இந்த பேர்-அ நிறைய பேர் கனெக்ட் பண்ணிக்கலாம். அதுக்காக அடி, உதை அந்த மீனிங்ல சொல்லல. எப்பவும் சண்டைப் போட்டுட்டே இருப்பாங்கள்ல. அந்த மீனிங்ல சொல்றேன். இந்த பேர் எப்படினா, டாம் அன்ட் ஜெர்ரி போல. இருந்தா எப்பவும் சண்டைப் போட்டுட்டே இருப்பாங்க. ஆனால், ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இருக்க மாட்டாங்க. அந்த டைப். அதுமட்டுமில்ல, இவங்க சண்டைலயும் ஒரு அழகான காதல் இருக்கு. கோவை சரளா, வடிவேலுவைப் போட்டு பொளக்குறதுலாம் ஒரு காதல்ல தான? என்னநான் சொல்றது?

சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன் - ஸ்ரீவித்யா
சிவகார்த்திகேயன் – ஸ்ரீவித்யா

2’கே கிட்ஸோட ஃபேவரைட் பேர், இவங்கனு சொல்லலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டைனு ரெண்டே படத்துலதான் இரண்டு பேரும் நடிச்சிருக்காங்க. இருந்தாலும் ஒரு மேஜிக் இவங்க இடையில இருக்கு. சிவகார்த்திகேயன் “காதல் கண் கட்டுதே”னு நல்லா ரொமான்ஸ் பண்ண கத்துக்கிட்டதே ஸ்ரீதிவ்யாகிட்டதான்னு சொல்லலாம். விஜய்க்கு அப்புறம் ஊதாக்கலர் வொர்க் அவுட் ஆனது சிவாக்குதான். அதுவும் ஸ்ரீதிவ்யாகூட. அதுக்கப்புறம் சிவாக்கு நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன்னு எல்லா ஜோடியும் நல்லாவே செட் ஆகுது.

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ்
விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ்

மக்கள் செல்வன் – மக்கள் செல்வி அப்டினு சொல்லலாம். ரெண்டு பேருமே நடிப்பு ராட்சசர்கள்தான். ரம்மில தொடங்கி கா.பெ.ரண்சிங்கம் வரைக்கும் பல படங்கள்ல விஜய் சேதுபதிகூட சேர்ந்து நடிச்சு தூள் கலக்கிட்டாங்க. சண்டை போடுறதும் சரி, ரொமான்ஸூம் சரி ரெண்டு பேருக்கும் இடையில அப்படி செட் ஆகுது. நமக்கு ரொம்பவே பரிட்சயமான ஒரு ஜோடி மாதிரி ஃபீல் ஆகும். சினிமாலதான் இவங்க ஜோடி அப்டின்றது நமக்கு ஃபீலே ஆகாது. இதைத் தவிர ரம்யா நம்பீசனும் விஜய் சேதுபதி ஜோடிக்கு செமயா செட் ஆவாங்க. அதுவும் சேதுபதி படத்துல பத்து பொருத்தமும் இரண்டு பேருக்கும் இடையில பக்காவா இருக்கும்.

கார்த்தி – தமன்னா

கார்த்தி - தமன்னா
கார்த்தி – தமன்னா

இந்த ஜோடியைப் பத்தி சொல்றதுக்கு ஒரு படம் போதும் அதான் “பையா”. ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு பாட்டும், ஒவ்வொரு டயலாக்கும் அவ்வளவு அழகா இருக்கும். இரண்டு பேரோட ஜோடியும் எப்போ பெஸ்ட்னு தோணும் தெரியுமா? அந்தப் படத்துல வர்ற “என் காதல் சொல்ல” பாட்டுலதான். தமன்னா அந்தப் பாட்டுல நடிச்சுக் காமிப்பாங்க. கார்த்தி உட்கார்ந்து ரசிச்சிட்டு இருப்பாரு. செமயா இருக்கும். அதைத்தவிர சிறுத்தைப் படத்துல கொஞ்சம் ஹாட்டா இருக்கும். இந்த ஜோடிக்கிடையில் உள்ள ரிலேஷன்ஷிப். அப்படியே, தோழா படத்துக்கு வந்தா கொஞ்சம் ஃபன்னா இருக்கும்.

இந்த ஜோடியெல்லாம் திரும்ப சேர்ந்து கரெக்டான கதைல நடிச்சா அதையும் வரவேற்க அவங்க ரசிகர்கள் எப்பவும் தயாராவே இருப்பாங்க. இந்த லிஸ்ட்ல சூர்யா – ஜோதிகாவைப் பத்தி பேசலையேடானு நீங்க கேக்கலாம். ஆனால், அவங்க ஜோடியைப் பத்தி நாம சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ஆன் ஸ்கிரீன்லயும் சரி, ஆஃப் ஸ்கிரீன்லயும் சரி செம கெமிஸ்ட்ரி அவங்களுக்கு. அவ்வளவு ஃபேன்ஸ் அந்த ஜோடிக்கு இருக்காங்க. அப்புறம் அஜித்துக்கு பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேர் யாருனு ரொம்பவே யோசிச்சோம். சிம்ரனா, த்ரிஷாவா, நயன்தாராவா இல்லை ஷாலினியா அப்டினு. ஒரு முடிவுக்கு வர முடியலை அதனால, அவருக்கு யாரு பெஸ்ட் பேர்னு நீங்களே கமெண்ட்ல சொல்லுங்க. 

Also Read – கவுண்டமணியின் ஆஃப் ஸ்கிரீன் தக் லைஃப் சம்பவங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top