பிரின்ஸ், வாரிசு, வாத்தி

பிரின்ஸ்.. வாரிசு.. வாத்தி.. யம்ம்ம்மோ, தயவு செஞ்சு எங்களை விட்ருங்கணா!

பிரின்ஸ், வாரிசு, வாத்தினு எல்லாம் டக் அவுட் ஆகி வானத்து பார்த்து மல்லாக்க கிடக்குது. பான் இந்தியா படம்டானு பொங்குனவங்கலாம், நீங்க அண்ணன்களுக்கு செஞ்சது போதும்டானு பரிதாபமா கதறிட்டு இருக்காங்க. அவனுங்கள காலி பண்ணனும்னா நம்மாள் ஒருத்தன் உள்ள இறங்கணும்னு பிளான் பண்ணி, ஒண்ணுக்கு மூணா இறக்கிவிட்டு மாஸான மூணு விக்கெட் எடுத்துருக்காங்க. எல்லாம் பார்க்கும்போது, தயவு செய்து தமிழ் சினிமாவை விட்ருங்கடானுதான் தோணிச்சு. இந்த வீடியோல இவங்களைப் பத்திதான் பார்க்கப்போறோம்.

இந்திய சினிமான்னு இல்ல உலக அளவுலயே ஒவ்வொரு இண்டஸ்ட்ரீக்கும் அப்ஸ் அண்ட் டௌன்ஸ் இருக்கும். அதேமாதிரி, ஒரு ஜானர் மட்டும் ஒரு இன்டஸ்ட்ரீயை போட்டு உலுக்கும். ஆனால், அப்படிலாம் இல்லாமல், நம்ம இந்தியாவை பான் இந்தியான்ற ஒரு வார்த்தை போட்டு பாடாபடுத்திட்டு இருக்கு. அதோட, சின்ன நகர்வு தான் மற்ற சினிமா இன்டஸ்ட்ரீல உள்ள டைரக்டர்ஸ் வேற இன்டஸ்ட்ரீல டாப்ல இருக்குற ஆக்டர்ஸ வைச்சு படம் எடுத்தது. அதாவது, ஷார்ட்டா சொல்லணும்னா.. தெலுங்கு சினிமா டைரக்டர்ஸ் தமிழ் இண்டஸ்ட்ரீல டாப்ல இருக்குற நடிகர்களை வைச்சு படம் பண்றதா ஒரே நேரத்துல அனௌன்ஸ்மென்ட் வந்ததும். எல்லாரும் பான் இந்தியா படம்னு ரைட்டப்ஸ், ஆர்டிகிள்ஸ்னு எழுதிக் குவிச்சாங்க. சோகம் என்னனா, அந்த மூணு படமும் எதிர்பார்த்த ரிசல்ட் கொடுக்கல. தெலுங்கு டைரக்டர்ஸ் எடுத்த ஃபஸ்ட் விக்கெட் சிவகார்த்திகேயன், பௌலர் பெயர் அனுதீப். அடுத்து ரொம்ப பெரிய விக்கெட் விஜய், பௌலர் பெயர் வம்சி. ஆனால், இந்த விக்கெட் எல்லாரும் எதிர்பார்த்ததுதான். ஏன்னா, பௌலர் அவ்வளவு ஸ்டார்ங். ஹிஸ்ட்ரிலாம் அப்படி. மூணாவது விக்கெட் தனுஷ், விக்கெட் எடுத்தது வெங்கி. சரி, இப்போ மேன் ஆஃப் தி மேட்ச் யாருக்கு கொடுக்கலாம்? கடைசில சொல்றேன்.

வாத்தி
வாத்தி

வாத்தி

சுட சுட அடிவாங்கிட்டு இருக்குற டீம் இவங்கதான். சின்ன சின்ன ஐடியாஸ்கூட அவ்வளவு மோசமா இருக்கும். ஒருசில சீன்ஸ், ஒருசில டயலாக்ஸ் வேணும்னா தேரலாம். அதையும் ஆகா, ஓகோனுலா கொண்டாடுற அளவுக்கு எதுவும் இல்லை. இவங்க கல்வி முக்கியம், அனைவருக்கும் கல்வி, படிக்க வைங்கனு ஒரு இரண்டரை மணி நேரம் நம்மள படாத பாடு படுத்தியும் மண்டைல ஏறல, ஒரு கட்டத்துல கடுப்புதான் ஆச்சு. ஆனால், வெற்றிமாறன் அசுரன்ல கல்வி எவ்வளவு முக்கியம்னு, “நம்மக்கிட்ட காடு இருந்தா எடுத்து கிடுவானுவ, ரூபாய் இருந்தா புடுங்கிகிடுவானுவ. படிப்பை மட்டும் நம்மக்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது”னு ஒரே டயலாக்ல அவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்லியிருப்பாரு. எல்லாரும் படம் பார்த்துருப்பீங்கனு நினைக்கிறேன். தனுஷ் போலீஸ் ஸ்டேஷன்ல அடி வாங்கிட்டு வெயில்ல நடந்து போய்ட்டு இருப்பாரு. அவர் கால் சுடும். அதுக்கு கென் அடி பம்ப்ல தண்ணி அடிச்சு நிறைஞ்சு போய் அவர் கால்ல படும். அதெல்லாம் பார்க்கும்போது, எப்படி தனுஷ் இந்த சீனுக்குலாம் ஒத்துக்கிட்டீங்கனுதான் தோணுச்சு. அதேமாதி அந்தப் படத்தோட மெயின் ஐடியா தியேட்டர்ல சொல்லி கொடுக்குறது, சாதி வேண்டாம், பசங்களுக்கு கிளாஸ்லாம் எடுத்துட்டு டீச்சர் பெயர்லயே சாதியை சொருகிவிட்டது, தெலுங்கு படமா, தமிழ் படமான்ற குழப்பம், சம்பந்தமே இல்லாமல் எப்பவும் யூனிஃபார்ம் போட்டுட்டு சுத்துறது, அப்பா சென்டிமென்ட், நிறைய டயலாக், தனுஷ் கெட்டப்ஸ் இவ்வளவு ஏன் ரௌடிகள் அடிவாங்குறதைக்கூட நம்மளால ஏத்துக்க முடியல. இதுக்கு வாரிசே பரவாலைனு தோணிச்சு. கல்வின்ற ஐடியாவை மட்டும் எடுத்துகிட்டா படம் ஓடாது. கரெக்ட்டான பெர்ஸ்பெக்டிவ் இருக்கணும்.. யாருக்காக படம் எடுக்குறோம்ன்ற தெளிவு இருக்கணும்.. எதுக்காக இந்தப் படம்லாம் பண்றோம்ன்ற புரிதலாவது இருக்கணும். எதுவுமே இல்லை. சர்பிரைஸான விஷயம் என்னனா, வெங்கி படத்தை இதுக்கு முன்னாடி நம்ம வாரிசு புரொடியூஸர்தான் நிறைய தயாரிச்சுருக்காரு. அப்பாவே, தனுஷ் சுதாரிக்க வேண்டாமா? இதுல அமைச்சர் ஆனால்னு ஸ்பீச் வேற!

Also Read – Wow Daa.. லவ் டுடே மேக்கிங்… பிரதீப் பகிர்ந்த ரகசியங்கள்!

வாரிசு

தியேட்டர்ல அடி வாங்கிட்டு, ஓடிடிலயும் அடி வாங்கிட்டே இருக்குற படம் வாரிசு. வம்சி சார் சொல்ற மாதிரி, Why Are You Degrading Serials-ன்ற கேள்வி வருதா.. அப்போ, அவருக்கும் அவர் ஃபேன்ஸுக்கும் சேர்த்து ஒரு பதிலை நாம சொல்லலாம். வம்சி சார், அப்புறம் ஏன் நீங்க சீரியல் எடுக்கக்கூடாது? ஏன்னா, சமீபத்துல கூட சீரியல்ஸ் புரோமோலாம் பார்க்கும்போது, வரதட்சணை கொடுத்தாதான் பொண்ணுங்க, புகுந்த வீடுல தலை நிமிர்ந்து இருக்க முடியும், பொண்ணுங்க வீட்டுல இருக்கணும், ஆம்பளைனா ஆயிரம் பண்ணுவான், அதெல்லாம் சகிச்சுட்டுதான் பொண்ணுங்க இருக்கணும்னு 2000 வருஷத்துக்கு முன்னாடி உள்ள கருத்தை சீரியல்ஸ்ல இன்னும் சொல்லிட்டு இருக்காங்க. நீங்களும் அதையேதான் எடுக்குறீங்க. நீங்க அங்கப் போனா கரெக்டா இருக்கும். அதை விட்டுட்டு ஃபேமிலி சென்டிமென்ட் எடுக்குறேன், ரிலேஷன் வேல்யூவை புரிய வைக்கிறேன்னு 3 மணி நேரம் படம் எடுத்து, ஆர்.ஆர் வாசிச்சு, ரேஞ்ச் ரோவர், ரோல்ஸ் ராய்ஸ்னு வாடகைக்கு வாங்கி, ஹெலிகாப்டர்ஸை பறக்க விட்டு, நீங்களே பேசி, நீங்களே அடிச்சுகிட்டு, நீங்களே அழுது, எதுக்கு இதெல்லாம் சிம்பிளா சீரியல் எடுங்க. வீ ஆர் வித் யூ. அப்புறம் பாடி லாங்குவேஜ்னு சொல்லி விஜய்ணாவ ஃபன் பண்ண வைச்சிட்டீங்கள்ல? அதுவும் அந்த வித் அவுட் பியர்ட்லாம் வைச்சு. தளபதி ஃபேன்ஸ் வயிறு எரியுதுலே மொமண்ட்லதான் சுத்துனாங்க. ஆனால், ஒண்ணு பணக்காரன்னு காட்ட, சும்மா வெத்தலை பார்க்கு வாங்கக்கூட ரோல்ஸ் ராய்ஸ் எடுத்துட்டு போய் 250 கோடிக்கு வாங்குவீங்கள்ல? இவரோட அவங்களோட பழைய படம்லாம் பாருங்க விஜய், மகரிஷியைதான் வாரிசு இன்னொரு படம்னு உங்களை ஏமாத்தி எடுத்துருக்காரு. அதுவும் சயின்ஸுக்கு டஃப் கொடுக்குற மாதிரி எடுத்து வைச்சிருப்பாரு, படம் பேரு எவடு. தயவு செய்து அந்தப் பக்கம்லாம் போகாதீங்க. உயிருக்கு உத்ரவாதம் இல்லை. இதெல்லாம் பார்த்துருந்தா, விஜய் வாரிசுக்கு ஓகேலாம் சொல்ல வாய்ப்பு குறைவுதான். நானும் நிக்கிறேன், நடக்குறேன், தூங்குறேன், இன்னும் மண்டைக்குள்ள ஓடுற விஷயம்.. இத்தனை வருஷத்துல விஜய் கேட்ட பெஸ்ட் கதை இதுதான்னு உண்மையாவே சொன்னாரா!

ப்ரின்ஸ்
ப்ரின்ஸ்

ப்ரின்ஸ்

ஃபர்ஸ்ட் வந்தாலும், இந்த லிஸ்ட்ல லாஸ்ட்டா வைக்கலாம். பொறுமையை சோதிச்சாலும். ஒரு பத்து காமெடி தேறிச்சுனே சொல்லலாம். பாட்டில் கார்ட் காமெடி, பதினெட்டு வயசுக்கு மேல உள்ளவங்கள்லாம் மேயர், இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை நடந்துருக்கு. ஆனால், இதுதான் ஃபஸ்ட் டைம், இங்க இருந்து ராத்திரியோட ராத்திரியா அமெரிக்கா கிளம்பி போனால்.. அங்கயும் ராத்திரி, அங்க இருந்து திரும்ப இங்க வந்தா.. இங்கயும் ராத்திரி.. இப்படி வாழ்க்கையே இருட்டாயிடுச்சுனு எக்கச்சக்கமான அல்டிமேட் டயலாக்ஸ் இருக்கு. கதை, சூழல்னு எல்லாத்துலயும் இருக்குற செயற்கைத்தனம். கதை எங்கயெங்கயோ போறதுனு எல்லாத்தையும் கொஞ்சம் கட் பண்ணியிருந்தா பெஸ்ட்டாவே வந்துருக்கும். வெங்கி, வம்சி அளவுக்கு அனுதீப்பை அடிக்க தேவையில்லை. ஒரு விஷயத்துல இந்த டீமை யாராலையும் அடிச்சுக்கவே முடியாது. என்னனா, இன்டர்வியூ. படத்துல இவங்க காமெடியைவிட, நேர்ல இவங்க பண்ற அட்ராசிட்டீஸ் இருக்கே. அங்கதான் நிறைய பேர் ஏமாந்துட்டாங்க. அதேமாதிரி, அனுதீப் இதுக்கு முன்னாடி எடுத்த படத்த எடுத்து பார்த்தால், காமெடிலாம் பட்டாஸாதான் இருந்துச்சு. அதுனால, மேன் ஆஃப் தி மேட் இவருக்குலாம் கிடையாது. போய் தெலுங்குல நல்ல படமா எடுத்துக்கோங்க.

மூணு படத்துலயும் அதிகமா நம்பகத்தன்மை இல்லாம போனதுக்கு செட்டுதான் காரணம். ஏன்னா, அதுலாம் செட்டுனு நமக்கே தெரியுது. அதுலயும் எல்லா படத்துலயும் ஆர்ச் ஒண்ணு வைச்சிடுறாங்க. அதேமாதிரி, மொழி பிரச்னை இருக்குறதாலயோ என்னவோ நிறைய டயலாக்ஸ்லாம் மட்டமா இருந்துச்சு. பாட்டும் மூணு படத்துலயும் நார்மலாதான் இருந்துச்சு. எல்லாத்தையும் பார்க்கும்போது மேன் ஆஃப் தி மேட்ச் வம்சிக்குதான் கொடுக்கணும். வெங்கியாவது கல்வினு பேசி எஸ்கேப் ஆக முயற்சி பண்றாரு. ஆனால், வம்சி.. நோ கமெண்ட்ஸ்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top