‘யாம் பார்த்த படங்களிலே கே.ஜி.எஃப் போல் மாஸான படங்கள் எங்கும் காணோம்’னு நெட்டிசன்கள் கே.ஜி.எஃப் இரண்டு பார்ட்டையும் தலைல தூக்கி வைச்சு குதியாட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. கடலோட ஆழம் தெரிஞ்ச ராக்கி பாய், ‘மே ஐ கம் இன்’னு அடுத்து எப்போ எண்ட்ரி ஆவார்னு மரண வெயிட்டிங்ல இருக்காங்க. படத்தோட ஒவ்வொரு செகண்ட்லயும், ஒவ்வொரு சீன்லையும், ஒவ்வொரு டயலாக்லையும் மாஸ்ஸ மலை மாதிரிகூட்டி எடுத்த இந்தப் படத்துக்கு இணையா இன்னொரு படம் வருமானு கேட்டா… கே.ஜி.எஃப் ஃபேன்ஸ் ‘வாய்ப்பில்ல ராஜா’ன்னு தான் சொல்லுவாங்க. ஆனால், பார்த்ததும் பாக்கெட்டைக் கிழிச்சு சில்லறைய சிதற விடுற அளவுக்கான மாஸ் சீன்கள் நம்ம தமிழ் சினிமாவுலயும் மாஸ் ஹீரோக்கள் படங்கள்ல வந்துருக்கு. அந்த சீன்களைப் பற்றிதான் இந்த கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
பாட்ஷா (உள்ளே போ ஃபைட் சீன்)
‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’, ‘பாட்ஷா… மாணிக் பாட்ஷா’ – இப்படி எங்கக்கிட்டயும் டன் கணக்குல மாஸ் டயலாக் இருக்குனு ரஜினி ரசிகர்கள் இன்னைக்கும் காலர தூக்கிவிட்டு ஸ்டைலா, கெத்தா சொல்றது பாட்ஷா படத்தோட டயலாக்ஸ்தான். மாஸ் படத்துக்கு ஒரு ட்ரெண்ட செட் பண்ண படம் இது. அந்தப் படத்துல ஏகப்பட்ட மாஸ் காட்சிகள் இருக்கு. அதுல கூஸ்பம்ப்ஸ்ஸ எக்ஸ்ட்ராவா கூட்டுற சீன் ஒண்ணுனா, அது தங்கச்சியை ரௌடிகள் கார்ல கடத்திட்டு வந்து வீட்டு முன்னாடி அடிப்பாங்க… அப்போ ஒரு ஃபைட் சீன் வரும்ல அதுதான். அதுக்கு முன்னாடிலாம் ரௌடிங்கக்கிட்ட அடி வாங்குறது, கால்ல விழுந்து கெஞ்சுறதுனு சாஃப்ட்டா இருக்குற மாணிக்கும் தங்கச்சியை அடிச்சதும் ‘உள்ளேப்போ’னு தம்பியை சொல்லி கைய முறுக்கு ரௌடியை குத்துவாரு பாருங்க. அப்டியே போஸ்ட்லாம் வெடிச்சு தீப்பொறி பறக்கும். பி.ஜி.எம், ரஜினியோட கண்ணு எல்லாம் பவர் ஹை வால்ட்ல இருக்கும். பாட்ஷா… பாட்ஷாதான்!
விஸ்வரூபம் (ஃபேக்ட்ரி ஃபைட்)
கமல்ஹாசனோட கரியர்ல மாஸ்ஸான சீன்ஸ ரொம்பவே விரல் விட்டு எண்ணிரலாம். ஏன்னா, அவர் கதைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்குற படங்கள்லதான் அதிகமா நடிப்பாரு. அப்படி அவர் நடிச்ச பக்கா மாஸ் சீன்ல ஒண்ணு, விஸ்வரூபம்ல வர்ற டிரான்ஸ்ஃபர்மேஷன் சீன். ஏன்டா, வேட்டையாடு விளையாடுல வர்ற ‘கண்ணு வேணும்னு கேட்டியாமே’ சீன் மாஸா இருக்குமே.. அப்டினு நீங்க நினைக்கலாம். அதுல வெறுமையா டயலாக் பேசி ஒரு மாஸ கிரியேட் பண்ணியிருப்பாரு. ஆனால், விஸ்வரூபம்ல அப்டி இல்லை. ஒரு நடனக் கலைஞரா, பாவமான ஆளா இருந்து அப்படியே அப்போசிட்டா டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி ஃபைட் பண்ணுவாரு. அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் இருக்குல… அதுதான் இன்னும் ஒரு சீனுக்கு மாஸ கூட்டும். அது விஸ்வரூபம் படத்துல ரொம்பவே வொர்க் அவுட் ஆயிருக்கும். அதுலயும் ‘எவனென்று நினைத்தாய், எதைக்கண்டு சிரித்தாய்’ வரிகள்லாம் வரும்போது பக்கத்துல இருக்குறவனை தூக்கி போட்டு சாத்தணும்னு தோணும். யாரென்று புரிகிறதா… இவன் தீ என்று புரிகிறதா?
கில்லி (ஜீப் சீன்)
இன்னைக்கும் கார் ஓட்டும்போது எதேர்ச்சையா எஃப்எம்-ல கில்லிப் படத்துல வர்ற அர்ஜூனரு வில்லு பாட்டுக்கேட்டா வைப்ஸ் அப்டி ஏறும். விஜய்க்கு நூறு மாஸ் காட்சிகள் வந்திருக்கலாம். ஆனால், அதுக்குலாம் விதை போட்டது கில்லி படம்னே சொல்லலாம். பட்டப்பகல்ல நட்டநடுரோட்ல முத்துப்பாண்டியவே ஒருத்தன் குத்துப்புட்டானே யார்ரா அவன்… அப்டினு பில்டப் ஏத்துற டயலாக்ல அர்ஜூனரு வில்லு பாட்டு தொடங்குற வரைக்கும் எல்லாமே மாஸோ மாஸ்தான். அன்னைக்கே தளபதி பீஸ்ட் மோட்லதான் இருந்தாரு. ஒருத்தனா வந்து படையவே நடுங்க வைச்சிருப்பாரு.
மங்காத்தா (ட்ரக் சீன்)
வீரம், விவேகம், வேதாள, பில்லானு ஏகப்பட்ட படங்கள்ல மாஸ் சீன் வந்திருக்கு. அஜித் நடந்து வந்தாலே சும்மா பட்டாஸா இருக்கும். ஆனால், அஜித் ரசிகர்களுக்கும் சரி… அஜித்துக்கும் சரி… ஒரு ஸ்பெஷல் படம்னா அது மங்காத்தாதான். அந்தப் படத்துலயும் நிறைய சீன் மாஸா இருக்கும். குறிப்பிட்டு சொல்லணும்னா அஜித்தோட கேங்க்ல இருக்குற வைபப், அஷ்வின் எல்லாரையும் ஜெயபிரகாஷ் கேங் கன் பாயிண்ட்ல புடிச்சு வைச்சிடுவாங்க. எதுவுமே பண்ண முடியாத சிச்சுவேஷன்ல இருப்பாங். அப்போ, ஒரு ட்ரக்குள்ள இருந்து அஜித் ஜெயபிரகாஷ் தலைல துப்பாக்கியை வைச்சிட்டு சும்மா வந்து ஒரு ஹாய் சொல்லி கேங்கை கூட்டிட்டு போய்கிட்டே இருப்பாரு. மத்த சீன்லலாம் பைக் ஸ்பீடா ஓட்டுவாரு, ஸ்டண்ட் பண்ணுவாரு. ஆனால், இதுல எந்த மெனக்கெடலும் இல்லாமல் மாஸ் பண்ணுவாரு. அதுதான் அஜித். இதேமாதிரி இன்னொரு சீன்னா அது ஆரம்பம் படத்துல அஜீத்தை கைது பண்ணும்போது கைய புடிப்பாங்க அதிகாரிகள்லாம், அப்போ அவர் முகத்தை சும்மா பார்ப்பாரு. அப்டியே தியேட்டர்லாம் அதிர்ந்துச்சு அந்த சீன்க்கு. எல்லாத்துக்கும் வலிமைதான் காரணம்.
சூர்யா (சிங்கம் டயலாக்)
சூர்யா இதுவரைக்கும் மிகச்சிறந்த நல்ல படங்கள் நிறைய நடிச்சிருக்காரு. ஆனால், அவர் நடிச்ச மாஸ் படங்கள் எல்லாம் அவ்வளவா எடுபடலைனு சொல்லலாம். ஒருசில படங்களைத் தவிர. அதுல முக்கியமான படம் சிங்கம். போலீஸ் படங்கள்னாலே விஜயகாந்த்னு இருந்தது மாறி, சூர்யா… விக்ரம்னு பெயர் வந்ததுக்கு முக்கிய காரணங்கள்ல சிங்கம் படமும் ஒண்ணு. சிங்கம் படம்னு சொன்னதும் நமக்கு நியாபகம் வர்ற முதல் சீன்… ‘சிங்கத்த ஃபோட்டோல பார்த்திருப்ப… சினிமால பார்த்திருப்ப… டி.வில பார்த்திருப்ப… ஏன், கூண்டுல கூட பார்த்திருப்ப… கம்பீரமா காட்டுல நடந்து பார்த்திருக்கியா? வெறித்தனமா தனியா நின்னு வேட்டையாடி பார்த்திருக்கியா? ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா. பார்க்குறியா? பார்க்குறியா?’ அப்டின்றதுதான். ஹரியோட அந்த ஸ்பீடும்… சூர்யாவோட டயலாக் டெலிவரியும் அந்த சீனை மாஸ் சீனா செமயா தூக்கி நிறுத்தியிருக்கும்.
சண்டக்கோழி (பஸ் ஃபைட்)
சண்டக்கோழி செம மாஸான படம்ல? தாவணிப்போட்ட தீபாவளி, கேட்டா கொடுக்குற பூமி இது, முண்டாசு சூரியனே பாட்டுலாம் இன்னைக்கும் கேட்டா சலிக்கவே சலிக்காது. அப்படியே அந்தப் படத்துல வர்ற பஸ் ஃபைட் சீனையும் அவ்வளவு சீக்கிறம் மறந்திருக்க முடியாது. குறிப்பா 90’ஸ் கிட்ஸ்களால மறந்துருக்கவே முடியாது. விஷால் இண்டஸ்ட்ரீக்கு வந்த புதுசுலயே மாஸ் சீனை ட்ரைப் பண்ணி, அது வொர்க் அவுட்டும் ஆகியிருக்கும். தமிழ் சினிமால வந்த ஒன் ஆஃப் தி பெஸ்ட் மாஸ் ஃபைட் சீன்னு சொல்லலாம். பஸ்ஸூக்குள்ள விஷால், லாலை முதல்ல சும்மா அடிப்பாரு. அப்புறம் காசினு தெரிஞ்சதும் பஸ்ல இருந்து குதிச்சு வந்து பொளபொளனு பொளக்குறதுலாம் வேறலெவல்.
பருத்திவீரன் (இண்ட்ரோ சீன்)
ஒரு படத்தோட இண்ட்ரோ சீனை இப்படி ஒரு ஆங்கிள்ல மாஸா எடுக்க முடியுமானு ரசிகர்களை யோசிக்க வைச்ச ஒரு படம்னா அது பருத்திவீரன்தான். பட்டையெல்லாம் அடிச்சிட்டு ஆடிட்டே கார்த்தி வருவாரு. போலீஸ்காரங்க அவரைக் கூப்பிட்டு ‘எங்கடா போற?’னு கேக்க. ‘இதெல்லாம் ஒரு கேள்வியா? சாமி கும்பிட’னு சொல்லுவாரு. உடனே போலீஸ் அவரை வேட்டி எல்லாம் அவுத்து செக் பண்ணி அனுப்புவாங்க. போலீஸ்காரங்களை முரைச்சிக்கிட்டே இருக்கும்போது பி.ஜி.எம் ஸ்டார் ஆகும். வேட்டிய சுத்திக் கட்டிக்கிட்டு சின்னப் பையன்ட்ட இருந்து கத்தியை வாங்கி யாரப் போட வந்தாங்களோ அவனைக் குத்திக்கிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. அந்த பி.ஜி.எம், கார்த்தியோட நடிப்பு எல்லாம் மாஸ்ஸா இருக்கும். எத்தனை வருஷம் ஆனாலும் இந்த சீன்லாம் நின்னு பேசும்.
சூதுகவ்வும் (பேங்க் சீன்)
இதுவரைக்கும் நாம பார்த்தது சீரியஸான மாஸ் சீன். ஆனால், இப்போ நாம பார்க்கப்போறது காமெடி கலந்த சீரியஸ் மாஸ் சீன். குழப்புதுல? சரி சீனுக்கு வருவோம். படம் ஃபுல்லாவேடார்க் காமெடியைதான் ட்ரை பண்ணியிருப்பாங்க. அதுல மாஸ் சீன் வைச்சு நலன்குமாரசாமி கலக்கியிருப்பாரு. விஜய் சேதுபதி நடிச்ச மாஸ் சீன்கள் எக்கச்சக்கமா இருக்கு. ஆனால், அந்த லிஸ்ட்ல சூது கவ்வும்க்கு எப்பவுமே தனி இடம் உண்டு. கடத்துன குடும்பத்துக்கு பாதிப்பு வராம டீல் பேசி… அவரைத் தண்ணி எல்லாம் குடிக்க வைச்சு. நேரடியா அவர் இடத்துக்கே போய் காசு வாங்கிட்டு… திரும்பி கண்ணாடி போட்டுக்கிட்டே கதவ திறந்து நடந்து வரும்போது ஒரு பிஜிஎம் வரும் பாருங்க… அப்படியே புல்லரிக்கும். இதைத்தவிர வேற என்ன வேணும் ஒரு விஜய் சேதுபதி ஃபேன்க்கு. இன்னைக்கும் பலரோட ரிங்டோனா அந்த பி.ஜி.எம் இருக்கும்.
சார்பட்டா பரம்பரை (நான் அடிச்சு தூக்குறண்டா சீன்)
ஆர்யா ரொம்ப நாளைக்கு அப்புறம் வேறலெவல்ல கம்பேக் கொடுத்த படம்னா அது ‘சார்பட்டா பரம்பரை’தான். அந்தப் படத்துல நிறைய மொமன்ட்ஸ் இருக்கு. அதுல முக்கியமான மொமன்ட் ஆகவும் அதே நேரம் மாஸ் மொமன்ட் ஆகவும் அமைந்த ஒரு சீன்னா அது, ‘என்னங்கடா… ஆளாளுக்கு என் வாத்தியாரை பல்லு புடிச்சு பார்க்குறீங்களா? ஏன் வேம்புலி உன்னை அடிச்சு நான் தூக்குறன்டா!’ அப்டின்னாரு. உடனே, ‘ஜோக் காட்றீங்களா?’ அப்டினு பேசுவாங்க. ரோஸூம் கலாய்ப்பாரு. ‘ரெண்டு ரௌண்ட்ல ஆட்டத்தையே முடிச்சிருவேன்’னு கபிலன் சொல்லுவார்ல. அதுவும் மாஸ்க்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லை.
தூள் (பாட்டு ஃபைட் சீன்)
விக்ரம்க்கும் சாமி, அந்நியன், தில், ஜெமினி அப்டினு பல படங்கள்ல மாஸ் சீன்கள் இருக்கு. அதுவும் என்னைக்குமே விக்ரம் ஃபேன்ஸோட ஃபேவரைட் சீன்தான். பறவை முனியம்மாவை ரௌடிகள்ல்லாம் துரத்தி அடிப்பாங்க. அப்போ, விக்ரம் தீப்பொறி எல்லாம் பறக்க எண்ட்ரி ஆவாரு. ஆனால், எப்பவுமே மறக்கமுடியாத ஒரு சீன்னா. அது தூள் படத்துல வர்ற சீன்தான். அந்த சீன்ல ஸ்பெஷலே பறவை முனியம்மா பாடுற பாட்டுதான். ஃபைட் சீனையே செம மாஸா மாத்தியிருக்கும். பொதுவா ஃபைட்டுக்கு தீம்தான் போடுவாங்க. ஆனால், பாட்டு போட்டது அந்தப் படத்துலதான்னு நினைக்கிறேன். ‘சிங்கம்போல நடந்து வர்றான் செல்லப் பேராண்டி’னு பாடும் போது நம்மள சுத்தியும் ஃபையர் பறக்கும். செம மாஸ் சீன்ல!
தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிச்ச மாஸ் சீன் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!