பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் – 2 ரிலீஸ்… முதல் பாகத்துல என்ன நடந்துச்சு? #Recap

பொன்னியின் செல்வன் 2 வந்துடுச்சு. பர்ஸ்ட் பார்ட் பார்த்த நிறைய பேருக்கு படம் மறந்து போயிருக்க வாய்ப்பு இருக்கு. அதனால 4 நிமிசத்துக்குள்ள ஒரு குவிக் ரீ-கேப் பண்ணி பொன்னியின் செல்வன் முதல் பாகத்துல என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்கலாம்.

சுந்தரசோழன் பெத்தது மூணு. கதையை சொல்லப்போறது உங்கள் நான்னு கமல் வாய்ஸ் ஓவர்ல படம் ஆரம்பிக்கும். வானத்துல வால் நட்சத்திரம் தெரியுது அது சோழ நாட்டு அரச ரத்தம் கேக்குதுனு பில்டப் கொடுத்து ஆரம்பிப்பாங்க. எடுத்ததுமே ராஷ்டிரகூடப்போர்ல ஆதித்த கரிகாலன் விக்ரம் சண்டை போட்டு ஜெயிச்சு ஆர்.சி.பி கொடியை ஏத்துறாரு. அந்த போர்ல விக்ரமோட சண்டை போடுறாரு வந்தியத்தேவன் கார்த்தி. சண்டையை முடிச்சுட்டு சரக்கு பார்ட்டில இருந்த கார்த்தியைக் கூப்பிட்டு, கடம்பூர் மாளிகைல என்னமோ நடக்குது என்னனு ஒரு எட்டு போயி பார்த்துட்டு அதை அப்பா சுந்தரசோழருக்கும், தங்கச்சி குந்தவைக்கும் போய் சொல்லுனு டாஸ்க் கொடுக்கிறாரு. கட் பண்ணா பொன்னி நதி சாங். குத்தாட்டம் போட்டு குதூகலமா பாட்டை முடிச்சு வச்சா பழுவேட்டரையர் படகுல வந்து இறங்குறாரு. கூடவே பழுவூர் ராணியோட பல்லக்கையும் காட்டுறாங்க. அங்க சிவன் பெருசா விஷ்ணு பெருசானு சண்டை போட்டுட்டு இருக்குற ஆழ்வார்க்கடியான் நம்பி இண்ட்ரோ கிடைக்குது. அவர்கூட கொஞ்சம் ஒரண்டை இழுத்துட்டு கடம்பூர் மாளிகைக்கு போறாரு. சண்டை போட்டு உள்ள நுழைஞ்சா தேவராளன் ஆட்டம் நடக்குது. அதெல்லாம் முடிச்சுட்டு நைட்டு ஒரு ரகசிய கூட்டம் நடக்குது அதை ஒட்டுக்கேட்கிறாரு கார்த்தி.

பொன்னியின் செல்வன் 2

சரத்குமார் அங்க இருக்குற சிற்றரசர்களையெல்லாம் ரம்மி சர்க்கிள் மாதிரி வட்டமா நிக்க வச்சி ஃப்ளாஷ்பேக் சொல்றாரு. இந்த இடம்தான் உன்னிப்பா கவனிக்கணும் இல்லைனா கதை விளங்காது. கண்டராதித்தர்னு ஒரு மன்னர் அவர் இறந்தப்பறம் அவர் வாரிசுதான சி.எம் ஆகணும். ஆனா அப்போ அவரு பையன் சின்ன பையனா இருந்ததால தன்னோட தம்பி பையனான சுந்தர சோழரை அரசாக்குறாரு. சுந்தர சோழர் ஜெண்டில்மேனா இருந்தா என்ன பண்ணனும்? கண்டராதித்தர் மகன் வயசுக்கு வந்ததும் அவருக்கு பொறுப்பை கொடுத்திருக்கணும்ல அப்படி பண்ணாம தன்னோட பையனான ஆதித்த கரிகாலன்தான் அடுத்த மன்னர்னு பட்டம் கட்டிடுறாரு. ப்ளடி பிரகாஷ்ராஜ். அதனால எப்படியாச்சும் கண்டராதித்தன் மகன் மதுராந்தகனை அரசனாக்கணும்னு பழுவேட்டரையரும் அவர் சகாக்களும் முடிவு பண்றாங்க. இந்த திட்டத்தை சுவருக்கு இந்த பக்கம் இருந்த கார்த்தி ஒட்டுக்கேட்க அந்த பக்கம் இருந்து ஆழ்வார்க்கடியான் ஒட்டுகேட்கிறாரு. இதைப் பார்த்து கார்த்தி மறுநாள் அவரை புடிச்சு யாரு என்னனு விசாரிக்குறாரு. இந்த மாதிரி நந்தினியைத் தேடி வந்தேன், அவ எனக்கு தங்கச்சி மாதிரி எங்க வீட்டு பக்கத்துலதான் வளர்ந்தா, நீ அவளை பார்த்தா நான் கேட்டதா சொல்லுனு சொல்றாரு. அங்க இருந்து கிளம்பி போற வந்தியத்தேவன் வழில ஒரு பல்லக்கை பார்த்து ரகுமான் தான் வர்றாரு போலனு நினைச்சு இடிச்சா உள்ள இருந்தது உலக அதிசயம். 50 கேஜி தாஜ்மஹாலா இருந்த நந்தினி அழகுல மயங்குறாரு.

நந்தினி இவரு கரிகாலனோட ஆள்னு தெரிஞ்சுக்கிட்டு ஒரு மோதிரத்தை கொடுத்து என்னை அரண்மனைல வந்து பாருனு சொல்றாங்க. அங்க இருந்து கிளம்பி தஞ்சை கோட்டை போற கார்த்தி கதவை மூடுற டைம்ல மோதிரத்தைக் காட்டி பார்த்திபன் ஆட்கள்ட்ட மாட்டுறாரு. கோட்டைத் தளபதியான பார்த்திபன் புடிச்சு விசாரிச்சா அந்த மோதிரத்தை உங்க அண்ணன்தான் கொடுத்தாருனு பொய் சொல்லி சுந்தர சோழரை சந்திக்கிறாரு. முக்கியமான மேட்டரை சொல்லலாம்னு பார்க்குறப்போ ஒத்த செருப்பு சத்தம் கேட்குது. பார்த்திபன் வந்துடுறாரு. புடிச்சு ஜெயில்ல போடலாம்னு ப்ளான் பண்ணி இருந்த பார்த்திபன் ஆட்கள்ட்ட தப்பிச்சு ஓடி நந்தினியோட அரண்மனைக்குள்ள போயிடுறாரு. அங்க மறுபடியும் நந்தினி அழகுல மயங்கி உண்மையெல்லாம் ஒளற, வந்தியத்தேவனை அனுப்பி வைக்கிறாங்க. திடுதிடுனு உள்ள வந்த பெரிய பழுவேட்டரையர் நாட்டாமை மாதிரி ‘எங்கடி உன் மோதிரம்’னு கோபப்படலாம்னு போனவரை அர்ஜூனா அர்ஜூனானு தாஜா பண்ணி கூலா ஹேண்டில் பண்றாங்க நந்து. அப்பறம் ரவிதாசனை சந்திக்குற நந்தினி இலங்கைக்கு போயி குட்டிப்புலியோட தலையை எடுத்துட்டு வானு அசைண்மெண்ட் கொடுக்கிறாங்க. வந்தியத்தேவன் சேந்தன் அமுதன் உதவியோட பழையாறை போறாரு. கம்சன் வேசம் போட்டு வானதியோட டான்ஸ் ஆடிட்டு குந்தவையை சந்திச்சு ஜொள்ளுவிட்டுகிட்டே மேட்டரை சொல்றாரு. அங்க குந்தவை ஒரு டாஸ்க் கொடுக்கிறாங்க. இலங்கைக்கு போய் அருண்மொழியைக் கூட்டிட்டு வானு சொல்றாங்க. அவனவன் ஜெஸ்ஸிக்காக ஆலப்பே வரைக்கும் போறான்… இலங்கை போகமாட்டனானு கெளம்பி போறாரு. வானதியும் தன் பங்குக்கு பொ.செகிட்ட கொடுக்கச் சொல்லி ஒரு ஓலை கொடுத்தனுப்புறாங்க. இதுக்கு நடுவுல ஆதித்த கரிகலான் விக்ரம்கிட்ட விக்ரம் பிரபு ஏன் இப்படி அந்நியன் மாதிரி வெறப்பாவே சுத்துறனு கேட்க அவரு அம்பியா இருந்தப்போ நந்தினியை காதலிச்ச ஃப்ளாஷ்பேக்கை சொல்றாரு. அப்படியே கொடி கொடி பாட்டு ஆரம்பிச்சா போதைல ஃபுல்லா டிரிப்பா ஆன விக்ரம் அந்த ரத்தக்களறி சம்பவத்தை நினைச்சு பார்க்குறாரு. பாத்தா வீரபாண்டிய நாசரை நந்தினி கண்ணு முன்னாடியே துள்ளத்துடிக்க ரத்தம் தெறிக்க வெட்டிக்கொல்றாரு. தமிழ் சினிமாலயே மொரட்டு இண்டர்வல் சீனா அது இருந்தது.

என்னடா ஃபர்ஸ்ட் ஆஃபையே இவ்ளோ நேரம் சொல்லிட்டேன்னு நினைக்காதீங்க. இதுக்கப்பறம் எல்லாம் சண்டையாதான் இருக்கும். சல்லுனு முடிஞ்சிடும். இண்டர்வல் முடிஞ்சு வந்து உக்காந்தா இலங்கை போன பொன்னியின் செல்வன் அலைஸ் அருண்மொழி வர்மன் சன் ஆஃப் சுந்தரசோழன் இலங்கைல ஒரு போர் புரிஞ்சு இலங்கை அரசனை தோற்கடிக்குறாரு. புத்த பிட்சுக்கள் சேர்ந்து ‘தலைவரே அசோகருக்கு அடுத்து நீங்கதான்.. வந்து பதவி ஏத்துக்கோங்க’னு கேட்டாலும் அதெல்லாம் வேண்டாம்ங்கனு மறுத்துடுவாரு.

பொன்னியின் செல்வன் 1

இதுக்கு நடுவுல தஞ்சைக்கு வந்த குந்தவையை நந்தினி ஆரத்தி எடுத்து வரவேற்பாங்க. கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டுல ரெண்டு ஐஸூ வர்றமாதிரி சலசல ரெட்டைக் கிழவினு மீட் பண்ணிக்குறாங்க திரிஷூம் ஐஸூம். அய்யோ வயசை சொல்ற மாதிரி இருக்கு இதை அவாய்ட் பண்ணிக்கலாம். அப்பறம் அபியும் நானும் டுயோ சந்திச்சு நாட்டோட நிலைமையை பேசிக்குறாங்க. இதுக்கு நடுவுல சிற்றரசர்கள்லாம் மதுராந்தகருக்கு பதவி வாங்கிக் கொடுக்கிறதுக்கு பஞ்சாயத்து பண்றதுக்காக ரகசியம் தஞ்சைக்கு வந்து கூட்டம் போடுறாங்க. அதுக்குள்ள பூந்த குந்தவை அரியும் சிவனும் என் தம்பிக்குதான் உங்க பொண்ணுனு பூரா பேரையும் குழப்பிவிட்டு பஞ்சாயத்து பேசவந்தவங்கிட்ட சம்பந்தம் பேசிட்டு போயிடுறாங்க. என்னடா பண்றதுனு தவிச்சுப் போன சின்ராசுக்கு முதுகை காட்டி மயக்கி முழு பிளானையும் சொல்றாங்க நந்தினி. இதுக்கு நடுவுல ஜாலியா பூங்குழலியை சைட் அடிச்சுட்டே இலங்கை போயி சேருறாரு கார்த்தி. பாண்டிய ஆபத்துதவிகளும் அந்த நேரத்துல வந்து சேர்றாங்க. நேரா போய் பிரகாஷ்ராஜை மீட் பண்ற சரத்குமார் உங்க சந்தோஷ் சுப்ரமணியம் பாசத்தையெல்லாம் கொஞ்சம் ஓரமா வச்சிட்டு அருண்மொழியை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வர சம்மதிங்கனு ஐடியா கொடுக்கிறாரு. பிரகாஷ்ராஜூம் ஓகே சொல்றாரு. நேக்கு இது சரியா படலைனு குந்தவை பீதிய கிளப்ப அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் நீ போய் ஆதித்த கரிகாலனை சந்திச்சு அவனை கூட்டிட்டு வானு ஆர்டர் போடுறாரு. ஆனா படம் முழுக்க நீ அங்க போய் அவனை பாரு இங்க போய் இவனை பாருனு ஆளாளுக்கு அசைன்மெண்ட் கொடுத்துட்டே இருக்காய்ங்க.

இலங்கை போன வந்தியத்தேவன் அங்க பார்த்தா ஆழ்வார்க்கடியானை பார்க்குறாரு. பொன்னியின் செல்வன் யாருனு தெரியாம ஜெயம் ரவிகூடவே சண்டை போட்டு அப்பறம் உண்மையை தெரிஞ்சுக்குறாரு. ஜெயம் ரவியும், அண்ணன் ஒருத்தன்கிட்ட குந்தவையை பார்க்க வாள் கொடுத்து விட்ருக்காருனா அப்போ நீ எனக்கு மாப்ளனு தெய்வமச்சானா மாறிடுறாரு. அப்பறம் ரவிதாசன் க்ரூப் பாலத்துக்கு பாம் வச்சு ஜெயம் ரவியை கொல்லப்பார்க்குது. ஆனா ஊமை ராணி யானைல வந்து காப்பாத்துறாங்க.

Also Read – `பொன்னியின் செல்வன்’ நாவல் கதை என்ன… 4 நிமிடங்களில் சுருக்கமா தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அங்கிட்டு குந்தவை போய் ஆதியை மீட் பண்ணி தஞ்சைக்கு கூப்பிடுறாங்க. அந்த நந்தினி இருக்கும்வரைக்கும் நான் வரமாட்டேன்னு சொல்லிடுறாரு. என்னையும் நந்தினியையும் நீ தான பிரிச்சனு அண்ணங்காரன் கேட்க ஏன்டா அவ யாரு என்னானே தெரியாம லவ் பண்ணுவியானு மானாங்கன்னியா கேட்குறா தங்கச்சி.

கட் பண்ணா அருள்மொழியை கைது பண்றதுக்கு போலீஸ் க்ரூப்பு இலங்கை வந்து இறங்குது. பாண்டிய ஆபத்துதவிகள் இலங்கை அரசனோட துணையோட அருள்மொழிக்கு ஸ்கெட்ச் போடுறாங்க. விக்ரம் டீம்ல இருந்து விக்ரம் பிரபுவும் இலங்கை வர்றாப்ல. விக்ரமும் கூப்பிடுறாப்ல, அப்பாவும் கூப்பிடுறாரு, அக்காவும் கூப்பிடுறாங்க யார் பக்கம் போறதுனு சங்கட்டத்துல இருக்குற ஜெயம்ரவி. அப்பாகூடவே போறதுனு முடிவு பண்ணி யானை மேல ஏறி போறாரு. பாண்டிய மங்குனிகள் ஜெயம்ரவிக்கு பதிலா கார்த்தியை தூக்கிடுறாய்ங்க. காப்பாத்துறதுக்கு போறாரு ரவி. மழை பெய்து, சூறாவளி காத்து அடிக்குது, தீப்புடிச்சு எறியுது, கப்பல் உடையுது இதுக்கு நடுவுல கடல்ல விழுந்து மூழ்கிடுறாங்க ஜெயம் ரவியும், கார்த்தியும். ஊர் முழுக்க பேச்சு.. பொன்னியின் செல்வன் உசுரு எப்படி போச்சுனு ஒப்பாரி பாட்டு போட்டு முடிச்சி வைக்கிறாங்க. கடைசில நந்தினிதான்ப்பா ஊமை ராணினு ஒரு ட்விஸ்ட்டை வச்சி PS 2 க்கு லீடு கொடுக்கிறாங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top