செம… ஐட்டம் சாங்ஸ்ல இவ்வளவு தத்துவங்கள் இருக்கா?

ஐட்டம் சாங்ஸ் நிறைய பேருக்கு புடிக்கும். அதை நம்மாட்கள் வெளிய சொல்லவே மாட்டங்க. அதை கேட்டா தரக்குறைவா நினைப்பாங்க. பாட்டுல அதுவும் ஒரு வகை அவ்வளவுதான். காதல் பாடல்கள்லல டபுள் மீனிங் வரிகள் எக்கச்சக்கமா நாம கேட்க முடியும். ஆனால், பெரும்பாலான ஐட்டம் சாங்ஸ்ல வாழ்க்கையோட தத்துவங்களை சொல்ற வரிகளை கேட்க முடியும். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல மூச்சுவிடாம பாடுன தத்துவ பாடல்களையெல்லாம் சிம்பிளா நறுக்குனு ஒரு வரில ஐட்டம் சாங்ஸ்ல சொல்லிடுவாங்க. வீடியோவை மட்டும் பார்க்குறதால நாம பல நேரங்கள்ல வரிகளை கவனிக்க மறந்துடுறோம். அதனால், இந்த வீடியோல ஐட்டம் சாங்ஸ்ல ஒளிஞ்சிருக்கக்கூடிய வாழ்க்கை தத்துவங்களைப் பற்றி பார்க்கப்போறோம்.

நெருப்பு கூத்தடிக்குது

பாட்டைக் கேட்கும்போதே ஒரு எனர்ஜி தானாகவே வரும். நம்மளோட பால்ய காலத்துல அதிகமா கேட்ட பாட்டு இந்த நெருப்பு கூத்தடிக்குது பாட்டுதான். இந்தப் பாட்டு முழுக்க தத்துவங்களாதான் இருக்கும். நெருப்பு கூத்தடிக்குது, காத்தும் கூத்தடிக்குது, ஊரே கூத்தடிக்குது நீ மட்டும் ஏன்டா சோகமா உட்கார்ந்து இருக்க நீயும் வந்து இயற்கையோட சேர்ந்து கூத்தடிடானு கூப்பிடுற ஒரு பாட்டு. சிம்பிளா சொல்லணும்னா ஜாலியா இருங்கடானு சொல்ற அழகான பாட்டு. அதுவும், “இன்னைக்கு முடிஞ்சி போச்சு, எடுத்து மூட்டைக் கட்டு, ராத்திரி இருக்குதடா, ரௌண்டா கூத்து கட்டு” வரிகள் எல்லாம் வேறலெவல்ல இருக்கும். பாட்டு முழுவதுமே இரவை, இரவில் முழுச்சிருக்குற நம்மை சந்தோஷமா மாத்துற வரிகள்தான். “சொத்து பத்து சேர்த்தவனும் , பொகையாதான் போகுறான், சோகத்துல சிரிப்பு வந்தால், சொகமாக வாழுறான், வாழ்க்கையில் வரைமுறை ஏதடி, அட காத்ததான் கட்டி வச்சது யாரடி” வரிகள் எல்லாம் அல்டிமேட். ஒரு கிளாமர் சாங் முழுக்க இவ்வளவு தத்துவம் சொல்ல முடியுமானு ஆச்சரியப்பட வைச்சப் பாட்டு இதுதான். யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்ல பின்னி எடுத்துருப்பாரு.

கோடான கோடி

இன்னைக்கும் ஐட்டம் சாங்னு சொன்னா முதல்ல நியாபகம் வர்ற பாட்டு கோடான கோடிதான். அதுவும் அந்த ஸ்டெப்ஸ்லாம் பலருக்கும் ஃபேவரைட். பசங்க குரூப்பா சேர்ந்து எந்த ஐட்டம் பாட்டுக்கு டான்ஸ் ஆடுனாலும் அதுல இந்த ஸ்டெப் வந்துரும். இந்தப் பாட்டு முழுக்க தத்துவ வரிகள் எல்லாம் வராது. ஆனால், சில வரிகள் நம்ம வாழ்க்கையை எஞ்சாய் பண்ண சொல்லும். “காலம் மாறுது கணக்கில் ஏறுது இஷ்டம் போல வாழு” சொல்ற வரிகளா இருக்கட்டும், “பொண்ணால மாலை எப்போதும் போல, நம்மோட வாழ்வு டாப்பு, உண்டானதெல்லாம் கொண்டாடவேண்டும் விடாத கொஞ்சம் கேப்பு, எல்லாருக்கும் நல்லாருக்கும் ஃபுல்லாருக்கும் இனி நம்ம நேரம்தானே” வரிகளா இருக்கட்டும் எல்லாமே வேறமாரி வேறமாரிதான். இவ்வளவுநாள் இந்த பாட்டை மட்டும் தனியா வீடியோவோட கேட்டு வைப் பண்ணியிருப்போம். இப்போ, இந்த வரிகளையும் சேர்த்து எஞ்சாய் பண்ணி வைப் பண்ணிப் பாருங்க. யுவனுக்கு கோடான கோடி நன்றிகளை கண்டிப்பா சொல்லுவீங்க.

சீனா தானா

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்-ல வந்த தரமான சம்பவம் இந்தப் பாட்டு. இந்தப் பாட்டு வீடியோவைப் பார்த்துட்டு சென்சார் போர்டு இந்தப் பாட்டை எடுக்க சொல்லிட்டாங்களாம். அப்புறம் போராடி எடுத்து சரண் அந்தப் பாட்டை பாதியாக்கி படத்துல யூஸ் பண்ணியிருக்காரு. அந்தப் பாட்டுலயும் தத்துவம் பத்தி கியூட்டா சில வரிகள் வரும். தத்துவங்கள் உருவாவதுக்கு இப்படி ஒரு விளக்கத்தை உலகத்துல எந்த தத்துவவாதியும் கொடுக்க முடியாது. அப்படி ஒரு வரி அது. என்னனா, “உலகம் இன்பத்துக்கு ஏங்கிக் கிடக்கு, ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கிடக்கு, தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா, தத்துவம் பிறக்கட்டுமே, தப்பு பண்ணேன்டா”னு வரிகள் வரும். உண்மையிலேயே இந்த உலகத்துல இன்னைக்கு நிறைய பேருக்கு இன்பம் தேவைப்படுது. இந்தப் பாட்டையெல்லாம் கேட்டா கொஞ்சம் ஆறுதலா இருக்கும். நீங்க கேக்கலாம் எல்லாரும் தத்துவம் பிறக்கட்டும்னு இஷ்டத்துக்கு வாழ ஆரம்பிச்சிட்டா அப்புறம் கேஸ் அதிகமாயிடுமேனு. கரெக்டுதான். ஆனால், அடுத்தவங்களை தொந்தரவு பண்ணாத எல்லா தப்பும் சரிதான். அப்புறம் இந்தப் பாட்டுல வர்ற, “மங்கியில இருந்து ஒரு மனுஷ பைய வந்தாலும் இன்னும் போகலையே வாலு, வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம் அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா” வரிகள் எல்லாம் செம ஜாலியா இருக்கும்.

மே மாசம்

ஆண்களை மனசுல வைச்சிட்டு இந்த பாட்டை எழுதியிருக்காங்க. வளர்ந்து வர்ற பெண்கள் என்னலாம் பிரச்னைகளை அனுபவிக்கிறாங்க. ஆண்கள் எப்படிலாம் அவங்களை தொந்தரவு பண்றாங்கனு இந்த பாட்டுல அவ்வளவு எதார்த்தமா சொல்லுவாங்க. “அடுத்த வீட்டுப் பையன் அட அம்பு தொடுத்தான் சும்மா, கோலம்போட போனால் அடி கூடாதென்றாள் அம்மா” வரிகள் எல்லாம் இன்னைக்கும் நடந்துட்ருக்குற விஷயங்கள் தான? சரி, இதுல என்னடா கருத்து சொல்றாங்க?னு தான கேக்குறீங்க. “பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க. பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க” வரிகள்தான். பெண்களை உடல்ரீதியா மட்டுமே பார்க்குற பலருக்கும் இந்த வரி செருப்படி. மற்ற வரிகளுமே ரொம்ப நல்லாருக்கும். செம பெப்பியான இரு பாட்டு.

ரங்கு ரங்கம்மா

கொஞ்சம் மெலடியா இருக்குற ஐட்டம் பாடல் இந்த ரங்கு ரங்கம்மாதான்னு நினைக்கிறேன். ஏன்னா, ஹாரிஸ் மியூசிக். இந்தப் பாட்டைக் கேட்டாலே ஒரு ஃபீல்குட் ஃபீலிங் வரும். இதுலயும் வாழ்க்கையைப் பத்தின தத்துவ வரிகள் எல்லாம் இருக்கும். போட்ல நடக்குற பாட்டுதான் இது. அந்த கடல், விக்ரம், மியூசிக் எல்லாம் சேர்ந்து வேறலெவல் ஃபீலைக் கொடுக்கும். ஆரம்பத்துல பக்கா ஐட்டம் சாங்குக்கான லிரிக்ஸ்தான் இருக்கும். கடைசில சுதந்திரத்தைப் பத்தி பேசுற மாதிரி வரிகள் வரும். “காத்துக்கு ரூட் இருக்கா, கடலுக்கு பூட்டு இருக்கா, வா மச்சான் வாழ்க்கையிலே விளையாடு, ஆடாத ஆட்டமெல்லாம், ஆளத்தான் நாம் பொறந்தோம், ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு, மனமே அடங்கு, மறுநாள் தொடங்கு ஹே வாடா நீ வாடா நம் சந்தோஷம் கோலி சோடா” வரிகள் எல்லாம் செம லைனு. இந்தப் பாட்டை மிஸ் பண்ணியிருந்தீங்கனா, உடனே போய் கேளுங்க. யூ வில் ஃபீல் சில்னஸ்.

தமிழ் சினிமா மட்டும் இல்லை. இந்திய அளவுல இருக்குற எல்லா சினிமா துறைகள்லயும் ஐட்டம் சாங்குக்கு முக்கியமான பங்கு இருக்கு. அந்த சாங் வழியா பெண்கள் தங்களோட தைரியத்தை, அதிகாரத்தை, உடல் தொடர்பான அரசியலை, சுயமரியாதையை, கம்ஃபர்ட் சோனை உடைச்சு வெளிய வர்றதை பத்தி பேசுற ஒண்ணா இருக்கு. அதேமாதிரி ஊடலையும் இந்தப் பாட்டின் வழியா கவிஞர்கள் அழகா சொல்லுவாங்க. வாழ்க்கைங்குறது கொஞ்சம் காலம்தான் அதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிச்சுடு, நேரம் யாருக்காகவும் நிக்காது, உலகம் ரொம்ப அழகானது, தைரியமா ஒவ்வொரு விஷயத்தையும் பண்ணு போன்ற மோட்டிவேஷனையும் இந்த ஐட்டம் பாடல்கள்ல நாம வரிகளின் வழியாக உணர முடியும். இப்போலாம் இந்த மாதிரி ஐட்டம் சாங்ஸ் தமிழ்ல நிறைய வர்றதில்ல. ஆனால், அதுக்குனு தனி ஃபேன் பேஸ் எப்பவுமே இருப்பாங்க.

உங்களுக்கு புடிச்ச ஐட்டம் சாங் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: ’ஆஃப் ஸ்பின்னர் டு ஹிட் மேன்’ – ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்பிரேஷனல் பயணம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top