`நாமம் போட்டா நல்லவரா?’… `கோமாளி’ பிரதீப் ரங்கநாதன் ரோஸ்ட்!

பிரதீப் ரங்கநாதன், அதாங்க கோமாளி டைரக்டர். ஸ்டேஜ்ல ஒண்ணுல இவர் சமீபத்துல ஏறி நிக்கும்போது “எப்படி இருக்கீங்க?”னு கேப்பாங்க. அதுக்கு கையை விரிச்சுட்டு “எப்படி இருக்கேன்?”ன்னு அவரே கேட்டுட்டு, சூப்பரா இருக்கேன்னு சொல்லுவாரு. அப்போ, ஆடியன்ஸ் கூட்டத்துல இருந்து “கேவலமா இருக்க”னு சவுண்ட் வரும். உடனே, பிரதீப் அதுக்கு, “தேங்க்ஸ்ங்க. என்னனா, இந்த கேவலமா இருக்கேன்றதை சின்ன வயசுல இருந்து கேட்டுட்டு இருக்கேன். எனக்கு இப்படி கேக்குறது புதுசே இல்லை. எது புதுசுனா, நான் இங்க நிக்கிறது தான் புதுசு”னு ஸ்டேஜை காமிப்பாரு. ப்பா, ஸ்லிப்பர் ஷாட் ரிப்ளைங்கனு இந்த வீடியோவை ஷேர் பண்ணி, ஃபயர் விட்டு மார்னிங் போட்டிவேஷன்னு போட்டு ஸ்டேட்டஸ்லாம் வைச்சிட்டு இருந்தாங்க. நல்ல பாஸிட்டிவ் வைப்ஸ்ல தான பேசிருக்காரு! அதுக்குள்ள ஏன் வைச்சு செய்றாங்கனு பார்த்தா, அது ஒரு சம்பவம், தோண்டிப் பார்த்து இன்னும் நிறைய சம்பவங்கள் வந்துச்சு. அதான், க்யாரே, ரோஸ்ட்டானு கிளம்பியாச்சு.

Pradeep
Pradeep

லவ் டுடேன்ற படத்துல ஹீரோவா நடிச்சு, அதை டைரக்ட் பண்ணவும் செய்துருக்காரு. கோமாளி மிகப்பெரிய ஹிட் ஆனதுனால, இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. தளபதி டைட்டில் வைச்சிருக்காரு, அதுனால தளபதி ஃபேன்ஸும் வெயிட்டிங். சமீபத்துல அந்தப் படத்துக்காக ஒரு புரொமோஷன் இண்டர்வியூ கொடுத்துருந்தாரு. அதுல அவர் பேசுனதுதான் சம்பவம். “நான் இந்தப் படத்துல அப்பா கேரக்டரை ரொம்ப ஸ்ரிக்ட்டாவும் ஆர்தோடக்ஸாவும் காட்டணும்னு நினைச்சேன். ஷார்ட் ஃபிலிம் பண்ணும்போது 3 நிமிஷம்தான் கன்டன்ட். நான் அவர் கரெக்ட்டான ஆளா இருக்கார்னு காட்டணும்னா, ஒரே ஷாட்டுதான் தேவைபட்டுச்சு. ஒரு நாமத்தை பெர்ஃபெக்டா வைச்சாருனா, அவர் பயங்கர ஆர்தொடக்ஸான, ஸ்ட்ரிக்டான, பிரில்லியண்டான, எடுகேட்டடான அப்பானு தோணுச்சு. அந்த நாமம் ஷார்ட் பயங்கர ஆர்கனைஸான ஆள்னு காமிச்சுச்சு. வேற வழில காமிக்கிறதைவிட இது ஈஸினு தோணிச்சு”னு சொல்லிருக்காரு.

கோமாளி டைரக்டர் பிரதீப் சொல்றது எவ்வளவு பிற்போக்குத்தனமான கருத்துனு பாருங்க. இதை பார்க்கும் போது, கோமாளி படத்துல இன்ட்ரோ சீன் நியாபகம் வந்துச்சு. அதாவது ஜெயம் ரவியை அவங்கப்பா ஸ்கூல் போய் சேர்க்கும்போது அங்க நடக்குற சம்பவங்கள். டீச்சர் ஹீரோ அப்பாக்கிட்ட ஃபில் பண்ண ஃபார்மை திரும்பக் கொடுத்து, “சார், இதுல காஸ்ட் ரிலீஜியன்லாம் ஃபில் பண்ணாம இருக்கு”னு சொல்வாங்க. உடனே, அவங்க அப்பா, பையன்கிட்ட திரும்பி, “காஸ்ட்னா என்னப்பா?”னு கேப்பாரு. அதுக்கு அந்தப் பையன் திரு திருனு முழிச்சுக்கிட்டே, “தெரியலைப்பா”னு சொல்லுவான். மகனைப் பார்த்து அப்பா, சிறப்பு முக்தி நிலை அடைஞ்சு டீச்சர்க்கு கிளாஸ் எடுக்க ஸ்டார்ட் பண்ணிடுவாரு. “அவங்களுக்கு தெரியாத விஷயத்தை நாம தான் கத்துக்கொடுக்குறோம். என் பையன் எதுவும் தெரியாமல் சமமா வளறனும். அந்த ஃபார்மை நான் ஃபில் பண்ண மாட்டேன்”னு சொல்லுவாரு. சமமா இருக்கணும் சரிதான். ஆனால், ஃபார்ம்ல இருந்து காஸ்ட் காளத்தை தூக்கிட்டா சாதி ஒழிஞ்சுரும்னு சொல்றீங்க பாரு. எங்க இருந்துடா வர்றீங்க?

வாழ்க்கைல இருந்துதான் இன்ஸ்பைர் பண்ணி வைச்சேன்னு இன்டர்வியூலயெல்லாம் சொல்லிட்டு சுத்துறாரு. “நான் ஸ்கூல் படிக்கும்போது கேட்டாங்க. அப்போதான் நான் அம்மாக்கிட்ட கேட்டு அது என்னனு தெரிஞ்சுக்கிட்டேன்”னு சொல்றாரு. ஆனால், இன்டர்வியூல அந்த கம்யூனிட்டி காளம்லா வேணும். ஏன்னா, அப்போதான், நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்னு சொல்றாரு. இதை தனியா உட்கார்ந்து புலம்பி என்ன பிரயோஜனம்? படத்துலதான சொல்லணும்! இவ்வளவு அரிய பல கருத்துக்களை பிரதீப் சொன்னதால, நம்ம நெட்டிசன்கள் சும்மா இருப்பாங்களா? “கோமாளி பிரதீப்னு சொன்னாங்க. கரெக்டு தான்”னு வைச்சு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. சமமா இருக்கணும்னு பேசுனாருல? அப்போ, எல்லாரையும் சமமாதான படத்துலயும் காமிக்கணும்? ஆனால், வர்ற பொண்ணுங்களப் பார்த்து அட்டு ஃபிகர்னு கலாய்ச்சு டயலாக் எழுதியிருப்பாரு. படம் முழுக்க வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்லயும் ஃபேஸ்புக் போஸ்ட்லடும் இருந்து எழுதுன டயலாக்ஸ்தான். ஒண்ணு, ரெண்டு டயலாக் நெஞ்சை நக்குற மாதிரி இருக்கும். அப்போலா, ண்ணோவ் சமுத்திரகனிணானு தோணும். வர்ற காமெடியெல்லாம் பார்த்தா, ண்ணோவ் முத்தண்ணானு தோணும்.

காதல்னா என்னனு தெரிஞ்சுக்கணுமா? அணுகுவீர், பிரதீப் ரங்கநாதன் மாஸ்டர். பிஹெச்.டி இன் காதல், பெண் சைக்காலஜி, கலாச்சாரம் அண்ட் எக்ஸட்ரா எக்ஸட்ரா. கோமாளி படத்துல காதல்னா என்னனு கிளாஸ் எடுப்பாரு. குஷி படத்துல எவ்வளவோ விஷயங்கள் பேச இருக்கு. ஆனால், அதை விட்டுட்டு. ஜோதிகா இடுப்பை விஜய் பார்த்ததால அந்தக் காதலே கெட்டுப்போச்சுனு பேசியிருப்பாரு. அலை பாயுதே படத்துல தாலியை ஷாலினி கழட்டி வைக்கிறதைப் பார்த்துட்டு உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பொங்கி எழுவாரு. ஏங்க, அவனவன் விர்ச்சுவல் வேர்ல்டுக்குப் போய், நிலாவுக்குப் போய்லாம் காதலிச்சுட்டு இருக்கான். நீங்க என்னடான்னா, தாலியை கழட்டி வைச்சதை பாவமா பேசிட்டு இருக்கீங்க். லிவிங் இன் ரிலேஷஷிப்னு ஒண்ணு இருக்கு. அதை ஓகே கண்மணில மணி ரத்னம் அழகாவே சொல்லியிருப்பாரு. அதையும் கலாச்சுருப்பாரு. அந்தப் படம் பார்த்து முடிச்சதும் கோமால இருக்குறது ஜெயம் ரவி இல்லை. அந்தப் படத்தோட டைரக்டர் பிரதீப் ரங்கநாதன்தான்னு முடிவே பண்ணிடலாம். கிரிஞ்சு, பூமர்னு எந்த லிஸ்ட்லயும் சேர்க்கக்கூடாத, முழுவதும் விமர்சிக்கப்பட வேண்டிய படம்னா கோமாளிதான்.

Pradeep - Ivana
Pradeep – Ivana

லவ்வருன்றவ காத்தாடி மாதிரி ஃப்ரீயா விடணும். எதாவது தப்பு நடக்குற மாதிரி இருந்தா நம்ம பக்கம் இழுத்துடணும்னு ஆட்டோ பின்னால எழுதுற மாதிரி விளக்கம்லாம் சொல்லுவாரு. ஆனால், இவரு மட்டும் கல்யாணம் ஆன பொண்ண போய் லவ் பண்ணுவாரு. என்ன லாஜிக்கோ? எப்படி இப்படிலாம் எழுதுறாங்கனு ரொம்ப நாளா டவுட்டு. இந்த லட்சணத்துல விஜய்கிட்ட கதை சொன்னதா சொல்லிருக்காரு, அவர்கிட்ட பெர்மிஷன் வாங்கிதான் லவ் டுடேனு டைட்டில் வைச்சதாகவும் சொல்லியிருக்காரு. ஆனால், முன்பொரு காலத்துல விஜய்யவே செமய கலாய்ச்சுருக்காரு. ட்விட்டர்ல ஒருத்தர், “எனக்கு நியாபகம் இருக்கு, கத்தி படம் ரிலீஸ் ஆகி ரெண்டாவது வாரம் எனக்கு டிக்கெட் கிடைக்கலை. ஆனால், லிங்கா படத்துக்கு டிக்கெட் காலியா இருந்துச்சு”னு சொல்லிருந்தாரு. அதுக்கு நம்ம பிரதீப், “கத்தி படத்துக்கு முதல் நாள் எனக்கு ஈஸியா டிக்கெட் கிடைச்சுது. ஆனால், லிங்கா படத்துக்கு கிடைக்கலை”னு போட்ருந்தாரு. சரி, இதை விடுங்க. ஆனால், கோமாளில ரஜினிகாந்தையும் சேர்த்துதான் கலாய்ச்சு விட்ருந்தாரு. அதுக்கப்புறம் ரஜினி ரசிகர்கள் வைச்சு செஞ்சதுக்கு அப்புறம் அந்த சீனை தூக்குனாங்க.

Also Read – திருமலையை விஜய் தேர்ந்தெடுத்த கதை தெரியுமா..?

நம்ம இட் இஸ் பிரஷாந்த் இருக்காருல, ஜில்லா படம் ரிலீஸ் ஆனப்போ, “ரீசன்ட் டைம்ஸ்ல விஜய் சிறப்பா டப்பிங் பண்ண படங்கள்ல ஜில்லாவும் ஒண்ணு. நிறைய மாடுலேஷன் இருந்துச்சு”னு போட்ருந்தாரு. அதுக்கு பிரதீப் கமெண்ட்ல போய், “அடப்பாவி சுறா பார்ட் 2 டப்பிங் மாதிரி இருந்துச்சுடா”னு எழுதிருக்காரு. விஜய் ஃபேன்ஸ் சும்மாவே அடிப்பாங்க. இப்போ, சான்ஸ் வேற கிடச்சுருக்கு விடுவாங்களா? கமெண்ட்ல போய், “உனக்கு எப்பவுமே எதிரியை அழிக்கிறதுதான் புடிக்கும்ல? எனக்கு எப்படி தெரியுமா? எதிரியை வாழவிட்டு அவன் முன்னாடி வாழ்ந்து காட்றதுதான் புடிக்கும்”னு விஜய் பேசுற டயலாக்கை போட்ருந்தாரு ஒருத்தர், இன்னொரு விஜய் ஃபேன், “வாழ்க்கை ஒரு வட்டம்டா”னு கமெண்ட் பண்ணியிருந்தாரு. இன்னொரு ரசிகை ஒரு படி மேல போய், “இந்த ட்வீட் போடும்போது நினைச்சுகூட பார்த்திருக்க மாட்டிங்க ஒருநாள் இவர் கிட்டயே இவரோட படம் டைட்டிலுக்காக போய் நிப்பிங்கன்னு. வாழ்க்கை ஒரு வட்டம்டா. அந்த டயலாக் கண்ணாடி முன்னாடி நின்னு ஒரு தடவை சொல்லி பார்த்துக்கோங்க. இப்போ புரியும் னு நினைக்கிறேன். சுறாஃபேனா இருக்குறது எவ்ளோ பெருமைனு”னு கமெண்ட் போட்ருந்தாங்க. வேறலெவல் செய்கை.

பிரதீப் பேசுனதை மறந்து ரஜினி, விஜய் ஃபேன்ஸ்லாம் இப்போ அவருக்கு சப்போர்ட் பண்ணி வாழ்த்துக்கள் பதிவும் போடுறாங்க. எப்பவும்போல, லவ் டுடே படத்துலயும் தேவையில்லாத பிற்போக்குத்தனமான சில கருத்துக்களைதான் சொல்லியிருப்பாரு. கேட்டா, அதான் டிரெண்டிங்னு சொல்லுவாரு. அப்போவும் ரோஸ்ட் போடுவோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top