மௌனம் பேசியதே கௌதம்

`மொரட்டு சிங்கிள்களின் முன்னோடி’ – `மௌனம் பேசியதே’ கௌதம்!

மொரட்டு சிங்கிள் என்கிற வார்த்தை சமீபகாலமாகத்தான் பிரபலமாக இருக்கிறது. ஆனால், 2002 வாக்குலயே மொரட்டு சிங்கிள்னா யாருனு ஒரு ரெஃபரென்ஸ் படைச்ச கேரக்டர்தான் `மௌனம் பேசியதே’ கௌதம் கேரக்டர்… டைரக்டர் அமீரோட முதல் படமான மௌனம் பேசியதே இன்னிக்கும் மொரட்டு சிங்கிள்களோட ஆதர்ஸமான கேரக்டர்னே சொல்லலாம். அப்படி, மௌனம் பேசியதே படத்துல கௌதம் கேரக்டர் பண்ண மாஸான 4 சம்பவங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

இந்தப் படத்துல கௌதம் கேரக்டரை அமீர் வடிவமைச்சதுக்குப் பின்னாடி ஒரு இன்ஸ்பிரேஷனும் இருந்துருக்கு… அதைப் பத்தியும் சொல்றேன் வீடியோவை முழுசா பாருங்க.

Mounam Pesiyadhu Gautam
Mounam Pesiyadhu Gautam

* பெத்தவங்களுக்காக காதலை தூக்கி எறிஞ்சுதான் பாருங்களேன்!

படத்துல ஃபர்ஸ்ட் ஹாஃப்ல இருக்க கௌதம் கேரக்டர் மொரட்டு சிங்கிள்ஸோட பெரிய Authoritarian-ஆவே இருப்பார். இதுக்கு ஒரு நல்ல எக்ஸாம்பிள், கண்ணனோட ஃப்ரண்ட் லவ் பண்ற பொண்ணைக் கூட்டிட்டு வர்றதுக்காகப் போற சீனைச் சொல்லலாம். கண்ணனோட ஃப்ரண்ட் லவ்வருக்கு விடிஞ்சா கல்யாணம். மண்டபத்துக்கு நேரடியா போற கௌதமும் கண்ணனோட ஃப்ரண்டும் அவங்களைக் கூட்டிட்டு வர்றதுதான் பிளான். ஆனா, பொண்ணோட ரூமுக்குப் போய் பாட்டிகிட்ட கத்தியைக் காட்டி மிரட்டி கைல மருதாணியோட பொண்ணைக் கூட்டிட்டு வருவாரு கௌதம். அதுக்கப்புறம்தான் ட்விஸ்டே, பொண்ணோட அப்பாகிட்ட சொல்லாம போகக் கூடாதுனு அவர்கிட்ட தனியா பேசணும்னு கூட்டிட்டு வருவாரு. ஆரம்பத்துல பொண்ணோட அப்பாவை மிரட்டுற கௌதம், பின்னாடி அப்படியே கட்சி மாறுவாரு. `நான் யாருன்னே தெரியாது.. உங்க அப்பாவை அடிக்கப் போனேன். ஆனா, அதைத் தடுக்கணும்னு உனக்குத் தோணலை’னு ஆரம்பிச்சு அவர் கொஞ்சம் கொஞ்சமா பொண்ணோட மனசை மாத்தி அப்பா கூடவே இருக்க மாதிரி பண்ணிடுவார். `ஒரு தடவை பெத்தவங்களுக்காகக் காதலைத் தூக்கி எறிஞ்சுதான் பாருங்களேன்’னு கௌதம் பேசுற டயலாக்லம் வேற லெவல். விரக்தியோட வெளில வர்ற கண்ணனோட ஃப்ரண்ட் சுதாகரை, வேற நல்ல ஒரு பொண்ணா பார்த்து நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சமாதானப்படுத்துவார். ஆனா சுதாகர், `டேய் ஜீன்ஸ் போட்ட சகுனி. என்ன மாதிரி ஒருநாள் லவ் பண்ணி கஷ்டப்படுவடா’னு மண்ணை அள்ளித் தூத்தி சாபம் விட்டுட்டுப் போவார். இப்படி மொரட்டு சிங்கிளாவே மனுஷன் வாழ்ந்து காட்டியிருப்பார்.  

Mounam Pesiyadhu Gautam
Mounam Pesiyadhu Gautam

* ஃப்ரண்ட்ஷிப் கோல்ஸ்

மொரட்டு சிங்கிள்ஸ் எந்த சூழ்நிலைலையும் எதுக்காகவும் தங்களோட ஃப்ரண்ட்ஸை விட்டுக்கொடுக்கவே மாட்டாங்கன்னு கௌதம் பல இடங்கள்ல நிரூபிச்சிருப்பாரு… என்னதான் தன்னோட ஃப்ரண்டு கண்ணனோட பல இடங்கள்ல வேறுபட்டு நின்னாலும் அவரை எந்த இடத்துலயும் விட்டுக்கொடுக்கவே மாட்டாரு நம்ம கௌதம். மஹாவோட அப்பா கண்ணனை ஆள் வைச்சு அடிச்ச பிறகு, கண்ணனோட அப்பா அதுக்குப் பெருசா எதிர்வினையாற்றாம அமைதியா இருக்கச் சொல்வாரு.. அதுக்கு நம்ம கௌதம் சொல்ற பதில் அல்டிமேட்… `அப்படிலாம் விட்டுட்டு போன ஊர்ல ஒரு பய மதிக்க மாட்டான். உங்களுக்கு வேணா உங்க பையன் தேவையில்லாம இருக்கலாம்; ஆனா, எனக்கு என் ஃப்ரண்டு முக்கியம்’னு தோள்ல இருக்க கையைத் தட்டி விட்டுட்டு கெத்தா கிளம்பிப் போய் ரிவெஞ்ச் எடுப்பாரு. அதேமாதிரி, மஹாவோட ஃபர்த்டே ட்ரீட்டுக்குப் போய் கண்ணனை எடுத்தெறிஞ்சு பேசிட்டு வந்தபிறகு, அவனோட ஆபிஸுக்கே நேரா போய் மன்னிப்புக் கேக்குற ஈர மனசுக்காரர் நம்ம கௌதம். இப்படி, என் ஃப்ரண்டைப் போல யாரு மச்சான்னு கேக்குற அளவுக்கு நட்பு மேல அவ்வளவு உரிமையா இருக்கவர் கௌதம்.

Mounam Pesiyadhu Gautam
Mounam Pesiyadhu Gautam

* கரியர் முக்கியம் பாஸ்

காலேஜ் முடிச்சதும் சொந்தக் கால்ல நிக்கணும்னு சொந்தமா ஒரு ரெஸ்டாரெண்ட் நடத்துவாரு கௌதம். என்னதான் லைஃப்ல நீங்க மொரட்டு சிங்கிளாவே இருந்தாலும், உங்க கரியர் ரொம்ப முக்கியம்னு லைஃப் லெஸன் எடுத்துருப்பார். அந்த ரெஸ்டாரெண்ட்லயே தன்னோட ஃப்ரண்டுக்கும் வேலை போட்டுக் கொடுப்பாரு. Financial-ஆ நீங்க நிமிர்ந்து நிக்கணும்ங்குறதுதான் கௌதம் நமக்குச் சொல்ற முக்கியமான பாடம்.

* கடைசிவரைக்கும் சிங்கிளாவே இருந்துடாதீங்க பாய்ஸ்!

மொரட்டு சிங்கிளாவே இருந்தாலும் நம்ம கௌதம் காதலுக்கு எதிரி இல்லை. `காதல்ங்குறது இதயத்துல இருந்து வரணும்; கண்ணுல இருந்து வரக்கூடாது’ங்குறதுதான் அவரோட பாலிசி. கண்ணனுக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லைங்கிறதை சந்தியாகிட்ட சொல்லப் போய், கடைசில சந்தியா சொல்ற ஒரு டயலாக்கால தூக்கத்தையே தொலைச்சுருவாரு கௌதம். எப்பவும் தன்னோட பைக்ல சிங்கிள் சீட்டோட அலையுற கௌதம் ஒரு கட்டத்துல பைக்ல பின் சீட்டை மாட்டுறது, உருகி உருகி காதலிக்குறதுன்னு லவ்வர் பாயாவே மாறிடுவார். ஆனா, கடைசில சந்தியா தன்னோட லவ்வரை Introduce பண்ணி வைச்சதுல ஷாக் ஆகிடுவாரு… `வரச்சொன்னா, இப்போ இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றா’னு ஒரு மாதிரி ஜென் நிலைமைக்குப் போய் புலம்பிக்கிட்டே `காதல் செய்தால் பாவம்; பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்’னு பாட்டே பாடுவார். கடைசில, காலேஜ் டைம்ல இருந்து தன்னை ஃபாலோ பண்ற லைலா செஞ்ச காரியங்களை சந்தியா செஞ்சதா நினைச்சு நாமதான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டோம்னு தெரிஞ்சுக்குவார். அதுக்கப்புறம் தயக்கமே இல்லாமல் லைலாகிட்ட கிஃப்டைக் கொடுத்து அவங்களோட கார்ல ஏறிப்போவார். கடைசி வரைக்கும் சிங்கிளாவே இருந்திடாதீங்கனு கௌதம், இதன்மூலமா நமக்குச் சொல்லிருப்பார்.

Mounam Pesiyadhu Gautam
Mounam Pesiyadhu Gautam

கௌதம் கேரக்டரை எழுதுறதுக்கு டைரக்டர் அமீருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது, அவரோட ஃப்ரண்டு ஒருத்தராம். ரொம்பவே பெக்கூலியரான அந்த ஃப்ரண்டுக்கு பொண்ணுங்கனாலே ஆகாதாம். காதல்னு சொன்னாலே எட்டடி தள்ளிதான் நிப்பாராம். அவரை இன்ஸ்ஃபையரா வைச்சுதான் கௌதம் கேரக்டரையே அமீர் டிசன் பண்ணிருக்கார். மொரட்டு சிங்கிள் கௌதம் கேரக்டரோட, யுவனோட மேஜிக்கல் மியூஸிக், அமீரோட முதல் படம், ஹீரோயினா த்ரிஷா நடிச்ச முதல் படம்னு பல ஹிஸ்டாரிக்கான கிரீடங்களைத் தாங்கி நிக்குற படம்தான் மௌனம் பேசியதே…

கௌதம் கேரக்டர்ல உங்க கேங்க்ல யாராவது இருக்காங்களா… அப்படி இருந்தா மறக்காம அவங்களை டேக் பண்ணி கமெண்ட் பண்ணுங்க.!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top