கே.பாலச்சந்தர்

கே.பாலச்சந்தர்.. 4 கேள்விகள்.. 4 பதில்கள்.. ஒரு சம்பவம்!

`இயக்குநர் சிகரம்’ என ரசிகர்களால் ஆழைக்கப்படும் கே.பாலச்சந்தர் 1930-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் என்ற ஊரில் பிறந்தார். “நீர்க்குமிழி’ என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், எதிர் நீச்சல், அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி, இருகோடுகள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம் சிவப்பு, அவள் ஒரு தொடர்கதை, தில்லு முல்லு போன்ற பல படங்களை இயக்கி வெற்றிபெற்றார். கமல், ரஜினி உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களின் குருவாகவும் திகழ்ந்தார். சின்னத்திரையிலும் தனது தடத்தைப் பதித்தார். கலைமாமணி, பத்மஸ்ரீ மற்றும் தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் கூறிய சில சுவாரஸ்யமான பதில்களும் அவரைப்பற்றிய சுவாரஸ்யமான ஒரு சம்பவமும் இங்கே..

கே.பாலச்சந்தர்
கே.பாலச்சந்தர்

சின்ன வயசுல நீங்க எட்டு, பத்து கி.மீ சைக்கிள்லயே போய் சினிமா பாப்பீங்களாமே?

என்னுடைய கிராமத்துல சினிமா தியேட்டர் கிடையாது. எங்க ஊருல இருந்து திருவாரூர் வருவேன். திருவாரூர் எட்டு மைல் எங்க ஊருல இருந்து. சொந்தமா சைக்கிள் கிடையாது. இதனால், சைக்கிள வாடகைக்கு எடுத்துட்டுபோய் சினிமா பார்த்துட்டு வருவேன். என்னுடைய அப்பா சினிமா பாக்குற டைப் கிடையாது. சினிமா பாக்குறதே வேஸ்ட்னு நினைக்கிறவரு அவரு. திருவாரூருக்கு எப்பவாவது கட்டாயப்படுத்தி சினிமா பாக்கக் கூட்டிட்டு போவோம். தியேட்டர்ல அவர் மட்டும் திரும்பி உட்கார்ந்துப்பாரு. ஸ்கிரீனையே பாக்க மாட்டாரு. கர்நாட்டிக் மியூசிக் மேல அதிக விருப்பம் அவருக்கு இருந்ததால சினிமால வர்ற மியூசிக்லாம் பிடிக்காது. என்னமோ அவருக்கு சினிமானாலே பிடிக்காது. அதுனால, நாங்க சினிமா பாக்கப் போறதும் அவருக்குப் பிடிக்காது.

நீங்க நடிகர்களுக்கு எந்த அளவு வரைக்கும் நடிப்பு சொல்லிக் கொடுப்பீங்க?

சில நடிகர்களுக்கு அவங்க என்ன பண்ணனும்ன்றத செய்து காட்டிருவேன். அதனால அவங்களுக்கு ஈஸியா இருக்கும். பழக்கப்பட்ட நடிகர்களுக்கு சூழலை சொல்லுவேன். தேவையில்லாமல் நடிகர்களுக்கு இன்ஃபர்மேஷனை கொடுக்கக் கூடாது. அவங்க தலையில் பாரத்தை ஏற்றக்கூடாது. இதனால், அவங்க மைண்ட் ஃப்ரீயா இருக்குறது மாறிடும். கமல் மாதிரியான ஆர்டிஸ்க்கு எல்லாமே சொல்லிடலாம். ஆனால், மத்தவங்களுக்கு அப்படி சொல்ல மாட்டேன். இது ரொம்ப உதவியா இருக்கும் எனக்கு. ரஜினிக்கு தேவையான ஸ்டைலான ஆக்டிங்கை சொல்லிக் கொடுத்தேன். சிகரெட்டை தூக்கி போட்டு புடிக்கிற ஸ்டைல் எல்லாம் மூன்று முடிச்சு படத்திலும் நீங்க பார்க்கலாம். அவர் எங்கிட்ட முதல்ல சொல்லும்போது வில்லனா இருந்தா எனக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்னாரு. அதனாலதான் மூன்று முடிச்சுல மெயின்ரோல் குடுத்தது. 

உங்களை ரொம்ப இன்ஸ்பைர் பண்ண ஹியூமர்?

என்னுடைய இன்ஸ்பிரேஷனே எம்.ஆர்.ராதாதான். தூக்கு மேடைனு ஒரு நாடகம் போடுவாரு. அதை உடனே பாத்துட்டு போன் பண்ணிருவாங்க. அதுக்கடுத்து மறுநாளைக்கு கல்யாண மண்டபம் அப்டினு அதே கதையை வேறு பெயர்ல நாடகமா போடுவாரு. போலீஸ்லாம் பாத்துட்டு இது அதே கதைதான அப்டினு கேட்பாங்க.. இதுக்கு தனியா ஸ்டே ஆர்டர் வாங்க மெட்ராஸ்க்கு போய்ட்டு வரணும். அதுக்குள்ள இன்னொரு கதையை ரெடி பண்ணிருவாரு. தூக்கு மேடை நாடகத்தையே நாலு டைட்டில்ல போட்டாரு. ஒரு டயலாக் சொல்லுவாரு.. “என்னடா என்ன.. நெத்தில நாமம் போட்ருக்க..” அப்டின்னுவாரு. “பெருமாள் பாதங்க” அப்டினு பதில் சொன்னவரிடம், “அப்போ பெருமாள் நெத்தில இருக்குறது?” அப்டினு எம்.ஆர்.ராதா கேப்பாரு. அடேங்கப்பா.. அதிர்ந்து போகும். அந்த கருத்துக்கு நீங்க உடன்பாடா இருக்கீங்களா? இல்லையா? அப்டின்றதுலாம் இல்லை. எப்படி சொல்றாருன்றதுதான் முக்கியம். எவ்வளவு பெரிய ஹியூமர் இது.

ரஜினியின் பலம் மற்றும் பலவீனம்.. கமலின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

ரஜினி, கமல், கே.பாலச்சந்தர்
ரஜினி, கமல், கே.பாலச்சந்தர்

ரஜினியின் பலம் ஆன்மீகம். அது இருக்குறதாலதான் நிறைய விஷயங்களைப் பண்ண முடியுது. கமலுக்கு தன்னைப் பற்றி அதிகளவில் கான்ஃபிடன்ஸ் இருக்கு. அதுதான் கமல் கிட்ட நான் ரசிக்கிற பாராட்டுற ஒரு மிகப்பெரிய விஷயம். ரஜினிக்கு பலவீனம்னா சின்ன விஷயம்தான். படம் ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சு ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி பயங்கரமா டென்ஷன் ஆவாரு. அது தேவையில்லாத டென்ஷன். கமலைப் பொறுத்தவரை ஸ்பீட் பிரேக்கர் தேவை.

சம்பவம்

கே.பாலச்சந்தர் ஒருமுறை ரஜினியிடம் இயக்குநர்கள் சங்கம் தொடர்பான விழா ஒன்றில் பல கேள்விகளைக் கேட்பாரு. ரஜினியோட ரசிகர்களுக்கும் சரி, கே.பியோட ரசிகர்களுக்கும் சரி, இந்த சம்பவம் மறக்கவே முடியாத ஒன்று. அதில் “உன்னோட ஆட்டோபயோகிராஃபியை நீயே எழுதணும். எழுதுவியா? உன்னுடைய ரசிகர்களுக்கு ரொம்பவே பெரிய இன்ஸ்பிரேஷனா அது இருக்கும்” அப்டினு கே.பி ரஜினியிடம் கேப்பாரு. அதற்கு ரஜினி, “ஆட்டோபயோகிராஃபி அப்டினா எல்லாமே உண்மைய எழுதணும். நிறைய பேரோட மனசு துன்பப்படும் அப்டின்றதுக்காக எதையும் மறைக்க கூடாது. உண்மையா நடந்தத நடந்த மாதிரியே எழுதலைனு சொன்னா அது ஆட்டோபயோகிராஃபியே கிடையாது. மகாத்மா காந்தியோட தைரியம் எனக்கு வந்தா.. நான் எழுதுவேன்” அப்டினு சொல்லுவாரு. ரஜினியோட பயோகிராஃபியை பலரும் எதிர்பார்த்து காத்திருக்காங்க. ஆனால், கே.பியோட பயோகிராஃபியை எவ்வளவு பேர் எதிர்பார்க்குறீங்க? அந்த பயோகிராஃபியை யாரு எழுதினா நல்லா இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read : மலேசியாவில் காட்டப்படும் மூன்று வகை கொடிகள்.. பின்னணி என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top