SJS

செல்வராகவன் + எஸ்.ஜே.எஸ் கூட்டணி; அருண் பாண்டியன் கம்பேக்… நெஞ்சம் மறப்பதில்லை, அன்பிற்கினியாள் எப்படி?

செல்வராகவனுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, யுவன் இசை என்பது இன்னும் கூடுதல் ஸ்பெஷல்.

பழிவாங்கல், பேய்க்கதை… இந்த ஜானரை செல்வராகவன் இயக்குகிறார். இந்த எதிர்பார்ப்பே அவரது ரசிகர்களுக்கு தீனி போடுகிறது. ஆனால், படம் முழுக்க எஸ்.ஜே.சூர்யாவின் ஆளுமைதான். வெரைட்டியான பாடி லாங்குவேஜ், வித்தியாசமான காஸ்டியூம்ஸ், டயலாக் மாடுலேஷன் எனப் படம் முழுக்கவே தனித்துத் தெரிகிறார் எஸ்.ஜே.எஸ்.

நாயகிகளாக நடித்த ரெஜினா, நந்திதா ஆகிய இருவருமே சரிசமமாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். படத்தின் முக்கால்வாசிக் கதை வீட்டைச் சுற்றியே நடப்பதால், அதை அலுப்புதட்டாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அரவிந்த் கிருஷ்ணா. வின்டேஜ் காம்போவில் வேலை செய்ததைப்போல் `நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் வேலை செய்திருந்தால் யுவனின் இசையையும் நாம் மறந்திருக்க மாட்டோம்.

நெஞ்சம் மறப்பதில்லை

எஸ்.ஜே.சூர்யாவின் சைக்கோத்தனமான நடிப்பு, செல்வராகவனின் டச், த்ரில்லர் மெட்டீரியல்… இதற்காகவே `நெஞ்சம் மறப்பதில்லை’யை விசிட் அடிக்கலாம்.

மறுபக்கம் ரௌத்திரம்',இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, காஷ்மோரா',ஜுங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுலின் ஐந்தாவது படமான அன்பிற்கினியாள்' ரிலீஸாகியிருக்கிறது. 2019-ல் வெளியானஹெலன்’ எனும் மலையாளப் படத்தின் ரீமேக்தான் இப்படம். கும்பளங்கி நைட்ஸ்' படப் புகழ் அன்னா பென் நடிப்பில் வெளியான இரண்டாவது படம்தான்,ஹெலன்’. கிடைக்கும் இடத்தில் எல்லாம் தன்னுடைய மிரட்டும் நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.

அன்பிற்கினியாள்

அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரத்தை தமிழில் கீர்த்தி பாண்டியன் ஏற்று நடித்திருக்கிறார். அது மட்டுமின்றி பல வருடங்களுக்குப் பின்னர் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார் அவரது தந்தையான அருண் பாண்டியன். நிஜத்திலும் அப்பா – மகள் என்பதால் படத்திலும் இவர்களுக்குள்ளான பாசம் அருமையாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. ஐஸ் ரூமுக்குள் சிக்கிய பிறகுதான் படத்தின் கதையும், சுவாரஸ்யமும் தொடங்குகிறது. அதை உணர்ந்த கீர்த்தி பாண்டியன், தன்னுடைய பெஸ்ட்டைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு பக்கா ஃபேமிலி டிராமா மற்றும் சர்வைவல் த்ரில்லர் மெட்டீரியல்.

செல்வா சார் மற்றும் சைக்கோ த்ரில்லர் ஃபேன்ஸ் கட்டாயம் `நெஞ்சம் மறப்பதில்லை’ பாருங்க. எஸ்.ஜே.எஸ் நிச்சயம் உங்களை சர்ப்ரைஸ் பண்ணுவார்.

லைட்டா ஃபேமிலி டிராமா, நிறைய சர்வைவல் த்ரில்லர் ஃபேன்ஸ் `அன்பிற்கினியாள்’ பாருங்க.

`இல்லை… நான் சினிமா லவ்வர்… எனக்கு ஒரு படம் போதாதுங்கிறவங்க, ரெண்டையுமே பாருங்க.’

அஹம் சினிமாஸ்மி!

40 thoughts on “செல்வராகவன் + எஸ்.ஜே.எஸ் கூட்டணி; அருண் பாண்டியன் கம்பேக்… நெஞ்சம் மறப்பதில்லை, அன்பிற்கினியாள் எப்படி?”

  1. You can conserve yourself and your stock nearby being alert when buying pharmaceutical online. Some druggist’s websites operate legally and put forward convenience, reclusion, sell for savings and safeguards for purchasing medicines. http://playbigbassrm.com/fr/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top