சத்யராஜ் அரசியல் அலப்பறைகள்

`இவனுங்க திருந்திட்டா… நாம எப்படி அரசியல் பண்றது..?’ சத்யராஜ் அரசியல் அலப்பறைகள்!

இனிமேல் எல்லாம் தேர்தல் சீசன்தான். இடைத்தேர்தல், பல்வேறு மாநிலத் தேர்தல்கள், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல்னு சீசன் களைகட்டப் போவுது. தேர்தல் பாலிட்டிக்ஸ்னு யோசிச்சாலே முதல்ல நமக்கு நினைவுக்கு வர்றது சத்யராஜ் படங்கள் சிலவற்றின் நினைவுதான். மணிவண்ணன், கவுண்டமணி காம்போவோட தமிழ்நாட்டு பாலிட்டிக்ஸை பகடி பேசின அவரோட படங்களில் தேர்தல் காட்சிகள் குறித்த சின்ன தொகுப்பைதான் இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கப் போறோம்.

மக்கள் என் பக்கம்
மக்கள் என் பக்கம்

முதல்ல பார்க்கப் போற படம் ‘மக்கள் என் பக்கம்’. 1987-ல் வெளியான இந்தப் படம், அப்போ இருந்த அரசியலுக்கும், அரசியல் கட்சிகளுக்கு ஃபைனான்ஸ் பண்ற பிசினஸ்மேன்களையும் பத்தி பேசுச்சு. இது ராஜேஷ் ஒரு போலியான அரசியல்வாதி, ஹீரோ சத்யராஜ் ஒரு தப்பான தொழில்கள் செய்ற நேர்மையான பிசினஸ் மேன். இவங்க ரெண்டு பேர் இடையிலான வார் தான் திரைக்கதை. இந்தப் படமே ஒரு இடைத்தேர்தல் அறிவிப்பில் இருந்துதான் ஸ்டார்ட் ஆகும். ராஜேஷ்தான் இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ போஸ்டுக்கு போட்டியிடுவார். முதல் 10 சீன்லயே இடைத்தேர்தல்களுக்குப் பின்னாடி இருக்கிற தகிடுதத்தங்கள் அறங்கேற்றப்படும். இந்த சீன்ல முழுக்க முழுக்க ராஜேஷோட அரசியல்தான் இருக்கும். குறிப்பா சொல்லணும்னா, இப்போ ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் வரைக்கும் போவுது இல்லையா? எயிட்டீஸ்ல அந்த ரேட்டு 50 ரூபாய்ன்றது இந்த 10 நிமிட காட்சிகள்ல கிடைக்கிற தகவல்களில் முக்கியமானது.

அடுத்ததும் சத்யராஜ் படமா இருந்தாலும், அதுல இருக்குற பாலிட்டிக்ஸ் சீன்ல ஸ்கோர் பண்றது பானுப்பிரியா. அதேதான்… 1992-ல் கே.சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘பங்காளி’ படத்தின் சைதை தமிழரசியின் அந்தப் பிரச்சார உரைப் பத்திதான் பேசுறோம். அதுல சிட்டிங் எம்.எல்.ஏ.வான மன்சூர் அலிகானை சென்னை மொழியில பானுப்பிரியா கழுவி கழுவி ஊத்துவாங்க பாருங்க. அதெல்லாம் தெய்வீக லெவல்.

சைதை தமிழரசி
சைதை தமிழரசி

‘ஆறு’ படத்துல வர்ற சவுண்டு சரோஜாக்கு இன்ஸ்பிரேஷேனே சைதை தமிழரசிதான். மொபைல் கேமராக்கள் இல்லாத ஒரு காலத்துல அப்படித்தான் தேர்தல் பிரச்சாரங்களில் உள்ளூர் அரசியல்வாதிகள் அவ்ளோ ஓப்பனா மாறி மாறி திட்டிப்பாங்க. இந்தக் காலக்கட்டதுல அது அதிகம் சாத்தியம் இல்லை. ஏடாகூடமா பேசின அடுத்த நிமிஷமே வீடியோ வைரல் ஆகும்ல!

சத்யராஜின் நீண்ட நெடிய திரைப் பயணத்தில், சத்யராஜ் எல்லா வகையிலும் உச்சம் தொட்ட படம்னா, அது ‘அமைதிப்படை’தான். மணிவண்ணன் இயக்கத்தில் 1994-ல் வெளிவந்த இந்தப் படம், தமிழ் என்னங்க… இந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த பொலிட்டிகல் சட்டயர் என்று சொல்லக் கூடிய அரசியல் பகடி சினிமான்னே சொல்லலாம். குறிப்பாக, தமிழகத்தின் தேர்தல் அரசியலை கலாய்ச்சது மட்டுமில்லாம, இந்தத் தேர்தல் அரசியலுக்குப் பின்னாடி இருக்கிற மோசமான அரசியலை சீரியஸாகவே காட்டியது.

Also Read – வாடிவாசல் படத்தின் மாஸ் சீன்.. ஓப்பனிங் சீன்.. இண்டர்வெல் சீன்.. இப்படித்தான் இருக்கும்!

தமிழக அரசியலில் மேடைகளில், குறிப்பாக தேர்தல் மேடைகளில் அப்ளாஸ் வாங்குற அளவுக்கு அசத்தலா பேசுறதுதான் அரசியல்வாதிகளின் முக்கியமான குவாலிஃபிகேஷன்றதை, அந்தப் படத்துல மிமிக்ரி தொடங்கி உலக டேட்டா வரைக்கும் அடுக்கி வைக்கிற காட்சிகள்ல பதிவு பண்ணியிருப்பாங்க. எம்.எல்.ஏ சீட்டு தனக்கு சீட்டுக் கொடுக்காத காண்டுல சத்யராஜை சுயேட்சை எம்.எல்.ஏ.வா நிக்கவைச்சு, பிரச்சாரம் பண்ற ஒரு சீன்ல மணிவண்ணன் பேசுவார் பாருங்க… அமெரிக்க ஏகாதிபத்தியம் போவும் அந்தப் பேச்சு. கோயில்ல தேங்கா பொறுக்கிற அமாவாசை… நாகராஜ சோஷன் எம்.எல்.ஏ.வாக ஆகுற டிரான்ஸ்சிஷன் அட்டகாசமா இருக்கும். அதுவும் அந்த ஓட்டு கவுன்ட்டிங் சீன் எல்லாம் இன்னிக்கும் பட்டாசு ரகம்.

சத்யராஜுக்கு முதுகு தேச்சு விட்டுட்டே எலக்‌ஷன் வர்றதைப் பத்தியும், எலக்‌ஷன்ல ஜெயிக்கிற உத்திகளைப் பத்தியும் சொல்வாரு. அப்போ சத்யராஜின் அண்டர்வேரை துவைக்கிறதுல சண்டை வரும். அந்த சம்பவத்தை வெச்சே மக்களை திசை திருப்பும் அரசியல் தத்துவத்தை அட்டகாசமா பதிவு பண்ணியிருப்பாங்க.

அமைதிப்படை சத்யராஜ்
அமைதிப்படை சத்யராஜ்

அது ஆடியோ கேசட் காலம். படம் ஓடின அப்புறம், கதை – வசனம் கேசட்டும் ரிலீஸ் பண்ணுவாங்க. அப்போ, அமைதிப்படையோட கதை வசனம் கேசட்டும் விற்பனைல ரெக்கார்டு பண்ணிச்சுன்றது கூடுதல் தகவல்.

அதே வருஷத்துல வெளிவந்த இன்னொரு சத்யராஜ் படத்துலயும் தேர்தல் சீன்கள் செம்ம ரகளையா இருக்கும். யெஸ், குருதனபால் இயக்கின தாய்மாமன் படம்தான். அதுல சத்யராஜோட கவுண்டமணி, மணிவண்ணன் காம்போ செம்ம ரவுசா இருக்கும். மாமன் பொண்ணு மீனாவை கல்யாணம் பண்ணனும்ன்ற லட்சியத்துல, தன்னோட மாமன் விஜயகுமாரை எதிர்த்து எம்.எல்.ஏ. எலெக்‌ஷன்ல சத்யராஜ் போட்டியிடுவார். அப்புறம் என்ன ஆகுதுன்றதுதான் குடும்பமும் அரசியலும் சார்ந்த திரைக்கதை.

அதுவும், தன்னோட மாமன் ஜெயிக்கணும்னு ‘எனக்கு ஓட்டுப் போடாதீங்கன்’னு சத்யராஜ் வீடு வீடா பிரச்சாரம் பண்றதும், அவரு பின்னாடியே போய் வாக்காளர்களை கவுண்டமணி பிரைன் வாஷ் பண்றதும் செம்ம ஜாலியா இருக்கும். விளையாட்டா எம்.எல்.ஏ. ஆகுற சத்யராஜ் சீரியாஸான மோடுக்குப் போறது எல்லாம் பிற்பாதியில நடக்கும்.

தாய்மாமன் சத்யராஜ்
தாய்மாமன் சத்யராஜ்

இந்தப் படத்தோட எண்டு போர்ஷன்ல, அந்த ஊர் மக்களை படு ஆவேசத்தோட கவுண்டமணி திட்டுற சீன் இருக்கும். அதுல மாஸ் சைக்காலஜியை அப்படியே அடுக்கிற நீண்ட டயலாக் இருக்கும்.

“இவனுங்க என்னிக்குப்பா நல்லவன் கெட்டவன்னு பார்த்து ஓட்டுப் போட்டிருக்கானுங்க…. இவனுங்க கணக்கு என்ன? ஒரு ஓட்டுக்கு ஒரு பித்தளைக் குடம், ஒரு பித்தளை சொம்பு, ஒரு பித்தளை பானைன்னுதானப்பா போட்டிருக்கானுங்க… இவனுங்க ஒட்டை ஒருநாள் பிசினஸ் ஆக்கி கலெக்‌ஷன் பண்றானுங்க…. அவனுங்க ஓட்டை வாங்கி அஞ்சு வருஷம் பிசினஸாக்கி கலெக்‌ஷன் பண்றானுங்க… இவனுங்கள திருத்தவே முடியாது”ன்னு கவுண்டமணி கதறுவார். அப்போ 1994… பித்தளைக்கு மவுசு… இப்போ, 2023… வெள்ளிக்கும் தங்கத்துக்கும் மவுசுன்றது கரன்ட் சிச்சுவேஷன்.

இதே காம்பினேஷன் 2006-ல சேர்ந்து உருவான படம்தான் ‘சுயேட்சை எம்.எல்.ஏ’. ஒரு கட்சி ஆட்சி அமைக்க வலுசேர்க்கிற ஒரு இடைத்தேர்தல் முடிவும், அந்த ஆட்சியை கலைக்க சுயேட்சை எம்.எல்.ஏ ஆன சத்யராஜின் வியூகங்களும்தான் கதையே. இந்தப் படம் ‘தாய்மாமன்’ அளவுக்கு இல்லைன்னாலும் கடைசில வர்ற கோர்ட் சீன்ல சத்யராஜ் நீளமா கொடுக்கிற ஒப்புதல் வாக்குமூலம், அரசியலைப் பத்தியும் ஆட்சியில் நடைபெறும் ஊழலைப் பத்தியும் ரொம்ப நல்லாவே பேசியிருக்கும்.

ஆனா, இந்தப் படத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ரிலீஸ் ஆன ‘மகா நடிகன்’ வேற லெவல் பொலிட்டிகல் சட்டையர். குறிப்பாக, எலெக்‌ஷன்ல உச்ச நடிகர் வாய்ஸ் கொடுக்கிறது, அந்த வாய்ஸ் கொடுக்கிற உச்ச நடிகரின் பிரச்சாரம், அதன் எதிரொலியால ஆட்சி அமையறதுன்னு ரியல் ரெஃபரன்ஸை செம்மயா கலாய்ச்சி இருப்பாங்க. அதுவும் நதிகள் உருவாகும் இடங்களான மலைகள் இணைப்புத் திட்டத்துக்கு முதல் ஆளா ஒரு ரூபாய் நிதி கொடுத்து மேடையில அறிவிக்கிற சீன் எல்லாம்… பங்கம்!

சத்யராஜ், மணிவண்ணன், கவுண்டமணி காம்போ இருந்தவரைக்கும் அரசியல் பகடி காட்சிகளும் வசனங்களும் நிறையவே இருந்துச்சு. இதெல்லாம் 90ஸ்லாதான் அதிகம் சாத்தியமாச்சு. சமகாலத்துல தேர்தல் அரசியலை ரொம்ப சீரியஸாவும் நக்கலாவும் பேசக் கூடிய படங்கள், காட்சிகளை பத்தி நீங்க கமெண்ட்ல ஷேர் பண்ணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top