ரோல்மாடல் விஜய் சேதுபதி… எல்லா ஆண்களுக்கும் தொப்பை அழகுதான்!

விக்ரம் படத்தோட ரெய்லர்லயே விஜய் சேதுபதி ஷர்ட் இல்லாமல் நடந்து வர்ற ஒரு சீன் வரும். அதுல அவர்கொஞ்சம் தொப்பையோட இருப்பாரு. அதை ஒரு மீம் மாதிரி கிரியேட் பண்ணி. இதுதான் ஆண்களோட சாதாரண உடம்பு. ஆண்களோட இந்த மாதிரியான உடம்பை நார்மலைஸ் பண்ணுங்கனு சொல்லியிருப்பாங்க. அந்த மீம் பார்த்ததும் ஆமால்லனு அந்த நிமிஷத்துல யோசிச்சு ஒரு லைக் போட்டுட்டு கடந்து போனாலும், அந்த மீம் ஒருமாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு. 

விக்ரம்
விக்ரம்

பெண்களோட உடலை விமர்சிக்கிறதை எதிர்த்து இன்னைக்கு பலரும் கேள்வி கேக்குறாங்க. அதேமாதிரி ஆண்களோட உடம்பை கேலி பண்றதை எதிர்த்தும் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இருக்கு. அதனால, ஆண்கள் உடம்பை நார்மலைஸ் பண்ற மாதிரியும் வேற எந்த விஷயங்கள்னால அவங்க கேலி செய்யப்படுறாங்கன்றதைப் பத்தியும் ஒரு வீடியோ பண்ணிடுவோம்னு தோணிச்சு. அதனாலதான் இந்த வீடியோ. சரி, எதுக்கு ரோல் மாடலா விஜய் சேதுபதியை சொல்றேன்னு கடைசி சொல்றேன். வெயிட் பண்ணுங்க!

தமாஷா

மலையாளத்துல வந்து செம ஹிட்டான படம் பிரேமம். இந்தப் படத்துல மலர் டீச்சரை ஒன் சைடா காதலிக்கிற மாவா அப்டின்ற புரொஃபஸர் கேரக்டர்ல வினய் நடிச்சிருப்பாரு. அந்தப் படத்துல அவருக்கு தனக்கு முடி இல்லை. பார்க்க ஹேண்ட்ஸமா இல்லைன்ற தாழ்வு மனப்பான்மை இருந்துட்டே இருக்கும். அந்தக் கேரக்டருக்கு முடி இல்லைன்றதால வாழ்க்கைல என்னலாம் பிரச்னைகளை சந்திக்கிறாங்கன்றதை முழு படமா எடுத்திருந்தா எப்படி இருக்குமோ அதுதான் தமாஷா. கன்னடத்துல வந்த ‘ஒண்டு மொட்டேய கதை’ன்ற படத்தோட அதிகாரப்பூர்வமான ரீமேக்தான், தமாஷா. இந்தப் படத்துல வினய்தான் ஹீரோ. அவருக்கு பொண்ணு தேடுற படலம்தான் இந்த படம்.

தமாஷா
தமாஷா

தமாஷால… காதல், நட்பு, கல்லூரி வாழ்க்கை – இப்படி எல்லாத்துலயும் அவரோட சொட்டைத்தலையால என்னலாம் பாடு படுறாருனு காமிச்சிருப்பாங்க. நம்மள அழுக விடாம அதே நேரம் டெய்லி நாம எதார்த்தமா பார்த்து பாடி ஷேமிங் பண்ற ஒருத்தரோட மனசு எவ்வளவு கஷ்டப்படும் அப்டின்றதை அவ்வளவு சாஃப்ட்டா கேலி பண்றவங்க மனசு நோகாமல் சொல்லியிருப்பாங்க. ஆண்களுக்கு இன்னைக்கு இருக்குற முக்கியமான இரண்டு பிரச்னைகள்ல ஒண்ணு, முடி கொட்றது. அதுனால, அவங்க சமூகத்துல சந்திக்கிற பிரச்னைகள் எக்கச்சக்கம்னு சொல்லலாம். படிக்கிற இடத்துல இருந்து கல்யாண பிரச்னை வரைக்கும் அவங்க அவ்வளவு அவமானங்களை சந்திக்கிறாங்க. அவ்வளவு கேலிப் பெயர்களை காதுல கேக்குறாங்க. 

ஒரு விஷயத்தை நாம பொதுவா உணர வேண்டியது அவசியம். அது என்னனா… “யாருமே, தனக்கு சொட்டை விழனும்னு ஆசைப்படுறது கிடையாது. உடலுக்குள்ள நடக்குற மாற்றங்கள் தொடர்பான விஷயம் இது. பாடி ஷேமிங் பண்றதாலயே, புல்லிங் பண்றதாலயோ இங்க நாம யாரையாவது காயப்படுத்திட்டு மட்டும்தான் இருக்கோம்” அப்டின்றதைதான். இதைத்தான் இந்தப் படத்துல சொல்லியிருக்காங்க.

பாடி ஷேமிங்
பாடி ஷேமிங்

சினிமால இருந்து மட்டும்தான் பாடி ஷேமிங்கை கத்துக்கிட்டாங்கனு சொல்ல முடியாது. ஆனால், அதுக்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணமா இருக்கு. தமிழ் சினிமாவை எடுத்துக்கிட்டோம்னா மிகப்பெரிய காமெடி நடிகர்களா பார்க்கப்படுற கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தாணம் எல்லாருமே பாடி ஷேமிங் பண்ணிட்டுதான் இருந்துருக்காங்க, இருக்காங்க. அதைத் தவிர்த்துட்டு ஒரு காமெடி சீன் எடுக்குறதுதான் சவாலே. அந்த இடங்கள்லதான் கிரேஸி மோகனை எல்லாம் நாம இப்போ ரொம்பவே மிஸ் பண்றோம்.

பாடி ஷேமிங்கால் பாதிக்கப்பட்ட நடிகர்கள்

இன்னைக்கும் ஒரு ட்ரெய்லர், டீசர் வந்துச்சுனா அதுல ஹீரோ விக் வைச்சிருந்தாலோ, கொஞ்சம் ஒல்லியா யாராவது தெரிஞ்சாலோ அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப்போட்டு உடனே சோஷியல் மீடியால ட்ரோல் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவோம். சூப்பர் ஸ்டாரா கொண்டாடுற ரஜினி, உலக நாயகன் கமல், தளபதி விஜய், தல அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி இப்படி எல்லாருமே பாடி ஷேமிங்கை தாண்டிதான் வந்திருக்காங்க. அதை தாங்கிட்டுதான் இன்னும் இருந்துட்டு இருக்காங்க. இதுல பல நடிகர்கள் தாங்க விமர்சிக்கப்பட்டதை வெளிப்படையாவே பல மேடைகள், இண்டர்வியூக்கள்ல சொல்லி வருத்தப்பட்டுருக்காங்க. இன்னைக்கு இந்தியால ஒன் ஆஃப் தி ஃபைனஸ்ட் ஆக்டர்னு சொல்லப்படுற ஃபகத் ஃபாஸில்கூட தலைல முடி இல்லைனு அவ்வளவு விமர்சிக்கப்பட்டாரு. ஆனால், அதையெல்லாம் அவங்க பெருசா எடுத்துக்கிட்டது இல்லை.

தனுஷ்
தனுஷ்

பாடி ஷேமிங்க்ல கொடுமையான விஷயம் என்னனா ஒரு நடிகரை பாடி ஷேமிங் பண்ணி ஒரு போஸ்ட் போட்டா, அவரோட ரசிகர்கள் இன்னொரு நடிகரை பாடி ஷேமிங் பண்ணி கமெண்ட் பண்ணுவாங்க. நடிகைகளையும் அவங்களோட உடம்பை வைச்சு பயங்கரமா கேலி பண்ணுவாங்க. குறிப்பா ஃபீல்ட் அவுட் ஆகி குழந்தை பிறந்து லைஃப்ல செட்டில் ஆனவங்களையெல்லாம் வம்புக்கு இழுப்பாங்க. அவங்களும் சரியான பதிலடி ஒண்ணை கொடுப்பாங்க. எதுக்கு இதெல்லாம்? கே.ஜி.எஃப் யஷ் ஒரு பேட்டில சொல்லுவாரு, “என்னோட அழகப் பத்தி பேசாதீங்க. என்னோட டேலண்ட் பத்தி பேசுங்க” அப்டினு. அதையேதான் அதிகமா அழகுக்கு எக்ஸாம்பிளா சொல்லப்பட்ட அரவிந்த்சாமியும் சொல்லுவாரு. ஏன்னா, அவரும் பாடி ஷேமிங்கால பாதிக்கப்பட்டிருக்காரு. “ஒருத்தங்க ஹெல்தியா இருந்தா போதும். அதுக்கு அவங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்”னு சொல்லுவாரு. ஷார்ட்டா சொல்லணும்னா இவ்ளோதாங்க!

ரோல் மாடல் விஜய் சேதுபதி

ஆண்களுக்கு இன்னைக்கு இரண்டு பிரச்னை இருக்குனு சொன்னேன். ஒண்ணு முடி கொட்டுறது. இன்னொன்னு தொப்பை. ஒருத்தங்க குண்டா இருக்கணுமா, சிக்ஸ் பேக் வைக்கணுமானு அவங்கதான முடிவு பண்ணனும். அவங்க இஷ்டம்தான அது. சிக்ஸ் பேக் வைச்சிருந்தாதான் ஹெல்த்தியா இருக்கும், பையன்னா அப்டிதான் இருக்கணும்னு சொசைட்டி ஆண்கள் மேல ஒரு அழுத்தத்தைக் கொடுத்துட்டே இருக்கு. இதுக்கு நாம எக்ஸாம்பிளா எடுத்துக்க வேண்டியது விஜய் சேதுபதியைதான். ஐடியல் பாடி அவரோடது. அதாவது எதார்த்தமான உடம்பு. அதுதான் நம்ம எல்லாருக்கும் இருக்கு. 

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி பக்கத்துவீட்டுப் பையன் மாதிரி இருக்காரு, அவரு மாஸா நடந்தா நாம மாஸா நடக்குற மாதிரி இருக்கு, இப்படிலாம் சொல்லி ஒரு பெர்சனல் கனெக்ட் ஏற்படுத்திக்கிறதுக்கு அவரோட அப்பியரன்ஸும் முக்கியமான விஷயம். “சாப்பாடப் பார்த்து சாப்பிடணும்னு தோணிச்சுனா சாப்பிடுங்க. ஹெல்தியா இருக்க எக்ஸர்சைஸ் பண்ணுங்க. நடந்து பழகுங்க”னு சொல்லுவாரு.அதேதான் எண்ட் ஆஃப் தி டே நமக்கு சோறுதான் முக்கியம். அதுக்காக எதையும் தியாகம் பண்ணனும்னு அவசியம் இல்லை. அதேபோல சிக்ஸ் பேக்ஸ் வைக்கிறவங்களையும் குறை சொல்லல. அது அவங்க பேஷன். அதை வைச்சு மற்றவங்களை கம்பேர் பண்றதுதான் இங்க தவிர்க்கப்பட வேண்டிய விஷயம்.

சமூகத்துல குண்டா இருந்தா குண்டன்னு சொல்லுவாங்க, ஒல்லியா இருந்தா எலும்பன்னு சொல்லுவாங்க, உயரமா இருந்தா நெட்டையன்னு சொல்லுவாங்க, குள்ளமா இருந்தா கட்டையன்னு சொல்லுவாங்க, முடி அதிகமா இருந்தா அதுக்கு ஒரு பெயர் சொல்லுவாங்க, முடி இல்லைனா அதுக்கு ஒரு பெயர் சொல்லுவாங்க. இதையெல்லாம் மாத்திக்கிறது தனிமனிதனை சார்ந்தது. நம்ம அதுக்குலாம் ஃபீல் பண்ணாம நம்ம வேலையை பார்த்துட்டு போய்கிட்டே இருக்கணும். இந்த உலகத்துல எல்லாமே அழகுதான்… அழகு மட்டும்தான்!

Also Read: ‘நான் சினிமாவுக்கு unfit..!’ – கலங்கும் நரேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top