சிம்பு

எஸ்.டி.ஆரின் பத்து தல.. இனிமே எனக்கு என்டே இல்ல.. சிம்பு அட்ராசிட்டீஸ்!

சிம்பு | நான் அழிக்க வந்த ஈஸ்வரன் இல்லைடா.. காக்க வந்த.. டேய், டயலாக்க தப்பா சொல்றடா. சாரி ப்ரோ, நான் அழிக்க வந்த அசுரன் இல்லைடா.. காக்க வந்த ஈஸ்வரன். இப்படிதாங்க சிம்பு மட்டுமில்ல சிம்பு ஃபேன்ஸும் திடீர்னு மைக்கு கைல கிடைச்சா கோக்குமாக்கா பேசி சோக்கா கன்டன்ட் ஆகிடுறாங்க. பத்து தல ஆடியோ லாஞ்ச்லலாம் மனுஷன் வேற லெவல் ஹைப்பர்ல இருந்தாரு சொன்னாங்க. ஆனால், மனுஷன் இதைவிடலாம் வேறமாறி வேறமாறி ஹைப்பர்ல இருந்துருக்காரு. அப்போ, என்னலாம் பேசியிருக்காரு?

சிம்பு
சிம்பு

பத்து தல ஆடியோலாஞ்ச்ல பேசும்போது, முன்னாடிலாம் உங்கக்கிட்ட ஃபயர் ஒண்ணு இருக்கும். செம எனர்ஜி இருக்கும். இப்போலாம் சாஃப்ட்டா பேசுறீங்க. சவுண்ட், டயலாக்ஸ்லாம் இல்லைனு அவர்கிட்ட கேக்குறாங்கனு சொல்லுவாரு. உண்மைதான்.. ஏன்னு அவர் என்ன ரீசன் சொல்றாருனு கடைசி பார்ப்போம். ஆனால், முன்னாடி அப்படிதான் இருந்துருக்கோம்னு அவரே ஃபீல் பண்ணியிருக்காப்புல. எனக்கு சிம்புனு சொன்னா டக்னு மேக்ஸ் தான் நியாபகம் வரும். பொதுவா ஹீரோஸ் எல்லாம் கணக்குல புலி இல்லைனுதான் படத்துலயும் நிஜத்துலயும் காமிப்பாங்க. லிட்டில் சூப்பர் ஸ்டாரும் அப்படிதான். இன்றைய கல்வின்ற தலைப்புல ஒண்ணு பேசுவாரு பாருங்க.. ஐயோ.. சிரிச்சு சிரிச்சு..

எனக்கு குழந்தை பொறந்தா புள்ளைய  ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேங்கனு சொன்ன உடனே, பெருசா எஷுகேஷன் சிஸ்டத்தையே மாத்துற மாதிரி ஏதோ சொல்லப்போறாருனு நினைப்போம். சரி ஸ்கூலுக்கு எதுக்கு குழந்தையை அனுப்புறோம்னு கேள்வி கேட்டதும், நிறைய விளக்கம்லாம் கொடுப்பாரு. அதுல முக்கியமான விஷயம் 4+4 என்னனு எல்லா குழந்தையும் கத்துக்கணும்னு எந்த ஸ்கூல்லயும் டீச்சர்ஸ் நினைக்கமாட்றாங்க. யாரு ஃபஸ்ட்டு சொன்னானுதான் பார்க்குறாங்க. அதையும் மீறி ஒரு பையன் பக்கத்துல உள்ள பையன்கிட்ட டவுட் கேட்டா, அவனைப் புடிச்சு காதைத் திருகி, வெளிய தள்ளி, முட்டி போட வைக்கிறாங்க. அப்படி காதைத்திருகி, வெளிய தள்ளி, முட்டிப்போட வைச்ச பையன்தான் சிலம்பரசன். எனக்கு மேக்ஸ் வராது. ஏன்னா.. மேக்ஸ் வந்தது.. ஆனால், வரவிடாமல் பண்ணிட்டாங்க. இதை அவர் சொல்றதுல விஷயம் இருக்கு. ஆனால், எனக்கு என்ன டவுட்னா மனுஷன் எக்ஸாம் அன்னைக்கு டவுட் கேட்ருப்பாரோனுதான்.

Also Read – தட் நிஜ இளந்தாரிப்பய… சி.எஸ்.அமுதன் சம்பவங்கள்!

கல்வி பிரச்னையைப் பத்தி பேசிட்டாரு. அடுத்து தண்ணி பிரச்னைக்கு வருவோம். காவேரி பிரச்னை பத்தி எரிஞ்ச சமயத்துல.. மாஸா பிரஸ்மீட் ஒண்ணு வைச்சு, காவிரியவே.. சாரி, கர்நாடகாவையே தலைவன் அலற விட்டாப்புல. ஆரம்பத்துலயே செம தக் லைஃபோடதான் ஸ்டார்ட் பண்ணுவாரு. என்னனா, அன்னைக்கு காலைல தமிழ்நாடு நடிகர் சங்கம் மௌன போராட்டம் ஒண்ணு பண்ணியிருப்பாங்க. அதைக் குறிப்பிட்டு, பேசாததுனாலதான் இவ்வளவு பிரச்னை. பேசுனாதான தீரும் பிரச்னைனு சொல்லுவாரு பாருங்க. ஃபயர்யா.. ஃபயரு. அதுனால எனக்கு அதுல உடன்பாடு இல்லைனும் சொன்னாரு. தமிழ்நாட்டுல ஆளக்கூடிய சி.எம் ஒருத்தங்க இறந்துபோய்ருக்காங்க. அதுதொடர்பா நிறைய விஷயங்கள் வருது. அவங்க இறந்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் வரிசையா பிரச்னையா வருது. அவங்க இறந்தது தொடர்பான உண்மை எப்போ வெளிய வருதோ, அப்போதான் தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கும்னு சொல்லுவாரு. என்ன தலைவன் ட்விஸ்ட் அடிச்சு ஜோசியம்லாம் பார்க்க ஆரம்பிச்சாட்டாருனு அப்போ தோணிச்சு. ஆனால், ஐ.பி.எல் பத்தி அடுத்து பேசுவாரு. முக்கியமான விஷயமா தோணிச்சு.. நம்ம வாழ்க்கையே விளையாட்டா போய்ட்ருக்கு. இந்த நிலைமைல நமக்கு விளையாட்டு தேவையானு யோசுச்சுப் பார்க்கணும். இது ரெண்டாவது விஷயம். கடைசியா காவிரி பிரச்னைக்கு வந்துருவாரு.

சிம்பு
சிம்பு

கர்நாடகா மக்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க, தமிழ்நாட்டுல இருக்க மக்கள் கர்நாடகால இருக்காங்க, நீங்க தண்ணீர் கொடுப்பீங்களா? எப்படி கேள்வி ஒவ்வொண்ணும் நங்கூரம் மாதிரி நச்னு இருந்துச்சா? காவிரி பிரச்னைலாம் பேசிட்டு இருக்கும்போது கரெண்ட் போய்டும்.. தலைவன் டக்னு இதான் பிரச்னைன்னுவாரு பாருங்க. சிரிப்பு, சரவெடியா வரும். லைட்டு வரும். இருட்டை பண்ணலாம். ஆனால், வெளிச்சத்தை வரவிடாமல் பண்ணவே முடியாதுன்னுவாரு பாருங்க.. இதெல்லாம் புரிய குருட்டு தனமான முட்டாள்தனம் வேணும்.. ஒரு முரட்டுதனமான புத்திசாலித்தனம் வேணும். ஆனால், பிரச்னையை சொம்புல முடிச்சாருல அங்க நிக்கிறாரு. ஒரு சொம்பு காவேரி தண்னி எடுத்து தமிழனுக்கு கொடுத்தா சமாதானம். இல்லைனா, சண்டைன்ற ரேஞ்சுல மனுஷன் அன்னைக்கு பேசுனதுதான் அல்டிமேட். அணைய கட்டி நீங்க தண்ணிய நீங்க நிறுத்தலாம். அணை நிரம்புனா தண்ணி வந்துதான் ஆகணும். தாய்மார்கள்லாம் தண்ணி கொடுக்க முடியலைனு கண்ணீர் விட்டா, அதுவும் தண்ணீர்தான். அந்த கண்ணீரால அணையை உடைச்சு தமிழ்நாடு மக்களுக்கு தண்ணி கொடுப்பாங்கனு பேசுவாரு. ஷ்ப்பா.. சுகர் பேஷண்டு சிம்பு நானு. முடியலை.

பிரச்னைக்கு மேல பிரச்னை பிரச்னைக்கு மேல பிரச்னை பிரச்னைக்கு மேல பிரச்னைனு பிரச்னையே யாரு சாமி நீ.. பிரச்னை பிரச்னைனு இத்தனைப் பிரச்னையை சொல்றனு பிரச்னைக்கு பிரச்னை வர்ற அளவுக்கு பிரச்னை வார்த்தையை யூஸ் பண்ணது நம்ம சிம்புதான். ஆனால், அவருக்கு என்ன பிரச்னைனு தான் இன்னும் தெரியல. பத்துதல ஆடியோ லாஞ்ச்லகூட பிரச்னைல இருந்துதான் தொடங்குவாரு. பிரச்னையே பாவம் பார்த்து இனிமேல் அவர் வாயால பிரச்னைன்ற பிரச்னையை.. சாரி, வார்த்தையை சொல்லக்கூடாது அப்டினு முடிவு பண்ணி வெளிய வந்தாலும் பிரச்னையை அவரு விடமாட்டாரு போல. சரி, சொசைட்டியை விட்டுட்டு அட்வைஸ்க்கு வருவோம். ‘நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் சண்டவெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரி அடிக்க முடியும்..’ என்று பாட்ஷாவில் ஒரு டயலாக் இருக்கு. அதுபோல், அந்த எல்லாத்துலயும் தத்துவ வெறி ஊறிப்போன ஒருத்தராலதான், கேட்ட உடனே கொஞ்சம் யோசிக்காம வாழ்க்கைத் தத்துவங்களைப் பொழிய முடியும். தமிழ் சினிமாவில் அப்படி ஒருத்தர்தான் சிம்பு.

சிம்பு
சிம்பு

வாழ்க்கைல எதுவும் வேணாம்னு போறதும் தப்பு. எல்லாமே வேணும்னு அலையறதும் தப்பு. இது ரெண்டுமே இல்லைன்னு புரிஞ்சா அதுதான் வாழ்க்கை. – இது புரிய உங்களுக்கு சில யுகங்கள் தேவைப்படும். அதுனால, காதல் பத்தி அவர் சொன்ன விஷயங்களை பார்ப்போம். சிம்புவோட கரியர் போலவே காதல் பக்கங்களும், அதனால ஏற்பட்ட சர்ச்சைகளும், அதுக்கெல்லாம் சிம்பு ரியாக்ட் செய்த அட்ராசிட்டிகளும் எல்லாமே பொது மக்களுக்கு அத்துப்படியான விஷயம்தான். அந்த எஸ்டிடிக்கு எல்லாம் போக வேணாம், காதல் என்றால் என்ன? – இந்தக் கேள்விக்கு கன நேரத்தில் சிம்பு உதிர்த்த தத்துவம்: நூறு பொண்ணுங்களை லவ் பண்றது பெரிய விஷயம் இல்லை. ஒரு பொண்ணை நூறு விதமா லவ் பண்றதுதான் பெரிய விஷயம். எப்படி.. சும்மா ஆட்டோ பின்னாலயே எழுதி வைச்சு சுத்தலாம்ல?

சிம்பு மேடைலயே பல தரமான தக் லைஃப் மொமண்டுகளை கிரியேட் பண்ணியிருக்காரு. எக்ஸாம்பிள் சொல்லணும்னா.. ஒரு நிகழ்ச்சி. சிம்பு மேடைல இருக்கார். அவர்கிட்ட வழக்கம்போல, ‘நீங்க என்ன அட்வைஸ் சொல்ல விரும்புறீங்கன்னு கேட்கிறாங்க. அப்போ ஆடியன்ஸ்ல ஒருத்தர் “ஷூட்டிங் ஒழுங்கா வரணும்”னு சத்தமா கத்துறாரு. சிம்பு டென்ஷன் ஆனார். ஆனால், அவர்தான் அட்ராசிட்டி மன்னனாச்சே.. உடனே மைக்கை கையில வாங்கி, ‘ஒழுங்கா வர்றது மேட்டர் இல்லை. வந்தா ஒழுங்கா ஒர்க் பண்றதுதான் மேட்டர்.. எங்கிட்ட இந்த மாதிரியெல்லா வெச்சுக்காதீங்க’ன்னு மிரட்டிட்டே அட்வைஸையும் அலேக்கா போட்டுட்டு வர்ட்டா மாமே டுர்ருனு பறந்துட்டாரு. அதாம்லே சிம்பு! சரி, முன்னாடி மாதிரி சிம்பு இப்போ ஏன் பேசமாட்ராருன்ற கேள்விக்கு அவர் என்ன சொல்றாருனா.. நான் கஷ்டத்துல இருந்தேன். என் வாழ்க்கைல எதுவும் சரியா இல்லை. யாரும் தட்டி கொடுக்கலை. என்ன பண்றதுனு தெரியலை. இவர் கதை முடிஞ்சி போச்சுனுலாம் சொல்றாங்க. எல்லாமே பிரச்னை. அதை வெளிய காட்ட, எனக்கு நானே தட்டிக் கொடுக்க,  எனக்கு துணையா நிக்க தான் கத்திலாம் பேசுனேன். எல்லாத்தையும் தாண்டி என்னை தட்டிக் கொடுத்து, தூக்கி விட்டு இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க இன்னைக்கு.. நான் எப்படி கத்தி பேச முடியும். பணிஞ்சுதான் பேச முடியும்னு சொல்லுவாரு. எல்லார் வாழ்க்கைலயும் கஷ்டங்கள் வரும். யாரும் அப்போ கூட நிக்க மாட்டாங்க.. அதையெல்லாம் தாண்டி எப்படி வந்து நிக்கணும்ன்றதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் சிம்புதான். அவரை நிறைய ஓட்டலாம்.. ஆனால், அவர் சொல்றதைதான் நானும் சொல்றேன்.

யூத்துக்கெல்லாம் அட்வைஸ் சொன்னாலே பிடிக்காது. ஆனாலும் ஒரு அட்வைஸ் சொல்றேன். அந்த அட்வைஸ் என்னன்னா, எவன் அட்வைஸ் பண்ணாலும் கேட்காதீங்க. அதான் அட்வைஸே. ஏன்னா, இந்த அட்வைஸ் பண்றவன பார்த்தீங்கன்னா… அவன் அவனோட வாழ்க்கைக்கு அவனுக்கு அவன் அட்வைஸ் பண்ணியிருந்தாலே அவன் எங்கயோ போயிருப்பான். முடியலைன்றதுனாலதான் உங்களுக்கு அவன் அட்வைஸ் பண்றான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top