தரமான ஹாரர் படங்கள் வரிசையில முக்கியமான இடம் டிமான்ட்டி காலனி-க்கு உண்டு. பேய் படங்கள்னா இப்படித்தான் இருக்கணும்னு வழக்கமான டெம்ப்ளேட் திரைக்கதையிலிருந்து மாறுபட்ட சினிமா. டிமான்ட்டி காலனி கதையா பார்த்தா ‘பாழடைஞ்ச பங்களாவுக்குள்ள போனா, அதுக்கு பிடிச்ச பொருளை எடுத்துட்டு வந்தா பேய் அடிக்கும்’ங்குற கலிங்கத்துப்பரணி காலக்கதைதான். ஆனா, அதை ஒரு 20*20 ரூமுக்குள்ள அடக்கின திகில் திரைக்கதையில கொடுத்ததுதான் படத்தோட முக்கியமான பலம். இப்போ அதோட இரண்டாம் பாகம் உருவாகிட்டு இருக்கு. அதோட டைட்டில் போஸ்டர் எல்லாம் வந்துடுச்சு. இந்த நேரத்துல டிமான்டி காலனி முதல் பாகத்துல என்ன ஸ்பெஷல்ங்குற விஷயத்தைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

டிமான்ட்டி காலனி கதை இதுதான்…
100 வருஷங்களுக்கு முன்னால சென்னை ஆழ்வார் பேட்டையில வாழ்ந்த டிமான்ட்டிங்குற் வியாபாரி, சில அசம்பாவிதத்தால மனநலம் பாதிக்கப்பட்டு, குடும்பத்தோட தன்னையும் அழிச்சுக்கிறார். வீட்டுக்குள்ள ஆவிகளா அவங்க எல்லோரும் இருக்கிறதா ஒரு வதந்தியும் உலவுது. ஒரு மழைக்கால இரவுல அருள்நிதி அண்ட் கோ அந்த பங்களாவுக்குள்ள போகுது. அப்போ டிமான்ட்டி தன் மனைவிக்காக வச்சிருந்த நகையை ஒரு நண்பர் எடுத்துட்டு வந்துட, அப்போ இருந்து டிமான்ட்டி அண்ட் கோ அருள்நிதி கேங்கை துரத்த ஆரம்பிக்கிது. நண்பர்கள் மொத்தமா ஒரு அறைக்குள்ள போனதுமே அவங்களை வெளியேற விடாம டிமான்ட்டி நடத்தும் வேட்டைதான் முழு படமும்.
காமெடி டூ சீரியஸ்!
ராகவா லாரன்ஸ் வந்த பின்னர் பேய்களை காமெடியாக பார்த்த நமக்கு சர்ப்ரைஸ் என்ட்ரியாக அமைஞ்சதாலயோ என்னவோ ரொம்ப நாளைக்கு அப்புறமா தரமான பேய்படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துச்சு. அதே மாதிரி படத்துக்கு கொடுத்த டீட்டெய்லிங்கும் அதிகம். ஆரம்பத்தில் சின்ன சின்ன நகைச்சுவை கொடுத்த இயக்குநர், கதை ஒரு கட்டத்துல ரூமுக்குள் டாப்கியரில் பயணிக்க ஆரம்பித்த உடனே எல்லாத்தையும் ஓரம்கட்டிட்டு சீரியஸ் மோட்ல தடைகள் இல்லாம பயணிக்க வைத்திருந்தார், இயக்குநர் அஜய் ஞானமுத்து.
Also Read – தமிழ் சினிமாவைக் கலக்கும் அப்பா கேரக்டர்கள்!
எல்லோருக்கும் கொடுத்த ஆச்சர்யம்…
70 சதவிகிதப் படம், ஓர் அறையில்தான் நடக்குது. படத்துல ஹீரோயினும் டூயட்டும் கொடுக்குற ஸ்பீட் பிராக்கர் இல்ல. அதேபோல ஹாரர் படத்துக்குள்ள ‘ஃப்ளாஷ்-கட்’ல மிரட்டு ஷார்ப்-கட்டான காட்சிகள் இல்லை. ‘டேய்ய்ய்ய்… டூய்ய்ய்’ அலப்பறைகள்னு எதுவும் இல்லாத புது டெம்ப்ளேட் சினிமா. இன்னொரு ஆச்சர்யம் அகோர கிராபிக்ஸ் பேய்கள் இல்லை. ஆனாலும், என்ட்ரியில் திகில் கொடுத்து மிரட்டியிருந்தார், டிமான்ட்டி. ரொம்ப முக்கியமா சொல்லணும்னா காதல், டூயட், அதிகமான காமெடிகள்னு எதுவும் இல்லாத திரைக்குத் தேவையான சீரியஸ் காட்சிகள் அதுவரை ரசிகர்கள் கண்டிராத ஆச்சர்யம்.

டிமான்ட்டி காலனி படத்தின் முக்கியமான பில்லர்!
ஒரு அறையின் ஒவ்வொரு மூலையிலும் கேமரா ஆங்கிள் பதிக்க ஒளிப்பதிவில் பேய்த்தனமாக மிரட்டியிருந்தார், அரவிந்த் சிங். அதேபோல புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங், சின்னாவின் பின்னணி இசை என கூட்டணி அமைத்து மிரட்டியிருந்தது. அதிலும் துப்பாக்கியின் அந்த ‘ணங்..ணங்’ சப்தம் புதுசா இருந்தது. ஒரு அறையில் கேமரா பயணிக்கும்போது சலிப்பை ஏற்படுத்தாத இன்னொரு பில்லர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் திரைக்கதை. ஆரம்பத்திலிருந்தே கொடுத்த டீடெய்லிங்கும். இண்டர்வெல் டிவிஸ்ட், க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டும் படத்துக்கு பெரும்பலம். அதேபோல பேய்க்கு தனியாக நியாயம் சொல்லி பழி வாங்குறது மாதிரியான டெம்ப்ளேட்டிலிருந்து விலகி, யார் என் பொருளை எடுத்தாலும் போட்டுத்தள்ளுவேன் என்ற தீர்க்கமான முடிவும் இன்னொரு ப்ளஸ். இதுதவிர, இயக்குநர் கேட்டதுக்கு மேலயே சிறப்பா நடிச்சிருந்தது அருள்நிதி அண்ட் டீம்..
டீடெய்லிங்!
ஆரம்பத்தில் மதுமிதா கொடுக்கும் 2000 ரூபாய் தவறி விழுறது முதல் கடைசியாக அந்த 50 ரூபாய்க்கு வந்த செலவு வரைக்கும் ஒரு டீடெய்ல் இருந்தது. அதே போல மதுமிதா வீட்டில் இருந்து பைப் வழியாக இறங்கினது, க்ளைமேக்ஸிலும் அது மாதிரியே வர்ற சீன். ரெண்டு உதை உதைச்சா செவரே இடிஞ்சிடும்னு சொல்றது மூலமா, அருள்நிதி ஜன்னலை உடைக்கிறதை நியாயப்படுத்தியது. கேரெக்டர்ஸ் எல்லோரும் பணத்தாசை பிடிச்சவங்கனு காட்ட, நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்னு ஒரு புத்தகம் அலமாறியில இருக்கும். டிமான்ட்டியோட நகை எப்படியும் அவர்கிட்ட போயிடும்னு முன்னாலயே ஒரு தாத்தா சொல்ற மாதிரி வர்ற ப்ளாஸ்பேக். ஜோசியம் பார்க்கிற இடத்துல அகத்தியர் சொன்ன முறையிலதான் உங்க ஜாதகம் பார்க்கிறேன்னு சொல்வார், எம்.எஸ் பாஸ்கர். அதை நியாயப்படுத்த ஒரு காட்சியில பின்னாடி அகத்தியரோட புகைப்படம் இருக்கும். அதேபோல எப்படிக் கொல்லப்படுகிறார்கள் என்பது முன்னரே டிவியில காட்டினாலும், பேய் கொல்லும் காட்சியில் மிகப்பெரிய திகிலும் இருந்தது. இதுவரை காணாத விறுவிறுப்பான சினிமாவாக டீடெய்லிங்கில் மிரட்டியிருந்தார், அஜய் ஞானமுத்து. அதுவும் படத்தோட டைட்டிலுக்கு கொடுத்த இண்ட்ரோ வேற லெவல்தான். சொல்லப்போனா பேய்ப்படத்துக்கு ஒரு ட்ரெண்ட் செட்டர்னே டிமான்ட்டி காலனியைச் சொல்லலாம்.
டிமான்டி காலனி பத்தி உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை கமெண்ட்ல சொல்லுங்க.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?