‘செத்தான்டா’, ‘ஹப்பாடா மாட்டிகிட்டான்’, ‘அல்லு விட்ருச்சு’ அப்படிங்குறே ரேஞ்ச்ல மக்களைப் பேச வச்சிட்டாலே த்ரில்லர்கள் ஹிட்டடிச்சுரும். போர்த்தொழில் மட்டுமில்ல… அப்படி ஹிட்டடிச்ச கட்டாயம் பார்க்க வேண்டிய இந்த மூன்று படங்களையும் பாருங்க.

ஏழு முதன்மையான பாவங்கள், அந்தப் பாவங்களைச் செய்றவங்களுக்கு என்ன தண்டனை தரனும்னு மதப் புத்தகங்கள் என்ன சொல்லுதோ அதனடிப்படையில் அவங்களுக்குத் தண்டைனை தர்றதுன்னு ஒரு சீரியல் கில்லர் சுத்திகிட்டிருப்பான். அவனை ரெண்டு போலீஸ்காரங்க தேடுவாங்க.
இருங்க… இருங்க… நான் அந்நியன் படத்தைப் பற்றிப் பேசல.
போர்த்தொழில் மாதிரியே ஒரு சீனியர் டிடெக்டிவ், அந்த ஊருக்கு புதுசா வந்திருக்க இன்னொரு டிடெக்டிவ், ஊரில் நடக்குற வித்தியாசமான கொலைகளைக் கண்டுபிடிக்க தீயா வேலை செய்யும் போது ஒரு டிவிஸ்ட், கடைசி கொலைக்கு முன்பே அந்த சீரியல் கில்லர் தானா வந்து சரண்டர் ஆகுறான்… அப்போ அந்த கடைசிக் கொலை…? அங்க ஒரு டிவிஸ்ட்…
ஒன்லைன் கேட்டா அந்நியன் படம் மாதிரி இருந்தாலும் டேவிட் பின்ச்சர் எடுத்தாலே மாஸ்டர் பீஸ் படம்தான் எடுப்பாரு… அதுலயும் “செவன்” படம் ஒரு ‘ரேர் பீஸ் மாஸ்டர் பீஸ்’ படம். போர்த்தொழில் டைரக்டர் விக்னேஷ் ராஜாவே டேவிட் பின்ச்சரோட பெரிய ஃபேனாம்…

போர்த்தொழில்ல சரத்குமார் கேரக்டரே ஒரு மாதிரி டார்க்கா, பெரிய பெரிய சோகங்களை சுமந்துகிட்டிருப்பாருல்ல… அந்த கேரக்டரோட டார்க் நேச்சருக்கு இன்ஸ்பிரேஷனே True detectives சீஸன் ஒன்றின் Rust Cohle தான்.
லூசியானா போலீஸ் தற்போது விசாரித்துக்கொண்டிருக்கும் சில கொலைகளுக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில கொலைகளுக்கும் இருக்கும் தொடர்புகளை விசாரிக்கும் போது முந்தைய கொலைகளை விசாரித்த ரஸ்ட் கோலும், மார்டின் ஹார்ட்டும் பழைய கொலைகளையும் விசாரணைகளையும்ப் பற்றி விளக்கி, நிகழ்காலத்தில் கொலைகாரணைக் கண்டறிந்து குற்றங்களைத் தடுத்தார்களா என்பது தான் முதல் சீஸனின் கதை. கதையா ஒரு பக்கம், கொடூரமான கொலைகளும், விநோதமான காரணங்களும், இதுக்குக் காரணமானவன் யாரா இருக்கும்னு நாம மண்டையப் பிச்சிகிட்டு உட்காரும் போது… ரஸ்ட் கோல் தத்துவமாவும், வாழ்க்கையை வெறுத்துப் போய் பேசுறதுமா இந்த சீரிஸ்க்கு வழக்கமான இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர் வகைப் படங்கள்ல இருந்து வித்தியாசமா காட்டும். போர்த்தொழில்ல சரத் குமார் பேசுற சில வசணங்களை விட இந்த சீரிய்ஸ் டயலாக்ஸ் தீயா இருக்கும்.

சீஸனோட பைனல் எபிசோடில் நட்சத்திரங்களை வச்சு ரஸ்ட் பேசுற ஒரு டயலாக்… இந்த மாதிரி சீரியல் கில்லர், இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர் படங்களில் பேசுவாங்கன்னு யோசிக்கவே முடியாத வகையில் இருக்கும். எப்படிடா யோசிச்சீங்கன்னுதான் இருக்கும்.
ஒரு இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர்னாலே பயமா, அழுகாச்சியா, திகிலா இருக்கனும்னு அவசியம் இல்லை. டார்க் காமெடியை அள்ளித்தூவி அபத்தமான கதையிலும் ஒரு அழகான இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரை படமா எடுக்கலாம்னு கோயன் பிரதர்ஸ் இந்த உலகத்துக்கு பாடமெடுத்த படம் தான் Fargo (1996 Movie) இதே போர்ல டெலிவிஷன் சீரிஸும் இருக்கு.

ஒரு கடத்தல், ஒரு கொலை, மேலும் ரெண்டு கொலைகள் இவ்வளவும் ஒரே ஊர்ல அடுத்தடுத்து நடக்குது. கொஞ்சம் புத்திசாலித்தனமான ஒரு டிடெக்டிவ் இந்த மூன்று விஷயங்களையும் முடிச்சுப் போட்டு குற்றவாளியை நெருங்கிருவாங்க… கடத்தல் நாடகமா ஆரம்பிச்சு, கடத்தலா மாறி, கொலையா மாறி… படம் வேறவா மாறும் என்னதான் டார்க் காமெடியா இருந்தாலும், ரத்தம் தெறிக்கும் விதவிதமான கொஞ்சம் அதீத வன்முறை படம் முழுக்கவே இருக்கும்.
Also Read – குஜராத் மாடல்.. இந்தியாவுக்கே ரோல் மாடல்.. உண்மையா? – ரோஸ்ட்!
அந்த புத்திசாலி டிடெக்டிவ் ஒரு 7 மாத கர்ப்பிணி. குற்றவாளியை நெருங்க நெருங்க நமக்கு ஒரு பதட்டம் தொத்திக்க ஆரம்பிக்கும். மேலே சொன்னேன்ல மௌனகுரு பழனியம்மாள் கதாபாத்திரத்துக்கு இந்தக் கேரக்டர் தான் இன்ஸ்பிரேஷன்.
இந்தப் படம் வந்த பல வருடங்களுக்குப் பிறகு இதே மாதிரி டார்க் காமெடியோட ரத்தம் தெறிக்க தெறிக்க இதே பேர்ல நாலு சீஸனா Fargo series-ம் இருக்கு. தாரளாமா பார்க்கலாம்.
0 Comments