தமிழ் சினிமாவில் கேங்க்ஸ்டர் படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நாயகன் முதல் வடசென்னை வரை வெளியான கேங்க்ஸ்டர் படங்களின் நாள்களை ஆண்டுதோறும் ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதே இல்லை. அப்படி, தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிய தமிழ் கேங்க்ஸ்டர் படங்களின் லிஸ்ட் இதோ…
Also Read : காலேஜ் பெண்களின் ‘க்ரஷ்’ லிஸ்ட்ல யார்லாம் இருக்காங்கனு தெரியுமா?!
-
1 நாயகன் - 1987
சோத்துக்கு திண்டாடனும். நாலு காசு சம்பாதிக்கனும்னா சாகணும், சம்பாரிச்ச காச வீட்டுக்கு கொண்டாரதுக்குள்ள ரத்த அடி படணும். ஒரு நாளைக்காவது ராத்திரி வரையிலும் நாம உயிரோட இருப்போம்னு நம்பிக்கை உண்டா? இல்ல. திருப்பி அடிச்சாதான் அடில இருந்து தப்பிக்க முடியும்.
-
2 தளபதி - 1991
இது சூர்யா சார்.. உரசாதீங்க! ஏய்.. தொட்ரா பாக்கலாம்... தொட்ரா பாக்கலாம்..
-
3 புதுப்பேட்டை - 2006
எனக்கு சக்தி இருக்கும்போதே... பணம் இருக்கும்போதே... எங்கத்திக்கு பயம் இருக்கும்போதே... நான் செட்டில் ஆகணும். இங்க எவன் ஜெயிக்கிறானோ இல்லையோ.. நான் ஜெயிச்சு காட்றேன்!
-
4 பில்லா - 2007
சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க. அது நமக்குக் கத்துக் கொடுத்தது ஒண்ணுதான். நாம வாழனும்-னா யார வேணாலும் எத்தனை பேர வேணாலும் கொல்லலாம்.
-
5 தலைவா - 2013
நீ வேற நாட்லயோ.. இவங்க வேற நாட்லயோ இல்லடா.. ஒரே நாடு இந்தியா. இங்க யார் வேணாலும் எங்க வேணாலும் வாழ உரிமை இருக்கு.
-
6 ஜிகர்தண்டா - 2014
நம்மள பாத்து பல்ல காட்டுனா மட்டும் ஏத்துக்கவே முடியாது. அப்ப வந்துச்சு உடம்புக்குள்ள ஒரு வெறி.. மத்தவங்க நம்மள பாத்து பயந்து ஒதுங்கும்போது ஒரு கிக்கு வரும்.. அதை மட்டும் அனுபவிச்சிட்டோம். அவ்வளவுதான்!
-
7 விக்ரம் வேதா - 2017
முட்டை உடைஞ்சிடுச்சுனா... முட்டை உடைஞ்சிடுச்சு... முட்டை உடைஞ்சிடுச்சுனு புலம்பிட்டே இருக்கக்கூடாது. உடைஞ்ச முட்டைய ஆம்லேட் போட்டமா சாப்டமானு இருக்கணும்.
-
8 காலா - 2018
க்யா ரே செட்டிங்கா... வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன்... தில் இருந்தா மொத்தமா வாங்கல...
-
9 வட சென்னை - 2018
எங்க போனாலும் திரும்பி வர்றதுக்கு ஊர் இருக்கும்ன்ற நம்பிக்கைலதாங்க ஊர விட்டே போறாங்க.. திருப்பி வர சொல்ல ஊரே இருக்காதுனா எப்படி போவாங்க? குப்ப மேடோ குடிசையோ இது நம்ம ஊருக்கா... நம்மதா அதுக்கு சண்ட செய்யனும். நம்மதான் அத இம்ப்ரூவ்மென்ட் பண்ணனும்!
ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது.. இவனுங்களோட நம்ம சண்டை செய்றதே நம்மளும் ஆளுனு காட்றதுக்குதான். ஜெயிக்கிறமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யனும். திருப்பி அடிக்கலைனா இவனுங்க நம்மள அடிச்சி ஓடவுட்னே இருப்பானுங்க!
0 Comments