ஹீரோக்களுக்கு மாஸ் சீன் கூட எளிதாக அமைந்துவிடும். ஆனால் காமெடியில் கலக்குவது அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடாது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காமெடிக்கென்றே தனி ரசிகர்கூட்டம் இருக்கிறது. தேங்காய் சீனிவாசனில் தொடங்கி சதீஷ் வரை எல்லாத் தலைமுறை நடிகர்களோடும் இணைந்து காமெடி செய்த பெருமையும் ரஜினிக்குதான் கிடைத்திருக்கிறது. ஒரு காமெடி நல்லா வர சேர்ந்து நடிப்பவருடனான கெமிஸ்ட்ரி ரொம்பவே முக்கியம். அப்படி எந்த காமெடியனோடு ரஜினி சேரும்போது பயங்கரமான சிரிப்பு மேஜிக் நடக்கிறது? வாங்க அனலைஸ் பண்ணலாம்.
4. ரஜினி & வடிவேலு

நாலாவது இடத்துல இருக்குறது ரஜினி வடிவேலு காம்போ. “மாப்பு… வச்சிட்டாண்டா ஆப்பு” என்ற ஒரு வசனம் போதும் இவங்க இரண்டு பேரின் கெமிஸ்ட்ரியைச் சொல்ல. அந்த பேய் வர்ற அறிகுறி சொல்றது நிச்சயம் ரஜினியின் ஆல்டைம் காமெடி லிஸ்ட்டில் இடம்பிடிக்கும். முத்து படத்தில் சிறிய வேடம்தான் என்றாலும் பட்டையைக் கிளப்பியிருப்பார் வடிவேலு. குசேலன், முத்து, சந்திரமுகினு இவங்க சேர்ந்தாலே சிரிப்பு சிக்ஸர்தான். அதனால் இந்த காம்போ 4-வது இடத்தில் இருக்கு.
3. ரஜினி & ஜனகராஜ்:

80s, 90s ல ரஜினிக்கு அமைஞ்ச சூப்பரான காம்போ லிஸ்ட்ல ஜனகராஜ் நிச்சயம் இருப்பார். பாட்ஷா, அண்ணாமலை, பணக்காரன், ராஜாதி ராஜா, பாண்டியன்னு இந்த கூட்டணி கலக்கு கலக்குனு கலக்குனாங்க. இதுல அல்டிமேட்னா அண்ணாமலை காமெடிய சொல்லலாம்.
2. ரஜினி & கவுண்டமணி:
மன்னன் படத்துல உண்ணாவிரதம் சீன்ல கவுண்டமணி வசனம் பேசுறப்போ ரஜினி டேக்லயே தன்னை மறந்து சிரிச்சிருப்பார். இதுவே இவங்க ரெண்டு பேரோட காம்போவுக்கு ஒரு செம உதாரணம். 16 வயதினிலேல ஆரம்பிச்சு பாபா வரைக்கும் இவங்களோட காமெடி செமயா ஒர்க் அவுட் ஆனது. அதுலயும் உழைப்பாளில கிழவன் கெட்டப் போட்டு ரஜினி பண்ற ரகளைய மறக்க முடியுமா? என்னதான் இருந்தாலும் இவங்க ரெண்டாவது இடம்தான். முதல் இடத்துல இருக்குறது யாருனு பார்க்கலாம்?
1. ரஜினி & செந்தில்:

க்ளியர் வின்னர் ரஜினி & செந்தில் காம்போதான். படையப்பால “மாப்பிள்ளை இவர்தான் ஆனா இவர் போட்ருக்க சட்டை என்னுது” காமெடில ஆரம்பிச்சு நிறைய படங்கள்ல போட்டி போட்டு காமெடி பண்ணிருப்பாங்க ரெண்டு பேரும். படையப்பா, அருணாசலம், முத்து, வீரா, எஜமான், மனிதன், வேலைக்காரன் இப்படி இரண்டு பேரும் சேர்ந்தாலே ஹிட்டுதான்.
இவங்க நாலு பேருதான் ஹைலைட்னாலும் ஸ்பெஷல் மென்சனா சில பேரை சொல்லியே ஆகணும். விவேக், சின்னி ஜெயந்த், வினு சக்ரவர்த்தி, வீ.கே ராமசாமி, வினு சக்ரவர்த்தி, பிரபு, தேங்காய் சீனிவாசன், சோ ராமசாமி இவங்களோட சேர்ந்து ரஜினி அடிச்ச காமெடி லூட்டிகளையும் மறக்கவே முடியாது.
இப்ப நான் சொன்ன காம்போல உங்க ஃபேவரிட் யாரு? கமெண்ட்ல சொல்லுங்க. யாரையாச்சும் மிஸ் பண்ணிருந்தாலும் மறக்காம சொல்லுங்க.
Rajini Vs Vadivelu
istanbul hurdacı firmalar içinde lideriz hurdacı En yakın istanbul istanbul hurdacı telefonu olan numaramızdan ulaşabilirsiniz küçükçekmece hurdacı https://bit.ly/kucukcekmece-hurdaci-telefonu
The Best Premium IPTV Service WorldWide!
Some really superb info , Gladiola I found this. “Genuine goodness is threatening to those at the opposite end of the moral spectrum.” by Charles Spencer.
Very interesting details you have observed , thankyou for putting up. “These days an income is something you can’t live without–or within.” by Tom Wilson.
I like this post, enjoyed this one regards for putting up. “Money is a poor man’s credit card.” by Herbert Marshall McLuhan.
You could certainly see your enthusiasm in the work you write. The arena hopes for more passionate writers like you who are not afraid to say how they believe. At all times go after your heart. “Until you walk a mile in another man’s moccasins you can’t imagine the smell.” by Robert Byrne.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
It is truly a great and useful piece of info. I am glad that you just shared this useful info with us. Please keep us up to date like this. Thanks for sharing.