லோகேஷ் யூனிவர்ஸ்ல ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ மாதிரி இத்தனை சூப்பர் ஹிட் பாட்டு இருக்கா?!

விக்ரம் படத்தைப் பார்த்தவங்க எல்லாரும் ‘நாயகன் மீண்டும் வரான்’ன்னு சில்லறைய சிதறவிட்டுட்டு இருந்தப்ப… சிலர் மட்டும் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாட்டை தேடிக் கண்டுபிடிச்சு அந்த வைப்ல இருந்துட்டு இருக்காங்க. யூ டியூப்ல போய் நாம அந்தப் பாட்டோட கமெண்ட்ஸ் பார்த்தோம்னா… விக்ரம் படம் பார்த்துட்டு வந்தவங்கலாம் அட்டண்டென்ஸ் போடுங்கனு ஒரு குரூப் அலப்பறைய கூட்டிட்டு இருக்காங்க. விக்ரம் படத்துல அந்தப் பாட்டு பிளேஸ் ஆன விதம், ஃபைட் சீன்கூட மெர்ஜ் ஆன விதம்னு எல்லாமே டம்பாப்பா டுமுக்கு டப்பா டுமுக்கு டப்பா மாஸ்தான். சரி, இதுக்கு முன்னாடி லோகேஷ் தன்னோட படங்கள்ல என்னப் பாட்டுலாம் யூஸ் பண்ணியிருக்காரு? இந்த விஷயத்துல லோகேஷோட குருநாதர் யாரு? அவர் என்னப்பாட்டுலாம் யூஸ் பண்ணியிருக்காரு? அதைத்தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

விக்ரம்
விக்ரம்

ரெட்ரோ பிரியர்

லோகேஷ் ஒரு இண்டர்வியூல சொல்லுவாரு, “எனக்கு ரெட்ரோ சாங்ஸ் மேல ஈர்ப்பு ரொம்பவே அதிகம். அனிருத்துக்கு என்ன மாதிரி பாட்டு வேணும்னு ரெஃபரன்ஸ்க்கு எதாவது பாட்டு எடுத்து அனுப்புவேன். அதைப் பார்த்துட்டு அவர் சிரிப்பாரு. அதுக்குக் காரணம் என்னனா, அந்தப் பாட்டோட வியூஸ் எல்லாமே 170, 200 – னு அவ்ளோதான் இருக்கும். எனக்கு ரொம்ப புடிக்கும். அதை முடிஞ்ச அளவுக்கு கதைக்குள்ள அடாப்ட் பண்ண பார்ப்பேன்”னு சொல்லுவாரு. இங்கிலீஷ்ல அவர் ரெட்ரோ சாங்ஸ கேட்டாலும் படங்கள்ல தமிழ்ல அதிகம் கவனிக்கப்படாத பாடல்களை தன்னோட படங்கள்ல செமயா பிளேஸ் பண்ணுவாரு. பெரும்பாலும் சண்டைக் காட்சிகள், பரபரப்பா போற சீன்லலாம்தான் கூலா ஜாலியான ஒரு பாட்டை லோகேஷ் போட்டு விடுவாரு. அவர் யூனிவர்ஸ்க்குள்ளலாம் போக வேணாம். ஜஸ்ட் பாட்டு என்னலாம்னு மட்டும் பார்ப்போம்.  

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

மாநகரம்

படம் வருதுனு ஒரு அடையாளமே தெரியாம வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனபடம், ‘மாநகரம்’. தளபதி விஜய் ஸ்டைல்ல சொல்லணும்னா, ‘கொஞ்சம் அப்படி இப்படி பிசகுனாலும் புரியாம போய்டும். அதை அவ்வளவு அழகா ஹேண்டில் பண்ணியிருப்பாரு’. அந்தப் படத்துலயும் ஒரு சில பாட்டுலாம் வரும். செமயா இருக்கும். பி.கே.பி பையன கடத்தி ரௌடிகள்லாம் அவங்க இடத்துல வைச்சிருப்பாங்க. அப்போ சாரா ரேடியோவை டியூன் பண்ணி ‘தேவாமிர்தம்’ பாட்டு போடுவாரு. அதை சாரா இன்னசெண்டா ரசிக்கிறத பார்த்துட்டு அந்தப் பாட்டை திரும்ப கேக்கணும்னு தோணும். இந்தப் பாட்டு ரஜினி நடிச்ச மூன்று முகம் படத்துல வரும். சவுண்ட குறைச்சதுக்கு அப்புறமும் ஸ்லோவா பாட்டு போய்ட்டே இருக்கும். இந்தப் பாட்டுக்கு யூடியூப்ல பெரிய வியூஸ்லாம் இருக்காது. சங்கர் – கணேஷ்தான் இந்தப் பாட்டுக்கு மியூசிக் போட்ருப்பாங்க.

மாநகரம்
மாநகரம்

நைட்டு ஆஃபீஸ்ல இருந்து ஸ்ரீ கார்ல சார்லிகூட போய்ட்டு இருப்பாரு. அப்போ, கார்ல ஓடுற ரேடியோல சந்தனக்காற்றே பாட்டுப் போகும். நைட் டிரைவ்ல, அந்த மூட்ல அப்படி ஒரு பாட்ட கேட்டா எப்படி இருக்கும். இந்தப் பாட்டு ரஜினி நடிச்ச தனிக்காட்டு ராஜா படத்துல வரும். இளையராஜாதான் மியூசிக் போட்ருப்பாரு. இதைத்தவிர மெட்ராஸ், இறைவி படத்துல உள்ள பாட்டுலாம்கூட வரும். ஆனால், நமக்கு மைண்ட்ல ரெஜிஸ்டர் ஆகி திரும்ப கேக்கணும்னு தோணுறது இந்த ரெண்டு பாட்டும்தான்.

கைதி

பாட்டு, ஹீரோயின்னு கமர்ஷியல் எலிமெண்ட்ஸ்க்கு தேவையான எதுவும் இல்லாமல் கமர்ஷியலா எடுத்தப் படம், கைதி. கைதில ஜூம்பலக்கா பாட்டை மனுஷன் அடைக்கலமும் அன்பு கேங்கும் பேசுறது ஒருத்தருக்கு ஒருத்தர் கேக்காமல் இருக்க யூஸ் பண்ணியிருப்பாரு. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் ஃபேன்ஸ்க்குலாம் படம் பார்க்கும்போது அந்தப் பாட்டைக் கேட்டதும் கூஸ்பம்ஸ் அப்படி வந்துச்சு. அந்தப் பாட்டைவிட ஹைலைட்டு மெட்ரோ சேனல் பாட்டுதான். இந்து படத்துல வந்த இந்த பாட்டுக்கு தேவா மியூசிக் போட்ருப்பாரு. கைதி படத்துல இந்தப் பாட்டைக் கேட்கும்போது ஆஹானு இருக்கும். அப்புறம் அல்டிமேட் பாட்டு, ‘ஆசை அதிகம் வைச்சு’. படிக்கட்டுல அர்ஜூன் தாஸ் பவுடரை இழுத்துட்டே இறங்கி வருவாரு. பேக்ரவுண்ட்ல ஆசை அதிகம் வைச்சு பாட்டு ஓடும். கொல மாஸா இருக்கும். விக்ரம் படத்துல ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாட்டு ஓடும்போது சண்டை நடக்குற மாதிரி, கைதில இந்தப் பாட்டு ஓடும்போது சண்டை நடக்கும். மறுபடியும் படத்துல இளையராஜா போட்ட பாட்டுதான் இந்தப் பாட்டு. ரோகினியோட டான்ஸ் வேறலெவல்ல இருக்கும்.

கைதி
கைதி

மாஸ்டர்

மாஸ்டர்ல பெருசா எந்தப் பாட்டும் இருக்காது. இங்கிலீஷ் பாட்டுதான் ஜே.டி கேட்டுட்டு திரிவாரு. ஆனால், ஒரு பாட்டு வரும். அதை ஸ்டேட்டஸா விஜய் ஃபேன்ஸ்லாம் வைச்சிட்டு சுத்துனாங்க. பிரியங்கா மோகனை கொலை பண்ண விஜய் சேதுபதி கேங்க் துரத்திட்டுப் போகும். ஓடிப்போய் ஒரு சலூன் கடைல ஒளிஞ்சுப்பாங்க. அப்போ மெதுவா பாட்டு கேக்க ஆரம்பிக்கும். டயலாக் எதுவும் இல்லாமல் அமைதியா இருக்கும்போது, அங்க இருக்குற கடைல ‘கருத்த மச்சான்’ பாட்டு ஓடும். மாஸ்டர் படத்துக்கு அப்புறம் யூடியூப்ல தேடிப்போய் இந்தப் பாட்டைப் பார்த்தவங்க லிஸ்டும் ரொம்ப பெருசு. புது நெல்லு புது நாத்து படத்துல இளையராஜாதான் இந்தப் பாட்டுக்கு மியூசிக் போட்ருப்பாரு.

மாஸ்டர்
மாஸ்டர்

லோகி யூனிவர்ஸ்னு இன்னைக்கு ஒண்ணு சொல்றோம்ல, அதுக்கு அவருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது அவர் பார்த்து வளர்ந்த இங்கிலீஷ் படங்கள். அதேமாதிரி தமிழ்ல தியாகராஜா குமாரராஜா படங்கள். ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ்னு இரண்டு படம் மட்டுமே எடுத்துருந்தாலும் அதுல அந்த ஆட்டோ கிராஸ் ஆகுற சீன்லகூட அந்த படத்தோட தொடர்ச்சியைக் கொண்டு வந்துருப்பாரு. அதேமாதிரி அவர் படங்கள்லயும் லோகேஷ் யூஸ் பண்ற மாதிரியான பல சாங்ஸ் வரும்.

ஆரண்யகாண்டம்

படத்தோட தொடக்கத்துலயே ‘தோளின் மேலே யாரும் இல்லை’ பாட்டு வரும். இளையராஜா இந்தப் படத்துக்கு பாட்டு போட்ருப்பாரு. செமயா இருக்கும். ஆனால், அந்த சீனுக்கு இந்தப் பாட்டு ஏன் வைச்சாருனு தெரியலை. சூப்பரா சென் ஆகியிருக்கும். அப்புறம் கார்ல போகும்போது ‘ஆர் யு ரெடி’ பாட்டு வரும். படத்தோட ஸ்டார்ட்டிங்ல கூட இந்தப் பாட்டோட மியூசிக் மாதிரிதான் வரும். லைட்டாதான் வரும். தாய் வீடு படத்துல வர்ற இந்தப் பாட்டுக்கு மியூசிக் டைரக்டர் சங்கர் கணேஷ். அதுக்கப்புறம் சம்பத்லாம் சின்ன ஹோட்டல்ல நிக்கிம்போது வர்ற பாட்டுதான் அல்டிமேட். ‘பொன்மேனி உருகுதே’ பாட்டுதான் அது. மூன்றாம் பிறைல இளையராஜா போட்ட பாட்டு இது.  

ஆரண்ய காண்டம்
ஆரண்ய காண்டம்

கார்ல போகும்போது போலீஸ் மடக்கும்போது அவங்கக்கிட்ட இருந்து தப்பிக்க ‘காட்டுவழி போற பொண்ணே’ பாட்டு வரும். மலையூர் மம்பட்டியான் படத்துல இளையராஜா போட்ட பாட்டு இது. ஜாக்கி ஜெராஃப் சட்டைல ரத்தக் கரையோட படியில ஏறிப்போகும்போது ‘வா வா பக்கம் வா’ பாட்டு வரும். தங்க மகன்ல இளையராஜா போட்ட பாட்டு இது. ஜாக்கி ஜெராஃப் குஜாலா ஸ்லோவா அப்படி ஸ்டெப் போட்டுட்டு போறது செம மாஸா இருக்கும். இதைத்தவிர ஒருநாளைக்குள் எத்தனை கனவு, ஜெய் ஜோ, உன்மேல ஆசைதான் இப்படி நிறைய பாட்டு குட்டி குட்டியா வந்துட்டே இருக்கும்.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் படத்தோட ஆரம்பமே ‘ஐ எம் எ டிஸ்கோ சான்ஸர்’ பாட்டுல இருந்துதான் ஆரம்பிக்கும். அப்புறம் அந்த பசங்களோட சாப்டர் ஆரம்பிக்கும்போது ‘அந்தியில வானம்’ பாட்டும் போகும். அந்தப் பாட்டைக் கேக்கும்போது கூஸ்பம்ப்ஸ் வரும். பசங்க மேட்டர் படம் பார்க்க ரெடியாகிட்டு இருக்கும்போது பின்னாடி ரொமான்ஸ் பாட்டு போட்டு அலிசாட்டியம் பண்ணியிருப்பாரு. டிவி வாங்கப்போவாங்க. அப்போ ‘பெண்ணென்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ’னு பாட்டு ஓடும். இது சிவாஜி கணேசன் நடிச்ச ஊட்டி வரை உறவுன்ற படத்துல எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பாட்டு. விஜய் சேதுபதி டிரஸ் மாத்துறதை காயத்ரி பார்க்குற சீன் ஒண்ணு வரும். அதுல இளையராஜாவோட, ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ பாட்டை தியாகரஜன் குமாரராஜா போட்டு விட்ருப்பாரு. அப்படி இருக்கும். வேற எந்தப் பாட்டும் அதுக்கு செட் ஆகாத மாதிரி ஃபீல் ஆகும். அந்தப் பசங்க காசு ஆட்டய போடுற சீன்ல, ‘சாத்து நட சாத்து’ன்ற சேதுபதி ஐ.பி.எஸ் படத்துல இளையராஜா போட்ட பாட்டு வரும். இப்படி மனுஷன் வேற லெவல் பண்ணியிருப்பாரு.

சூப்பர் டீலக்ஸ்
சூப்பர் டீலக்ஸ்

சக்கு சக்கு வத்திக்குச்சி மாதிரி நீங்க அன்டர்ரேட்டடா ஃபீல் பண்ற சாங்ஸ் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: ‘The King of Indian Roads’ – ‘Ambassador’ காரை இந்தியர்கள் கொண்டாட என்ன காரணம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top